hinduhome prayhome

Krishna Songs

Non commercial web site, available to every one. Use it if you find them useful. Encouraged to copy and distribute if needed.
  1. Alaipayuthe Kanna
  2. Kurai Onrum Illai Kanna
  3. மாடு மேய்க்கும் கண்ணே
  4. விஷமக்காரக் கண்ணன்
  5. வான் போலே வண்ணம் கொண்டு
  6. தீராத விளையாட்டுப் பிள்ளை
  7. சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
  8. கோபியர் கொஞ்சும் ரமணா
  9. கோபியரே கோபியரே
  10. கோதையின் திருப்பாவை
  11. கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்
  12. கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா
  13. குருவாயூருக்கு வாருங்கள்
  14. குருவாயூரப்பா
  15. கிருஷ்ணா முகுந்தா முராரே
  16. ிருஷ்ணா நீ பேகனே பாரோ
  17. காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
  18. காற்றினிலே..... வரும் கீதம்
  19. காக்கைச் சிறகினிலே நந்த லாலா!
  20. கருமை நிறக் கண்ணா
  21. சன்னிதானம்!
  22. கண்ணனை பணி மனமே
  23. கங்கைக் கரைத் தோட்டம்
  24. கண்ணன் என்னைக் கண்டுகொண்டான்
  25. என்ன தவம் செய்தனை யசோதா
  26. ஆயர்பாடி மாளிகையில்
  27. ஆடாது அசங்காது வா கண்ணா
  28. அரி அரி கோகுல ரமணா
  29. திருவடி சரணம் கண்ணா!
  30. நின்னைச் சரணடைந்தேன்
  31. தீராத விளையாட்டுப் பிள்ளை
  32. சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
  33. கோபியர் கொஞ்சும் ரமணா
  34. கோபியரே கோபியரே
  35. கோதையின் திருப்பாவை
  36. கோகுலத்தில் பசுக்கள்
  37. கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா
  38. குருவாயூருக்கு வாருங்கள்
  39. அடையாத கதவிருக்கும் சன்னிதானம்!
  40. சிலப்பதிகாரப்பாடல் - வடவரையை மத்தாக்கி
  41. கோபாலா கோபாலா கோகுல நந்தன கோபாலா
  42. ராதேகோவிந்தா
  43. ராதே கிருஷ்ணா ராதே ஷ்யாம்
  44. ஸ்வாகதம் க்ருஷ்ணா
  45. புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே

Alaipayuthe Kanna அலைபாயுதே கண்ணா

Back to contents
அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே
ஆனந்த மோகன வேணு கானமதில்
அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு கானமதில்
அலைபாயுதே கண்ணா ஆஆ
நிலைபெயறாது சிலைபோலவே நின்று (2)
நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா என் மனம்
அலைபாயுதே கண்ணா ஆஆ
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே (2)
திக்கை நோக்கி என் புருவம் நெறியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே (2)
கண்கல் சொருகி ஒரு விதமாய் வருகுதே (2)
கதித்த மனத்தில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா (2)
ஒரு தனித்த மனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
தனித்த மனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
கணை கடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா
கதறி மனமுருகி நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ (2)
இது தகுமோ இது முறையோ இது தர்மம் தானோ (2)
குழலூதிடும் பொழுது ஆடிகும் குழைகள் போலவே மனது வேதனை மிகவொடு
அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு கானமதில் | அலைபாயுதே கண்ணா ஆஆ

Kurai Onrum Illai Kanna குறை ஒன்றும் இல்லை கண்ணா

Back to contents
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
No regrets have My lord, None. Lord of the Written Word, My light, my sight, My very eyes No regrets, None.
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
Though you stand Where I behold you not, My light, my very eyes, Protector of all earthlings, I know you sustain me. You meet my hunger, my thirst, My hope, my prayer, You keep me from harm, Lord of the Sparkling Gems, I need naught else Lord/Father of the Seven Hills, Naught else.
திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா
கண்ணா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா [x2]
You stand — do you not? — Veiled by a screen Only the learned can part For they are the learned Which I am not But no, no regrets have I.
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா [x2]
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா [x2]
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
Crowning this hill, You stand as rock. Giver of Boons, Immutable God Father to these hills, No regrets have I Govinda !
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா [x2]
this benighted Age of ours Lord — The worst of all the Four — You have entered The sanctum A shaft of granite Where though I see you not No regrets have I.
யாதும் மறுக்காத மலையப்பா
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா [x2]
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா [x2]
In Boulder of strength With the Ocean, Heaving on your breast, Of the purest compassion — My Mother, My very own, who grants Anything I ask of her Can I possibly have regrets? The two of you, I know, Stand there for me Eternally No regrets have I my Govinda None, none whatsoever Govinda! Govinda! Govinda! Govinda!

மாடு மேய்க்கும் கண்ணே

Back to contents
பல்லவி:
யசோதை:
மாடு மேய்க்கும் கண்ணே நீ
போக வேண்டாம் சொன்னேன்

அனுபல்லவி:
கண்ணன்:
போக வேணும் தாயே
தடை சொல்லாதே நீயே

சரணம்:
காய்ச்சின பாலு தரேன்; கல்கண்டுச் சீனி தரேன்
கை நிறைய வெண்ணைய் தரேன்; வெய்யிலிலே போக வேண்டாம்
(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

காய்ச்சின பாலும் வேண்டாம்; கல்கண்டுச் சீனி வேண்டாம்
உல்லாசமாய் மாடு மேய்த்து, ஒரு நொடியில் திரும்பிடுவேன்
(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)

யமுனா நதிக் கரையில் எப்பொழுதும் கள்வர் பயம்
கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே
(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ? கண்டதுண்டோ சொல்லும் அம்மா?
கள்வர் வந்து எனை அடித்தால் கண்ட துண்டம் செய்திடுவேன்
(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)

கோவர்த்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு
கரடி புலியைக் கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே
(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

காட்டு மிருகமெல்லாம் என்னைக் கண்டால் ஓடி வரும்
கூட்டங் கூட்டமாக வந்தால் வேட்டை ஆடி ஜெயித்திடுவேன்
(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)

பாசமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டால்
என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே
(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன்
தேடி என்னை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவேன்
(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)

விஷமக்காரக் கண்ணன்

Back to contents
ராகம் : செஞ்சுருட்டி தாளம்: ஏகம்
பல்லவி
பொல்லாத விஷமக்காரக் கண்ணன் வேடிக்கையாய் பாட்டுப் பாடி
வித விதமாய் ஆட்டம் ஆடி நாழிக் கொரு லீலை செய்யும்
நந்த கோபால கிருஷ்னன். (விஷமக்காரக் கண்ணன்)

அனுபல்லவி
வெண்ணை பானை மூடக் கூடாது - இவன் வந்து
விழுங்கினாலும் கேட்கக் கூடாது
இவன் அம்மா கிட்டே சொல்லக் கூடாது -சொல்லிவிட்டால்
அட்டகாசம் தாங்க ஒண்ணாது
இவனை சும்மாவது பேச்சுக்காக திருடன் என்று சொல்லிவிட்டால்
அம்மா, பாட்டி,அத்தை,தாத்தா அத்தனை பேரும் திருடன் என்பான்
(விஷமக்காரக் கண்ணன் )

சரணம்
பக்கத்து வீட்டுப் பெண்ணை அழைப்பான்
முகாரி ராகம் பாடச்சொல்லி வம்புக் கிழுப்பான்
எனக்கு அது தெரியாது என்றால் நெக்குருகக் கிள்ளி விட்டு
விக்கி விக்கி அழும்போது இதுதான்டி முகாரி ராகம் என்பான்
(விஷமக்காரக் கண்ணன்)

நீலமேகம் போலே இருப்பான் கண்ணன்
பாடினாலும் நெஞ்சில் வந்து குடியிருப்பான்
கோலப் புல்லாங் குழலூதி கோபிகைகளை கள்ளமாடி
கொஞ்சம் போல வெண்ணை தாடி
என்று கேட்டு ஆட்டமாடி (விஷமக் காரக்கண்ணன்)

பொல்லாத விஷமக்காரக் கண்ணன்
விதவிதமாய்ப் பாட்டுப்பாடி விதவிதமாய் ஆட்டமாடி
நாழிக்கொரு லீலை செய்யும் நந்தகோபால கிருஷ்ணன்
(விஷமக்காரக் கண்ணன்)

வான் போலே வண்ணம் கொண்டு

Back to contents
வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே [2]
ஆஹா வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே பல விந்தைகள் செய்பவனே
ஆ அ அ (வான்)
மண்ணைத் தின்று வளர்ந்தாயே துள்ளிக்கொண்டு திரிந்தாயே
அன்னையின்றிப் பிறந்தாயே பெண்களோடு அலைந்தாயே
மோகனங்கள் பாடிவந்து மோகவலை விரித்தாயே
சேலைகளைத் திருடி அன்று செய்த லீலை பலகோடி
வானில் உள்ள தேவரெல்லாம் போற்றிப் பாடும் காதல் மன்னா
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே | ஆ அ அ (வான்)
பெண்களுடை எடுத்தவனே தங்கைக்குடை கொடுத்தவனே [2]
ராசலீலை புரிந்தவனே ராஜவேலை தெரிந்தவனே
கீதையெனும் சாரம் சொல்லி கீர்த்தியினை வளர்த்தாயே [2]
கவிகள் உனை வடிக்க காலமெல்லாம் நிலைத்தாயே
மண்ணில் உந்தன் கானமெல்லாம் இன்றும் என்றும் வாழும் கண்ணா
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே | ஆ அ அ (வான்)

தீராத விளையாட்டுப் பிள்ளை

Back to contents
தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன்
தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை. (தீராத)

1. தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத)

2. தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி என்பான் - சற்று
மனமகிழும் நேரத்திலே கிள்ளி விடுவான். (தீராத)

3. அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை
அழஅழச் செய்துபின், "கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்" என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். (தீராத)

4. பின்னலைப் பின்நின்று இழுப்பான்; - தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். (தீராத)

5. புல்லாங் குழல்கொண்டு வருவான்! - அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்;
கள்ளால் மயங்குவது போலே - அதைக்
கண்மூடி வாய்திறந்தே கேட் டிருப்போம். (தீராத)

சின்னக் கண்ணன் அழைக்கிறான்!

Back to contents
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
ராதையை, பூங் கோதையை,
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடிச்
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!

கண்கள் சொல்கின்ற கவிதை
இளம் வயதில் எத்தனை கோடி?
என்றும் காதலைக் கொண்டாடும் காவியமே
புதுமை மலரும் இனிமை!
அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை!
(சின்னக் கண்ணன்)

நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இது தானா கண்மணி ராதா?
உன் புன்னகை சொல்லாத அதிசயமா?
அழகே இளமை ரதமே!
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்!
(சின்னக் கண்ணன்)

கோபியர் கொஞ்சும் ரமணா

Back to contents
கோபியர் கொஞ்சும் ரமணா
கோபால கிருஷ்ணா
(கோபியர் கொஞ்சும் ரமணா)

மாபாரதத்தின் கண்ணா
மாயக்கலையின் மன்னா
மாதவா கார்மேக வண்ணா - மதுசூதனா!
(கோபியர் கொஞ்சும் ரமணா)

தாயின் கருணை உள்ளம்
தந்தையின் அன்பு நெஞ்சம்
தந்தவன் நீயே முகுந்தா
ஸ்ரீ வைகுந்தா
(கோபியர் கொஞ்சும் ரமணா)

கோபியரே கோபியரே

Back to contents
கோபியரே கோபியரே, கொஞ்சும் இளம் வஞ்சியரே!
கோவிந்தன் பேரைச் சொல்லி, கும்மி கொட்டி ஆடுங்களே!

வேங்கடத்து மலைதனிலே,வெண்முகிலாய் மாறுங்களே!
ஸ்ரீரங்கக் காவிரியில் சேலாட்டம் ஆடுங்களே!
(கோபியரே கோபியரே)

நந்தகுமார் மெல்லிசையில் நடனமிடும் தோகைகளே!
பந்தமுள்ள திருமழிசைப் பறவைகளாய் மாறுங்களே!

சிந்துமணி வைரநகை ஸ்ரீராமன் பிம்பம் அவன்!
மந்தி்ரம் சேர் திருமாலின் மறுவடிவத் தோற்றம் அவன்!
(கோபியரே கோபியரே)

ஆழிமழைக் கண்ணன் அவன், அழகுநகை மன்னன் அவன்!
தாழை இலை பயிரினைப் போல், தானுறையும் வண்ணன் அவன்!

நாடிவரும் அன்னையர்க்கு நவநீத கிருஷ்ணன் அவன்
நந்தகுல யாதவர்க்கு, ராகவ பாலன் அவன்!!
(கோபியரே கோபியரே)

கோதையின் திருப்பாவை

Back to contents
கோதையின் திருப்பாவை வாசகன் எம்பாவை
கூப்பிடும் குரல்கேட்டு கண்ணன் வந்தான்
மாதவர் பெரியாழ்வார் மன்னவர் குலத்தாழ்வார்
ஒதியமொழி கேட்டு கண்ணன் வந்தான்
(கோதையின் திருப்பாவை)

வாரணம் அணியாக வலம்வரும் மணநாளில்
மாதவன் வடிவாகக் கண்ணன் வந்தான்
மார்கழிப் பனிநாளில் மங்கையர் இளம்தோளில்
கார்குழல் வடிவாகக் கண்ணன் வந்தான்

ஆவணிப் பொன்னாளில் ரோகிணி நன்னாளில்
அஷ்டமிதிதி பார்த்துக் கண்ணன் வந்தான்
அந்தியில் இடம்மாறி சந்தியில் முகம்மாறி
சிந்தையில் சிலையாகக் கண்ணன் வந்தான்

பொன்மகள் பாஞ்சாலி பூந்துகில் தனைகாக்க
தென்றலின் வடிவாகக் கண்ணன் வந்தான்
போர்முகம் பார்த்தனின் புயங்களைக் காத்திட
கீதையின் வடிவாகக் கண்ணன் வந்தான்

ஏழைக் குசேலனுக்கு்த் தோழமை தாள்தந்து
வாழவைப்பேன் என்று கண்ணன் வந்தான்
வாழிய பாடுங்கள் வலம்வந்து தேடுங்கள்
வந்துநிற்பான் அந்தக் கண்ணன் என்பான்!
(கோதையின் திருப்பாவை)

கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்

Back to contents
கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்
கோபாலன் குழலைக் கேட்டு
நாலுபடி பால் கறக்குது இராமாரி! - அந்த
மோகனின் பேரைச் சொல்லி
மூடி வைத்த பாத்திரத்தில்
மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)

கண்ணன் அவன் நடனமிட்டு
காளிந்தியில் வென்ற பின்னால்
தண்ணிப் பாம்பில் நஞ்சுமில்லை இராமாரி! - அவன்
கனிஇதழில் பால் கொடுத்த
பூதகியைக் கொன்ற பின்னால்
கன்னியர் பால் வஞ்சமில்லை கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)

குளத்தில் முங்கிக் குளிக்கையிலே
கோவிந்தன் பெயரைச் சொன்னால்
கழுத்திலுள்ள தாலி நிக்குது இராமாரி! - சேலை
திருத்தும் போது அவன்பெயரை
ஸ்ரீரங்கா என்று சொன்னால்
அழுத்தமான சுகம் கிடைக்குது கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)

படிப்படியாய் மலையில் ஏறி
பக்திசெய்தால் துன்பம் எல்லாம்
பொடிப் பொடியாய் நொறுங்குதடி இராமாரி! - அட
படிப்பில்லாத ஆட்கள் கூட
பாதத்திலே போய் விழுந்தால்
வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா

Back to contents
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா

ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா
ஏழைகள் மனதை வைத்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா

சாற்றிய மாலையிலே கிருஷ்ணா கிருஷ்ணா
தர்மத்தைத் தேடி நின்றோம் கிருஷ்ணா கிருஷ்ணா
(கேட்டதும் கொடுப்பவனே)

தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா
தந்தையை அறிந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா

ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா கிருஷ்ணா
அதை உலகத்தில் வாழ விடு கிருஷ்ணா கிருஷ்ணா
(கேட்டதும் கொடுப்பவனே)

நீயுள்ள சன்னிதியே கிருஷ்ணா கிருஷ்ணா
நெஞ்சுக்கு நிம்மதியே கிருஷ்ணா கிருஷ்ணா

கோயிலில் குடி புகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா
குடைநிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா...
கிருஷ்ணா கிருஷ்ணா... கிருஷ்ணா கிருஷ்ணா...

எண்ணை இல்லாது ஒரு தீபம் எரிந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா
உன்னை நினைந்தது உருகி இருந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா
கண்களைப் போல் எமைக் காவல் புரிந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா
கண்ணன் திருவடி எண்ணியிருந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா

குருவாயூருக்கு வாருங்கள்

Back to contents
குருவாயூருக்கு வாருங்கள் - ஒரு
குழந்தை சிரிப்பதை பாருங்கள்

குருவாயூருக்கு வாருங்கள் - ஒரு
குழந்தை சிரிப்பதை பாருங்கள்
ஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன்
உட்கார்ந்திருப்பதை காணுங்கள்
(குருவாயூருக்கு...)

கண்ணனின் மேனி கடல் நீலம்
அவன் கண்கள் இரண்டும் வான் நீலம்
கடலும் வானும் அவனே என்பதை
காட்டும் குருவாயூர் கோலம்
(குருவாயூருக்கு...)

சந்தியா காலத்தில் நீராடி அவன்
சந்நிதி வருவார் ஒரு கோடி
நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண
நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண

சந்தியாகாலத்தில் நீராடி அவன்
சந்நிதி வருவார் ஒரு கோடி
மந்திர குழந்தைக்கு வாகைசாத்து
மாலைகள் இடுவார் குறை ஓடி
(குருவாயூருக்கு...)

உச்சிக்காலத்தி சிங்காரம் அவன்
ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம்
பச்சைக்குழந்தையை பார்க்கும் போதே
பாவையர் தாய்மை ரீங்காரம்
நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண
நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண
(குருவாயூருக்கு...)

மாலை நேரத்தில் சீவேலி
அவன் மாளிகை முழுவதும் நெய்வேலி
நெய்விளக்கேற்றி பொய் இருள் அகற்று
நித்தம் தருவாள் ஸ்ரீதேவி
நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண
நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண

சாத்திரம் தந்த கண்ணனுக்கு
ராத்திரி பூஜை ஜகஜோதி
பாத்திரம் கண்ணன் பால் போல் மக்கள்
பக்தியில் பிறந்த உயர்நீதி

குருவாயூருக்கு வாருங்கள் - ஒரு
குழந்தை சிரிப்பதை பாருங்கள்
ஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன்
உட்கார்ந்திருப்பதை காணுங்கள்
(குருவாயூருக்கு...)

நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண
நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண

குருவாயூரப்பா

Back to contents
குருவாயூரப்பா - திருவருள்
தருவாய் நீயப்பா
உன்கோவில் வாசலிலே - தினமும்
திருநாள் தானப்பா - தினமும்
திருநாள் தானப்பா!
(குருவாயூரப்பா)

எங்கும் உந்தன் திருநாமம்
எதிலும் நீயே ஆதாரம் - உன்
சங்கின் ஒலியே சங்கீதம்
சரணம் சரணம் உன்பாதம்
(குருவாயூரப்பா)

உலகம் என்னும் தேரினையே
ஓடச் செய்யும் சாரதி்யே
காலம் என்னும் சக்கரமே - உன்
கையில் சுழலும் அற்புதமே
(குருவாயூரப்பா)

கிருஷ்ணா முகுந்தா முராரே

Back to contents
கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
(கிருஷ்ணா முகுந்தா முராரே)

கருணா சாகர கமலா நாயக
கருணா சாகர கமலா நாயக
கனகாம்பர தாரி கோபாலா
(கிருஷ்ணா முகுந்தா முராரே)
(கருணையின் கடலே, திருமகள் தலைவா - பொன் ஆடை சூடி, கோபாலா)

காளிய மர்த்தன கம்சனி தூஷண
காளிய மர்த்தன கம்சனி தூஷண
கமலாதள நயனா கோபாலா
(கிருஷ்ணா முகுந்தா முராரே)
(காளிங்க ஆட்டம், கம்சனின் ஓட்டம் - தாமரை தளக் கண்ணா, கோபாலா)

குடில குண்டலம் குவலய தள நீலம்
மதுர முரளீர் அவ லோலம்
கோடி மதன லாவண்யம்
கோபி புண்யம் பஜாமி கோபாலம்
(வளைந்த காதணி, குவளையின் நீலம்
இனிய குழலோ மயக்கும் நாதம்
கோடி மன்மத அழகு மோகம்
கோபியர் வரமே, பஜனை செய்வோம் கோபாலம்)

கோபி ஜன மனமோகன வியாபக
கோபி ஜன மனமோகன வியாபக
கோபி ஜன மனமோகன வியாபக
குவலய தள நீலா கோபாலா...
குவலய தள நீலா கோபாலா...
குவலய தள நீலா கோபாலா...
(கிருஷ்ணா முகுந்தா முராரே)
(கோபியர் மனத்தின் மோகனன் நீயே! ருஷ்ணா நீ பேகனே பாரோ

கிருஷ்ணா நீ பேகனே பாரோ

Back to contents
ராகம்: யாமுன கல்யானீ தாளம்: சாபு by வியாசராய தீர்த்தர்
கிருஷ்ணா நீ பேகனே பாரோ

பேகனே பாரோ முகவன்னு தோரோ
(கிருஷ்ணா நீ பேகனே பாரோ ....)

காலாலந்திகே கெஜ்ஜே நீலாத பானவுலி
நீலவர்ணனே நாட்யம் ஆடுத பாரோ
(கிருஷ்ணா நீ பேகனே பாரோ ....)

ஒடியல்லி ஒடிகெஜ்ஜே பெரலல்லி ஒங்குர
கொரலல்லி ஹாகித வைஜயந்தீ மாலே
(கிருஷ்ணா நீ பேகனே பாரோ ....)

காசி பீதாம்பர கையல்லி கொலாலு
பூசித ஸ்ரீகந்த மையல்லோ லாகம்மா
(கிருஷ்ணா நீ பேகனே பாரோ ....)

தாயிகே பாயல்லி ஜகவன்னு தோரித
ஜகதோத் தாரக நம்ம உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா
(கிருஷ்ணா நீ பேகனே பாரோ ....)
கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!..

வேகமாய் வாராய், திருமுகம் தாராய்!
(கிருஷ்ணா நீ வேகமாய் வாராய்!..)

காலிலே கிண் கிணிகள்! கையில் மணிக் கங்கணங்கள்!
நீல வண்ணக் கண்ணா, நடனம் நீ ஆடி வாராய்!
(கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!)..

இடுப்பிலே ஒட்டியானம், விரல்களில் மோதிரங்கள்
கழுத்திலே தவழ்ந்திடும் வைஜயந்தி வனமாலை!
(கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!,,)

காசிப் பீதாம்பரமும் கையில் புல்லாங் குழலும்
பூசிய சந்தனம் உன், மேனி எங்கும் மணக்க
(கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!..)

வாயினில் வையத்தைத் தாயிற்கே காட்டியவா
உலகத்தின் காவலா, நம்ம உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா
(கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!..)

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

Back to contents
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
அவன் வாய்க் குழலில் அழகாக........
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து
(காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா? )

பசு அறியும் அந்தச் சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்
வருந்தும் உயிருக்கு ஒரு மருந்தாகும்
இசை அருந்தும் முகம் மலரும்...ஒரு அரும்பாகும்
இசையின் பயனே இறைவன் தானே
(காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா? )

ஆதார ஸ்ருதி அந்த அன்னை அன்பே
அதுக்கேற்ற லயம் என் தந்தை அன்பே
ஸ்ருதி லயங்கள் தன்னைச் சுற்றும்...ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த நல்ல இசைக் குடும்பம்

திறந்த கதவு என்றும் மூடாது
இங்கு சிறந்த இசை விருந்து குறையாது
இது போல் இல்லம் எது சொல் தோழி
(காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா?)

காற்றினிலே..... வரும் கீதம்

Back to contents
காற்றினிலே..... வரும் கீதம்..... காற்றினிலே....

காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்

பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம்
பண்ணொலி கொஞ்சிடும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்
மதுர மோகன கீதம்
நெஞ்சினிலே
நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி
நினைவழிக்கும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
துணை வண்டுடன் சோலை குயிலும்
மனம் குவிந்திடவும்
வானவெளிதனில் தாராகணங்கள்
தயங்கி நின்றிடவும்
ஆ என் சொல்வேன் மாயப்பிள்ளை
வேய்ங்குழல் பொழி கீதம்
காற்றினிலே வரும் கீதம்

நிலா மலர்ந்த இரவினில் தென்றல்
உலாவிடும் நதியில்
நீலநிறத்து பாலகன் ஒருவன்
குழல் ஊதி நின்றான்
காலமெல்லாம்
காலமெல்லாம் அவன் காதலை எண்ணி
உருகுமோ என் உள்ளம்
காற்றினிலே வரும் கீதம்

காக்கைச் சிறகினிலே நந்த லாலா!

Back to contents
காக்கைச் சிறகினிலே நந்த லாலா! - நின்றன்
கரியநிறம் தோன்று தையே, நந்த லாலா!

பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்த லாலா! - நின்றன்
பச்சை நிறம் தோன்று தையே, நந்த லாலா!

கேட்கும் ஒலியில் எல்லாம் நந்த லாலா! - நின்றன்
கீதம் இசைக்குதடா, நந்த லாலா!

தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா! - நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா, நந்த லாலா!

கருமை நிறக் கண்ணா

Back to contents
கண்ணாஆஆஆஆஆ
கருமை நிறக் கண்ணா
உன்னைக் காணாத கண் இல்லையே!

உன்னை மறுப்பாரில்லை
கண்டு வெறுப்பாரில்லை
என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை!
(கண்ணாஆஆஆஆஆ)
மனம் பார்க்க மறுப்போர் முன், படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர் முன், கொடுத்தாய் கண்ணா
இனம் பார்த்து எனைச் சேர்க்க, மறந்தாய் கண்ணா
நல்ல இடம் பார்த்துச் சிலையாக அமர்ந்தாய் கண்ணா!
(கண்ணாஆஆஆஆஆ)

பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா
அதில் பூப் போன்ற நினைவொன்று வைத்தாய் கண்ணா
கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
எந்தக் கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா?
(கண்ணாஆஆஆஆஆ)

சன்னிதானம்!

Back to contents
அடையாத கதவிருக்கும் சன்னிதானம்!
அஞ்சாத சொல்லிருக்கும் சன்னிதானம்!!

கண்ணன் வந்தான் அங்கே
கண்ணன் வந்தான் - ஏழைக்
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்

தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
கேட்பவர்க்கு கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்
தர்மம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்
தாளாத துயர் தீர்க்க கண்ணன் வந்தான்

கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்...
கண்ணன் வந்தான்...
(கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்)

முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம்
குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம்
ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம்
அடையாத கதவிருக்கும் சன்னிதானம்
அஞ்சாத சொல்லிருக்கும் சன்னிதானம்

சன்னிதானம் கண்ணன் சன்னிதானம்
சன்னிதானம்...
(கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்)

கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்
கனி மழலை குரல் கொடுத்துப் பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள்செய்ய வருவாய் கண்ணா

கண்ணா...கண்ணா..கண்ணா..கண்ணா..
(கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்)

கண்ணனை பணி மனமே

Back to contents
இராகம்: ஷண்முகப்ரியா - தாளம்: ஆதி
கண்ணனை பணி மனமே - தினமே
கண்ணனை பணி மனமே

மண்ணில் யசோதை செய் புண்ய ஸ்வரூபனை
மாதவனை நமது யாதவ தீபனை (கண்ணனை)

பாண்டவர் நேயனை பக்தர் சகாயனை
பவள செவ்வாயனை பரமனை மாயனை (கண்ணனை)

மங்கள மூலனை கோகுல பாலனை
மனம் மிகு துளசி மாலனை பாலனை (கண்ணனை)

விண்ணவர் போற்றவே மண்ணில் வரும் வேத
பண்ணனை ஸ்யாமள வண்ணனை தாமரைக் (கண்ணனை

கங்கைக் கரைத் தோட்டம்

Back to contents
கங்கைக் கரைத் தோட்டம்
கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே...ஓஓ...கண்ணன் நடுவினிலே

காலை இளம் காற்று
பாடி வரும் பாட்டு
எதிலும் அவன் குரலே...ஓஓ...எதிலும் அவன் குரலே

கண்ணன் முகத்தோற்றம் கண்டேன்
கண்டவுடன் மாற்றம் கொண்டேன்
கண்மயங்கி ஏங்கி நின்றேன்
கன்னி சிலையாகி நின்றேன்

என்ன நினைந்தேனோ...தன்னை மறந்தேனோ!
கண்ணீர் பெருகியதே...ஓ...கண்ணீர் பெருகியதே!!
(கங்கைக்கரை)

கண்ணன் என்னைக் கண்டுகொண்டான்

Back to contents
கண்ணன் என்னைக் கண்டுகொண்டான்
கை இரண்டில் அள்ளிக் கொண்டான்
பொன்னழகு மேனி என்றான்
பூச்சரங்கள் சூடித் தந்தான்

கண் திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை!
கண்ணீர் பெருகியதே...ஓ...கண்ணீர் பெருகியதே!!

அன்று வந்த கண்ணன் அவன்
இன்று வர வில்லை அவன்!
என்றோ அவன் வருவான்...ஓ...என்றோ அவன் வருவான்!

கண்ணன் முகம் கண்டகண்கள்
மன்னன் முகம் காண்பதில்லை
கண்ணனுக்குத் தந்த உள்ளம்
இன்னொருவர் கொள்வதில்லை

கண்ணன் வரும் நாளில், கன்னி இருப்பேனோ...
காற்றில் மறைவேனோ!
நாடி வரும் கண்ணன், கோல மணி மார்பில்
நானே தவழ்ந்திருப்பேன்!!
கண்ணா...!!கண்ணா...!!கண்ணா...!!

என்ன தவம் செய்தனை யசோதா

Back to contents
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை
எங்கும் நிறை பரப்ரம்மம் - அம்மா வென்றழைக்க
(என்ன தவம்)

ஈரேழு புவனங்கள் படைத்தவனைக் - கையில்
ஏந்திச் சீராட்டி பாலூட்டி தாலாட்ட - நீ
(என்ன தவம்)

பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள - உரலில்
கட்டி வாய் பொத்திக் கெஞ்ச வைத் தாயே - நீ
(என்ன தவம்)

சனகாதியர் தவ யோகம் செய்து வருந்திச் சாதித்ததை
புனித மாதே எளிதில் பெற - நீ
(என்ன தவம்)

ஆயர்பாடி மாளிகையில்

Back to contents
ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய்நிறைய மண்ணை உண்டு மண்டலத்தைக் காட்டியபின் ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
(ஆயர்பாடி...)

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவனுறங்க மண்டலமே உறங்குதம்மா ஆராரோ மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
(ஆயர்பாடி...)

நாகப்படம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில் தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ
நாகப்படம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில் தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ
அவன் மோக நிலை கூட ஒரு யோக நிலை போலிருக்கும் யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ
(ஆயர்பாடி...)

கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும் அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும் அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
அவன் பொன்னழகைப் பார்ப்பதற்க்கும் போதை முத்தம் பெறுவதற்க்கும் கன்னியரே கோபியரே வாரீரோ கன்னியரே கோபியரே வாரீரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

ஆடாது அசங்காது வா கண்ணா

Back to contents
ஆடாது அசங்காது வா கண்ணா...
உன் ஆடலில்
ஈரேழு புவனமும்
அசைந்து அசைந்தாடுதே - எனவே
ஆடாது அசங்காது வா கண்ணா

ஆடலைக் காணத் தில்லை அம்பலத்து இறைவனும் தன்
ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தான்
ஆதலினால் சிறு யாதவனே - ஒரு
மாமயில் இறகுஅணி மாதவனே - நீ
(ஆடாது அசங்காது வா)

சின்னஞ்சிறு பதங்கள் சிலம்பொலித் திடுமே - அதைச்
செவிமடுத்த பிறவி மனங்களித் திடுமே
பின்னிய சடைசற்றே வகைகலைந் திடுமே - மயில்
பீலி அசைந்தசைந்து நிலைகலைந் திடுமே
பன்னிரு கைஇறைவன் ஏறுமயில் ஒன்று
தன் பசுந்தோகை விரித்தாடி பரிசளித்திடுமே

பாடி வரும் அழகா
உனைக் காணவரும் அடியார் எவராயினும்
கனக மணிஅசையும் உனது திருநடனம்
கண்பட்டுப் போனால் மனம் புண்பட்டுப் போகுமே
(ஆடாது அசங்காது வா)

அரி அரி கோகுல ரமணா

Back to contents
அரி அரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
அரி அரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா

பாரத தேவா பாண்டவர் நேசா
பதமலர் பணிந்தோமே - உன்
பதமலர் பணிந்தோமே
(அரி அரி கோகுல ரமணா)

ஞான மலர்க் கண்ணா, ஆயர்க் குல விளக்கே
வானமும் கடலும் வார்த்து எடுத்த பொன் உருவே
கானத்தில் உயிர் இனத்தைக் கட்டுவிக்கும் கண்ணா

தானே உலகாகி தனக்குள்ளே தான அடங்கி
மானக் குல மாதர் மஞ்சள் முகம் காத்து
வாழ்விப்பாய் என்றும் மலர்த்தாள் கரம் பற்றி
நானும் தொழுதேன் நம்பி பரந்தாமா - உன்
நாமம் உரைக்கின்ற நல்லோர் நலம் வாழியவே!

அரி அரி கோகுல ரமணா உந்தன்

திருவடி சரணம் கண்ணா!

Back to contents
திருவடி சரணம் கண்ணா!
அமரஜீவிதம் சுவாமி அமுதவாசகம்
ஓம் ஓம் ஓம் ஓம்

அமரஜீவிதம் சுவாமி அமுதவாசகம்
பதிதபாவனம் சுவாமி பக்தசாதகம்
(அமரஜீவிதம்)

முரளிமோஹனம் சுவாமி அசுரமர்த்தனம்
கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ணமந்திரம்
(அமரஜீவிதம்)

நளினதைவதம் சுவாமி மதனரூபகம்
நாகநர்த்தனம் சுவாமி மானவஸ்திரம்
பஞ்சசேவகம் சுவாமி பாஞ்சசன்னியம்
கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ணமந்திரம்
(அமரஜீவிதம்)

சந்த்யபங்கஜம் சுவாமி அம்யபுஷ்பகம்
ஸர்வரக்ஷகம் சுவாமி தர்மதத்துவம்
ராகபந்தகம் சுவாமி ராசலீலகம்
கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ணமந்திரம்
(அமரஜீவிதம்)

நின்னைச் சரணடைந்தேன்

Back to contents
ராகம் - புன்னாக வராளி
பல்லவி
நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா !
நின்னைச் சரணடைந்தேன் !

சரணங்கள்
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று (நின்)

மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று (நின்)

தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வணம் (நின்)

துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட (நின்)

நல்லது தீயது நாமறியோம் அன்னை
நல்லது நாட்டுக ! தீமையை ஓட்டுக ! (நின்
சின்னஞ்சிறு கிளியே, கண்ணம்மா! செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலி தீர்த்தே, உலகில் ஏற்றம் புரிய வந்தாய்!

பிள்ளைக் கனியமுதே! கண்ணம்மா! பேசும் பொற் சித்திரமே!
அள்ளி அணைத்திடவே, என் முன்னே ஆடி வரும் தேனே!

ஓடி வருகையிலே, கண்ணம்மா உள்ளம் குளிருதடி!
ஆடித் திரிதல் கண்டால், உன்னைப் போய் ஆவி தழுவுதடி!

உச்சிதனை முகர்ந்தால், கருவம் ஓங்கி வளருதடி!
மெச்சி உனை ஊரார், புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி!
கன்னத்தில் முத்தமிட்டால், உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி!
உன்னைத் தழுவிடலோ, கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி!

சற்று உன் முகம் சிவந்தால், மனது சஞ்சலம் ஆகுதடி!
நெற்றி சுருங்கக் கண்டால், எனக்கு நெஞ்சம் பதைக்குதடி!

உன் கண்ணில் நீர் வடிந்தால், என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி!
என் கண்ணிற் பாவையன்றோ? கண்ணம்மா! என்னுயிர் நின்னதன்றோ!

சொல்லும் மழலையிலே, கண்ணம்மா துன்பங்கள் தீர்த்திடுவாய்!
முல்லைச் சிரிப்பாலே, எனது மூர்க்கம் தவிர்த்திடுவாய்!

இன்பக் கதைகளெல்லம், உன்னைப்போல் ஏடுகள் சொல்வதுண்டோ?
அன்பு தருவதிலே, உன்னை நேர் ஆகுமோர் தெய்வம் உண்டோ?

மார்பில் அணிவதற்கே, உன்னைப்போல் வைர மணிகளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே, உன்னைப்போல் செல்வம் பிறிதுமுண்டோ?

தீராத விளையாட்டுப் பிள்ளை

Back to contents
தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன்
தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை. (தீராத)

1. தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத)

2. தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி என்பான் - சற்று
மனமகிழும் நேரத்திலே கிள்ளி விடுவான். (தீராத)

3. அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை
அழஅழச் செய்துபின், "கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்" என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். (தீராத)

4. பின்னலைப் பின்நின்று இழுப்பான்; - தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். (தீராத)

5. புல்லாங் குழல்கொண்டு வருவான்! - அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்;
கள்ளால் மயங்குவது போலே - அதைக்
கண்மூடி வாய்திறந்தே கேட் டிருப்போம். (தீராத) 6. அங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
எங்காகிலும் பார்த்த துண்டோ ? - கண்ணன்
எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? (தீராத)

7. விளையாட வாவென் றழைப்பான்; - வீட்டில்
வேலையென்றால் அதைக் கேளா திழுப்பான்;
இளையாரொடு ஆடிக் குதிப்பான்; - எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். (தீராத)

8. அம்மைக்கு நல்லவன் கண்டீர்! - மூளி
அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே,
எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். (தீராத)

9. கோளுக்கு மிகவுஞ் சமர்த்தன்; - பொய்ம்மை
சூத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்;
ஆளுக் கிசைந்தபடி பேசித் - தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். (தீராத)

சின்னக் கண்ணன் அழைக்கிறான்!

Back to contents
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
ராதையை, பூங் கோதையை,
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடிச்
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!

கண்கள் சொல்கின்ற கவிதை
இளம் வயதில் எத்தனை கோடி?
என்றும் காதலைக் கொண்டாடும் காவியமே
புதுமை மலரும் இனிமை!
அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை!
(சின்னக் கண்ணன்)

நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இது தானா கண்மணி ராதா?
உன் புன்னகை சொல்லாத அதிசயமா?
அழகே இளமை ரதமே!
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்!
(சின்னக் கண்ணன்)

கோபியர் கொஞ்சும் ரமணா

Back to contents
கோபியர் கொஞ்சும் ரமணா
கோபால கிருஷ்ணா
(கோபியர் கொஞ்சும் ரமணா)

மாபாரதத்தின் கண்ணா
மாயக்கலையின் மன்னா
மாதவா கார்மேக வண்ணா - மதுசூதனா!
(கோபியர் கொஞ்சும் ரமணா)

தாயின் கருணை உள்ளம்
தந்தையின் அன்பு நெஞ்சம்
தந்தவன் நீயே முகுந்தா
ஸ்ரீ வைகுந்தா
(கோபியர் கொஞ்சும் ரமணா)

கோபியரே கோபியரே

Back to contents
கோபியரே கோபியரே, கொஞ்சும் இளம் வஞ்சியரே!
கோவிந்தன் பேரைச் சொல்லி, கும்மி கொட்டி ஆடுங்களே!

வேங்கடத்து மலைதனிலே,வெண்முகிலாய் மாறுங்களே!
ஸ்ரீரங்கக் காவிரியில் சேலாட்டம் ஆடுங்களே!
(கோபியரே கோபியரே)

நந்தகுமார் மெல்லிசையில் நடனமிடும் தோகைகளே!
பந்தமுள்ள திருமழிசைப் பறவைகளாய் மாறுங்களே!

சிந்துமணி வைரநகை ஸ்ரீராமன் பிம்பம் அவன்!
மந்தி்ரம் சேர் திருமாலின் மறுவடிவத் தோற்றம் அவன்!
(கோபியரே கோபியரே)

ஆழிமழைக் கண்ணன் அவன், அழகுநகை மன்னன் அவன்!
தாழை இலை பயிரினைப் போல், தானுறையும் வண்ணன் அவன்!

நாடிவரும் அன்னையர்க்கு நவநீத கிருஷ்ணன் அவன்
நந்தகுல யாதவர்க்கு, ராகவ பாலன் அவன்!!
(கோபியரே கோபியரே)

கோதையின் திருப்பாவை

Back to contents
கோதையின் திருப்பாவை வாசகன் எம்பாவை
கூப்பிடும் குரல்கேட்டு கண்ணன் வந்தான்
மாதவர் பெரியாழ்வார் மன்னவர் குலத்தாழ்வார்
ஒதியமொழி கேட்டு கண்ணன் வந்தான்
(கோதையின் திருப்பாவை)

வாரணம் அணியாக வலம்வரும் மணநாளில்
மாதவன் வடிவாகக் கண்ணன் வந்தான்
மார்கழிப் பனிநாளில் மங்கையர் இளம்தோளில்
கார்குழல் வடிவாகக் கண்ணன் வந்தான்

ஆவணிப் பொன்னாளில் ரோகிணி நன்னாளில்
அஷ்டமிதிதி பார்த்துக் கண்ணன் வந்தான்
அந்தியில் இடம்மாறி சந்தியில் முகம்மாறி
சிந்தையில் சிலையாகக் கண்ணன் வந்தான்

பொன்மகள் பாஞ்சாலி பூந்துகில் தனைகாக்க
தென்றலின் வடிவாகக் கண்ணன் வந்தான்
போர்முகம் பார்த்தனின் புயங்களைக் காத்திட
கீதையின் வடிவாகக் கண்ணன் வந்தான்

ஏழைக் குசேலனுக்கு்த் தோழமை தாள்தந்து
வாழவைப்பேன் என்று கண்ணன் வந்தான்
வாழிய பாடுங்கள் வலம்வந்து தேடுங்கள்
வந்துநிற்பான் அந்தக் கண்ணன் என்பான்!
(கோதையின் திருப்பாவை)

கோகுலத்தில் பசுக்கள்

Back to contents
கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்
கோபாலன் குழலைக் கேட்டு
நாலுபடி பால் கறக்குது இராமாரி! - அந்த
மோகனின் பேரைச் சொல்லி
மூடி வைத்த பாத்திரத்தில்
மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)

கண்ணன் அவன் நடனமிட்டு
காளிந்தியில் வென்ற பின்னால்
தண்ணிப் பாம்பில் நஞ்சுமில்லை இராமாரி! - அவன்
கனிஇதழில் பால் கொடுத்த
பூதகியைக் கொன்ற பின்னால்
கன்னியர் பால் வஞ்சமில்லை கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)

குளத்தில் முங்கிக் குளிக்கையிலே
கோவிந்தன் பெயரைச் சொன்னால்
கழுத்திலுள்ள தாலி நிக்குது இராமாரி! - சேலை
திருத்தும் போது அவன்பெயரை
ஸ்ரீரங்கா என்று சொன்னால்
அழுத்தமான சுகம் கிடைக்குது கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)

படிப்படியாய் மலையில் ஏறி
பக்திசெய்தால் துன்பம் எல்லாம்
பொடிப் பொடியாய் நொறுங்குதடி இராமாரி! - அட
படிப்பில்லாத ஆட்கள் கூட
பாதத்திலே போய் விழுந்தால்
வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா

Back to contents
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா

ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா
ஏழைகள் மனதை வைத்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா

சாற்றிய மாலையிலே கிருஷ்ணா கிருஷ்ணா
தர்மத்தைத் தேடி நின்றோம் கிருஷ்ணா கிருஷ்ணா
(கேட்டதும் கொடுப்பவனே)

தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா
தந்தையை அறிந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா

ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா கிருஷ்ணா
அதை உலகத்தில் வாழ விடு கிருஷ்ணா கிருஷ்ணா
(கேட்டதும் கொடுப்பவனே)

நீயுள்ள சன்னிதியே கிருஷ்ணா கிருஷ்ணா
நெஞ்சுக்கு நிம்மதியே கிருஷ்ணா கிருஷ்ணா

கோயிலில் குடி புகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா
குடைநிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா...
கிருஷ்ணா கிருஷ்ணா... கிருஷ்ணா கிருஷ்ணா...

எண்ணை இல்லாது ஒரு தீபம் எரிந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா
உன்னை நினைந்தது உருகி இருந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா
கண்களைப் போல் எமைக் காவல் புரிந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா
கண்ணன் திருவடி எண்ணியிருந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா

குருவாயூருக்கு வாருங்கள்

Back to contents
குருவாயூருக்கு வாருங்கள் - ஒரு
குழந்தை சிரிப்பதை பாருங்கள்

குருவாயூருக்கு வாருங்கள் - ஒரு
குழந்தை சிரிப்பதை பாருங்கள்
ஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன்
உட்கார்ந்திருப்பதை காணுங்கள்
(குருவாயூருக்கு...)

கண்ணனின் மேனி கடல் நீலம்
அவன் கண்கள் இரண்டும் வான் நீலம்
கடலும் வானும் அவனே என்பதை
காட்டும் குருவாயூர் கோலம்
(குருவாயூருக்கு...)

சந்தியா காலத்தில் நீராடி அவன்
சந்நிதி வருவார் ஒரு கோடி
நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண
நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண

சந்தியாகாலத்தில் நீராடி அவன்
சந்நிதி வருவார் ஒரு கோடி
மந்திர குழந்தைக்கு வாகைசாத்து
மாலைகள் இடுவார் குறை ஓடி
(குருவாயூருக்கு...)

உச்சிக்காலத்தி சிங்காரம் அவன்
ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம்
பச்சைக்குழந்தையை பார்க்கும் போதே
பாவையர் தாய்மை ரீங்காரம்
நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண
நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண
(குருவாயூருக்கு...)

மாலை நேரத்தில் சீவேலி
அவன் மாளிகை முழுவதும் நெய்வேலி
நெய்விளக்கேற்றி பொய் இருள் அகற்று
நித்தம் தருவாள் ஸ்ரீதேவி
நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண
நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண

சாத்திரம் தந்த கண்ணனுக்கு
ராத்திரி பூஜை ஜகஜோதி
பாத்திரம் கண்ணன் பால் போல் மக்கள்
பக்தியில் பிறந்த உயர்நீதி

குருவாயூருக்கு வாருங்கள் - ஒரு
குழந்தை சிரிப்பதை பாருங்கள்
ஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன்
உட்கார்ந்திருப்பதை காணுங்கள்
(குருவாயூருக்கு...)

நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண
நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண

அடையாத கதவிருக்கும் சன்னிதானம்!

Back to contents
அடையாத கதவிருக்கும் சன்னிதானம்!
அஞ்சாத சொல்லிருக்கும் சன்னிதானம்!!

கண்ணன் வந்தான் அங்கே
கண்ணன் வந்தான் - ஏழைக்
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்

தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
கேட்பவர்க்கு கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்
தர்மம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்
தாளாத துயர் தீர்க்க கண்ணன் வந்தான்

கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்...
கண்ணன் வந்தான்...
(கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்)

முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம்
குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம்
ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம்
அடையாத கதவிருக்கும் சன்னிதானம்
அஞ்சாத சொல்லிருக்கும் சன்னிதானம்

சன்னிதானம் கண்ணன் சன்னிதானம்
சன்னிதானம்...
(கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்)

கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்
கனி மழலை குரல் கொடுத்துப் பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள்செய்ய வருவாய் கண்ணா

கண்ணா...கண்ணா..கண்ணா..கண்ணா..
(கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்)

சிலப்பதிகாரப்பாடல் - வடவரையை மத்தாக்கி

Back to contents
1. Ragam Hamsanandhi Talam Aadi
வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே

Once using northern mountain as churning stick and snake vasuki as rope,
you ocean coloured, churned the belly of the ocean.
How come now you (your hands) have been tied with small rope by Yasoda who churned curd?
Is it magic or illusion by flowered belly lord?

2. Ragam-Khamas
அறுபொருள் இவனென்றே அமரர்கணந் தொழுதேத்த
உறுபசியொன் றின்றியே உலகடைய உண்டனையே
உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய்
வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே

Gods/Devas pray to you (rare divine being), for amritham their food.
How come, you steal butter and getting caught now?
Is it illusion or magic you have converted white butter into dark tualsi in your mouth?

3. Ragam -Hindolam
திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல
இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி
மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே

When the assembled devas were worshiping your lotus feet,
You covered in two steps earth (and sky) removing darkness,
You went as an emissary to pandavas in the earth,
Still earth did not change, Is it an illusion or magic?

4. Ragam-Shanmukhapriya
மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவிய சேவடிசேப்பத் தம்பியொடும் கான்போந்து
சோ அரணும் போர்மடியத் தொல் இலங்கை கட்டழித்த
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே!

With two steps you covered earth (and sky)
Added to this, you took steps along with your brother
Great lanka city was completely destroyed by your assistant (hanuman)
If we donot hear the greatness of Lord Vishnu, what is the use of our ears?

5. Ragam-Paras
பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே!

Any use for eyes which did not enjoy seeing
Eyes, feet, hands and mouth of
Lord Vishnu with budding lotus belly,
Eldest and Mayavan (Balarama and Krishna)
Known all over (the world)

6. Ragam -Kapi
மடம்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை, நூற்றுவர் பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்து ஆரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே!
(நாராயணா என்னா நா என்ன நாவே!)

Once a woman gave poison to you,
You acted against all those who tried to harm you
And you were praised by people from four directions,
And later with drumming sounds, you went as an emissary for Pandavas,
Any use for tongue that did not sing about You,
Any use for tongue that did not sing about Narayana.

கோபாலா கோபாலா கோகுல நந்தன கோபாலா

Back to contents
கோபாலா கோபாலா கோகுல நந்தன கோபாலா!
நந்த முகுந்தா கோபாலா நவநீத சோரா கோபாலா!

வேணு விலோலா கோபாலா விஜய பாலா கோபாலா!
ராதா கிருஷ்ணா கோபாலா ரமணீய வேஷா கோபாலா!

காளிய மர்த்தன கோபாலா கௌஸ்துப பூஷண கோபாலா!
முரளீ லோலா கோபாலா முகுந்தப் பிரியா கோபாலா!

ராதா ரமணா கோபாலா ராஜீவ நேத்ரா கோபாலா!
யசோதா பாலா கோபாலா யதுகுல திலகா கோபாலா!

நளின விலோசன கோபாலா கோமள வசனா கோபாலா!
புராண புருஷா கோபாலா புண்ய ஸ்லோகா கோபாலா!

கனகாம் பரதா கோபாலா கருணா மூர்த்தே கோபாலா!
கஞ்ச விலோசன கோபாலா கஸ்தூரி திலகா கோபாலா !

ராதேகோவிந்தா

Back to contents
ராதே ! ராதே ! ராதே ! ராதே !
ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா !

நந்தா குமாரா! நவநீத சோரா !
ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா !

புராண புருஷா புண்ய ஸ்லோகா
ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா !

வேணு விலோலா ! விஜய கோபாலா !
ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா !

பண்டரி நாதா ! பாண்டு ரங்கா !
ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா !

ஜெய் ஜெய் விட்டலா ! ஜெய ஹரி விட்டலா !
ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா

ராதே கிருஷ்ணா ராதே ஷ்யாம்

Back to contents
ஜெய் முரளீ ஸ்ரீதரா ராதே கிருஷ்ணா ராதே ஷ்யாம்
கோவிந்த மாதவா கோபாலா கேசவ
ராதே கிருஷ்ணா ராதே ஷ்யாம்

வேணுவிலோலா ராதே ஷ்யாம்
விஜய கோபாலா ராதே ஷ்யாம்
யாதவா மாதவா கோபாலா கேசவ
ராதே கிருஷ்ணா ராதே ஷ்யாம்

பாண்டுரங்கா ராதே ஷ்யாம்
பண்டரிநாத ராதே ஷ்யாம்
கோவிந்த மாதவா கோபாலா கேசவ
ராதே கிருஷ்ணா ராதே ஷ்யாம்

ஸ்வாகதம் க்ருஷ்ணா

Back to contents
ராகம் – மோஹனம் தாளம் – ஆதி (தி.கதி)
பல்லவி
ஸ்வாகதம் க்ருஷ்ணா சரணகதம் க்ருஷ்ணா (மாமவ)
மதுகர ஸதன – ம்ருது வதனா – மது ஸூதன இஹ (ஸ்வாகதம்)

அனுபல்லவி
போக தாப்த ஸூலபா – ஸூபுஷ்பகந்த களபா – கஸ்த்
தூரிதிலக மஹிபா – மமகாந்தநந்த கோபகந்த (ஸ்வா)

சரணம்
முஷ்டிகாசூர சாணூர மல்ல மல்ல விசாரத மதுஸூதனா
முஷ்டிகாசூர சாணூர மல்ல மல்ல விசாரத குவலயாபீட
மர்த்தன – காளிங்கநர்த்தன – கோகு*லாக்ஷண – ஸகலஸூலக்ஷண தேவ
சிஷ்ட ஜனபால ஸங்கல்பகல்ப கல்ப சதகோடி அஸமபராபவ
தீரமுனிஜன விஹார மதனஸூகு – மார தைத்ய ஸம்ஹார – தேவ
மதுர மதுர ரதி ஸாஹஸ ஸாஹஸ வ்ரஜயுவதீ ஜனமானஸ பூஜித

*ஸா,த – பா, க ரீ , பகரிஸத ஸா ; தத்தித்தகஜணுதாம் திக்தகஜணதாம்
தக்ஜணுதாம்
தகதரி குருதண கிடதகதீம் – தகதரிகுகுதணகிடதகதீம்
தகதரி குகுதண கிடதக (ஸ்வா)

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே

Back to contents
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)

பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)

குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
(புல்லாங்குழல்)

பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
(புல்லாங்குழல்)
Email Contact...Website maintained by: NARA
Terms and Usage