⇰ To Index Page

Akshaya பூர்ணம்

1 ) ஓம் மஹாகணபதயெ நம:
2 ) ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம:
3 ) ஓம் உமாமஹெஷ்வராபயோ நம:
4 ) ஓம் துர்காயை நம:
5 ) ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம:
6 ) ஓம் மஹா லக்ஷ்மையை நம:
7 ) ஓம் குருப்யோ நம:
8 ) ஓம் ஸரஸ்வத்யை நம:
9 ) ஓம் வேதாய நம:
10) ஓம் வேதபுருஷாய நம:
11) ஓம் ஸர்வெப்யோ ப்ராஹ்மணெப்யோ நமோ நம:
12) ஓம் இஷ்டதேவதாப்யோ நம:
13) ஓம் குலதேவதாப்யோ நம:
14) ஓம் ஸ்தாநதேவதாப்யோ நம:
15) ஓம் க்ராமதேவதாப்யோ நம:
16) ஓம் வாஸ்துதேவதாப்யோ நம:
17) ஓம் ஷசீபுரத்தராப்யா நம:
18) ஓம் க்ஷெத்ரபாலாய நம:
19) ஓம் வஸொஷ்பதயெ நம:
20) ஓம் மாதாபிதரப்யா நம:
21) ஓம் ஸர்வெப்யோ தேவேப்யோ நமோ நம:
22) ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யோ நம:
Akshaya means something that will grow for ever. Something that does not diminish.
Akshaya Tritiya is a day in a year when sun is in 1st house Mesha rasi and moon is in 2nd house vrishaba rasi Rohini. Sun and moon are 1 and 2 grahas. Rohini Nakshatra is the most auspicious and fertile star in astrology, known as the Moon’s favorite abode. Ruled by the Moon and residing in Venus-ruled Taurus, it represents intense beauty, growth, luxury, and charm. It is associated with nourishing, creative, and growing energy.
The festival of the third crescent moon, known as the immortal festival, is a spring festival celebrated by Hindus and Jains. It is believed that whatever auspicious deed is done, it will prosper.
On the auspicious day of Akshaya Tritiya, Manimegalai received the inexhaustible vessel called "Akshaya Patra". With this vessel, Manimegalai got rid of hunger and distributed food to the people. Akshaya Tritiya is celebrated in the Manimegalai epic and Tamil culture as a symbol of getting rid of hunger, charity and ever grpwing wealth. This day Annapurani Devi was born, and Pandavas received the Akshaya Patra from the sun.
This day Lord Shiva appeared as *Akshayapureeswarar and cured Lord Shani's leg injury.
This day Mahalakshmi took the chest of Lord Vishnu as the eternal abode; Aishwarya Lakshmi and Tanya Lakshmi appeared; and Adi Shankara composed the Kanakadhara Stotram

அட்சய திரிதியை தினம்

  1. சிவபெருமான் *அட்சயபுரீஸ்வரராக காட்சி தந்த நாள்
  2. *சனி பகவானின் கால் ஊனம் சரியான நாள்
  3. மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்ற நாள்
  4. அன்னபூரணி தேவி அவதரித்த நாள்
  5. சூரியனிடமிருந்து பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்ற நாள்
  6. மகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இடம் பெற்ற நாள்.
  7. ஐஸ்வரிய லட்சுமியும், தான்ய லட்சுமியும் தோன்றிய நாள்.
  8. ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் இயற்றிய நாள்

Dyanam த்யாநம்

ஓம் - பரம்பொருளை நாம் உணர்ந்து தியானம் செய்வோமாக
ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात्पुर्णमुदच्यते पूर्णश्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॥
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
ஓம் பூர்ணமத: பூர்ணமிதம்பூர்ணாத் பூர்ண முதச்யதே
பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ணமேவா வஸிஷ்யதே
ஓம் ஸாந்தி : ஸாந்தி : ஸாந்தி :
This is Full and that is also is Full. From Fullness comes that Fullness. Taking Fullness from Fullness, Fullness Indeed Remains.

ஸர்வம் பிரம்மமயம். அதுஒன்றுமின்றி எதுவுமில்லை .
[There is nothing other than ‘it’]
அதுயின்றி எதுவுமில்லை - அதுகடந்து எதுவுமில்லை
[There is nothing with out it and nothing beyond it]
அது எங்கும்உள்ளது - எல்லாம்அதில் உள்ளது
[GOD is in everything and Everything is in GOD]

முழுமைத்தன்மையுடைய, அனைத்தும் மிஞ்சிய, எங்கும் நிறைந்த, அனைத்திலும் உள்ள, எதையும் சார்ந்து இராத சர்வ வல்லமையுள்ள, ஒரு சக்தி(பேராற்றல்). அப்பொருளானது உருவமற்றதாக, அன்பு கொண்டதாக, அறிவுமிக்கதாக, நிலையானதாக அநாதியாக உள்ளது.

நமக்குள் இயற்கையாய் இயங்கும் பரம்பொருளை வணங்குவோமாக Let us worship the almighty, the essence within us, existing everwhere as omnipotent nature

Nama pooja

  1. ஓம் உண்மைப் பரம்பொருளே போற்றி
  2. ஓம் அனைத்தையும் அடங்கிய சிவமே போற்றி
  3. ஓம் பூரணமாக (முழுமையாக) விளங்கும் தெய்வமே போற்றி
  4. ஓம் ஒப்பிலாத கடவுளே போற்றி
  5. ஓம் அருட்பெரும் ஜோதியே போற்றி
  6. ஓம் ஸத்ய பூரணனே போற்றி
  7. ஓம் எல்லாம் அறிந்த வானம் போன்றவனே
  8. ஓம் சனி பகவானே போற்றி
  9. ஓம் அட்சயபுரீஸ்வரரே போற்றி
  10. ஓம் அன்னதான பிரபுவே போற்றி
  11. ஓம் மந்தா ஜேஷ்டா தேவிகளே போற்றி
  12. ஓம் ஸர்வேஶ்வரீயே போற்றி
  13. ஓம் அபிவிருத்தி நாயகியே போற்றி
  14. ஓம் அன்னபூரணி தேவியே போற்றி
  15. ஓம் அன்னலட்சுமியே போற்றி
  16. ஓம் தன தான்ய ஐஸ்வரிய லட்சுமியே போற்றி
  17. ஓம் மணிமேகலையே போற்றி
  18. ஓம் அட்சய மங்களலட்சுமியே போற்றி

#886 ஓம் தனதான்ய-விவர்த்தின்யை நம:
ॐ धनधान्यविवर्धिन्यै नमः ।
She who makes wealth and grain to grow
தன-தான்ய விவர்தினீ = ஐஸ்வர்யத்தையும் தானியக் களஞ்சியங்களையும் அபிவிருத்தி செய்து, சுபீட்சம் அளிப்பவள்
மாந்தா அல்லது தாமினி கலைகளின் தெய்வம். ஜேஷ்டா (Jyestha) மூத்தவள் அல்லது முதல்வள் (மூத்த தேவி) அல்லது தவ்வை.

Siva (Anna) Linga Pooja

Food is God/Brahman. Prasada (blessed food) is a holy gift from Brahman, the Lord.
சர்வம் அன்னமயம்! இது இன்னொன்றின் அன்னத்துக்கு அன்னம். Infinite Food chain, everything is food to other thing.

அன்னம் பரப்ரம்ம ஸ்வருபம்
அன்னம் அளிப்பவனே போற்றி
ஓம் ஷ்ரி லிங்கேப்யோ நமஹா
ஓம் அன்னம் பதயே நமஹா
ஓம் ஹாம் அன்னலிங்காய நமஹா
அஹமன்னம் அஹமன்னம் அஹமன்னதோ
அஹம் அன்னம். அஹம் அன்னதொஹம்
ப்ரஹ்மார்பணம் ப்ரஹ்ம ஹவிர் | ப்ரஹ்மக்நௌ ப்ரஹ்மந ஹுதம்
ப்ரஹ்மைவ தெந கந்டவ்யம் | ப்ரஹ்ம கர்ம ஸமாதிநா
अऩ्ऩम् परप्रम्म स्वरुपम्
अऩ्ऩम् अळिप्पवऩे पोऱ्‌ऱि
ओम् ष्रि लिङ्केप्यो नमहा
ओम् अऩ्ऩम् पतये नमहा
ओम् हाम् अऩ्ऩलिङ्काय नमहा
अहमऩ्ऩम् अहमऩ्ऩम् अहमऩ्ऩतो
अहम् अऩ्ऩम्। अहम् अऩ्ऩतॊहम्
प्रह्मार्पणम् प्रह्म हविर् | प्रह्मक्नौ प्रह्मन हुतम्
प्रह्मैव तॆन कन्टव्यम् | प्रह्म कर्म समातिना

எப்பொருளும் நீஎனவே எண்ணிநான் தோன்றாத
வைப்பைஅழி யாநிலையா வைப்பாய் பராபரமே. Thayumanavar 69
O Paraparam, let me be permanently fixed in the idea that I am nothing since you are everything.

பத்துத் திசையும் பரந்த கடலுலகும்
ஒத்தெங்கும் நிற்குஞ் சிவம். [ஒளவையார் ஞானக்குறள்191]
The entire universe, filled with water and land in the ten directions, is pervaded and pervaded by the primordial Shiva. The eight directions, together with the above and below, constitute the ten directions.

நிற்கும் பொருளும் நடப்பனவுந் தானாகி
உற்றெங்கும் நிற்குஞ் சிவம். 200
Shiva is present in all the moving things on this earth, that is, in all living beings (including human) and in all the immobile things.

வானாகி மண்ணாகி வளி ஆகி ஒளிஆகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே.
[Manikkavasagar - திருச்சதகம்]

Goddess Annapurani

ஓம் அன்னபூர்ணாயை நம:
ஓம் ஶிவாயை நம:
ஓம் தேவ்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் ஸர்வஜ்ஞாயை நம:
ஓம் துர்காயை நம:
ஓம் வேத வேத்யாயை நம:
ஓம் லக்ஷ்ம்யை நம:
ஓம் பயஹாரிணை நம:
ஓம் ஶக்த்யை நம:
ஓம் பகவத்யை நம:
ஓம் கௌர்யை நம:
ஓம் விஶாலாக்ஷ்யை நம:
ஓம் கமலாஸனாயை நம:
ஓம் ஸாந்தாயை நம:
ஓம் பரமானந்த ரூபிண்யை நம:
ஓம் ஆத்மவந்திதாயை நம:
ஓம் ஸர்வமங்களாயை நம:
ॐ अन्नपूर्णायै नमः
ॐ शिवायै नमः
ॐ देव्यै नमः
ॐ सरस्वत्यै नमः
ॐ सर्वज्ञायै नमः
ॐ दुर्गायै नमः
ॐ वेदवेद्यायै नमः
ॐ लक्ष्म्यै नमः
ॐ भयहारिणै नमः
ॐ शक्त्यै नमः
ॐ भगवत्यै नमः
ॐ गौर्यै नमः
ॐ विशालाक्ष्यै नमः
ॐ कमलासनायै नमः
ॐ शान्त्यै नमः ॥ ॥
ॐ परमानन्दरूपिण्यै नमः
ॐ आत्मवन्दितायै नमः
ॐ सर्वमङ्गलायै नमः

"ஓம் அன்னபூர்ணே சதாபூர்ணே ஷங்கர பிராண வல்லபே
ஞான வைராக்ய சித்யார்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி"
அன்னபூரணி தேவியே, எப்போதும் நிறைவானவளே. சங்கரனாகிய சிவபெருமானுக்கு உயிரானவளே. அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆன்மிக அறிவாற்றல், மனத்தெளிவு, நற்பேறு, ஆன்மிக ஈடேற்றம் ஆகியவற்றை பிச்சையாக தந்தருள்வாய் பார்வதி தாயே.
O Goddess Annapurani, who is always full. O life to Lord Shiva, who is Shankara. O Mother Parvati, who bestows spiritual knowledge, mental clarity, auspiciousness, and spiritual salvation upon all living beings.
"நித்யானந்தகரீ வராபயகரீ லெளந்தர்யரத்னாகரீ
நிற்தூதாகில கோரபாபநிகரீ ப்ரயக்ஷமாகேச்வரி
ப்ராலேயாசல வம்சபாவனகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷாம் தேஹிக்ருபாவலம்பனகரீ மாதாந்நபூர்ணச்வரீ"
"அன்னபூரணி தாயே, இன்று உன்னுடைய திருவருளால் எனக்கு உணவு கிடைத்துள்ளது. இது போல் அனைத்து உயிர்களுக்குமு் நிறைவாக உணவு கிடைக்க வேண்டும். சிவன் சக்தியின் பிள்ளைகளாகிய எங்களை நீ எப்போதும் உணவிற்கு எந்த குறையும் ஏற்படாமல் காத்தருள்வாயாக",.
"O Mother Annapurna, today I have received food by your grace. May all living beings receive sufficient food in this way. May you always protect us, the children of Shiva Shakti, from any shortage of food.

மணிமேகலை பொன்மொழிகள் Manimegalai golden words

Hunger leads to all evils
பசி வந்திட பத்தும் பறந்துபோகும்
குடிப் பிறப்பு அழிக்கும்; விழுப்பம் கொல்லும்;
பிடித்த கல்விப் பெரும்புணை விடூ உம்;
நாண் அணி களையும்;மாண் எழில் சிதைக்கும்;
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப் பிணி என்னும் பாவி (மணி 11-76)

Giving food is giving life
ஆற்றுனர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண்தினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (மணி.11-92)

மணிமேகலை யார் யாருக்கு உணவு கொடுத்தாள்?
காணார், கேளார், கால் முடப் பட்டோர்
பேணுநர் இல்லோர் பிணி நடுக்குற்றோர்
யாவரும் வருக என்று இசைத்துடன் ஊட்டி (மணி 13-111)

Royal Dharma - taking care of basic needs of citizens
அறம் எனப் படுவது யாது எனக் கேட்பின்
மறவாது இது கேள் மண் உயிர்க்கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல் (மணி 25-228)

Celebration
ஒளிறுவாள் மறவரும் தேரும் மாவும்
களிறும் சூழ்தரக் கண்முரசு இயம்பிப்
பசியும் பிணியும் பகையும் நீங்கி 70
வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி
அணிவிழா அறைந்தனன் அகநகர் மருங்கு-என்.
The drummer-announcer, who came in a procession surrounded by the chariots, horses, and elephants, came drumming and announcing that: There should be no hunger, strife and enemity in the country. For that, the rainfall should increase and the soil fertility should increase. Let us celebrate the festival of abundance, while congratulating persons who are making this possible.

Shanthi – மங்களம்

All possible 16 riches - பதினாறும் பெற்று பெருவாழ்வு
கலையாத கல்வியும், குறையாத வயதும்
ஓர் கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும்
குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும், அன்பு அகலாத துணையும்
தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும்
மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும், கோணாத கோலும்
ஒரு துன்பம் இல்லாத வாழ்வும், துய்ய நின்பாதத்தில்
அன்பும் உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலைஆழி அறி துயில்கொள் மாயனது தங்கையே
ஆதி கடவூரின் வாழ்வே அமுதீசர் ஒரு பாகம்
அகலாத சுகபாணி அருள் வாமி! அபிராமியே!

ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात्पुर्णमुदच्यते पूर्णश्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॥
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
ஓம்பூர்ணமத: பூர்ணமிதம்பூர்ணாத் பூர்ண முதச்யதே
பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ணமேவா வஸிஷ்யதே
ஓம்ஸாந்தி : ஸாந்தி : ஸாந்தி :
This is Full and that is also is Full. From Fullness comes that Fullness. Taking Fullness from Fullness, Fullness Indeed Remains.

ॐ द्यौः शान्तिरन्तरिक्षं शान्तिः पृथिवी शान्तिरापः शान्तिरोषधयः शान्तिः ।
वनस्पतयः शान्तिर्विश्वेदेवाः शान्तिर्ब्रह्म शान्तिः सर्वं शान्तिः शान्तिरेव शान्तिः
सा मा शान्तिरेधि ॥ ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
ஓம் த்யௌ ஷாந்திர்: அந்தரிக்ஷம் ஷாந்தி: ப்ரித்வி ஷாந்திர்:
ஆபஹ் ஷாந்திர்: ரோஷதயா ஷாந்தி:வனஸ்பத்ய ஷாந்திர்:
விஸ்வேதேவ ஷாந்திர்: ப்ரஹ்ம ஷாந்தி:ஸர்வம் ஷாந்திர்: ஷந்திரெவ ஷாந்தி:
ஸாமா ஷாந்திர் யேதி ॥ ஓம்ஸாந்தி : ஸாந்தி : ஸாந்தி :
Om, May there be Peace in Heaven, May there be Peace in the Sky. May there be Peace in the Earth, May there be Peace in the Water, May there be Peace in the Plants. May there be Peace in the Trees, May there be Peace in the Gods in the various Worlds, May there be Peace in Brahman. May there be Peace in All, May there be Peace Indeed within Peace, Giving Me the Peace which Grows within Me. Om, Peace, Peace, Peace.

பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற
நிறைகின்ற பரிபூரணானந்தமே [தாயுமானவர்]
எல்லோரும் இன்பூற்றிருக்க நினைப்பதுவே | அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே [தாயுமானவர்]
Did not know anything else except to wish that everyone shall be happy - ThAyumAnavar


Akshaya Tritiya wishes

மாற மாற எல்லாம் மாற
வளர வளர திறமை வளர
தவிர்க்க தவிர்க்க சோம்பலைத் தவிர்க்க
உழைக்க உழைக்க முடியும் வரை உழைக்க
ஏற ஏற வாழ்க்கை மேல ஏற
இல்லாமை வறுமை பிரச்சனை தீர
துன்பங்கள் எல்லாம் தூர ஓடிட
அன்பாலே நாமெல்லாம் ஒன்று சேர
அட்சய திருதியை வாழ்த்துக்கள்
அட்சயம் என்றால் வளரக்கூடியது.
அள்ள அள்ளக் குறையாதது
Change everything for better, Grow and develop talent,
Avoid laziness and work as much as you can.
Akshaya Tritiya wishes for excellent health, joy, prosperity, and success in future endeavours.

*அட்சயபுரீஸ்வரர் - அபிவிருத்தி நாயகி (விளங்குளம் ஊர் ஆலயம்).
கால் ஊனம் நீங்கப் பெற்ற சனி பகவானுக்கு சிவபெருமான் அட்சயபுரீஸ்வரராக காட்சி தந்து தரிசனம் அருள்கிறார். கால் ஊனத்துடன் சனி பகவான் நிவாரணம் தேடி பிச்சை ஏந்தி அந்த தானியங்களைச் சமைத்து ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்தார். சனி பகவானின் கால் ஊனம் சரியானது அட்சய திருதியை நாள். இத்தலத்தில் சனீஸ்வர பகவான் தெற்கு நோக்கி குடும்ப சேமேதரராக தனது மனைவியர் மந்தா தேவி, ஜேஷ்டாதேவி ஆகியோருடன் எழுந்தருளி இருக்கிறார். இவரது ஊனத்தை காகம் வந்து பெற்றுக் கொண்டது. எனவே, சனி பகவான் அந்த காகத்தினை தனது வாகனமாக ஏற்றுக் கொண்டார். இங்கு உடல் ஊனமுற்றவர்கள் குறைபாடு உள்ளவர்கள் தோஷங்கள் நீங்க வழிபடும் ஆலயம் ஆகும்.

Akshayapureeswarar - apivirutti nayaki at Vilankulam Village Temple:
Lord Shiva appeared to Lord Shani as Akshayapureeswarar and granted him darshan. Lord Shani, who was disabled, sought relief by begging, cooked the grains and distributed them to the poor and needy. Lord Shani's disability was cured on Akshaya Tritiya. In this temple, Lord Shani is facing south as the protector of the family with his wives Mantha Devi and Jeshta Devi. A crow came and took away his disability. Therefore, Lord Shani accepted that crow as his vehicle. This is an important temple where physically disabled people and those with disabilities worship to get rid of their evils.

Nama pooja meaning

Om, Praise True Supreme Being or Truth itself,
Om, Praise all-encompassing Shiva,
Om, Praise ever full and complete God,
Om, Praise incomparable God,
Om, Praise glorious light,
Om, Praise complete Truth, fullness,
Om, Praise all-knowing Lord infinite like sky
Om, Praise Lord Saturn,
Om, Praise Lord Akshaya Pureeswarar,
Om, Praise Food giving Lord,
Om, Praise Goddesses Mantha & Jeshta
Om, Praise Goddess Owner of all and everything
Om, Praise Goddess boundless growth
Om, Praise Goddess Anna Purani,
Om, Praise Goddess Anna Lakshmi,
Om, Praise Goddess Wealth, opulence, grains etc
Om, Praise Goddess Manimekala
Om, Praise Goddess Akshaya Mangala Lakshmi.

மணிமேகலை அட்சய பாத்திரம்

அழிவற்ற மூன்றாம் பிறைத் திருவிழா என அறியப்படுவது இந்துக்கள், சமணர்களின் வசந்தகால கொண்டாட்டம் ஆகும். எந்த சுப காரியம் செய்தாலும் அது, வளர்ச்சியடையும் என்றே, அட்சய திரிதியை தினம் கொண்டாடப்படுகிறது.
மணிமேகலை அட்சய திருதியை நன்னாளில் தான், "அட்சய பாத்திரம்" எனும் வற்றாத உணவளிக்கும் பாத்திரத்தைப் பெற்றாள். இந்த பாத்திரத்தைக் கொண்டு மணிமேகலை பசிப்பிணி போக்கி, மக்களுக்கு அன்னதானம் செய்தாள்.
அட்சய திருதியை என்பது பசிப்பிணி போக்குதல், தானம் செய்தல் மற்றும் வற்றாத வளம் பெறுதலின் குறியீடாக மணிமேகலை காப்பியத்திலும், தமிழர் பண்பாட்டிலும் போற்றப்படுகிறது.
காசியில் தேவி அன்னபூரணியாக அவதரித்து, பசியைப் போக்குபவளாக வழிபடப்படுகிறாள். உலகம் பசியால் வாடியது அனைவருக்கும் உணவு அளித்தார்.
இயற்கை, மனிதர்களுக்குத் தேவையான காற்றையும், நீரையும், உணவையும் தொடர்ந்து வற்றாமல் வழங்கி வருகிறது, இயற்கை அள்ள அள்ளக் குறையாத' அட்சய பாத்திரம்.
இறைவனுக்கு (இயற்கைக்கு) அட்சயம், பூரணம், வற்றாயிருப்பு, Abundance, Providence என பல பெயர்கள்.

ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

காசியில் அபஞ்சிகன்-சாலி தம்பதிக்கு பிறந்த குழந்தை, தாயால் கைவிடப்பட்டு, பசு ஒன்றினால் ஏழு நாட்கள் நாவால் நக்கப்பட்டு, பாலூட்டிப் பாதுகாக்கப்படுகிறது. பின்னர் இளம்பூதி என்ற அந்தணரால் எடுக்கப்பட்டு 'ஆபுத்திரன்' (பசு மகன்) எனப் பெயர் சூட்டி வளர்க்கப்படுகிறது.
வளர்ந்து பெரியவனான ஆபுத்திரன், வேள்வியில் பலியிடப்படவிருந்த பசுவை மீட்டு, உயிர்க்கொலைக்கு எதிராக வாதிடுகிறான். அந்தணர்களால் ஊரை விட்டுத் துரத்தப்பட்டு, மதுரையை அடைகிறான். அங்கு சிந்தாதேவியின் அருளால் பசிப்பிணி போக்கும் அமுதசுரபியைப் பெறுகிறான். பசித்தோருக்கு உணவளித்து, இறுதியில் தன் உடலையும் பசிப்பினி தீர்க்கும் உணவாக அளித்து, ஜாவகத் தீவில் மறைந்ததாக வரலாறு முடிகிறது.
உயிரிரக்கம், கொலையற்ற நெறி, மற்றும் தானத்தின் சிறப்பை ஆபுத்திரன் வரலாற்றின் மூலம் உணர்த்துகிறது

மாபெரும் பாத்திரம் மடக்கொடிக்கு அருளிய
ஆபுத் திரன்திறம் அணியிழை கேளாய்:
வார ணாசிஓர் மறைஓம் பாளன்
ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன்
பார்ப்பனி சாலி காப்புக்கடை கழிந்து 5
பெருமை மிக்க இவ் வமுதசுரபியை நினக்குக் கொடுத்த, ஆபுத்திரன் வரலாற்றை அணியிழாய கேட்பாயாக, காசித் திருப்பதியின் கண்ணுள்ள ஓர் அந்தணனும், மறைகளை ஓதுவிப்போனும் ஆகிய அபஞ்சிகன் என்போனது, மனைவியாகிய சாலி என்பவள் காவலின் எல்லையைக் கடந்து, கொண்டோன்

மணிமேகலை காப்பியத்தில் காசி (வாரணாசி) தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
வார ணாசியோர் மாமறை முதல்வன்
ஆரண உவாத்தி யரும்பெறல் மனைவியான்
பார்ப்பார்க் கொவ்வாப் பண்பின் ஒழுகிக்
காப்புக் கடைகழிந்து கணவனையிகழ்ந்தேன்
எற்பயம் உடைமையின் இரியல் மாக்களொடு
தெற்கண் குமரி யாடிய வருவேன்
காசிப்பதியிலுள்ள வேதமோதுவிக்கும் உவாத்தியாகிய அந்தணன் ஒருவனது பெறற்கரிய மனைவி யாவேன் யான், அந்தணர்க்குத் தகாத இயல்புடன் ஒழுகி, காவலின் எல்லையைக் கடந்து கணவனை அவமதித்தேன், இரவின் அச்சமுடைமையால், கெடுதலுற்ற மக்களுடன், தென்றிசைக் குமரியில் நீராடும் பொருட்டு வருவேன்.


Manimekalai

The Manimekalai (மணிமேகலை,  'jewelled belt, girdle of gems'), has been variously dated around the 2nd-century. The epic composed by Seethalai Sataṉar, is one of the Five Great Epics of Tamil Literature. The last cantos of the epic tells about Mahayana Buddhism, Jainism, Ajivika, and Hinduism.
The title Manimekalai is also the name of the daughter of Kovalan and Madhavi, who follows in her mother's footsteps as a dancer and a Buddhist nun. Her physical beauty and artistic achievements seduces the Chola prince Udayakumara. He pursues her. She hides, prays and seeks the help of her mother, her Buddhist teacher Aravana Adikal and angels. One angel helps her magically disappear to an island while the prince tries to chase her, grants her powers to change forms and appear as someone else. On the island, she receives a magic begging bowl, which always gets filled, from Manimekhala.
Later, she takes the form and dress of a married woman in the neighborhood, as the prince pursues her. The husband of the married woman sees the prince going after Manimekalai-in-hiding, kills the prince. The king and queen learn of their son's death, order the arrest of Manimekalai. Manimekalai converts the prison into a hospice to help the needy, teaches the king the dharma of the Buddha.
The queen understands, repents. Manimekalai is set free. She then goes to goddess Kannaki temple in Vanci (Chera kingdom), prays, listens to different religious scholars, and practices severe self-denial to attain Nirvana.
Nara Contact terms
⇰ To Top ⇰ To Index Page