Non commercial web site, available to every one. Use it if you find them useful. Encouraged to copy and distribute if needed.
முருகன் கோயில்கள்
- மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில். இத்தலத்தில் முருகனின் வேலுக்கு கூட சிறப்பு அபிஷேகம் நடப்பது சிறப்பாகும். அசுரனை வென்ற முருகன் இந்தத் தலத்தில் இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். சிவனின் பெயரால் இத்தலம் திருப்பரங்குன்றம் எனப்படுகிறது.
- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள முருகன் சன்னதியின் மேற்கு திசையில் உள்ள ராஜகோபுரத்தின் உள்ளே மூலவர் கடலை நோக்கியபடி காட்சியளிக்கிறார்.
- திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி.
- தஞ்சாவூர் மாவட்டத்தில் சுவாமிமலையில் சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்து சுவாமிநாதனாக முருகப்பெருமான் வீற்றிருக்கின்றார்.
- திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் இங்கு வந்து கோபம் தணிந்து சாந்தமாக அமர்ந்தார். கோபம் தணித்த இடம் என்பதால் தணிகை என இத்தலம் பெயர் பெற்றதாக வரலாறு.
- மதுரை மாவட்டத்தில் சோலைமலையில் அமைந்துள்ள பழமுதிர்சோலை சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூரில் சிறு குன்றின்மீது அமைந்துள்ள கோவில். இந்தத் திருத்தலத்தில் மூலவராக வீற்றிருப்பவருக்கு சுப்பிரமணியர் என்ற திருநாமத்துடன் வள்ளி, தெய்வானை சமேதராக அருள்புரிகிறார்.
- கோயம்புத்தூரில் உள்ள மருதமலை முருகன், மருதாசலமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார்.
- சென்னையில் உள்ள வடபழனியில் கலியுக வரதனான வடபழநி ஆண்டவர்.
- திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடி முருகன் கோவில். இங்கு முருகன் வள்ளி தெய்வானை சகிதம் காட்சி தருகிறார். இந்த கோவிலில் முருகனை குழந்தையாக பார்த்தால் குழந்தையாகவும், இளைஞனாக பார்த்தால் இளைஞனாகவும், முதியவராக வடிவேலவனை பார்த்தால் முதியவனாகவும் காட்சி தருவதாக பக்தர்கள் தங்கள் அனுபவத்தில் அனுபவித்து சொல்கிறார்கள்.
- ஆதி நாகசுப்ரமணியா கோயில்
- உத்தர சுவாமி மலை கோயில்
- காட்டி சுப்பிரமணிய சுவாமி கோவில்
- காட்டுமலை கந்தசாமி கோயில்
- குக்கி சுப்பிரமணியசுவாமி கோயில்
- கோவனூர் சுப்பிரமணியர் திருக்கோயில், சிவகங்கை
- சிக்கல் சிங்காரவேலர் கோவில்
- திண்டல் முருகன் கோயில்
- பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்
- மயிலம் முருகன் கோயில்
- முத்துமலை முருகன் திருக்கோயில்
- வயலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
- வள்ளிமலை முருகன் கோயில்
- விராலிமலை முருகன் கோயில்
தங்கத் தாமரைத் தொட்டிலிலே ஆடும் அழகா தாலேலோ
சரவணப் பொய்கையிந் அலைகளிலே தவழும் முருகா தாலேலோ (*2)
கார்த்திகை பெண்களின் கைகளிலே மகிழும் வேலா தாலேலோ
குடகு மலையின் அருவினிலே குளிரும் நிலவே தாலேலோ
தங்கத் தாமரைத் தொட்டினிலே ஆடும் அழகா தாலேலோ
சரவணப் பொய்கையிந் அலைகளிலே தவழும் முருகா தாலேலோ
பொதிகை மலையின் சந்தனத்தில் மணக்கும் சிலையே தாலேலோ
குறிஞ்சி மலையின் தென் தினைமாவில் மயங்கும் குமரா தாலேலோ
குமர மலைத் தென்றல் காற்றில் சிரிக்கும் முகமே தாலேலோ
தங்கத் தாமரைத் தொட்டினிலே ஆடும் அழகா தாலேலோ
சரவணப் பொய்கையிந் அலைகளிலே தவழும் முருகா தாலேலோ
குன்று தொறும் முழங்கி வரும் கோவில் மணியே தாலேலோ
குமரிக் கடலில் குளித்த முத்தே அருளின் வித்தே தாலேலோ
கன்னித் தமிழை பேஸும் கிளியே அன்பின் ஒளியே தாலேலோ
தங்கத் தாமரைத் தொட்டிலிலே ஆடும் அழகா தாலேலோ
சரவணப் பொய்கையிந் அலைகளிலே தவழும் முருகா தாலேலோ (*2)
ஜெய ஜெய ஜெய சுப்ரமண்யம்
ஹர ஹர ஹர சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் சுப்ரமண்யம்
ஷண்முகநாதா சுப்ரமண்யம்
குமார குருவே குமார குருவே
குக்கி சுப்ரமணியம்
ஷண்முகநாத சரவண பவகுஹ
காட்டி சுப்ரமணியம்
உமா மஹேஸ்வர குமார குருபர
உடுப்பி சுப்ரமண்யம்
பதித பாவனா பார்வதி நந்தன
பழநி சுப்ரமண்யம்
பக்த ஜனப்ரிய பங்கஜ லோசன
பால சுப்ரமண்யம்
குமார குருவே குமார குருவே
குக்கி சுப்ரமணியம் x2
உமா மஹேஸ்வர குமார குருபர
உடுப்பி சுப்ரமண்யம்
குமார குருவே குமார குருவே
குக்கி சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் சுப்ரமண்யம்
ஷண்முகநாதா சுப்ரமண்யம்
பக்த ஜனப்ரிய பங்கஜ லோசன
பால சுப்ரமண்யம்
ஜெய ஜெய ஜெய சுப்ரமண்யம்
ஹர ஹர ஹர சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் சுப்ரமண்யம்
ஷண்முகநாதா சுப்ரமண்யம்
ராகம் : குறிஞ்சி; தாளம் : ஆதி
குமார குருபர உடுப்பி சுப்ரமண்யம்
உமா மகேஷ்வர குமார குருபர உடுப்பி சுப்ரமண்யம்
குமார குருபர பக்த ஜனப்ரிய பால சுப்ரமண்யம்
பதித பாவனா பார்வதி நந்தன பால சுப்ரமண்யம்
பக்த (மரகத ) ஜனப்ரிய பங்கஜ லோசன பால சுப்ரமண்யம்
ஷண்முகநாதா சரவண பவகுஹ பால சுப்ரமண்யம்
சங்கரி மைந்தா சம்பு குமாரா பால சுப்ரமண்யம்
வள்ளி தெய்வானை மகிழும் மணாளா பால சுப்ரமண்யம்
புள்ளி மயில் வாஹன ஷ்ருங்காரவேலா பால சுப்ரமண்யம்
ஜெய ஜெய பால சுப்ரமண்யம்
ஹர ஹர பால சுப்ரமண்யம்
ஹர ஷிவ பால சுப்ரமண்யம்
ஷிவ ஷிவ பால சுப்ரமண்யம்
அழகெல்லாம் முருகனே அருளெல்லாம் முருகனே | தெளிவெல்லாம் முருகனே தெய்வமும் முருகனே (*2)
பழஞானப் பசியாலே பழநிக்கு வந்தவன் (2) | பழமுதிர்ச்சோலையிலே பசியாறி நின்றவன் (2)
அழகெல்லாம் முருகனே அருளெல்லாம் முருகனே | தெளிவெல்லாம் முருகனே தெய்வமும் முருகனே
குன்றெல்லாம் ஆள்பவன் குகனாக வாழ்பவன் (2) | குறவள்ளிக் காந்தனவன் குறிஞ்சிக்கு வேந்தனவன் (2)
பூவாறு முகங்களிலே பேரருள் ஒளிவீசும் (2) | நாவாறப் பாடுகையில் நலம்பாடும் வேல் னவன் (2)
அழகெல்லாம் முருகனே அருளெல்லாம் முருகனே | தெளிவெல்லாம் முருகனே தெய்வமும் முருகனே
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை
கோட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.
சீர்மேவும் எட்டிக்குடி வாழும் -வேல் வேல் | தெய்வானை தன்னுடைய மணாளனே வாவா - 1
பார்புகழும் சிந்துதமிழ் பாட -வேல் வேல் | பன்னிருகை ஆண்டியே முன்னருள வாவா - 2
எச்சாரக்கை என்றிடும்பன் கூற -வேல் வேல் | இருபுறமும் காவடிகள் நின்றிடுதே வாவா - 3
பச்சைமயில் ஏறுகின்ற பாலா -வேல் வேல் | பக்ஷம்வைத்து என் கலியை தீர்த்திடவே வாவா - 4
வேல் வேல் | வெற்றி வேல் | ஞான வேல் சக்தி வேல்
கந்தனுக்கு அரோகரா | முருகனுக்கு அரோகரா
கடம்பனுக்கு அரோகரா | வேல் னுக்கு அரோகரா)
அன்பான சந்நிதியில் வந்து -வேல் வேல் | ஆறுமுக வேல் வனே ஆதாரக்க வாவா - 5
நாதமொடு கீதங்களும் முழங்க -வேல் வேல் | நாதாந்த மெய்ப்பொருளே நம்பினோமே வாவா - 6
காணிக்கை கொண்டுவெகு கோடி -வேல் வேல் | காத்திருக்கோம் சுவாமிமலை ஆண்டவனே வாவா - 7
மச்சங்களின் காவடிகள் கூடி -வேல் வேல் | மகிழ்ச்சியுடன் வந்திருக்கு கண்டிடவும் வாவா - 8
(வேல் வேல் | -அரோகரா)
ஆற்றுமணல் சர்க்கரையு மாய -வேல் வேல் | அன்பான காவடிகள் வந்திருக்கு வாவா - 9
எத்தனையோ அலகுகளும் பூண்டு -வேல் வேல் | எண்ணிறைந்த காவடிகள் வந்திருக்கு வாவா - 10
புள்ளிமயில் காவடிகள் கோடி -வேல் வேல் | புதுவிதமாய் வந்திருக்கு கண்டிடவும் வாவா - 11
மெய்முழுதும் அலகுகளை பூண்டு -வேல் வேல் | மேதினியோர் நெருங்கியே வந்திருக்கார் வாவா - 12
(வேல் வேல் | -அரோகரா)
அலகுமேல் காவடிகள் நிருத்தி -வேல் வேல் | ஆலவட்டம் பறக்குதே ஐயனே நீ வாவா - 13
கானமயில் காவடிகள் கோடி -வேல் வேல் | கொண்டுவந்து நின்றிருக்கு கண்டிடவே வாவா - 14
பூந்தேரும் ரதங்களோடு வருகுதே -வேல் வேல் | பூமிமுழுக ஆடுமயில் வாகனனே வாவா - 15
அபிஷேக சாமான்கள் எடுத்து -வேல் வேல் | ஆடிவரும் காவடிகள் கண்டிடவும் வாவா - 16
(வேல் வேல் | -அரோகரா)
தங்கமயில் மீதிலேநீ அமர்ந்து -வேல் வேல் | தேசங்களில் உள்ளவர்க்கு தொரந்திடவே வாவா - 17
வேதியர்கள் ஒருபுறம் கூடி -வேல் வேல் | வீதிகளில் வேதங்களும் முழங்குதய்யா வாவா - 18
தங்கரதக் காவடிகள் கூட -வேல் வேல் | சந்நிதியில் வந்து விளையாடுதய்யா வாவா - 19
ஆலவட்டம் சாமரங்கள் பிடித்து -வேல் வேல் | அசைந்தாடும் காவடிகள் வந்திருக்கு வாவா - 20
(வேல் வேல் | -அரோகரா)
எத்தனையோ காவடிகள் வருமே -வேல் வேல் | எண்ணிடவும் முடியுமோ புண்ணியனே வாவா - 21
அன்பான சந்நிதியின் முன்னே -வேல் வேல் | அடியார்கள் வந்திருக்கோம் ஐயனே நீ வாவா - 22
சித்தி விநாயகர்க்கு இளையோனே -வேல் வேல் | சீக்கிரமே மயிலோடு காட்சி தர வாவா - 23
ஆண்டிமகன் ஆண்டிமலை ஆண்டி -வேல் வேல் | ஆண்டிசிலை ஆண்டிமகன் ஆண்டியே நீ வாவா - 24
(வேல் வேல் | -அரோகரா)
மந்திரஞ்சேர் மெய்ப்பொருளே உன்னை -வேல் வேல் | வாலையம்மன் ஈன்றெடுத்த மாமுனியே வாவா - 25
அன்பருள மேவுகின்ற மணியே -வேல் வேல் | அரகரா ஆறுமுக தெய்வமே நீ வாவா - 26
உம்பர்குலம் வாழ வந்த நாதா -வேல் வேல் | ஓம் நமசிவாயகுரு தேசிகனே வாவா - 27
தென்பொதிகை குருமுனியும் பணியும் -வேல் வேல் | சிவபெருமான் செல்வனே அன்பு தர வாவா - 28
(வேல் வேல் | -அரோகரா)
பூரணமாய் நின்ற பரம்பொருளே -வேல் வேல் | பூரிப்புடன் இச்சமயம் புண்ணியனே வாவா - 29
நாடுகின்ற மெய்ப்பொருளே சுவாமி -வேல் வேல் | நாதாந்த வட்சணியாள் பாலகனே வாவா - 30
தேடுகின்ற மெய்ப்பொருளே ஐயா -வேல் வேல் | சீக்கிரமே எங்களோடு சேர்ந்திடவே வாவா - 31
சுப்பையா சுவாமிமலை நாதா -வேல் வேல் | துதிக்கின்றோம் உன்னடியார் அன்புடனே வாவா - 32
(வேல் வேல் | -அரோகரா)
ஆடுகின்ற நாதாந்த பொருளே -வேல் வேல் | அடியேனைக் காத்தருள ஐயனே நீ வாவா - 33
கோலமயில் மீதினிலே கந்தா -வேல் வேல் | குருபரனே உன்னருளைக் கொடுத்திடவே வாவா - 34
ஈராறு பன்னிருகை குமரா -வேல் வேல் | இருவினைகள் நீங்கிடவும் வந்தருள வாவா - 35
அரகரா திருச்செந்தூர் வேலா -வேல் வேல் | ஆறுமுக தேசிகனே ஐயனே நீ வாவா - 36
(வேல் வேல் | -அரோகரா)
சரவணபவ ஷண்முக குருநாதா -வேல் வேல் | சுவாமிமலை மீதமர்ந்த சற்குருவே வாவா - 37
கண்டவர்கள் கன்மவினை யோட -வேல் வேல் | அண்டர்களும் வந்திருக்கார் ஐயனே நீ வாவா - 38
கார்த்திகையில் வந்துனது பாதம் -வேல் வேல் | கண்டவர்கள் துயரமது நீங்கிடவும் வாவா - 39
சித்திரைப் பருவத்தில் காண -வேல் வேல் | சீர்பெறவும் வந்திருக்கார் ஐயனே நீ வாவா - 40
(வேல் வேல் | -அரோகரா)
பங்குனியின் உத்திரமதில் காண -வேல் வேல் | பக்தர்கள் காத்திருக்கார் சந்நிதியில் வாவா - 41
அபிஷேகம் நடப்பதையும் பார்க்க -வேல் வேல் | அன்பர்கள் வந்திருக்கார் ஐயனே நீ வாவா - 42
எலுமிச்சம் நாரத்தம் பழங்கள் -வேல் வேல் | ஏகமாக பன்னீரது வந்திருக்கு வாவா - 43
எண்ணை அபிஷேகம் அதை பார்க்க -வேல் வேல் | எண்ணிரைந்த கோடிஜனம் வந்திருக்கு வாவா - 44
(வேல் வேல் | -அரோகரா)
சந்தனாபிஷேகம் அதைக் காண -வேல் வேல் | சாந்தமாக பக்தர்வந்து நிற்கிறார்கள் வாவா - 45
விபூதி அபிஷேகம் பார்க்க -வேல் வேல் | வாஞ்சையர்கள் கூடிவந்து நிற்கிறார்கள் வாவா - 46
காவிவண்ண வஸ்திரம் நீ உடுத்தி -வேல் வேல் | கண்டத்தில் உத்ராக்ஷ மாலையோடு வாவா - 47
கையில்வெற்றி வேல் ிருக்கும் காட்சியை -வேல் வேல் | கண்டிடவுந் அன்பர்களும் வந்திருக்கார் வாவா - 48
(வேல் வேல் | -அரோகரா)
திருமுருகன் சந்நிதியைப் பார்க்க -வேல் வேல் | இந்திரலோகம் கயிலைமலை ஈடல்லவோ வாவா - 49
குறவள்ளி அம்மையை மணந்து -வேல் வேல் | குன்றுதோரும் ஆடிவந்த அன்பனே வாவா - 50
அண்டர்கள் கிடுகிடென நடுங்க -வேல் வேல் | அசுரர்கள் வேரறுத்த ஐயனே வாவா - 51
தேவர்களின் சேனாதி பதியே -வேல் வேல் | தேடிவந்த எங்களுக்கு வழிகாட்ட வாவா - 52
(வேல் வேல் | -அரோகரா)
முக்கனியும் சர்க்கரையும் திரட்டி -வேல் வேல் | முனிவர்கள் கூட்டத்துடன் வந்திருக்கார் வாவா - 53
முருகையா முத்துக் குமரேசா -வேல் வேல் | முப்புரமும் எரித்தவனின் புத்திரனே வாவா - 54
ஆறுபடை வீடதனில் மேவும் -வேல் வேல் | ஆறுமுகத் தையனேநீ அன்புடனே வாவா - 55
சத்துரு சங்கார வடிவேல் -வேல் வேல் | சாமிமலை மீதமர்ந்த சற்குருவே வாவா - 56
(வேல் வேல் | -அரோகரா)
ஆதிசிவ ரூபமய மான -வேல் வேல் | அகண்ட பரஞ்சுடரே ஐயனே நீ வாவா - 57
ஏரகத்தில் நின்ற குருசாமியே -வேல் வேல் | எங்கள்வினை தீர்ந்திடவும் எழுந்தருள வாவா - 58
அடியார்கள் காவடியைச் செலுத்த -வேல் வேல் | சந்நிதியில் கூடிருக்கும் காட்சி காண வாவா - 59
தங்கவேள் பிள்ளையுன்னை துதிக்க -வேல் வேல் | தற்பரனே எங்கள்வினை நீங்கிடவும் வாவா - 60
(வேல் வேல் | -அரோகரா)
பால் காவடி ஆடிவரும் பழநி மலையிலே குளிர்ப் பன்னீர்க் காவடி ஏறிவரும் சுவாமி மலையிலே (2)
வேல் காவடிகள் வாரசை வரும் விராலி மலையிலே (2)
மணம் வீசும் சந்தணக் காவடிகள் மருத மலையிலே (2)
பால் காவடி ஆடிவரும் பழநி மலையிலே குளிர்ப் பன்னீர்க் காவடி ஏறிவரும் சுவாமி மலையிலே
சேல் காவடிகள் துள்ளி வரும் வள்ளி மலையிலே | எழில் சேவற் காவடி கூவி வரும் சென்னி மலையிலே (2)
மால் மருகனுக்கு காவடிகள் சுருளி மலையிலே (2) |
மலைத்தேன் சர்க்கரைக் காவடிகள் தணிகை மலையிலே (2)
பால் காவடி ஆடிவரும் பழநி மலையிலே குளிர்ப் பன்னீர்க் காவடி ஏறிவரும் சுவாமி மலையிலே (2)
ஆடும் மயில் காவடிகள் அழகர் மலையிலே | சேர்ந்தாடும் சர்ப்பக் காவடிகள் தெய்வ மலையிலே (2)
அவன் சூடும் புஷ்பக் காவடிகள் சோலை மலையிலே (2) |
அவன் தொண்டர் சுமக்கும் காவடித்தோள் எந்த மலையிலே? (2)
பால் காவடி ஆடிவரும் பழநி மலையிலே | குளிர்ப் பன்னீர்க் காவடி ஏறிவரும் சுவாமி மலையிலே
வேல்் காவடிகள் வாரசை வரும் விராலி மலையிலே | மணம் வீசும் சந்தணக் காவடிகள் மருத மலையிலே
பால் காவடி ஆடிவரும் பழநி மலையிலே குளிர்ப் பன்னீர்க் காவடி ஏறிவரும் சுவாமி மலையிலே
முருகா உனக்கு புகழ் மாலை சூட்டுவதே தினம் முதல் வேலை
கந்தா உன் திரு வடிவேலை வணங்கிடத் தானே அதிகாலை
முருகா உனக்கு புகழ் மாலை சூட்டுவதே தினம் முதல் வேலை
தூவிடக் குறிஞ்சி மலருண்டு தேன் தினையோடு கனியுண்டு (2)
பாதத்தில் வைத்திட மனம் உண்டு பூஜையை ஏற்பாய் நீ வந்து
முருகா உனக்கு புகழ் மாலை சூட்டுவதே தினம் முதல் வேலை
ஆலயம் என்பதுன் நிழல்தானே அணையா தீபம் உன் அருள் தானே (2)
காலமும் துணையை நீ தானே கருணையைப் பொழிவதுன் விழிதானே
முருகா உனக்கு புகழ் மாலை சூட்டுவதே தினம் முதல் வேலை
தேவயானை ஒருபுரமும் மான்மகள் வள்ளி மறுபுரமும்
தோன்றிட நீ தரும் திருக்காட்சி மங்கலம் வழங்கிடும் அருட்காட்சி
முருகா உனக்கு புகழ் மாலை சூட்டுவதே தினம் முதல் வேலை
கந்தா உன் திரு வடிவேலை வணங்கிடத் தானே அதிகாலை
முருகா முருகா முருகா.
திருச்செந்தூரில் போர் புரிந்து | சினமெல்லாம் தீர்ந்த கந்தன்
திருத்தணி கோவில் கொண்டானாம் | அவன் பக்தர்கள் எல்லாம்
காவடி தூக்கி வந்தாராம் ஆ (திருச்செந்தூரில்)
வரிஸை வரிஸை என அழகு காவடிகள் | தணிகை வேலன் அவன் சன்னிதி தேடி
வருகின்ற காட்சி பாருங்கள் | இந்த ஆனந்தமெல்லாம் எதில் உண்டு சாட்சி கூறுங்கள்
-ஆ (திருச்செந்தூரில்)
கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு | முன்னும் பின்னும் ஆடிக் கொண்டு
ஆணும் பெண்ணும் பாடிக் கொண்டு தேடி வருவார்
இங்கே | ஆணும் பெண்ணும் பாடிக் கொண்டு தேடி வருவார் | இங்கே தேடி வருவார்
காவடிகள் பால் காவடிகள் பழக் காவடிகள் | புஷ்பக் காவடிகள் மச்சக் காவடிகள் ...
பன்னீர்க் காவடிகள் செவற் காவடிகள் ...சர்பக் காவடிகள் தீர்த்தக் காவடிகள் ...
பால் காவடி பழக் காவடி புஷ்பக் காவடி | மச்சக் காவடி பன்னீர்க் காவடி செவற் காவடி
சர்பக் காவடி தீர்த்தக் காவடிகள் ...
கந்தவேல் முருகனுக்கு அரோகரா ...கதிர்வேல் முருகனுக்கு அரோகரா ...
வேல் வேல் | வெற்றி வேல் (*2)
திருத்தணி முருகனுக்கு அரோகரா ...
வேலிருக்க வினையுமில்லை மயிலிருக்க பயமும் இல்லை அடைவோம் கந்தன் சேவடி
-என ஆசை கோண்டு எடுத்தோம் இந்தக் காவடி ...
கந்தனிடம் உந்தனையே சொந்தம் என விட்டு விடு
சந்ததமும் செல்வம் எல்லாம் வீடு வருமே
உன் சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே ...
முருகன் அருள் கூட வருமே ...கந்தன் அருள் கூட வருமே ...குமரன் அருள் கூட வருமே .
ஓம் என்னும் ப்ரணவத்தின் உற்பொருளாய் எழுந்தவனே
ஓராறு முகங்களுடன் உலகாண்ட குருபரனே
தீராத வினையெல்லாம் கூறாகச் செய்பவனே
தேவாதி தேவர் தொழும் திருமகனே சரவணனே
வா வடிவேல் னே வா வடிவேல் னே
கந்தமுகங்களொராறும் கனிந்திட கண்களில் நின்றவனே |
எழில் சந்தணக்குங்கும ஷெண்பகமும்கம ஷண்முக சுந்தரனே (*2)
உன்னை மறப்பேனோ மயில் வாகனா | உள்ளம் அதில் வாழும் எழில் மோகனா (2)
கந்தமுகங்களொராறும் கனிந்திட கண்களில் நின்றவனே |
எழில் சந்தணக்குங்கும ஷெண்பகமும்கம ஷண்முக சுந்தரனே
சங்கரன் கண்களில் பேரொளியாய் வந்து சரவணம் கண்டவனே |
தமிழ்ச் சங்கமதாகிய மாமதுரைச் சகலாகம பண்டிதனே (2)
என்றும் தமிழ்க் கூறும் புகழாரமே | கந்தப் பெருமானுன் அலங்காரமே (2)
கந்தமுகங்களொராறும் கனிந்திட கண்களில் நின்றவனே |
எழில் சந்தணக்குங்கும ஷெண்பகமும்கம ஷண்முக சுந்தரனே
குஞ்சார வள்ளிக்குலாவிட வேல் ுடன் கொஞ்சி மகிழ்ந்தவனே |
சிவ சங்கரனார்க்கொரு மந்திரம் கூறி சாரத்திரம் கொண்டவனே (2)
என்றும் குறையாத சிவபோதமே | நெஞ்சம் மறவாதுன் திருநாமமே (2)
கந்தமுகங்களொராறும் கனிந்திட கண்களில் நின்றவனே |
எழில் சந்தணக்குங்கும ஷெண்பகமும்கம ஷண்முக சுந்தரனே
எத்தனை தெய்வங்கள் இப்புவி மீதிலிருந்திடும் போதிலுமே |
அவை அத்தனையும் உன் மின்னருள் தந்திடும் ஆனந்தமாகிடுமா (2)
உந்தன் சரணார விந்தங்களே எந்தன் உயிர்த் தேடும் பந்தங்களே (2)
கந்தமுகங்களொராறும் கனிந்திட கண்களில் நின்றவனே |
எழில் சந்தணக்குங்கும ஷெண்பகமும்கம ஷண்முக சுந்தரனே (*2)
முருகா முருகா ...
(கந்தய்யா முருகய்யா என்றே உன் கருணையை வேண்டி மனம் கரைந்தோமே கந்தய்யா)
கதி தரும் தெய்வம் நீதானே எம்மை கரை சேர்ப்பதுவும் நீதானே ஒரு
திசைதொரயாமல் அலைந்தோமே ஐயா (கந்தய்யா )
அலையாத வானம் அலைகின்ற மேகம் | அதுபோல வாழ்வென்னும் ஓடம்
சிலையாக உன்னை நினையாத எம்மை | சோதிக்க ஏனிந்தப் பாடம்
புகைகின்ற தீயில் பூவானமாவாய்
துயர் கொண்ட நெஞ்சில் தூவானமாவாய் (2)
தணிகை முருகா தயைபுரிவாய் (கந்தய்யா )
கருணையை வேண்டி மனம் கரைந்தோமே
அறியாதப் பாதை அதனால் முபாதை
அளவின்றி அடங்காத பாரம்
புரியாத காதை புதிரான வேளை
புகலின்றி வழிதேடும் நேரம்
துணை என்று சொன்னால் சுகம் வந்து சேரும்
உனை நம்பி வந்தோம் துயர் என்று தீரும் (2)
கதிர்வேல் முருகா கண்திறவாய்
(கந்தய்யா கந்தய்யா கதி தரும் கந்தய்யா)
உன் கருணையை வேண்டி மனம் கரைந்தோமே.
சரவணப்பொய்கையில் உதித்த முகம்
ஒளிவிடும் தீபத்தில் சிரித்து வரும் (2)
(கார்த்திகைப் பெண்களின் கைகளில் தவழ்ந்த இறைவனுக்கு
எங்கள் குமரனுக்கு இன்று தீபம் ஏற்றும் திருநாள்)
(கார்த்திகைப் பெண்களின் )
(அந்த வடிவழகன் நல்ல இளங்குமரன்
எனப் போற்றிப் புகழும் திருநாள்)
(அந்த வடிவழகன் )
(வேல் னுக்கு தீப மங்களம் எங்கள் பாலனுக்கு தீப மங்களம்)
(வேல் னுக்கு தீப )
(கார்த்திகைப் பெண்களின் )
நீலக் கண்ணில் வந்த ஜோதி ஆறுத் தாமரை மலாரருக்க
பொய்கை நீரில் தவழும் அழகை ஆறுக் கார்த்திகைப் பெண் எடுக்க
குகன்ஞான ஷண்முகனை தாய்ப்போல சீராட்ட
அருள் செய்யும் ஆறுதலையை உமை வந்து ஒன்றாக்க
கார்த்திகை அன்னையர் கருணையை நினைந்து
பாலன் கோவிலில் ஏற்றுக தீபம்
(வேல் னுக்கு தீப ) (2)
(கார்த்திகைப் பெண்களின் )
கோவில் எங்கும் தீபமாட ஞானக் குமரன் நிழலாட
காலைக் கதிரிலும் மாலை நிலவிலும் வேல் ன் தந்த ஒளியாட
குகன் வந்த வேளை தன்னில் இருள் ஓடிப் போகும்
சிவன் தந்த ஜோதியாலே வளம் வந்து சேரும்
இல்லந்தோரும் முருகன் பெயரால்
கார்த்திகை நாளில் ஏற்றுக தீபம்
(வேல் னுக்கு தீப ) (2)
(கார்த்திகைப் பெண்களின் ) (2)
(அந்த வடிவழகன் ) (2)
(வேல் னுக்கு தீப ) (4).
(ஷண்முக மந்திரம் சரவண மந்திரம்
சிந்தை குளிர்ந்திடும் சிவகுரு மந்திரம்
ஓதும் போது சுகமாகிடுதே)
(ஷண்முக )
(ஆறெழுத்தாலே ஆறுதல்தானே
ஒருமுறை சொன்னாலே போரன்பமே)
(ஆறெழுத்தாலே )
(ஷண்முக )
சிவனுக்கு உருவான சிந்தனை வடிவான
கேள்விக்கு பதிலான திருமந்திரம் (2)
காவிரிக் கரைதேடி ஏரகப் படியேறி
ஓம் என வாழுகின்ற குக மந்திரம் (2)
சரவணபவ என்று பாடு
சகலமும் கைகூடும் பாரு (2)
(ஷண்முக )
(ஆறெழுத்தாலே )
(ஷண்முக )
சிவம் ஒரு மூன்றெழுத்து சக்தியும் மூன்றெழுத்து
ஆறெழுத்தும் இணைந்த அரு மந்திரம் (2)
தண்டாயுதம் எடுத்து திண்டாடும் கைபிடித்து
அஞ்சேல் எனக்கூறும் குரு மந்திரம் (2)
சரவணபவ என்னும் போது
சங்கடம் நமை நெருங்காது (2)
(ஷண்முக ) (2)
(ஆறெழுத்தாலே ) (2)
(ஷண்முக ).
வா வா முத்துக் குமரா வடிவேல் செந்தில் அழகா (*2)
மயில் எழும் நீலம் மனோகரா | குயில் இசை தொழும் அரோகரா (2)
முருகா ஷண்முகா குமரா சுந்தரா (2)
வா வா முத்துக் குமரா வடிவேல்் செந்தில் அழகா (*2)
தாமரை பூவில் வந்த மகரந்தமே | தங்க வேல் தாங்கி வந்த முத்து ரதமே (2)
வேலவா ...வேலவா -கந்தா என்னை ஆளும் இறைவா
வா வா முத்துக் குமரா வடிவேல்் செந்தில் அழகா (*2)
ஆயிரம் பாயிரங்கள் உன்னைப் புகழும் | அனுதினம் அணு அணுவாய் உள்ளம் உருகும் (2)
தூயவா ...தூயாவா கண்ணா என்னை காக்கும் முதல்வா
வா வா முத்துக் குமரா வடிவேல்் செந்தில் அழகா (*2)
மயில் எழும் நீலம் மனோகரா | குயில் இசை தொழும் அரோகரா (2)
முருகா ஷண்முகா குமரா சுந்தரா (2)
வா வா முத்துக் குமரா வடிவேல்் செந்தில் அழகா (*2)
திருக்குமரா! திருக்குமரா! தேவர் குலத் தலைவா! திருப்புகழால் உனை தினமும் தேடி வலம் வரவா (*2)
குருநகை நீ புரிந்தால் போதும் குருந்தொகை தமிழ் மணக்கும்
கடைவிழி நீ அசைத்தால் போதும் வசந்தங்கள் வழி நடத்தும்
வித்தார முத்தாரமே எழில் தெய்வீக செந்தூரமே உனை நாடாமல்
நானில்லையே என் நம்பிக்கை ஆதாரமே || அரோகரா ...
திருக்குமரா! திருக்குமரா! தேவர் குலத் தலைவா! திருப்புகழால் உனை தினமும் தேடி வலம் வரவா
கந்தனுக்கு அரோகரா! கடம்பனுக்கு அரோகரா! ...
வேலனுக்கு அரோகரா! முருகனுக்கு அரோகரா! ...
அடிபணிந்திடும் அடியவர் குறை தீரவே தீரவே அறுபடை எழும் அன்பே வருக!
அழகிய நிலம் அமைதியாய் தினம் வாழவே வாழவே அருமழை என அமுதம் பொழிக!
வளம் நிறைந்திட நிலம் செழித்திட அணி மணியுடன்
அகம் குளிர்ந்திட குலம் தழைத்திட அருள் பெருகிடவே ...
வித்தார முத்தாரமே எழில் தெய்வீக செந்தூரமே | உனை நாடாமல்
நானில்லையே என் நம்பிக்கை ஆதாரமே || அரோகரா ...
திருக்குமரா! திருக்குமரா! தேவர் குலத் தலைவா! திருப்புகழால் உனை தினமும் தேடி வலம் வரவா
சரவணபவ சடுதியிலே சண்முகா வருகவே சகம் முழுவதும் சாந்தம் பெருக
கர கர கர கர அர கர கர வேல் னார் வருகவே கொடும் வினைகளை வதமே புரிக
தலை நிமிர்ந்திடும் நிலை உயர்ந்திடும் புதுக் கலைகளில்
மனம் செழித்திடும் மடப் பிரிவினில் மனம் திறந்திடவே
வித்தார முத்தாரமே எழில் தெய்வீக செந்தூரமே உனை நாடாமல்
நானில்லையே என் நம்பிக்கை ஆதாரமே || அரோகரா ...
திருக்குமரா! திருக்குமரா! தேவர் குலத் தலைவா! திருப்புகழால் உனை தினமும் தேடி வலம் வரவா
குருநகை நீ புரிந்தால் போதும் குருந்தொகை தமிழ் மணக்கும்
கடைவிழி நீ அசைத்தால் போதும் வசந்தங்கள் வழி நடத்தும்
வித்தார முத்தாரமே எழில் தெய்வீக செந்தூரமே உனை நாடாமல்
நானில்லையே என் நம்பிக்கை ஆதாரமே || அரோகரா ...
திருக்குமரா! திருக்குமரா! தேவர் குலத் தலைவா! திருப்புகழால் உனை தினமும் தேடி வலம் வரவா
காவடிகள் சிந்து பாடுதே ஓம் முருகா கந்தன் பதம் கண்கள் தேடுதே முருகா குமரா (2)
மயிலும் குயிலும் உலவும் பழமுதிரும்சோலை மனமும் முகமும் மகிழும் பழனி அவன் வேலை (2)
காவடிகள் சிந்து பாடுதே ஓம் முருகா கந்தன் பதம் கண்கள் தேடுதே முருகா குமரா
பட்டத் துன்பம் எல்லாம் விட்டு விலக-பன்னீர்க் காவடிகள்
பட்ட மரத்திலும் பூப்பூக்கும்-புஷ்பக் காவடிகள்
சந்தனத் தேரு வந்தது பாரு மின்னுது கந்தனின் பொன்னிற வேலு
தேனும் பாலும் பொங்கி வழிய தேவர் மூவர் வாழ்த்த
வானும் மண்ணும் வளம் பெருகி வேல் ன் வீடு தேட
நெஞ்சுக்குள்ளே வஞ்சமில்லே அஞ்சிடத் தேவையில்லே (2)
வந்தது நேரம் நமக்கு யோகம் சக்தியின் புத்திரன் நல்லருள் சேர
காவடிகள் சிந்து பாடுதே ஓம் முருகா கந்தன் பதம் கண்கள் தேடுதே முருகா குமரா
சங்கடம் தீர சந்தம் கொடுக்கிற சந்தனக் காவடிகள்
சோதனை வேதனை சாதனையாக்குற சன்னியக் காவடிகள்
பால் காவடி பவளக் காவடி பற்றிட வந்தது பக்தியில் முந்துது
பொய்கை குளங்கள் ஆறுமுகத்தின் பேரைச் சொல்லி பாட
நெய்யில் ஏற்றும் தீப ஒளியில் வேல் ும் மயிலும் ஆட
நம்பி வந்தால் துன்பமில்லே கும்பிடு சாமி மலையை (2)
நித்தமும் நம்முடன் நல்லது சேர தொட்டது எல்லாம் பொன்னா மாற
காவடிகள் சிந்து பாடுதே ஓம் முருகா கந்தன் பதம் கண்கள் தேடுதே முருகா குமரா (2)
மயிலும் குயிலும் உலவும் பழமுதிரும்சோலை மனமும் முகமும் மகிழும் பழனி அவன் வேல் ை
காவடிகள் சிந்து பாடுதே ஓம் முருகா கந்தன் பதம் கண்கள் தேடுதே முருகா குமரா (2)
-முருகா.
அழகான தமிழில் அழகா அழகான தமிழில் உன் அழகை அழகாக நான் பாடவா?
அழகே உன் வடிவின் அழகெல்லாம் எழுத (2)
அழகான சொல் தேடவா? பேரழகா? உன் பேரழகா? (2)
அழகான தமிழில் அழகா உன் அழகை அழகாக நான் பாடவா?
பன்னிரு கண்ணழகா? கண்ணழகா? அவை பன்னீரின் பூவழகா? பூவழகா?
செந்தமிழ்ச் சொல்லழகா? சொல்லழகா? வரம் சிந்தும் மணி நாவழகா? நாவழகா?
திங்கள் முகத்தழகா? முகத்தழகா? சிறு செவ்வாய்த் தேனழகா? தேனழகா
வெள்ளி வடிவேல் ழகா? ஞாயிறு கதிரழகா? துள்ளும் வள்ளி மானழகா? தெய்வானை மயிலழகா?
அழகான தமிழில் அழகா உன் அழகை அழகாக நான் பாடவா?
செந்தூரின் கடலழகா? அலையழகா? சிக்கல் சிங்கார கலையழகா? சிலையழகா?
பொன்சேவல் கொடியழகா? வடிவழகா? மாம் பழனியின் மலையழகா? மணியழகா?
குன்றக்குடி அழகா? படியழகா? வல்ல கோட்டையின் ஊரழகா? தேரழகா?
அறுபடை வீட்டழகா? திருப்புகழ் பாட்டழகா? ஒளவை கண்ட அறிவழகா? அன்பருக்கு அருளழகா?
அழகான தமிழில் அழகா உன் அழகை அழகாக நான் பாடவா?
அழகே உன் வடிவின் அழகெல்லாம் எழுத (2) அழகான சொல் தேடவா? பேரழகா? உன் பேரழகா? (2)
அழகான தமிழில் அழகா உன் அழகை அழகாக நான் பாடவா?
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருசெந்தூரிலே வேலாடும் உன் திருப்புகழ் பாடியே கடலாடும்
பழனியிலே கொடுக்கும் கந்தப் பழம் நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்
பழமுதிர்ச்சோலையிலே முதிர்ந்தப் பழம் பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்
சிறப்புடனெ கந்தக் கோட்டமுண்டு உன் சிங்கார மயிலாட தோட்டமுண்டு
உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை.
நினைக்க நினைக்க நெஞ்சம் உருகுமே முருகனென்றால் நிகாரல்லாத பக்தி பெருகுமே (*2)
வினைத்துயரம் யாவும் விலகுமே வேல் னென்றால் (2) விளங்கும் செல்வம் வீட்டில் நிறையுமே
நினைக்க நினைக்க நெஞ்சம் உருகுமே முருகனென்றால் நிகாரல்லாத பக்தி பெருகுமே
துதிக்கத் துதிக்கப் பாவம் தொலையுமே கந்தனென்றால் தூய ஞான மேன்மை நிலவுமே (2)
எதிர்க்கும் பகை அச்சம் நீங்குமே (2) கடம்பனென்றால் எடுத்த செயல் வெற்றி ஓங்குமே
நினைக்க நினைக்க நெஞ்சம் உருகுமே முருகனென்றால் நிகாரல்லாத பக்தி பெருகுமே
இனிக்கும் தேன்போல் இதயம் ஆகுமே குகனென்றால் என்றும் வாழ்க்கைப் புனிதம் சேருமே (2)
மணக்கும் மலர்போல் மகிழ்ச்சி பொங்குமே குமரனென்றால் மாசில்லாத அருள் வழங்குமே
நினைக்க நினைக்க நெஞ்சம் உருகுமே முருகனென்றால் நிகாரல்லாத பக்தி பெருகுமே
வினைத்துயரம் யாவும் விலகுமே . வேல் னென்றால் விளங்கும் செல்வம் வீட்டில் நிறையுமே
நினைக்க நினைக்க நெஞ்சம் உருகுமே முருகனென்றால் நிகாரல்லாத பக்தி பெருகுமே
பால் மணக்குது பழம் மணக்குது பழனி மலையிலே (2)
பாரைச் சுற்றி முருக நாமம் எங்கும் ஒலிக்குதாம்
பழனி மலையைச் சுற்றி முருக நாமம் எங்கும் ஒலிக்குதாம்
முருகா உன்னைத் தேடித்தேடி எங்கும் காணேனே அப்பப்பா
முருகா உன்னைத் தேடித்தேடி எங்கும் காணேனே
எங்கும் தேடி உன்னைக் காணா மனமும் வாடுதே (2)
முருகா உன்னைத் தேடித்தேடி எங்கும் காணேனே
தேன் இருக்குது தினை இருக்குது தென் பழனியிலே முருகா (4)
தேன் இருக்குது தினை இருக்குது தென் பழனியிலே
தெருவைச் சுற்றி காவடி ஆட்டம் தினமும் நடக்குதாம்
பால் காவடி பன்னீர்க் காவடி புஷ்பக் காவடியாம் (2)
சக்கரக் காவடி சந்தனக் காவடி சேவற் காவடியாம்
சர்பக் காவடி மச்சக் காவடி புஷ்பக் காவடியாம்
மலையைச் சுற்றி காவடி ஆட்டம் தினமும் நடக்குதாம்
வேல் னுக்கு அரோகரா! முருகனுக்கு அரோகரா! கந்தனுக்கு அரோகரா!
அதோ வராண்டி பழனி ஆறுமுகன் தாண்டி அவன் போனா போராண்டி முருகன் தானா வாராண்டி
வேல் இருக்குது மயில் இருக்குது விராலிமலையிலே (2) அந்த விராலிமலையிலே
மலையைச் சுற்றி மயிலின் ஆட்டம் தினமும் நடக்குதாம்
விராலி மலையைச் சுற்றி மயிலின் ஆட்டம் தினமும் நடக்குதாம்
முருகா உன்னைத் தேடித்தேடி எங்கும் காணேனே.
முருகா முருகா முருகா முருகா அரகரோகரா
மால் மருகா மருகா மருகா மருகா அரகரோகரா
தணிகாசலனே தவமா மணியே அரகரோகரா
வானவர் போற்றும் தீனதயாளா அரகரோகரா
கதிர்காமத்துரை கதிர்வேல் முருகா அரகரோகரா
கந்தா கடம்பா கார்த்திகேயா அரகரோகரா
செந்திலாண்டவா செங்கல்வராயா அரகரோகரா
சிவஷண்முகனே சேனைத் தலைவா அரகரோகரா
அக்கினிகர்பா ஆறுபடை வீடா அரகரோகரா
ஆவினங்குடிவாழ் அழகிய வேலா அரகரோகரா
முருகா முருகா முருகா முருகா அரகரோகரா
மால் மருகா மருகா மருகா மருகா அரகரோகரா
மயில் வாகனனே மாதவக் கொழுந்தே அரகரோகரா
பழனியம் பதிவாழ் பாலகுமாரா அரகரோகரா
சேவற் கொடியோய் செங்கதிர் வேலா அரகரோகரா
சிவனார் மகனே செந்திலாதிபா அரகரோகரா
முருகா முருகா முருகா அரகரோகரா
மால் மருகா மருகா மருகா மருகா அரகரோகரா
சாமிநாதா சக்தி வேலா அரகரோகரா
மூவர் முதல்வா முத்துக் குமாரா அரகரோகரா
வள்ளி மணாளா வானவர் வேந்தே அரகரோகரா
வடிவேல் முருகா திருமால் மருகா அரகரோகரா
வேல் வேல் | முருகா வெற்றிவேல் முருகா அரகரோகரா
வேல் வேல் | முருகா வெற்றிவேல் முருகா அரகரோகரா
முருகா முருகா முருகா முருகா அரகரோகரா
மால் மருகா மருகா மருகா மருகா அரகரோகரா.
முருகா முருகா ...
அழகென்ற சொல்லுக்கு முருகா (2)
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா | அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா | அழகென்ற சொல்லுக்கு முருகா
சுடராக வந்தவேல் முருகா | கொடும் சூரரை போரிலே வென்றவேல் முருகா (2)
கனிக்காக மனம் நொந்த முருகா (2) | முக்கனியான தமிழ்தந்த செல்வமே முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா (2)
ஆண்டியாய் நின்றவேல் முருகா | உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா (2)
பழம் நீ அப்பனே முருகா (2) | ஞானப் பழம் உன்னை அல்லாது பழமேது முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா (2)
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா | அழகென்ற சொல்லுக்கு முருகா
குன்றாறும் குடிகொண்ட முருகா | பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா (2)
சக்தி உமை பாலனே முருகா (2) | மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா (2)
ப்ரணவப் பொருள்கண்ட திரு முருகா | பரம் பொருளுக்கு குருவான தேசிகா முருகா (2)
அரகரா ஷண்முகா முருகா (2) | என்றே பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா (2)
அன்பிற்கு எல்லையோ முருகா | உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா (2)
கண்கண்ட தெய்வமே முருகா (2) | எந்தன் கலியுக வரதனே அருள்தாரும் முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா | உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா (2) முருகா முருகா முருகா .
திருமுருகா என்று ஒருதரம் சொன்னால் | உருகுது நெஞ்சம் -பெருகுது கண்ணீர் (2)
சிறுமதியால் உள்ளம் இருண்டிடும் வேளையில் (2)
அருளொளி வீசும் ஆண்டவன் நீயே (2)
திருமுருகா .-என்று -ஒருதரம் சொன்னால் | உருகுது நெஞ்சம் -பெருகுது கண்ணீர்
அப்பனும் பிள்ளையும் நீதான் ஐயா (2)
அடிப்பதும் அணைப்பதும் உன் கை தான் ஐயா (2)
கற்பனை வாழ்வினில் கதி இனி ஏது (2)
கருணாநிதியே கதிர்வடிவேலா (2)
திருமுருகா .-என்று -ஒருதரம் சொன்னால் | உருகுது நெஞ்சம் -பெருகுது கண்ணீர்
திருமுருகா, திருமுருகா, திருமுருகா.
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
கொங்கு மணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை ...
ஆ -ஆ -ஆ -மருதமலை -மருதமலை ...
முருகா -மருதமலை மாமணியே முருகையா (2)
தேவாரின் குலம் காக்கும் வேலையா அய்யா | மருதமலை மாமணியே முருகையா (2)
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம் (2) அய்யா உனது மங்கல மந்திரமே
மருதமலை மாமணியே முருகையா
தைப்பூச நன்னாளில் -தேருடன் திருநாளும் | பக்தர்கள் கொண்டாடும் கந்தையா -ஆ -(2)
மருதமலை மாமணியே முருகையா
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் | ஆ -ஆ -ஆ -(2)
நாடி என் வினை தீர -நான் வருவேன் (2)
அஞ்சுதல் நிலை மாறி -ஆறுதல் உருவாக எழு பிறப்பிலும் உன்னை எட்டுவேன் -ஆ -(2)
மருதமலை மாமணியே முருகையா
சக்தித் திருமகன் முத்துக் குமரனை மறவேன் -நான் மறவேன்
பக்திக் கடலென பற்றிப் பெருகிட வருவேன் -நான் வருவேன் (2)
பரமனின் திருமகனே -அழகிய தமிழ் மகனே (2)
காண்பதெல்லாம் -உனது முகம் -அது ஆறுமுகம் | காலமெல்லாம் -எனது மனம் உருகுது முருகா (2)
அதிபதியே குருபரனே -அருள் நிதியே சரவணனே (2)
பனி அது மழை அது நதி அது கடல் அது | சகலமும் உனதொரு கருணையில் எழுவது (2)
வருவாய் -குகனே -வேலையா ...| ஆ -ஆ -ஆ -ஆ -
தேவர் வணங்கும் மருதமலை முருகா -மருதமலை மாமணியே முருகையா
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் | அங்கே குவிந்ததமா பெண்களெல்லாம்
வண்டாட்டம் -கொண்டாட்டம் (2) குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம் (2)
தெருமுழுதும் பக்தர்களில் ஆனந்தமன்றம் (2)
தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை (2)
தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெருமானை (2) முருகப் பெருமானை
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் | அங்கே குவிந்ததமா பெண்களெல்லாம்
வண்டாட்டம் -கொண்டாட்டம் | குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை | நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை (2)
வேல் முருகா வெற்றி வேல் முருகா (2)
சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள் (2)
அரகர பாடுங்கள் வருவதைப் பாருங்கள் (2)
கந்தனுக்கு வேல் வேல் | முருகனுக்கு வேல் வேல் | வேல் முருகா வெற்றி வேல் முருகா (4).
ஆதாரம் என்றும் நீதானே | எனக்காதாரம் என்றும் நீதானே
ஆறுமுகனே வள்ளியம்மை மணாளனே (2)
பாதார விந்தம் பணிந்திடும் அடியார் (2)
பவவினை அகல கண்பார்த்தருளும் குகனே (2)
ஆதாரம் என்றும் நீதானே | எனக்காதாரம் என்றும் நீதானே
தீய குணங்கள் என்னை சேராமல் (2)
என் செய்கையிலே நேர்மை தவராமல் | தீய குணங்கள் என்னை சேராமல்
என் செய்கையிலே நேர்மை தவராமல் | ஈகை எனும் பண்பில் மாறாமல் (3)
எந்தத் தன்மையிலும் உன்னை மறவாமல் (2) இருக்க -
ஆதாரம் என்றும் நீதானே | எனக்காதாரம் என்றும் நீதானே
ஆறுமுகனே வள்ளியம்மை மணாளனே (2)
நினைக்க நினைக்க நெஞ்சம் உருகுமே -முருகனென்றால் நிகரில்லாத பக்தி பெருகுமே (2)
வினைத்துயரம் யாவும் விலகுமே -வேலனென்றால் (2)
விளங்கும் செல்வம் வீட்டில் நிறையுமே
நினைக்க நினைக்க நெஞ்சம் உருகுமே -முருகனென்றால் நிகரில்லாத பக்தி பெருகுமே
துதிக்கத் துதிக்கப் பாவம் தொலையுமே -கந்தனென்றால்
தூய ஞான மேன்மை நிலவுமே (2)
எதிர்க்கும் பகை அச்சம் நீங்குமே (2)
கடம்பனென்றால்எடுத்த செயல் வெற்றி ஓங்குமே
நினைக்க நினைக்க நெஞ்சம் உருகுமே -முருகனென்றால் நிகரில்லாத பக்தி பெருகுமே
இனிக்கும் தேன்போல் இதயம் ஆகுமே -குகனென்றால்
என்றும் வாழ்க்கைப் புனிதம் சேருமே (2)
மணக்கும் மலர்போல் மகிழ்ச்சி பொங்குமே -குமரனென்றால்
மாசில்லாத அருள் வழங்குமே
நினைக்க நினைக்க நெஞ்சம் உருகுமே -முருகனென்றால் நிகரில்லாத பக்தி பெருகுமே
வினைத்துயரம் யாவும் விலகுமே -. வேலனென்றால்
விளங்கும் செல்வம் வீட்டில் நிறையுமே
நினைக்க நினைக்க நெஞ்சம் உருகுமே -முருகனென்றால் நிகரில்லாத பக்தி பெருகுமே
(ராகம் - காம்போதி, ஆ: ஸ ரி க ம பத ஸ - அவ: ஸ நி த ப ம க ரி ஸ)
(தாளம் - ரூபகம் (தாங்கிடு தகதிந்தின்ன))
பல்லவி
சிக்கல் மேவிய சிங்கார வேலவா - என்
பக்கலில் நின்றே பாவுடன் ஆளவா (சிக்கல்)
அனுபல்லவி
துள்ளிக்குதித்தோடும் தோகை மயில் மீது
வள்ளிதெய்வயானையுடன் வந்தெனக்கருளும் (சிக்கல்)
சரணம்
ஒங்காரமாகியே உணர்த்திட வந்தவா
சங்காரமூர்த்தியாய் சூரனை மாய்த்தவா
சிங்கார அன்னை உமையிடம் வேல் பெற்றவா
பாங்காக வலம் வந்தேன் பேரருள் சுரக்கவா
மத்யம காலம்
பதமலாணை கதியெனவே
நிதநிதமுனைத்தொழுதிடவா
இதந்தரு நெடுங்கண்ணி நவ
நீதேச்வரர் அருள் ராமன் மகிழ (சிக்கல்)
ராகம் - காவடிச்சிந்து; தாளம் - ரூபகம்)
அழகுத்தெய்வம் என அன்புடன் போற்றிடும் ஆண்டவா -
பழனி ஆண்டவா - எனை ஆண்டவா -
உந்தன் பழனிப்பதி பரவும் அருள்மழையை நிதம் நினைந்தே
சிந்து பாடினேன் உனை நாடினேன்
குன்றம் தனில் குடி கொண்டவா - எந்தன்
வேலவா சக்தி வேலவா என்னை ஆளவா - எந்தன்
பந்தம்தனை த்துண்டித்திட சொந்தமுடன் வந்தாய் - உன்னைத்
தேடினேன் புகழ் பாடினேன்
கோலமயில் மீது கோழிக்கொடி தாங்கும்
ஷண்முகா செந்தில் ஷண்முகா எந்தன் இன்முகா - உந்தன்
சீலம் மிகு கோலத்துடன் ஞாலம் புகழ் வேலைத்தினம்
சிந்தித்தேன் என்றும் வந்தித்தேன்
உருகா உள்ளத்தையும் உருக்கிடும் சக்திகொள்
திரு முருகா திரு மால் மருகா வடி வேல் முருகா
குருவே உனை மறவாதிட த்தருவாய் வரம் விரைவாய் உனைப்
போற்றினேன் புகழ் சாற்றினேன்
ஒப்பில்லா மொழி உந்தன் அப்பனுக்கே தந்த குரு மணியே -
நல்ல தவ மணியே - சக்தி சிவ மணியே -
எந்தன் அன்பில் வளர் கந்தா உமை மைந்தா
உந்தன் பாதந்தனைப் பற்றினேன் மனம் தேற்றினேன்.
கலியுகந்தனில் எங்கும் கிலிதனைப்போக்கிடும்
குருபரனே தணிகை வளர் குகனே - ஞானத்தவ மகனே -
ஒரு நினைவாய் அனுதினமும் நல்மனமோடுனைப் பணிந்தால்
இன்னல் போகுமே இன்பம் ஆகுமே
(ராகம் - நீலமணி)
(தாளம் - ஆதி)
பல்லவி
உனையன்றி நினைவுமுண்டோ முருகா - உன்
நினைவின்றி வாழ்வுமுண்டோ குன்றுதோறாடிடும் (உனையன்றி)
மத்தியம காலம்
கூறுமடியார்தம் குறைகளைப்போக்கிடும் ஆறுதல் நீ
- ஆறுபடை - ஆறுமுகா (உனையன்றி)
அனுபல்லவி
வினை தீர்த்து எனையாள வேல் கொண்டனையோ என்
மனை வாழ்வில் மகிழ்வளிக்க மயில் கொண்டனையோ (உனையன்றி)
சரணம்
நினைந்திடில் நீ என் முன் வரவேண்டும் - நான்
முனைந்திடும் செயலில் பலம் தரவேண்டும் - மனம்
கனிந்துருகித்துதித்தேன் கணநாதன் இளையோனே
இனித்திடும் பார்வையுடன் ராமனைக் காப்போனே
மத்தியம காலம்
அலைவாய் தனிலே அமர்ந்திடும் அழகா
ஆவினங்குடிவாழ் உளங்கவர் பாலா
ஏரகந்தனிலே ஏற்றம்கொள் சீலா
தணிகைவளர் - பழமுதிரும் - குன்றிலுறை (உனையன்றி)
1. Tirupparankundram திருப்பரங்குன்றம்
உ லகம் உ வப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்
கோவற இமைக்குஞ் சேண்விளங் கவிரொளி
உ றுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாட்
செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை (5)
மறுவில் கற்பின் வாணுதல் கணவன்
கார்கோண் முகந்த கமஞ்சூன் மாமழை
வாள்போழ் விசும்பின் வள்ளுறை சிதறித்
தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத்
திருள்படப் பொதுளிய பராஅரை மராஅத் (10)
துருள்பூந் தண்டார் புரளும் மார்பினன்
மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற்
கிண்கிணி கவை அய ஒண்செஞ் சீறடிக்
கணைக்கால் வாங்கிய நுசுப்பிற் பணைதோட்
கோபத் தன்ன தோயாப் பூந்துகிற் (15)
பல்காசு நிரைத்த சில்காழ் அல்குற்
கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பின்
நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழைச்
சேணிகந்து விளங்குஞ் செயிர்தீர் மேனித்
துணையோர் ஆய்ந்த இணையீ ரோதிச் (20)
செங்கால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபு
பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித்
தெய்வ உ த்தியொடு வலம்புரி வயின்வைத்துத்
திலகந் தைஇய தேங்கமழ் திருநுதன்
மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத் (25)
துவர முடித்த துகளறு முச்சிப்
பெருந்தண் சண்பகஞ் சொஇக் கருந்தகட்
டுளைப்பூ மருதின் ஒள்ளிணர் அட்டிக்
கிளைக்கவின் றெழுதரு கீழ்நீர்ச் செல்வரும்
பிணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக (30)
வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர்
நுண்பூண் அகந் திளைப்பத் திண்காழ்
நடுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை
தேங்கமழ் மருதிணர் கடுப்புக் கோங்கின்
குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர் (35)
வேங்கை நுண்டா தப்பிப் காண்வர
வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக்
கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி
வாழிய பெரிதென் றேத்திப் பலருடன்
சீர்திகழ் சிலம்பகஞ் சிலம்பப் பாடிச் (40)
சூரர மகளிர் ஆடுஞ் சோலை
மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச்
சுரும்பு முசாச் சுடர்ப்பூங் காந்தட்
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்
பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்குச் (45)
சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்
உ லறிய கதுப்பிற் பிறழ்பற் பேழ்வாய்ச்
சுழல்விழிப் பசுங்கட் சூர்த்த நோக்கிற்
கழல்கட் கூகையோடு கடும்பாம்பு தூங்கப்
பெருமுலை அலைக்குங் காதிற் பிணர்மோட் (50)
டுருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்
குருதி ஆடிய கூருகிர்க் கொடுவிரற்
கண்தொட் டுண்ட கழிமுடைக் கருந்தலை
ஒண்டொடித் தடக்கையின் ஏந்தி வெருவர
வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா (55)
நிணந்தின் வாயள் துணங்கை தூங்க
இருபே குருவின் ஒருபே ரியாக்கை
அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வலம் அடங்கக் கவிழிணர்
மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத் (60)
தெய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய்
சேவடி படருஞ் செம்மல் உ ள்ளமொடு
நலம்புரி கொள்கைப் புலம்புரிந் துறையும்
செலவுநீ நயந்தனை யாயிற் பலவுடன்
நன்னர் நெஞ்சத் தின்னசை வாய்ப்ப (65)
இன்னே பெறுதிநீ முன்னிய வினையே
செறுப்புகன் றெடுத்த சேணுயர் நெடுங்கொடி
வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
பொருநர்த் தேய்த்த போரரு வாயில்
திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து (70)
மாடமலி மறுகிற் கூடற் குடவயின்
இருஞ்சேற் றகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த
முட்டாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
கட்கமழ் நெய்தல் ஊதி எற்படக்
கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர் (75)
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்றமர்ந் துறைதலும் உ ரியன் அதா அன்று.
2. Tiruchchialaivaai திருச்சீரலைவாய்
வைந்நுதி பொருத வடுவாழ் வரிநுதல்
வாடா மாலை ஓடையொடு துயல்வரப்
படுமணி இரட்டு மருங்கிற் கடுநடைக் (80)
கூற்றத் தன்ன மாற்றரு மொய்ம்பிற்
கால்கிளர்ந் தன்ன வேழம் மேல்கொண்
டைவே றுருவிற் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி
மின்னுறழ் இமைப்பிற் சென்னிப் பொற்ப (85)
நகைதாழ்பு துயல்வரு உ ம் வகையமை பொலங்குழை
சேண்விளங் கியற்கை வான்மதி கவைஇ
அகலா மீனின் அவிர்வன இழைப்பத்
தாவில் கொள்கைத் தந்தொழில் முடிமார்
மன்னோர் பெழுதரு வாணிற முகனே (90)
மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன் றொருமுகம் ஒருமுகம்
ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக்
காதலின் உ வந்து வரங்கொடுத் தன்றே ஒருமுகம்
மந்திர விதியின் மரபுளி வழா அ (95)
அந்தணர் வேள்வியோர்க் கும்மே ஒருமுகம்
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்
திங்கள் போலத் திசைவிளக் கும்மே ஒருமுகம்
செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்
கருவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே ஒருமுகம் (100)
குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே ஆங்கம்
மூவிரு முகனும் முறைநவின் றொழுகலின்
ஆரந் தாழ்ந்த அம்பகட்டு மார்பிற்
செம்பொறி வாங்கிய மொய்ம்பிற் சுடர்விடுபு (105)
வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள
விண்செலன் மரபின் ஐயர்க் கேந்திய தொருகை
உ க்கஞ் சேர்த்திய தொருகை
நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇய தொருகை
அங்குசங் கடவா ஒருகை இருகை (110)
ஐயிரு வட்டமொ டெஃகுவலந் திரிப்ப ஒருகை
மார்பொடு விளங்க ஒருகை
தாரொடு பொலிய ஒருகை
கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப ஒருகை
பாடின் படுமணி இரட்ட ஒருகை (115)
நீனிற விசும்பின் மலிதுளி பொழிய ஒருகை
வானர மகளிர்க்கு வதுவை சூ ட்ட வாங்கப்
பன்னிரு கையும் பாற்பட இயற்றி
அந்தரப் பல்லியங் கறங்கத் திண்தாழ்
வயிரெழுந் திசைப்ப வால்வளை ஞால (120)
உ ரந்தலைக் கொண்ட உ ருமிடி முரசமொடு
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ
விசும்பா றாக விரைசெலன் முன்னி
உ லகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர்
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே அதா அன்று (125)
3. Thiruvaavinankudi திருவாவினன்குடி
சீரை தைஇய உ டுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும் வானரை முடியினர்
மாசற இமைக்கும் உ ருவினர் மானின்
உ ரிவை தைஇய ஊன்கெடு மார்பின்
என்பெழுந் தியங்கு மியாக்கையர் நன்பகற் (130)
பலவுடன் கழிந்த உ ண்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தின ரியாவதும்
கற்றோர் அறியா அறவினர் கற்றோர்க்குத்
தாம்வரம் பாகிய தலைமையர் காமமொடு
கடுஞ்சினங் கடிந்த காட்சியர் இடும்பை (135)
யாவதும் அறியா இயல்பினர் மேவரத்
துனியில் காட்சி முனிவர் முற்புகப்
புகைமுகந் தன்ன மாசில் தூவுடை
முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச்
செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின் (140)
நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்
மென்மொழி மேவலர் இன்னரம் புளர
நோயின் றியன்ற யாக்கையர் மாவின்
அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தோறும்
பொன்னுரை கடுக்குந் திதலையர் இன்னகைப் (145)
பருமந் தாங்கிய பணிந்தேந் தல்குல்
மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்கக்
கடுவோ டொடுங்கிய தூம்புடை வாலெயிற்
றழலென உ யிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறற்
பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ் சிறைப் (150)
புள்ளணி நீள்கொடிச் செல்வனும் வெள்ளேறு
வலவயின் உ யரிய பலர்புகழ் திணிதோள்
உ மைஅமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்
நூற்றுப்பத் தடுக்கிய நாட்டத்து நூறுபல் (155)
வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்
தீரிரண் டேந்திய மருப்பின் எழில்நடைத்
தாழ்பெருந் தடக்கை உ யர்ந்த யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்
நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய (160)
உ லகங் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்
பலர்புகழ் மூவருந் தலைவ ராக
ஏமரு ஞாலந் தன்னில் தோன்றித்
தாமரை பயந்த தாவில் ஊழி
நான்முக ஒருவற் சுட்டிக் காண்வரப் (165)
பகலிற் றோன்றும் இகலில் காட்சி
நால்வே றியற்கைப் பதினொரு மூவரோ
டொன்பதிற் றிரட்டி உ யர்நிலை பெறீஇயர்
மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு
வளிகிளர்ந் தன்ன செலவின் வளியிடைத் (170)
தீயெழந் தன்ன திறலினர் தீப்பட
உ ருமிடித் தன்ன குரலினர் விழுமிய
உ றுகுறை மருங்கிற்றம் பெருமுறை கொண்மார்
அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத்
தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள் (175)
ஆவினன்குடி அசைதலும் உ ரியன் அதா அன்று.
4. Thiruveerakam திருவேரகம்
இருமூன் றெய்திய இயல்பினின் வழாஅ
திருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான் கிரட்டி இளமை நல்லியாண்
டாறினிற் கழிப்பிய அறனவில் கொள்கை (180)
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்
திருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர உ டீஇ
உ ச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து (185)
ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி
நாவியன் மருங்கின் நவிலப் பாடி
விறையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுவந்
தேரகத் துறைதலும் உ ரியன் அதா அன்று
5. Kundrutheeraadal குன்றுதோறாடல்
பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன் (190)
அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு
வெண்கூ தாளந் தொடுத்த கண்ணியன்
நறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் மார்பிற்
கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர்
நீடமை விளைந்த தேக்கட் டேறற (195)
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை அயர
விரலுளர்ப்ப பவிழ்ந்த வேறுபடு நறுங்காற்
குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி
இணைத்த கோதை அணைத்த கூந்தல் (200)
முடித்த குல்லை இலையுடை நறும்பூச்
செங்கால் மரா அத்த வாலிணர் இடையிடுபு
சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை
திருந்துகாழ் அல்குல் திளைப்ப உ டீஇ
மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு (205)
செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்
செயலைத் தண்தளிர் துயல்வருங் காதினன்
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டனன் குறும்பல் லியத்தன்
தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங் (210)
கொடியன் நெடியன் தொடியணி தோளன்
நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடு
குரும்பெறிக் கொண்ட நறுந்தண் சாயல்
மருங்கிற் கட்டிய நிலன்நேர்பு துகிலினன்
முழவுறழ் தடக்கையின் இயல ஏந்தி (215)
மென்றோட் பல்பிணை தழீஇத் தலைத்தந்து
குன்றுதோ றாடலும் நின்றதன் பண்பே அதா அன்று.
6. Payamudhircholai பழமுதிர்சோலை
சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊரு ர் கொண்ட சீர்கெழு விழவினும் (220)
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்
வேலன் தைஇய வெறியயர் களனும்
காடுங் காவுங் கவின்பெறு துருத்தியும்
யாறுங் குளனும் வேறுபல் வைப்பும்
சதுக்கமுஞ் சந்தியும் புதுப்பூங் கடம்பும் (225)
மன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையினும்
மாண்டலைக் கொடியொடு மண்ணி யமைவர
நெய்யோ டையவி அப்பி ஐதுரைத்துக்
குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி
முரண்கொள் உ ருவின் இரண்டுடன் உ டீஇச் (230)
செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி
மதவலி நிலை இய மாத்தாட் கொழுவிடைக்
குருதியொடு விரைஇய தூவெள் அரிசி
சில்பலிச் செய்து பல்பிரப் பிஐஇச்
சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தௌiத்துப் (235)
பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை
துணையுற அறுத்துத் தூங்க நாற்றி
நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி
நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி
இமிழிசை அருவியோ டின்னியங் கறங்க (240)
உ ருவப் பல்பூத் தூஉ ய் வெகுவரக்
குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள்
முருகிய நிறுத்து முரணினர் உ ட்க
முருகாற்றுப் படுத்த உ ருகொழு வியனகர்
ஆடுகளஞ் சிலம்பப் பாடிப் பலவுடன் (245)
கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங் கெய்தினர் வழிபட
ஆண்டாண் டுறைதலும் அறிந்த வாறே
ஆண்டாண் டாயினும் ஆக காண்டக (250)
முந்துநீ கண்டுழி முகனமர்ந் தேத்திக்
கைதொழு உ ப் பரவிக் காலுற வணங்கி
நெடும்பெருஞ் சிமயத்து நீலப்பைஞ்சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறமர் செல்வ (255)
ஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை
மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே
வெற்றி வேல்போர்க் கொற்றவை சிறுவ
இழையணி சிறப்பிற் பழையோள் குழவி
வானோர் வணங்குவில் தானைத் தலைவ (260)
மாலை மார்ப நூலறி புலவ
செருவில் ஒருவ பொருவிறல் மள்ள
அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை
மங்கையர் கணவ மைந்தர் ஏறே
வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ (265)
குன்றங் கொன்ற குன்றாக் கொற்றத்து
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ
பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே
அரும்பெறன் மரபிற் பெரும்பெயர் முருக
நசையினர்க் காத்தும் இசைபே ராள (270)
அலாந்தோர்க் களிக்கும் பொலம்பூட் சேஎய்
மண்டமர் கடந்தநின் வென்றா டகலத்துப்
பரிசிலர்த் தாங்கும் உ ருகெழு நெடுவே எள்
பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்
சூர்மருங் கருத்த மொய்ம்பின் மதவலி (275)
போர்மிகு பொருந குரிசில் எனப்பல
யான்அறி அளவையின் ஏத்தி ஆனது
நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின்
நின்னடி உ ள்ளி வந்தனன் நின்னோடு
புரையுநர் இல்லாப் புலமை யோய்எனக் (280)
குறித்தது மொழியா அளவையிற் குறித்துடன்
வேறுபல் உ ருவிற் குறும்பல் கூளியர்
சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி
அளியன் றானே முதுவாய் இரவலன்
வந்தோன் பெருமநின் வண்புகழ் நயந்தென (285)
இனியவும் நல்லவும் நனிபல ஏத்தித்
தெய்வஞ் சான்ற திறல்விளங் குருவின்
வான்றோய் நிவப்பிற் றான்வந் தெய்தி
அணங்குசால் உ யர்நிலை தழீஇப் பண்டைத்தன்
மணங்கமழ் தெய்வத் திளநலங் காட்டி (290)
அஞ்சல் ஓம்புமதி அறிவனின் வரவென
அன்புடை நன்மொழி அளைஇ விளிவின்
றிருள்நிற முந்நீர் வளைஇய உ லகத்
தொருநீ யாகத் தோன்ற விழுமிய
பெறலரும் பரிசில் நல்குமதி பலவுடன் (295)
வேறுபஃ றுகிலின் நுடங்கி அகில்சுமந்
தார முழுமுதல் ஊருட்டி வேரற்
பூவுடை அலங்குசினை புலம்பவேர் கீண்டு
விண்பொரு நெடுவரை பரிதியிற் றொடுத்த
தண்கமழ் அலர்இறால் சிதைய நன்பல (300)
அரசினி முதுசுளை கலாவ மீமிசை
நாக நறுமலர் உ திர யூகமொடு
மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல்
இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று
முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று (305)
நன்பொன் மணிநிறங் கிளரப் பொன்கொழியா
வாழை முழுதல் துமியத் தாழை
இளநீர் விழுக்குலை உ திரத் தாக்கிக்
கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற
மடநடை மஞ்ஞை பலவுடன் வொIஇக் (310)
கோழி வயப்பெடை இரியக் கேழலோ
டிரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன
குரூ உ மயி ரியாக்கைக் குடாவடி உ ளியம்
பெருங்கல் விடரளைச் செறியக் கருங்கோட்
டாமா நல்லேறு சிலைப்பச் சேணின் (315)
றிழுமென இழிதரும் அருவிப்
பழமுதிர் சோலை மலைகிழ வோனே.
..நேரிசைவெண்பா..
குன்றம் எறிந்தாய் குரைகடலிற் சூர்தடிந்தாய்
புன்றலைய பூதப் பொருபடையாய் - என்றும்
இளையாய் அழகியாய் ஏறு\ர்ந்தான் ஏறே
உ ளையாய்என் உ ள்ளத் துறை. (1)
குன்றம் எறிந்ததுவுங் குன்றப்போர் செய்ததுவும்
அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும் - இன்றென்னைக்
கைவிடா நின்றதுவுங் கற்பொதும்பிற் காத்ததுவும்
மெய்விடா வீரன்கை வேல். (2)
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உ ண்டே துணை. (3)
இன்னம் ஒருகால் எனதிடும்பைக் குன்றுக்கும்
கொன்னவில்வேற் சூர்தடிந்த கொற்றவா - முன்னம்
பனிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட
தனிவேலை வாங்கத் தகும். (4)
உ ன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்
கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா செந்தில்வாழ் வே. (5)
அஞ்சு முகந்தோன்றில் ஆறு முகந்தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலுந் தோன்றும்
முருகாஎன் றோதுவார் முன். (6)
முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே - ஒருகைமுகன்
தம்பியே நின்னுடையே தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான். (7)
காக்கக் கடவியநீ காவா திருந்தக்கால்
ஆர்க்குப் பரமாம் அறுமுகவா - பூக்கும்
கடம்பா முருகா கதிர்வேலா நல்ல
இடங்காண் இரங்காய் இனி. (8)
பரங்குன்றிற் பன்னிருகைக் கோமான்றன் பாதம்
கரங்கூப்பிப்க் கண்குளிரக் கண்டு - சுருங்காமல
ஆசையால் நெஞ்சே அணிமுருகாற் றுப்படையைப்
பூசையாக் கொண்டே புகல். (9)
நக்கீரர் தாம் உ ரைத்த நன்முருகாற் றுப்படையைத்
தற்கோல நாள்தோறும் சாற்றினால் - முற்கோல
மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித்
தான் நினைந்த எல்லாம் தரும். (10)
பச்சை மயில் வாகனனே - சிவ
பால சுப்ரமணியனே வா
என் இச்சையெல்லாம் உன் மேல் - வைத்தேன்
எள்ளளவும் பயமில்லையே முருகா
எள்ளளவும் பயமில்லையே
அலைகடல் ஓரத்திலே - என்
அன்பான சண்முகனே - நீ
அலையா மனம் தந்தாய் - உனக்கு
அனந்த கோடி நமஸ்காரம்.
கொச்சை மொழியானாலும் - உன்னை
கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன்
சர்ச்சை எல்லாம் அழிந்ததப்பா - எங்கும்
சாந்தம் நிறைந்ததப்பா
{பச்சை மயில்...எள்ளளவும் பயமில்லையே}
வெள்ளம் அது பள்ளந்தனிலே - பாயும்
தண்ணி போல் உள்ளந்தனிலே - நீ
மெல்ல மெல்ல புகுந்து விட்டாய் - எங்கள்
கள்ளமெல்லாம் கரைந்ததப்பா
{பச்சை மயில்...எள்ளளவும் பயமில்லையே}
நெஞ்சமதில் கோயில் அமைத்தேன் - அதில்
நேர்மையெனும் தீபம் வைத்தேன்
செஞ்சிலம்பு கொஞ்சிடவே - வா முருகா
சேவல் கொடி மயில் வீரா
{பச்சை மயில்...எள்ளளவும் பயமில்லையே}
ஆறுபடை வீடுடையவா
எனக்கு ஆறுதலை தரும் தேவா (2)
நீ ஏறுமயில் ஏறி வருவாய் - அப்பா
எங்கும் நிறைந்தவனே
நீ ஏறுமயில் ஏறி வருவாய் - முருகா
எங்கும் நிறைந்தவனே
{பச்சை மயில்...எள்ளளவும் பயமில்லையே}
அலைகடல் ஓரத்திலே - என்
அன்பான சண்முகனே - நீ
அலையாத மனம் தருவாய் - உனக்கு
அனந்த கோடி நமஸ்காரம்.
உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்.
{பச்சை மயில்...எள்ளளவும் பயமில்லையே}
மங்களம் மங்களம் ஜெய மங்களம்
மங்களம் மங்களம் சுப மங்களம்
பழனிமலை பாலனுக்கு ஜெய மங்களம்
பார்வதியின் மைந்தனுக்கு சுப மங்களம்
விநாயகன் தம்பிக்கு ஜெய மங்களம்
வெற்றி வடிவேலனுக்கு சுப மங்களம்
பத்துமலை வேலனுக்கு ஜெய மங்களம்
சுவாமிமலை சுப்பனுக்கு சுப மங்களம்
அரோஹரா சுவாமிக்கு ஜெய மங்களம்
அறுபடை முருகனுக்கு சுப மங்களம்
திருச்செந்தூர் குருவுக்கு ஜெய மங்களம்
திருத்தணிகை வேலனுக்கு சுப மங்களம்
கந்தசாமி கடவுளுக்கு ஜெய மங்களம்
கதிர்காம கந்தனுக்கு சுப மங்களம்
கலியுக வேலனுக்கு ஜெய மங்களம்
கண்கண்ட வேந்தனுக்கு சுப மங்களம்
பார்க்கவரும் பக்தருக்கு ஜெய மங்களம்
பார்புகழும் முருகனுக்கு சுப மங்களம்
மங்களம் மங்களம் ஜெய மங்களம்
மங்களம் மங்களம் சுப மங்களம்.
...Website maintained by: NARA
Terms and Usage