Non commercial web site, available to every one. Use it if you find them useful. Encouraged to copy and distribute if needed.
தாயுமானவர்
அங்கு இங்கு எனாதபடி எங்கும் ப்ரகாசமாய்
ஆனந்தப் பூர்த்தியாகி அருளொடு நிறைந்தது எது?
தன் அருள்வெளிக்குள்ளே அகிலாண்ட கோடியெல்லாம்
தங்கும்படிக்கு இச்சைவைத்து உயிருக்குஉயிராய்த் தழைத்தது எது?
மன வாக்கினில் தட்டாமல் நின்றது எது?
சமயகோடிகளெலாம் தம் தெய்வம் எம்தெய்வம் என்று
எங்கும் தொடர்ந்து எதிர் வழக்கிடவும் நின்றது எது?
எங்கணும் பெருவழக்காய் யாதினும் வல்ல
ஓர் சித்துவாகி இன்பமாய் என்றைக்கும் உள்ளது எது?
மேல் கங்குல்பகல் அறநின்ற எல்லை உளது எது?
அது கருத்திற்கு இசைந்தது அதுவே
கண்டன எலாம் மோன உருவெளியது ஆகவும் கருதி அஞ்சலி செய்குவாம்
எப்படிப் பாடினரோ
" எப்படிப் பாடினரோ—அடியார்
அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே (எப்படிப்)
அப்பரும், சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும்,
அருள் மணி வாசகரும் பொருள் உணரந்தே உன்னையே (எப்படிப்)
குருமணி சங்கரரும் அருமைத் தாயுமானாரும்,
அருணகிரினாதரும் அருட்ஜோதி வள்ளலும்
கருணைக் கடலில் பெருகி காதலினால் உருகி
கனித் தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம் (எப்படிப்) "
போ ஷம்போ ஷிவ ஷம்போ - ராகம் : revathi - taaLam: aadi
போ ஷம்போ ஷிவ ஷம்போ ஸ்வயம்போ [3]
கங்காதர ஷங்கர கருணாகர | மாமவ பவஸாகர தாரக [போ ... ஸ்வயம்போ.. 2]
நிர்குண பரப்ரஹ்ம ஸ்வரூப | காமாகம பூத ப்ரபஞ்ச ரஹித ||
நிஜகுஹ நிஹித நிதந்த அணந்த | ஆணந்த அதிஷய அக்ஷய லிங்க ||
திமித திமித திமி திமிகிட கிட தோம் | தோம் தோம் தரிகிட தரிகிட கிட தோம் ||
மதங்க முணிவர வந்தித ஈஷ | ஸர்வ திகம்பர வேஸ்டித வேஷ ||
நித்ய நிரந்ஜண ந்ரித்ய நடேஷா | ஈஸ ஸபேஷ ஸர்வேஷா ||
போ ஷம்போ ஷிவ ஷம்போ ஸ்வயம்போ [3]
ஆனந்தக் கூத்தாடினார்
ராகம் : கல்யாணி - தாளம் : ரூபகம்
பல்லவி
ஆனந்தக் கூத்தாடினார் அம்பலந்தனிலே பொன்னம் பலந்தனிலே
அநுபல்லவி
ஆனந்தக் கூத்தாடினார் அயனும் மாலும் பாடினார்
அந்தரங்கமாகச் சிந்தித்த பேர்க்கருள்
நந்தோந் நந்தோம் என்று | தொந்தோம் தொந்தோமென்று [ஆன]
சரணம்
பதஞ்சலிமா முனியை நோக்கிப் | பார்த்த பேர்கள் குறையைப் போக்கி
இதமகித மென்றறிவை நீக்கி | ஏகமாகக் காலைத் தூக்கி [ஆன]
மத்தளதாள மதிரமுழங்க | வளரும்ப்ரமத கணங்க னிலங்கத்
தத்திமிதக் கிடதோமன்றி லங்கச் | சபையுந் துலங்கச் சதங்கை குலுங்க [ஆன]
பாலகிருஷ்ணன் பணியும் பாதன் | பார்த்தபேர்கள் வரப்பிர சாதன்
ஞாலம்புகழுஞ் சீல போதன் | நம்பி தூதன் அம்பிகை நாதன் [ஆன]
கனகசபாபதி தரிசனம்
ராகம் : தன்யாசி தாளம் : ஆதி
பல்லவி
கனகசபாபதி தரிசனம் ஒருநாள் கண்டால் கலிதீரும்
அநுபல்லவி
சனகமகாமுனி கைதொழுதேத்திய | தினகரகோடி தேசோமயமாகிய [கனக]
சரணம்
மனதிலொடுங் கியகல்மஷம் போக்கும் | மாயப்பிணியதனை மறுவடி வாக்கும்
சனனமரண சமுசாரத்தை நீக்கும் | திருவடி நிழலிலேகூடிய யார்க்கும் [கனக]
சுருதிமுடிகளிலுஞ் சொல்லிக் கொண்டாடும் |தூயவொளியை யொளியாகவே கூடும்
தருமநெறியுந் தவறாதுள நாடும் |ததிங்கணதோ மென்றுதாண்டவ மாடும் [கனக]
பற்பலயோசனை செய்வதுந் தொல்லை |பரகதியடையவு பாயமுமில்லை
அற்புதமாகவே தானொரு சொல்லை |அணியுங் கோபாலகிருஷ்ணன் பணியுந்தில்லை [கனக]
நடனம் ஆடினார்
ராகம்: வசந்தா - தாளம்: அட
பல்லவி
நடனம் ஆடினார் வெகு நாகரீகமாகவே கனக சபையில் ஆனந்த
அநுபல்லவி
வடகயிலையில் முன்னால் மாமுனிக்கருள் செய்தபடி தவறாமல்
தில்லைப்பதியில் வந்து தை மாதத்தில் குரு பூசத்தில் பகல் நேரத்தில் (நடனம்)
சொல்கட்டு ச்வரம்
தாம் தகிட தகஜம் தகணம் தரிகும் தரிதீம் திமித தகஜம் தகிணம்
தத னீ ச ரி ச ரி சா சா ரி ச தா ச னி த த ரி ச சா த னி சா ச ச ச ரீ ச ரீ ரி ரீ ரி ரீ
ச னி த ச ச ச ரி ச ச ரி ச ச ச னி ச ரி ச ரி ச ச சா ச ரி ச னி தா தா த னி த த
மா த ம க ரி ச
சரணம்
அஷ்டதிசையில் கிடுகிடென்று சேஷன்தலை நடுங்கஅண்டம் அதிர
கங்கை துளி சிதற பொன்னாடவன் கொண்டாட
இஷ்டமுடனே கோபாலக்ருஷ்ணன் பாட சடையாட அரவு படமாட
அதிலே நடமாட தொம்தோமென்று பதவிகள் தந்தோமென்று (நடனம்)
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரொ
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரொ|எனக்குள் அவன் இருப்பான் அறிவாறொ||
தவழும் நதியை தரித்த முடியான்| அடியும் முடியும் அறிய முடியான்
எளிய அடியார் ஒதும் வேத நாதம் ஆஹி.....
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரொ|எனக்குள் அவன் இருப்பான் அறிவாறொ||
வரிப்புலி அதை தரித்தவன் எழில் கண்டேன்
பிரப்பெணும் பினி அறுப்பவன் துனை கொண்டேன்
தமிழ் கவி தரும் எனக்கொரு வரம்| தர திரு உளம் வேன்டும்
ஸகத் திருக்கெனை தரத் தஹும் நெறி |வகுத்திட துனை வேன்டும்
ஆலம் கரு நீலம் என தெரியும் ஒரு கண்டன்.
அண்டும் திரு தொண்டன் யெனும், அடியார்கு ஒரு தொண்டன்.
பற் று தலைக்கு நெருப்பவன்| ஒற் றை கணத்தில் அழிப்பவன்
நெற்றிப் பிறைக்குள் நெருப்பை வளர்த்து....
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரொ |எனக்குள் அவன் இருப்பான் அறிவாறொ||
தொடக்கமும் அதந் அடக்கமும் அவன் வஎலை
நடப்பதும் அதை தடுப்பதும் அவன் லேலை
உடுக்களில் ஸரம் தொடுத்தவன் தலை |முடிக்க நியாவும் கோடும்
பெருக்கலும் அதை வகுத்தலும் அதை | கழித்தலும் அவன் பாடம்
மாறும் யுகம் தொறும் அவன் கணக்கின் படி ஆகும்
மண் ணும் உயர் விண் ணும் அவன் ஒரு கை பிடி ஆகும்
சட்டம் அணைத்தும் வகுத்தவன் |திட்டம் அணைத்தும் தொகுத்தவன்
ஒற் றப்படித்து முடித்த ஒருத்தன்
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரொ|எனக்குள் அவன் இருப்பான் அறிவாறொ||
ஓம் நமச்சிவாயா
ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா தங்கனிலாவினை அணிந்தவா
ஆடுகிறேன் பூலோகையா அருளில்லையா (*2)
பஞ்ச பூதங்களும் முகவடிவாகும் |ஆறு காலங்களும் ஆடைகளாகும்
மலைமகள் பார்வதி உன்னுடன் நடக்க| ஏழு அடிகளும் சலங்கை படிக்க
ராகம் பார்வையே எட்டுதிசைகளே |உன் சொற்களே நவரசங்களே
கயிலாச மலைவாசா கலையாவும் நீ
புது வாழ்வு பெறவே அருள்புரி நீ
ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா தங்கனிலாவினை அணிந்தவா
ஆடுகிறேன் பூலோகையா அருளில்லையா (*2)
மூன்று காலங்களும் உந்தன் விழிகள் |சதுர் வேதங்களும் உந்தன் மொழிகள்
கணபதி முருகனும் பிரபஞ்சம் முழுதும்| இறைவா உன்னடி பெறவே துடிக்கும்
அத்வைதமும் நீ ஆதியந்தம் நீ| நீயெங்கு இல்லை புவனம் முழுதும் நீ
ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா தங்கனிலாவினை அணிந்தவா
ஆடுகிறேன் பூலோகையா அருளில்லையா (*2)
நாத வினோதங்கள்
நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள் பரம சுகங்கள் தருமே
அபினயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும் வீடு பேறு பெறுமே
ராகங்களே...அ அ அ அ ஆ...பழகுவதே...அ அ அ அ ஆ...
ராகங்களே பழ்குவதே பாவங்களே கலையசைவே
குழலொடு உயர்வுகள் இணைகின்ற தவமிது
நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள் பரம சுகங்கள் தருமே
கயிலை நாதன் நடனம் ஆடும் சிவரூபம்
பௌளர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம்
நவரச நடனம் தனிதனி தனிச | ஜதி தரும் அமுதம் தனிதனி தனிச
நவரச நடனம் ஜதி தரும் அமுதம் | அவன் விழி அசைவில் எழுதுளி அசையும்
பரதமென்னும் நடனம் ஆ ஆ அ | பிறவி முழுதும் தொடரும் ஆ ஆ அ
பரதமென்னும் நடனம் பிறவி முழுதும் தொடரும்
விழியொளி பொழியும் அதில் பகை அழியும்
திமிதிமி திமிதிமி
விழியொளி பொழியும் அதில் பகை அழியும்
சிவனின் நடனம் உலகாளும்
திரன திரனனன திரன திரனனன | திரன திரனனன நடனம்
திரன திரனனன திரன திரனனன | திரன திரனனன நாட்டியம்
உலகம் சிவனின் தஞ்சம் | அவன் பாதமே பங்கஜம்
நர்த்தனமே சிவ கவசம் | நடராஜ பாதம் நவரசம்
திரனன திரனன திரதிர திரதிர
நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள் பரம சுகங்கள் தருமே
பிச்சை பாத்திரம் யெந்தி வந்தென்
பிச்சை பாத்திரம் யெந்தி வந்தென் ஐயனெ என் ஐயனெ
யாம் ஒரு, பிச்சை பாத்திரம் யெந்தி வந்தென் ஐயனெ என் ஐயனெ
பிண்டம் என் னும், எலும்பொடு தஸை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பெனும்
பிச்சை பாத்திரம் யெந்தி வந்தென் ஐயனெ என் ஐயனெ
அம்மையும் அப்பனும் தந்ததா? இல்லை ஆதியின் வல்வினை சுழ்ந்ததா (*2)
இம்மையை நான் அரியாததா (*2)
சிறு பொம்மையின் நிலயிணில் உண்மையை உணர்ந்திட
பிச்சை பாத்திரம் யெந்தி வந்தென் ஐயனெ என் ஐயனெ
யாம் ஒரு, பிச்சை பாத்திரம் யெந்தி வந்தென் ஐயனெ என் ஐயனெ
அத்தனை செல்வமும் உன் இடத்தில் நான் பிச்சைக்கு ஸெல்வது எவ்விடத்தில்
வெரும் பாத்திரம் உள்ளது என் இடத்தில் அதன் ஸூத்திரமோ அது உன் இடத்தில்
ஒரு முறைய இரு முறைய பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்
புது வினை யா பழ வினை யா, கனம் கனம் தினம் என் னை துடிக்க வைத்தய்
பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வழ்கையும் துரத்துதே
உன் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய் மலர் பாதத்தால் தாங்குவாய்
உன் திருக்கரம் என் னை அரவனைத்து உன்னாதாறுல் பெற
பிச்சை பாத்திரம் யெந்தி வந்தென் ஐயனெ என் ஐயனெ
யாம் ஒரு, பிச்சை பாத்திரம் யெந்தி வந்தென் ஐயனெ என் ஐயனெ
ஓஒம் ஷிவோஹும்
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்..
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்..
ஓஒம் ஷிவோஹும் ஓஒம் ஷிவோ ஹும் ருத்ர நாமம் பஜே ஹும்..
ஸகால லோகயா ஸர்வ போதய ஸத்ய ஸக்ஷட்கர
ஸம்பொ ஸம்பொ ஷங்கரா
ஓஒம் ஷிவோஹும் ஓஒம் ஷிவோ ஹும் ருத்ர நாமம் பஜே ஹும்..
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்..
அண்ட ப்ரம்மாண்ட கோடி அகில பரிபாலன
பூரண ஜகத்காரணா ஸத்ய தேவா தேவப்ரியா
வேத வேதர்த்த ஸார யக்ஞ யக்ஞோமயா
நிஷ்டல துஷ்ட நிக்ரஹ ஸப்த லோக ஸௌரக்க்ஷண
ஸூம ஸூர்ய அக்நி லோசந ஸ்வெத ரிஷப வாஹணா
ஸூல பாணி புஜங்க புஷண த்ரிபுர நாஸரார்தர
யோம கேஸ மஹாஸெண ஜநக பந்ச வக்த்ர பரஸு ஹஸ்த நாமஹ
ஓஒம் ஷிவோஹும் ஓஒம் ஷிவோ ஹும் ருத்ர நாமம் பஜே ஹும்.. (*2)
கால த்ரிகால நேத்ர த்ரிநேத்ர ஸூல த்ரிஸூல கத்ரம்
ஸத்ய ப்ரவ வதிவ்ய ப்ரகஸ மந்ட்ர ஸ்வரோப மாத்ரம்
நிஷ்ப்ர பங்கச திநிஷ்ட லங்கொஹம்
நிஜ பூர்ந பொத ஹும்
ஹும்கத்ய கத்மாகம்நித்ய ப்ரம்ஹொகம்ஸ்வப்ந கஸொகம்
ஹும் ஹும் ஸசிட் ப்ரமநம் ஓம் ஓம் மோல ப்ரமெக்யம்
ஓம் ஒமகம் ப்ரம்ஹஸ்மி ஓம் (*2)
ஓம் கன கன கன கன கன கன கன கன
ஸஹஸ்ர கந்த ஸப்த விஹரகி
தம தம தம தம தும தும தும தும
சிவ தம துக நாத விஹரகி
ஓஒம் ஷிவோஹும் ஓஒம் ஷிவோ ஹும் ருத்ர நாமம் பஜே ஹும்.. (*2)
வீரபத்ரய அக்நி நேத்ரய கோர ஸௌஹரஹ
ஸகால லோகயஸர்வ போதயஸத்ய ஸக்ஷட்கர
ஸம்பொ ஸம்பொ ஷங்கரா
ஓஒம் ஷிவோஹும் ஓஒம் ஷிவோ ஹும் ருத்ர நாமம் பஜே ஹும்.. (*2)
ஈசனே சிவனே போற்றி
ஈசனே சிவனே போற்றி
நீரினை சிரசில் கொண்டு
நெருப்பினை கையில் கொண்டு
பாரினில் பக்தர்தம்மை
பாசமுடனே காக்கும்
ஈசனே சிவனே போற்றி!
இறைவா உன் திருத்தாள்போற்றி!
வாசமாய் வாழ்க்கை மாறிட
வணங்குவோம் சிவனின் பாதம்
சிவம் என்று சொல்லும்போதே
சிந்தையது தெளிவு பெறும்
அவன் கருணைகங்கை
ஆறாகப் பாய்ந்துவரும்
நினைவெலாம் சிவமயம்
நித்தியமென்றாகிவிட்டால்
கனவிலும் எமபயமில்லை
கருத்தினில் இதனைக்கொள்வோம்!
அன்பிற்குமறுபெயராய்
அகிலத்தை ஆளுபவன்
என்புக்கு உள்கடந்துமனத்தில்
ஏகாந்தமாய் இருக்கின்றவன்
உருவமாய் உள்ளவனே
உள்ளத்தில் உறைவதை
உணர்ந்தபின் தாழ்வில்லை
உமாமகேசுவரனின் கருணைக்கு ஏது எல்லை
ஆண்டவனே இல்லையே
ஆண்டவனே இல்லையே x3
தில்லை தாண்டவனே உன்போல்
தாரணி மீதினிலே ஆண்டவனே இல்லையே ! x2
அலைமகள் தலை மீதில் நிலையானதேன் x2
மலைமகள் இடபாகம் மறைவானதேன் x2
அலைமகள் தலை மீதில் நிலையானதேன்
மலைமகள் இடபாகம் மறைவானதேன் x2
உலகமே உனைத் தேடும் ஒளியானதேன் x2
உனையல்லாது ஓர் அணுவும் அசையாது
உண்மை யாவும் புரியாத உலகில்
வேறொரு ஆண்டவனே இல்லையே
தில்லை தாண்டவனே உன்போல்
தாரணி மீதினிலே ஆண்டவனே இல்லையே x2
பக்தர்கள் போற்றுவார் பலர் உன்னை தூற்றுவார் x2
இத்தாரணியில் மாந்தர் எதையுமே மாற்றுவார் x2
பக்தியே மறைந்தாலும் சத்தியம் மறையாது x2
பரம தியான சிவஞான ப்ரம்மமே
பாருலாவும் உனையன்றி வாழ்வில் வேறொரு
ஆண்டவனே இல்லையே
தில்லை தாண்டவனே உன்போல்
தாரணி மீதினிலே ஆண்டவனே இல்லையே !
பஜணை - bajann
நமசிவாய பரமேஸ்வராய சசிசேகராய நம ஓம்
பவாய குண சம்பவாய சிவதாண்டவாய நம ஓம்.
சம்போ மஹாதேவ தேவ! சிவ சம்போ மஹாதேவ தேவ |
தேவேச சம்போ! சம்போ மஹாதேவ தேவ |
சிவாய நம ஓம் சிவாய நம:
சிவாய நம ஓம் நமசிவாய
சிவாய நம ஓம் சிவாய நம:
சிவாய நம ஓம் நமசிவாய
சிவ சிவ சிவ சிவ சிவாய நம ஓம்
ஹர ஹர ஹர ஹர நமசிவாய - சிவாய நம
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய நமசிவாய - சிவாய நம
ஓம் சிவாய சங்கரா
ஓம் சிவாய நமசிவாய ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
சுந்தரக் கலாதரனே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
கங்கையைத் தரித்தவரே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
காசிநாதா விசுவநாதா ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
பார்வதி மணாளனே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
ஆடும்பாம்பை அணிந்தவனே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
ஆனைமுகம் தந்தையாரே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
ஆறுமுகம் தந்தையாரே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
ஐயப்பன் ஐயனாரே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
கைலாச வாசா கங்காதரா
ஆனந்தத் தாண்டவ சதாசிவா
ஹிமகிரி வாசா சாம்பசிவா
கணபதி சேவித்ஹே பரமேசா
சரவண சேவித்ஹே பரமேசா
சைலகிரீஸ்வர உமா மஹேசா
நீலலோசன நடன நடேசா
ஆனந்தத் தாண்டவ சதாசிவ
ஹிமகிரி வாசா சாம்பசிவா
போலோ நாத உமாபதே
சம்போ சங்கர பசுபதே
நந்தி வாகன நாக பூஷண
சந்திரசேகர ஜடாதரா
கங்காதார கௌரி மனோகர
கிரிஜா ரமணா சதாசிவா (போலோ)
கைலாசவாசா கனகசபேசா
கௌரி மனோகர விஸ்வேசா
ஸ்மாசன வாஸா சிதம்பரேசா
நீலகண்ட மஹாதேவா (போலோ)
சூலாதாரா ஜ்யோதிப் பிரகாசா
விபூதி சுந்தர பரமேசா
பம் பம் பம் பம் டமருகநாத
பார்வதி ரமணா சதாசிவா (போலோ)
சம்போ மஹாதேவ தேவ!
சம்போ மஹாதேவ தேவ! சிவ சம்போ மஹாதேவ தேவ |
தேவேச சம்போ! சம்போ மஹாதேவ தேவ |
ஈஸ்வர தியானம்
நமசிவாய பரமேஸ்வராய சசிசேகராய நம ஓம்
பவாய குண சம்பவாய சிவதாண்டவாய நம ஓம்.
சிவாய நம ஓம் சிவாய நம:
சிவாய நம ஓம் நமசிவாய
சிவாய நம ஓம் சிவாய நம:
சிவாய நம ஓம் நமசிவாய
சிவ சிவ சிவ சிவ சிவாய நம ஓம்
ஹர ஹர ஹர ஹர நமசிவாய - சிவாய நம
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய நமசிவாய - சிவாய நம
ஓம் சிவாய சங்கரா
ஓம் சிவாய நமசிவாய ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
சுந்தரக் கலாதரனே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
கங்கையைத் தரித்தவரே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
காசிநாதா விசுவநாதா ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
பார்வதி மணாளனே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
ஆடும்பாம்பை அணிந்தவனே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
ஆனைமுகம் தந்தையாரே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
ஆறுமுகம் தந்தையாரே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
ஐயப்பன் ஐயனாரே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
சிவநாமாவளிகள்
கைலாச வாசா கங்காதரா
ஆனந்தத் தாண்டவ சதாசிவா
ஹிமகிரி வாசா சாம்பசிவா
கணபதி சேவித்ஹே பரமேசா
சரவண சேவித்ஹே பரமேசா
சைலகிரீஸ்வர உமா மஹேசா
நீலலோசன நடன நடேசா
ஆனந்தத் தாண்டவ சதாசிவ
ஹிமகிரி வாசா சாம்பசிவா
நாதநாம மகிமை
போலோ நாத உமாபதே
சம்போ சங்கர பசுபதே
நந்தி வாகன நாக பூஷண
சந்திரசேகர ஜடாதரா
கங்காதார கௌரி மனோகர
கிரிஜா ரமணா சதாசிவா (போலோ)
கைலாசவாசா கனகசபேசா
கௌரி மனோகர விஸ்வேசா
ஸ்மாசன வாஸா சிதம்பரேசா
நீலகண்ட மஹாதேவா (போலோ)
சூலாதாரா ஜ்யோதிப் பிரகாசா
விபூதி சுந்தர பரமேசா
பம் பம் பம் பம் டமருகநாத
பார்வதி ரமணா சதாசிவா (போலோ)
நமாமி சங்கர பவாமி சங்கர
உமா மஹேஸ்வர தவ சரணம் (நமாமி )
ஹரஹர ஹரஹர ஹரஹர சம்போ
அர்த்தனாரீஸ்வர தவ சரணம் (நமாமி )
சிவசிவ சிவசிவ சிவசிவ சம்பா
ஸ்ரீசைலேஸ்வரா தவ சரணம் (நமாமி )
நந்திவாஹனா நாகபூஷனா
சந்திர சேகரா ஜடாதரா
சூலாதார ஜோதி ப்ரகாசா
விபூதி சுந்தர விஸ்வேசா (நமாமி )
கால கால காம தஹனா
காசி விஸ்வேசா தவ சரணம்
பம்பம் பம்பம் பமருக நாதா
டம்டம் டம்டம் டமருக நாதா
பம்பம் டம்டம் பமருக நாதா
டம்டம் பம்பம் டமருக நாதா
கிரிஜா ரமணா தவ சரணம்
ஹரே பசுபதே தவ சரணம் (நமாமி )
~ஓம் நம சிவாய~
...Website maintained by: NARA
Terms and Usage