hinduhome prayhome

Devi Songs

Non commercial web site, available to every one. Use it if you find them useful. Encouraged to copy and distribute if needed.

ஜெய துர்க்கா தேவி

 ஜெய துர்க்கா தேவி ஜெய துர்க்கா தேவி ஸ்ரீஜெய துர்க்கா தேவி

அருளமுதம் பருகிடவே ஜெய துர்க்கா தேவி – உன்
அருள் பதத்தில் சரணடைந்தோம் ஜெய துர்க்கா தேவி (அருளமுதம்)

பைந்தமிழில் பாடுகின்றௌம் ஜெய துர்க்கா தேவி
தேவி தேவி தேவி ஜெய துர்க்கா தேவி
பைந்தமிழில் பாடுகின்றௌம் ஜெய துர்க்கா தேவி - உன்
பால் முகத்தைப் பார்க்க வந்தோம் ஜெய துர்க்கா தேவி (அருளமுதம்)

அற்புதமே கற்பகமே ஜெய துர்க்கா தேவி – உன்
நற்பதமே நற்றுனையே ஜெய துர்க்கா தேவி
எற்றிசையூம் புகழ் மணக்கும் ஜெய துர்க்கா தேவி – எம்
ஏகாந்த நாயகியே ஜெய துர்க்கா தேவி (அருளமுதம்)

தேடிவந்து துயர் துடைப்பாய் ஜெய துர்க்கா தேவி - உன்
தரிசனமே வழிகாட்டும் ஜெய துர்க்கா தேவி
ஆடிவரும் அம்பிகையே ஜெய துர்க்கா தேவி – நல்
ஆனந்தம் தந்திடுவாய் ஜெய துர்க்கா தேவி (அருளமுதம்)

கண்மணியாய் விளங்கிடுவீர் ஜெய துர்க்கா தேவி
தேவி தேவி தேவி ஜெய துர்க்கா தேவி

கண்மணியாய் விளங்கிடுவாய் ஜெய துர்க்கா தேவி
கவிதையிலே சுவைதருவாய் ஜெய துர்க்கா தேவி
மண்வளத்தைக் காத்திடுவாய் ஜெய துர்க்கா தேவி – எம்
மனதினிலே கொலுவிருப்பாய் ஜெய துர்க்கா தேவி (அருளமுதம்)

ஆடினாள் நடனம் ஆடினாள்

ஆடினாள் நடனம் ஆடினாள்
ஆடினாள் நடனம் ஆடினாள்- மிக
அற்புதமாகவே அண்டமெல்லாம் ஆட ஆடினாள்
சூடிய மலராடத் தொடுத்திடும் முடியாடப்
பாடிய வாயாடப் பதம் திருச் ஜதிபோட
நாடிய மனமாட நானிலம் தானாட
கூடிய குழையாடக் கொடியாடி நடமாட
அவரவர் மனமாட அசைவெல்லாம் அசைந்தாட
புவனத்தின் கருவாட பொங்கிடும் முகிலாட
தவமுனிவோராடச் சகலமும் தாமாட
ஐவரளிக் காயாட அதனுளே சிவனாட
தாதைக்கத் தையென்று தத்தோம் தித்தோம் என்று
ஆதிக்கம் செயவந்த அரக்கன் தனைக் கொன்று - ஆடினாள்

ஷ்ரீ சக்ரராஜ ஸிம்ஹாஸநேஷ்வரி

ஷ்ரீ சக்ரராஜ ஸிம்ஹாஸநேஷ்வரி | ஷ்ரீ லலிதாம்பிகையே புவனேஷ்வரி! [2]
ஆகம வேத கலாமய ரூபிணி | அகில சராசர ஜனனி நாராயணி
நாக கந்கண நடராஜ மநோஹரி | ஜ்ஞான வித்யேஷ்வரி ராஜா ராஜேஷ்வரி
ஷ்ரீ சக்ரராஜ ஸிம்ஹாஸநேஷ்வரி | ஷ்ரீ லலிதாம்பிகையே புவனேஷ்வரி!

பலவிதமாய் உணை பாடவும் ஆடவும் | பாடி கொண்டாடும் அன்பர் பதமலர் ஷூடவும்
உலகம் முழுதும் எனதகமுரக் காணவும் | ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஷ்வரி
ஷ்ரீ சக்ரராஜ ஸிம்ஹாஸநேஷ்வரி | ஷ்ரீ லலிதாம்பிகையே புவனேஷ்வரி!

உழன்று திரிந்த என்னை உத்தமநாக்கி வைத்தாய் | உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டி வைத்தாய்
நிழலெனத் தொடர்ந்த முன்னூழ்க் கொடுமையை நீங்கச் செய்தாய் நித்ய கல்யாணி பவாநி பத்மேஷ்வரி
ஷ்ரீ சக்ரராஜ ஸிம்ஹாஸநேஷ்வரி | ஷ்ரீ லலிதாம்பிகையே புவனேஷ்வரி!

துன்பப் புடத்திலிட்டுத் தூயவனாக்கி வைத்தாய் | தொடர்ந்த முன் மாயம் நீக்கி பிற்ந்த பயனைத் தந்தாய்
அன்பை புகட்டி உந்தன் ஆடலைக் காண செய்தாய் | அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஷ்வரி
ஷ்ரீ சக்ரராஜ ஸிம்ஹாஸநேஷ்வரி | ஷ்ரீ லலிதாம்பிகையே புவனேஷ்வரி!

For music: raagam: raagamaalika; taaLam: aadi; Composer: Agastyar
1 raagam: shenjuruTTi
28 harikaambhOji janya
Aa: D2 S R2 G3 M1 P D2 N2
Av: N2 D2 P M1 G3 R2 S N2 D2 P D2 S
shrI cakrarAja simhAsanEshvari shrI lalitAmbikE bhuvanEshvari
ஷ்ரீ சக்ரராஜ ஸிம்ஹாஸநேஷ்வரி | ஷ்ரீ லலிதாம்பிகையே புவனேஷ்வரி! [2]
anupallavi
Agama vEda kalAmaya rUpiNi akhila carAcara janani nArAyaNi
nAga kankaNa naTarAja manOhari jnAna vidyEshvari rAjarAjEshvari
ஆகம வேத கலாமய ரூபிணி | அகில சராசர ஜனனி நாராயணி
நாக கந்கண நடராஜ மநோஹரி | ஜ்ஞான வித்யேஷ்வரி ராஜா ராஜேஷ்வரி
caraNam 1 punnaagavaraaLi
15 maayamaaLava gowLa janya
Aa: S R1 G3 M1 P D1 N3
Av: N3 D1 P M1 G3 R1 S N3
palavidamAi unnai pADavum Adavum pADi koNDADum anbar padamalar shUDavum
ulagam muzhudum enadagamurakkANavum oru nilai taruvAi kanchi kAmEshvari
பலவிதமாய் உணை பாடவும் ஆடவும் | பாடி கொண்டாடும் அன்பர் பதமலர் ஷூடவும்
உலகம் முழுதும் எனதகமுரக் காணவும் | ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஷ்வரி
caraNam 2 naadanaamakriyaa
8 hanumatODi janya
Aa: N2 , S R1 G2 M1 P D1 N2
Av: N2 D1 P M1 G2 R1 S N2 ,
uzhanru tirinda ennai uttamanAkki vaittAi uyariya periyOruDan onriDakkUTTi vaittAi
nizhalenat toDarnda munnUzhk koDumaiyai nInga sheidAi nityakalyANi bhavAni padmEshvari
உழன்று திரிந்த என்னை உத்தமநாக்கி வைத்தாய் | உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டி வைத்தாய்
நிழலெனத் தொடர்ந்த முன்னூழ்க் கொடுமையை நீங்கச் செய்தாய் நித்ய கல்யாணி பவாநி பத்மேஷ்வரி
caraNam 3 sindu bhairavi
10 naaTakapriya janya
Aa: S R2 G2 M1 G2 P D1 N2 S
Av: N2 D1 P M1 G2 R1 S N2 S
tunbappuDatiiliTTut tUyavanAkki vaittAi toDarnda mun mAyam nIkki piranda payanai tandAi
anbai pugaTTi undan ADalaik kANa sheidAi aDaikkalam nIyE amma akhilANDEshvari
துன்பப் புடத்திலிட்டுத் தூயவனாக்கி வைத்தாய் | தொடர்ந்த முன் மாயம் நீக்கி பிற்ந்த பயனைத் தந்தாய் அன்பை புகட்டி உந்தன் ஆடலைக் காண செய்தாய் | அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஷ்வரி

Lalithe

லலிதே மாம்பாலய பரஸிவ வனிதே
செள பாக்ய ஜனனி - அம்பா
லலிதே மாம்பாலய பரஸிவ வனிதே
த்ரைலோக்ய ஜனனி - அம்பா
சீதே பரமானந்த வில சீதே
குரு பக்த ஜனெள/க வ்ராதே
பர தத்வ சுதாரஸ மிலிதே
ஷாசினி துரித விநாஸினி நிகம
நிவாஸினி விஜய விலாசனி பகவதி (லலிதே... )

பாலே குங்கும ரேகாங்கித பாலே
பரி பாலித சுரமுனி ஜாலே
பவபாச விமோசன மூலே
ஹிமகிரி தனயே கமல சுநிலயே
சுமஹித சதயே சுந்தர ஹ்ருதயே (லலிதே...)

ராமே கன சுந்தர மேக ஸ்யாமே
நிலயீக்ருத ஹர தனு வாமே
சகலாகம விதி தோத்தாமே
வாமசாரிணீ காம விஹாரிணி
சாம வினோதினி சோமசேகரீ (லலிதே...)

துங்கே ப்ருந்தாரக பரில சதாங்கே
பரி பூரித கருணா பாங்கே
சுர ஸாஸ்த்ரவ புங்க விபங்கே
சங்க ரஹித முனி புங்கவ நுதபத
மங்கள சுபகே ஸர்வ மங்களே (லலிதே...)

குந்தே பரி வந்தித சனக சனந்தே
வந்தாரு மஹூசுர ப்ருந்தே
ம்ருக ராஜ ஸ்கந்தா ஸ்பந்தே
இந்திரா மந்திர பிந்து ஸமாகுல
சுந்தர சரணே த்ரிபுர (லலிதே)
செள…த்ரைலோக்ய ஜனனி அம்பா பகவதி
பிம்பா…….ஜகதம்பா…மாம் பாஹி

Karpakavalli nin

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா தேவி (கற்பகவல்லி)
பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்
சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட (கற்பகவல்லி)

நீயிந்த வேளைதனில் சேயன் எனை மறந்தால்
நானிந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ?
ஏனிந்த மௌளனம் அம்மா ஏழை எனக்கருள?
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா (கற்பகவல்லி)

எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இறைஞ்சி என்றும்
நல்லாட்சி செய்திடும் நாயகியே நித்ய
கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த
உல்லாசியே உமா உனை நம்பினேனம்மா (கற்பகவல்லி)

நாகே‌‌ஸ்வரி நீயே நம்பிடும் எனைக்காப்பாய்
வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம்
பாகேஸ்ரீ தாயே பார்வதியே இந்த
லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா (கற்பகவல்லி)

அஞ்சன மையிடும் அம்பிகே எம்பிரான்
கொஞ்சிக்குலாவிடும் வஞ்சியே நின்னிடம்
தஞ்சமென அடைந்தேன் தாயே உன் சேய் நான்
ரஞ்சனியே ரக்ஷிப்பாய் கெஞ்சுகிறேனம்மா (கற்பகவல்லி)

உன்னையல்லால் வேறே தெய்வம் இல்லையம்மா

ராகம்: கல்யாணி
தாளம்: ஆதி

உன்னையல்லால் வேறே தெய்வம் இல்லையம்மா
உலகெல்லாம் ஈன்ற அன்னை (உன்னையல்லால்)

என்னையோர் வேடமிட்டுலக நாடக அரங்கில் ஆடவிட்டாயம்மா
இனியாட முடியாது என்னால் திருவுள்ளம் இரங்
கி ஆடினது போதுமென்று ஓய்வளிக்க (உன்னையல்லால்)

நீயே மீனாக்ஷி காமாக்ஷி நீலாயதாக்ஷிஎன பலபெயருடன்
எங்கும் நிறைந்தவள் என் மனக்கோயிலினில்
எழுந்தருளிய தாயே திருமயிலை வளரும் (உன்னையல்லால்)

நானொரு விளையாட்டு பொம்மையா

ராகம்: நவரச கானடா
தாளம்: ஆதி

நானொரு விளையாட்டு பொம்மையா
ஜகன் நாயகியே உமையே உந்தனுக்கு
நானிலத்தில் பல பிறவியெடுத்து
திண்டாடியது போதாதா (தேவி) - உந்தனுக்கு (நானொரு)

அருளமுதைப் பருக அம்மா அம்மா என்று
அலறுவதைக் கேட்பதானந்தமா
ஒரு புகலின்றி உன் திருவடி அடைந்தேனே
திருவுளம் இரங்காதா (தேவி) - உந்தனுக்கு (நானொரு)

நீ இரங்காயெனில் புகலேது அம்பா

வரிகள்: பாபனாசம் சிவன்
ராகம்: அடானா
தாளம்: ஆதி

நீ இரங்காயெனில் புகலேது அம்பா
நிகில ஜகன்னாதன் மார்பில் உறைதிரு (நீ இரங்காயெனில்)

தாயிரங்காவிடில் சேயுயிர் வாழுமோ
சகல உலகிற்கும் நீ தாயல்லவோ அம்பா (நீ இரங்காயெனில்)

பாற்கடலில் உதித்த திருமகளே
பாக்யலக்ஷ்மி என்னை கடைக்கணியே
நாற்கவியும் பொழியும் புலவோர்க்கும் - மெய்
ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும் அம்பா (நீ இரங்காயெனில்)

கருணை தெய்வமே கற்பகமே

வரிகள்: மதுரை ஸ்ரீநிவாசன்
ராகம்: சிந்து பைரவி
தாளம்: ஆதி

கருணை தெய்வமே கற்பகமே
காணவேண்டும் உந்தன் பொற்பதமே என் (கருணை)

உறுதுணையாக என் உள்ளத்தில் அமர்ந்தாய்
உன்னையன்றி வேறு யாரோ எம் தாய் (கருணை)

ஆனந்த வாழ்வு அளித்திட வேண்டும்
அன்னையே எம்மேல் இரங்கிட வேண்டும்
நாளும் உன்னைத் தொழுதிடல் வேண்டும்
நலமுடன் வாழ அருளல் வேண்டும் (கருணை)

ஸ்ரீ கமலாம்பிகே

ராகம்: கண்டா தாளம்: ஆதி
பல்லவி
ஸ்ரீ கமலாம்பிகே அவாவ
சிவே கர த்ருத ஸுகஸாரிகே.......( ஸ்ரீ கமலாம்பிகே)
அநுபல்லவி
லோகபாலிநி கபாலிநி ஸூலிநி
லோகஜனநீ பகமாலிநி ஸக்ருதா
லோகயமாம் ஸர்வஸித்திப்ரதாயிகே
த்ரிபுராம்பிகே பாலாம்பிகே.....(ஸ்ரீ கமலாம்பிகே)
சரணம்
ஸந்தப்த ஹேம ஸந்நிப தேஹே
ஸதாக்கண்டைக ரஸ ப்ராவாஹே
ஸந்தாப- ஹர த்ரிகோண -கேஹ
ஸ-காமேஸ்வரி ஸக்தி ஸமூஹே
ஸந்ததம் முக்டி கண்டாமணி
கோஷயமான கவாட்த்வாரே
அநந்த குருகுஹ விதிதே கராங்குலி
நகோதய விஷ்ணு தஸாவதாரே
அந்த:கரேணக்ஷு கார்முக ஸப்தாதி
பஞ்ச தந்மாத்ர விஸிகா
அத்யந்தராக பாஸ த்வேஷாங்குஸதரகரே
அதிரஹஸ்ய யோகிநீபரே...ஸ்ரீ கமலாம்பிகே)

Om sakthi

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம்-பரா சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி -ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
கணபதி ராயன்-அவனிரு
காலைப் பிடித் திடுவோம்;
குண முயர்ந் திடவே-விடுதலை
கூடி மகிழ்ந்திடவே (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
சொல்லுக் கடங்காவே-பரா சக்தி
சூரத் தனங்க ளெல்லாம்;
வல்லமை தந்திடுவாள்-பரா சக்தி
வாழியென்றேதுதிப்போம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
வெற்றி வடிவேலன்-அவனுடை
வீரத்தினைப் புகழ்வோம்
சுற்றி நில்லாதே போ!-பகையே!
துள்ளி வருகுது வேல். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
தாமரைப் பூவினிலே-சுருதியைத்
தனியிருந் துரைப்பாள்
பூமணித் தாளினையே-கண்ணி லொற்றிப்
புண்ணிய மெய்திடுவோம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
பாம்புத் தலைமேலே-நடஞ் செயும்
பாதத்தினைப் புகழ்வோம்;
மாம்பழ வாயினிலே-குழலிசை
வண்மை புகழ்ந்திடுவோம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
செல்வத் திருமகளைத்-திடங்கொண்டு
சிந்தனை செய்திடுவோம்;
செல்வமெல்லாம் தருவாள்-நமதொளி
திக்க னைத்தும் பரவும். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

பஜணை - bajann

ஓம் சக்தி ... ஓம் சக்தி ... ஓம் சக்தி ...ஓம் ...
ஓம் சக்தி ... பராசக்தி ... ஓம் சக்தி ... ஓம் ...
ஓம் சக்தி ... பத்ரகாளி... ஓம் சக்தி ... ஓம் .

Email Contact...Website maintained by: NARA
Terms and Usage