hinduhome prayhome

Simple Pooja for Pithru or Departed Ones

Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.
hinduhome
Pithru Pooja or atma santhi Pooja if for remembering and paying respects to our departed near and dear ones. Done on Ammavasai (new moon day), eclipse, mahalaya, death anniversary and so on. Also any time on holy places like Gaya, kasi etc.

The following is suggestion or for guidance only. It is better to make compromises and use whatever available, rather than skipping the ritual altogether:
1 You can face the sun and do tarpana. Alternatively, You can Light oil or ghee lamps if doing inside. தீபம் மேல் நோக்கி எரிவது, பார்ப்பதற்கு லிங்கம் போல் காட்சி கிடைக்கும். Some use Ganesha idol, Rudraksha, Vishnupada for pithru poojas.
2 Can sit on a mat, made of sacred Darbha grass (also known as Kusa grass) / wooden plank or clean cloth made of natural fibers such as cotton or wool, to sit on. Some face east/north or Gaya.
3 Water pot or cup that is convenient to hold in your left hand, and offer water (along with grains if you want). Black sesame seeds (ellu in Tamil, til in Hindi). In some traditions, male use black sesame seeds and females use white sesame seeds. Sesame seeds are the favorites of deceased ancestors' souls. People take Sesame seed based food for quick energy and so may be considered as good for souls who eat once a year.
4 Darbhas or kushas, a sacred grass. If you do not have darbha, use a locally available grass. If that cannot be done, just ignore darbhas and proceed without them.
5 If possible or prefer, wear a ring made of darbha, known as pavitram. Some use pavithram ring made of copper, silver or gold.
6 Some place their offerings like Rice balls etc on Vishnupada (gaya tradition). The offerings can be given to birds, fish, cow etc

The belief that the divine exists in all living beings, leads to compassion, coexistence and peace. Even if we pray for our departed ones, just by offering some food to people, animals or fish or bird (can be straw/rice/seeds/), it will be good.

Click for Traditional one: Tharpanam Brahmayagnam Hiranya-Srardham


Preliminaries பூஜாரம்பம்

Oom............
{ஆசமனம் - optional} ஷுக்லாம் பரதரம் தேவம் ஷஷிவர்ணம் சதுர்புஜம் | ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்னொப ஷாந்தயே ||
ஓம் மஹாகணபதயெ நம:
ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம:
ஓம் உமாமஹெஷ்வராப்யா நம:
ஓம் துர்காயை நம:
ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம:
ஓம் மஹா லக்ஷ்மையை நம:
ஓம் குருப்யொ நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் வேதாய நம:
ஓம் வேதபுருஷாய நம:
ஓம் ஸர்வெப்யொ ப்ராஹ்மணெப்யோ நமோ நம:
ஓம் இஷ்டதேவதாப்யோ நம:
ஓம் குலதேவதாப்யொ நம:
ஓம் ஸ்தாநதேவதாப்யொ நம:
ஓம் க்ராமதேவதாப்யொ நம:
ஓம் வாஸ்துதேவதாப்யொ நம:
ஓம் ஷசீபுரத்தராப்யா நம:
ஓம் க்ஷெத்ரபாலாய நம:
ஓம் வஸொஷ்பதயெ நம:
ஓம் மாதாபிதரப்யா நம:
ஓம் ஸர்வெப்யொ தேவேப்யொ நமோ நம:
ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யொ நம:
ॐ महागणपतये नमः ।
ॐ सुप्रह्मण्याय नम: ।
ॐ उमामहेश्वराभ्यां नमः ।
ॐ तुर्कायै नम: ।
ॐ लक्ष्मीनारायणाभ्यां नमः ।
ॐ महा लक्श्मैयै नम: |
ॐ गुरुभ्यो नमः ।
ॐ सरस्वत्यै नमः ।
ॐ वेदाय नमः ।
ॐ वेदपुरुषाय नमः ।
ॐ सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः ।
ॐ इष्टदेवताभ्यो नमः ।
ॐ कुलदेवताभ्यो नमः ।
ॐ स्थानदेवताभ्यो नमः ।
ॐ ग्रामदेवताभ्यो नमः ।
ॐ वास्तुदेवताभ्यो नमः ।
ॐ शचीपुरंदराभ्यां नमः ।
ॐ क्शॆत्रपाला|य नम:
ॐ वसॉश्पतयॆ नम: |
ॐ मातापितृभ्यां नमः ।
ॐ सर्वेभ्यो देवेभ्यो नमो नमः ।
ॐ रव्याति नवक्रह ऄश्टतल चतुर्तलॆशु स्तित सर्वतॆवताप्यॉ नम:

Sankalpam - place and time (optional)

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா (ஸ்ரீபரமேஸ்வர/ஸ்ரீ மஹாவிஷ்ணு) ப்ரீத்யர்த்தம் அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோபி வா | ய: ஸ்மரேத் புண்டரிகாக்ஷம் ஸ பாஹ்யாந்தர: ஸுசி: மானஸம் வாசிகம் பாபம் கர்மணா ஸமுபார்ஜிதம் | ஸ்ரி ராம ஸ்மரணே நைவ வ்யபோஹதி ந ஸம்சய: ஸ்ரி ராம-ராம-ராம|| திதிர் விஷ்ணு தத வார நக்ஷத்ரம் விஷ்ணுரேவ ச | யோகச்ச கரணஞ்சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத் || ஸ்ரி கோவிந்த கோவிந்த கோவிந்த || ஆத்ய ஸ்ரி பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோ ராஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய
{ஆத்மசாந்தி or பித்ரு பூஜாம் or தர்ப்பணம்} கரிஷ்யே

kalasa (water pot) பூஜை

கங்கேச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி |
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு |
எவம் கலஸ பூஜாம் க்ருத்வா மயா கரிஷ்யமாண {பித்ரு} பூஜாம் கரிஷ்யே.

Ganapathi நாம பூஜா

ஓம் கணபதியே ஓம் கம் கணபதியே நம: |:
ஓம் ஏகதந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹீ தன்னோ தந்தி ப்ரசோதயாத்
ॐ सुमुखाय नमः।
ॐ एकदन्ताय नमः।
ॐ कपिलाय नमः।
ॐ गजकर्णकाय नमः।
ॐ लम्बोदराय नमः।
ॐ विकटाय नमः।
ॐ विघ्ननाशाय नमः।
ॐ विनायकाय नमः।
ॐ कणातिपाय नम:
ॐ धूम्रकेतवे नमः।
ॐ गणाध्यक्षाय नमः।
ॐ भाल चन्द्राय नमः।
ॐ गजाननाय नमः।
ॐ वक्रतुण्डाय नमः।
ॐ शूर्पकर्णाय नमः।
ॐ हेरम्बराय नमः।
ॐ स्कन्त पूर्वजाय नम:
ॐ स्री महा कणपतयॅ नम:.
1 ) ஓம் ஸுமுகாய நம:
2 ) ஓம் ஏக தந்தாய நம:
3 ) ஓம் கபிலாய நம:
4 ) ஓம் கஜகர்ணகாய நம:
5 ) ஓம் லம்போதாரய நம:
6 ) ஓம் விகடாய நம:
7 ) ஓம் விக்நராஜாய நம:
8 ) ஓம் விநாயகாய நம:
9 ) ஓம் கணாதிபாய நம:
10) ஓம் தூமகேதவே நம:
11) ஓம் கணாதியக்ஷாய நம:
12) ஓம் பாலசந்த்ராய நம:
13) ஓம் கஜானநாய நம:
14) ஓம் வக்ரதுண்டாய நம:
15) ஓம் ஸுர்ப்பகர்ணாய நம:
16) ஓம் ஹேரம்பாய நம:
17) ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
18) ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம:

Surya nama pooja சூர்ய நாம பூஜா

ॐ मित्राय नमः
ॐ रवये नमः
ॐ सूर्याय नमः
ॐ भानवे नमः
ॐ खगय नमः
ॐ पुष्णे नमः
ॐ हिरण्यगर्भाय नमः
ॐ मारिचाये नमः
ॐ आदित्याय नमः
ॐ सावित्रे नमः
ॐ अर्काय नमः
ॐ भास्कराय नमः
1 )ஓம் மித்ராய நம:
2 )ஓம் ரவயெ நம:
3 )ஓம் ஸூர்யாய நம:
4 )ஓம் பாநவெ நம:
5 )ஓம் ககய நம:
6 )ஓம் புஷ்ணெ நம:
7 )ஓம் ஹிரண்யகர்பாய நம:
8 )ஓம் மாரிசாயெ நம:
9 )ஓம் ஆதித்யாய நம:
10)ஓம் ஸவித்ரெ (சாவித்ரே) நம:
11)ஓம் அர்காய நம:
12)ஓம் பாஸ்கராய நம:
ஓம் ஸ்ரீ சாயா சம்ஞாயா ஸமேத சூரிய நாராயண ஸ்வாமிநே நம:

ஓம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம: ஓம் நக்ஷத்ராதி தேவதாப்யோ நம:
ஸௌர மண்டல மத்யஸ்த்தம் ஸாம்பம் ஸம்ஸார பேஷஜம் |
நீலக்ரீவம் விரூபாக்ஷம் நமாமி சிவமவ்யயம்

18 Pithru devatas (short)

*Can say தேவதைகள் போற்றி instead of தேவதாப்யோ நம:
ஓம் பித்ரு கனாய வித்மஹே வசுருத்ர ஆதித்ய தேவாய தீமஹி தன்னோ பித்ரோ ப்ரசோதயாத்
ஓம் பித்ரு கனாய வித்மஹே ஜீவநாராயண தீமஹி தன்னோ பித்ரோ ப்ரசோதயாத்
ஓம் பித்ரு கனாய வித்மஹே ஜகத் தாரினி தீமஹி தன்னோ பித்ரோ ப்ரசோதயாத் (ஜகத் தாரினி Jagat Tarini is one who liberate the people of the whole world)
1) ஓம் ஸ்ரீ சூரிய நாராயண தேவதாப்யோ நம:
2) ஓம் ஸ்ரீ வசுபித்ரு தேவதாப்யோ நம:
3) ஓம் ஸ்ரீ ருத்ரப் பித்ரு தேவதாப்யோ நம:
4) ஓம் ஸ்ரீ ஆதித்யப் பித்ரு தேவதாப்யோ நம:
5) ஓம் ஸ்ரீதரணி பந்து பித்ரு தேவதாப்யோ நம:
6). ஓம் ஸ்ரீவாயு பித்ரு தேவதாப்யோ நம:
7) ஓம் ஸ்ரீஜல த்வீப பித்ரு தேவதாப்யோ நம:
8) ஓம் ஸ்ரீபித்ரு க்ரஹ தேவதாப்யோ நம:
9) ஓம் ஸ்ரீபித்ரு நட்சத்திர தேவதாப்யோ நம:
10) ஓம் ஸ்ரீருத்ர குண பித்ரு தேவதாப்யோ நம:
11) ஓம் ஸ்ரீசாந்த குண பித்ரு தேவதாப்யோ நம:
12) ஓம் ஸ்ரீகாருண்ய பித்ரு தேவதாப்யோ நம:
13) ஓம் ஸ்ரீபித்ரு மஹா தேவதாப்யோ நம:
14) ஓம் ஸ்ரீபித்ருகண தேவதாப்யோ நம:
15) ஓம் ஸ்ரீபித்ருபத்னி தேவதாப்யோ நம:
16) ஓம் ஸ்ரீபித்ருஹோம தேவதாப்யோ நம:
17) ஓம் ஸ்ரீபித்ருயக்ஞ தேவதாப்யோ நம:
18) ஓம் ஸ்ரீபித்ருதர்ப்பண தேவதாப்யோ நம:
சர்வம் சிவார்ப்பணம். சர்வம் விஷ்ணு மயம்

Extracts from Sukta and other sthotras for Pitrus (optional)

*Tamil meaning in notes section
Recitation or hearing them is one of the ways to honor and connect with departed ancestors, seeking their guidance and blessings. It is also believed to bring blessings, harmony, and positive energy to one's life.
ஆயாத பிதர: ஸோம்யா கம்பீரை: பதிபி: பூர்வை: ப்ரஜா மஸ்மப்யம் ததோ ரயீஞ்ச தீர்காயுத்வஞ்ச ஶதஶாரதஞ்ச
1 உதீரதாமவர உத்பராஸ உன்மத்யமா: பிதரஸ் ஸோம்யாஸ:| அஸும் ய ஈயுரவ்ருகா ருதஜ்ஞாஸ்தே நோவந்து பிதரோஹர்வேஷு|| அங்கீரஸோ ந: பிதரோ ந வக்வா அதர்வாணோ ப்ருகவ: ஸோம்யாஸ: | தேஷாம் வயம் ஸுமதௌ யஜ்ஞியானாமபி பத்ரே ஸௌமனஸே ஸ்யாம || ஆயந்து ந: பிதரஸ் ஸோம்யாஸ:| அக்னிஷ்வாத்தா: பதிபிர் தேவயானை: | அஸ்மின் யஜ்ஞே ஸ்வதயா மதந்து அதிப்ருவந்து தே அவந்த்-வஸ்மான் ||
2 ஊர்ஜம் வஹந்தி-ரம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயத மே பித்ரூன் || பித்ருப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: | பிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: | ப்ரபிதாமஹேப்ஹ்ய ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: || யே சேஹ பிதரோ யே ச நேஹ, யாக்ச்ச வித்மயான் உச ந ப்ரவித்ம | அக்னே தான் வேத்த யதி தே ஜாதவேதஸ் தயா ப்ரத்தக்ம் ஸ்வதயா மதந்தி ||
3 மது வாதா ருதாயதெ | மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் நஸ் ஸந்த்வோஷதீ: || மது நக்த முதோஷஸி மதுமத் பார்திவ ரஜு: மது த்யௌரஸ்து ந: பித || மதுமாந் நொ வனஸ்பதி: | மதுமாந் அஸ்துஸூர்ய: மாத்வீர் காவோ பவந்து ந: ||

பித்ரு ஸ்தோத்ரம் pithru sthuthi (optional)

*Tamil meaning in notes section
ஸ்ரீ பிரம்மா உவாச
ஓம் நம : பித்ரே ஜன்ம தாத்ரே ஸர்வ தேவ மயாய ச
ஸுகதாய பிரஸன்னாய ஸுப்ரீதாய மஹாத்மனே
ஸர்வ யக்ஞ ஸ்வரூபாய ஸ்வர்காய பரமேஷ்டினே
ஸர்வ தீர்த்தாவலோகாய கருணா ஸாகராய ச
நம: ஸதா ஆஸு தோஷாய சிவ ரூபாய தே நம:
ஸதா அபராத க்ஷமினே ஸுகாய ஸுகதாய ச
துர்லபம் மானுஷமிதம் யேன லப்தம் மயா வபு:
ஸம்பாவனீயம் தர்மார்த்தே தஸ்மை பித்ரே நமோ நம:
தீர்த்த ஸ்நான தபோ ஹோம ஜபாதி யஸ்ய தர்சனம்
மஹா குரோஸ்ச குரவே தஸ்மை பித்ரே நமோ நம:
யஸ்ய ப்ரணாம ஸ்தவனாத் கோடிஸ: பித்ரு தர்ப்பணம்
அஸ்வ மேத சதை ஸ்துல்யம் தஸ்மை பித்ரே நமோ நம:
ஶுபம்

Invoking pithrus in Lamp Tamil version (can be added to traditional one done before)

மெய்யில் விளங்கும் ஜோதி மெய்யுணர்ந்த மேல் நீத்தார்
மனங்குளிர வார்த்த (எள்*) நீர் ஏற்று, மனங்குளிர்வீர் மனங்குளிர்வீர் மனங்குளிர்வீரே
நீத்தார் நினைவோடு யாமளிக்கும் நீர்த்தாரை
(*எள்ளோடு நுணல் தருப்பை யாவுமாய் - *Add தருப்பை for tarpa and எள் for sesame, if used)
துதிபாடி மூத்தாரை யாம் பணிவோம்

Tharpanam (can use tamil words also)


Tarppayami means I satisfy. Offering water, Sesame and Akshada (as a symbolic gesture). Similarly, the literal translation of namaha is "not mine," which is affixed to mantras as a means of expressing total dedication of oneself towards the Divine or to whomever the salutation is offered.
Can leave Gotra Name and name if not known)

{Gothra name} gothran {person's name} {sharmana/namnee} : {Relationship} Svata namas-tarppayami[*3]

{Gothra name} கோத்ரான் {person's name} {சர்மண:/நாம்ணீ} மம {Relationship} ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
தமிழில்: மறைந்த {உறவுமுறை} {பெயர்} {ஐ} {திருப்திப் படுத்துகிறேன்}

Relatives Names in Sanskirit

மம means mine
sharmana சர்மண: for males
namnee நாம்ணீ for females

Parents Grand Parents etc
பித்ருன் Father
மாத்ரூ Mother
பிதாமஹான் Paternal Grand Father
பிதாமஹீ Paternal Grand Mother
ப்ரபிதாமஹான் Paternal Great Grand Father
ப்ரபிதாமஹீ Paternal Great Grand Mother
மாதாமஹான் Maternal Grand Father
மாதாமஹீ Maternal Grand Mother
மாது: பிதாமஹான் Maternal Great Grand Father
மாது: பிதாமஹீ Maternal Great Grand Mother
மாது: ப்ரபிதாமஹான் Maternal Great Great Grand Father
மாது: ப்ரபிதாமஹீ Maternal Great Great Grand Mother

Other relations like siblings
भगिनी bhaginI sister
सोदर्या sodaryA sister
अग्रजा भगिनी agrajA bhaginI eldersister
ज्येष्ठा भगिनी jyeSThA bhaginI eldersister
अनुजा भगिनी anujA bhaginI younger sister
अत्तिका attikA eldersister
Brother-in-law is called श्र्वशुर्य (śrvaśurya) देवरः (devaraḥ) and आवुत्त (āvutta)
भागिनेय bhAgineya sister's son
भ्रातृजाया bhrAtRjAyA sister-in-law
याता yAtA sisterinlaw
ननान्दा nanAndA sister-in-law [husband's sister]
पितृभगिनी pitRbhaginI father's sister
मातृभगिनी mAtRbhaginI mother's sister
पितृष्वेसा pitRSvesA father's sister
मातृष्वेसा mAtRSvesA mother's sister
ननान्दा nanAndA husband's sister
आवुत्त Avutta sister's husband
भ्रातरौ bhrAtarau brother and sister
ननान्दूपति nanAndUpati sister-in-law's husband
भागिनेयी bhAgineyI niece [sister's daughter]

For all ancestors (general statement)
ஜ்நாத ஜ்நாத மது பித்ருன் ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
மம வர்கத் பித்ருபியோ நமஹ [*3]
யேஷாம் ந மாதா ந பிதா ந மித்ர ஜ்ஞாதி பாந்தவ: | தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மாயோத் ஸ்ருஷ்டை: குசோதகை:||

Karunya Tharpanam

You can do (karunya) tharpanam for any soul (relatives, friends, people you respect, strangers, pets, plants, trees, animals, birds, creatures and insects). Some pray to Lord Varadaraja and request His blessings for the beings you are doing karunya tarpanam for.

நீத்தார் நெடுங்கோளம் நின்ற வளி நீள்தாயம்
ஏத்தார் எங்கோளம் எங்குலத்தார் எம்பூரம்
காத்தார் காரணத்தார் கரமேவி எள் புலமே
கூத்தார் குடப்பெருமாள் கொண்டாங்கே ஏகிடவே
மூத்தார் முதம் வேதம் முற்றாய் மலர்ந்திடவே
பூத்தார் புனல் எம்பும் பூமறையாய் பூணட்டும்

{Gotra Name} {Name} {Relationship} தர்ப்பயாமி |

Offerings (Optional)

Some place their offerings like Rice balls etc, on Vishnupada (gaya tradition). The offerings can be given to birds, fish, cow etc
மம வர்கத் பித்ருபியோ நமஹ! மஹாநைவெத்யம் நிவேதயாமி.

Final Prayer: எல்லாம் வல்ல தெய்வமே, இப்பூவுலகில் பிறந்து, இறந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இந்த பூசை பலனை சமர்ப்பிக்கிறோம். இந்த பலனால் அந்த ஆன்மாக்கள் நற்கதி, சற்கதி அடைய பிரார்த்தனை செய்கிறோம்.


Prayer to Lord Narayana

1) ஓம் நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹீ | தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்
2) ஓம் நாராயணாய வித்மஹே கோவிந்தாய தீமஹி| தன்னோ ராம ப்ரசோதயாத்
3) ஓம் நாராயணாய வித்மஹே தாமோதராய தீமஹி| தன்னோ கிருஷ்ண ப்ரசோதயாத்
4) ஓம் அச்சுதாநந்த கோவிந்த விஷ்ணோ நாராயண| அம்ருத ரோகான் மேநாசய அஷோன் ஆசு தந்வந்தரே ஹரே!
5) த்வம் குமரஸ்தவம் | ஷக்திஸ்தவம் | விஷ்ணுஸ்தவம் | ருத்ரஸ்தவம் | ப்ரஹ்மாஸி
You are kumara, shakthi, Vishnu, Rudra and Para Brahmam (ultimate reality) itself.

Optional: Narayana/vishnu ashtothram

Sivapuranam - சிவ புராணம்

Shivapuranam is also recited for departed souls to rest in peace. Namachivaya and Shivapuranam are chanted for a peaceful mind and life.
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35
வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55
விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65
பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95
திருச்சிற்றம்பலம்

Shanthi – மங்களம் Wishes வாழ்த்துகள்

ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात्पुर्णमुदच्यते पूर्णश्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॥
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
ஓம்பூர்ணமத: பூர்ணமிதம்பூர்ணாத் பூர்ண முதச்யதே
பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ணமேவா வஸிஷ்யதே
ஓம்ஸாந்தி : ஸாந்தி : ஸாந்தி :
This is Full and that is also is Full. From Fullness comes that Fullness. Taking Fullness from Fullness, Fullness Indeed Remains.

ॐ सर्वेशां स्वस्तिर्भवतु । सर्वेशां शान्तिर्भवतु ।
ॐ सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः ।
सर्वे भद्राणि पश्यन्तु | मा कश्चिद्दुःखभाग्भवेत् ।
सर्वेशां पुर्णंभवतु । सर्वेशां मङ्गलंभवतु ।
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
ஸர்வேசம் ஸ்வஸ்தீர் பவது! ஸர்வேசம் ஷாந்திர் பவது
ஸர்வேசம் பூர்ணம் பவது! ஸர்வேசம் மங்களம் பவது
ஸர்வே பவந்து ஸுகின ஸர்வே சந்து நீராமயா
ஸர்வே பத்ரானி பச்யந்து மா கஸ்ஷித் துக்ஹபாக்பவேத்
May there be Well-Being in All. May there be Peace in All. May there be Fulfilment in All. May there be Auspiciousness in All. May All become Happy. May All be Free from Illness. May All See what is Auspicious. May no one Suffer.

மது வாதா ருதாயதெ | மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் நஸ் ஸந்த்வோஷதீ: ||
மது நக்த முதோஷஸி மதுமத் பார்திவ ரஜு: மது த்யௌரஸ்து ந: பித ||
மதுமாந் நொ வனஸ்பதி: | மதுமாந் அஸ்துஸூர்ய: மாத்வீர் காவோ பவந்து ந: மது மது மது
Let air do me good and rivers and medicinal plants give me sweetness. Let night and day do me good. Let earth give me sweetness and very good quality food. Let the sky , which is like my father not trouble me with no rain or excess rain and grant me pure pleasure. Let trees bless me by giving fruits. Let Sun god give me energy without much hot weather. Let cows give me sweet milk.

காயேந வாசா மநஸேந்த்ரியைர் வா புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் ப்ரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||
ஓம்ஸாந்தி : ஸாந்தி : ஸாந்தி :


*Optional to add :Brahmayagnam for devas, Rishis and ancestors


Additional Notes [To TOP]

Tamil meaning for Extracts from Suktham

ஆயாத பிதர: ஸோம்யா கம்பீரை: பதிபி: பூர்வை: ப்ரஜா மஸ்மப்யம் ததோ ரயீஞ்ச தீர்காயுத்வஞ்ச ஶதஶாரதஞ்ச
ஓ பித்ருக்களே மிக நல்லவர்களான நீங்கள் எங்களுக்கு ஸந்ததி, செல்வம், நீண்ட ஆயுள் இவைகளை கொடுத்துக்கொண்டு சிறந்த ஆகாச மார்க்கமாக இங்கு வாருங்கள்.

1 உதீரதாமவர உத்பராஸ உன்மத்யமா: பிதரஸ் ஸோம்யாஸ:| அஸும் ய ஈயுரவ்ருகா ருதஜ்ஞாஸ்தே நோவந்து பிதரோஹர்வேஷு|| அங்கீரஸோ ந: பிதரோ ந வக்வா அதர்வாணோ ப்ருகவ: ஸோம்யாஸ: | தேஷாம் வயம் ஸுமதௌ யஜ்ஞியானாமபி பத்ரே ஸௌமனஸே ஸ்யாம || ஆயந்து ந: பிதரஸ் ஸோம்யாஸ:| அக்னிஷ்வாத்தா: பதிபிர் தேவயானை: | அஸ்மின் யஜ்ஞே ஸ்வதயா மதந்து அதிப்ருவந்து தே அவந்த்-வஸ்மான் ||
meaning: ஸோமயாகம் செய்த சிறந்த பித்துக்களை போலவே, நடுத்தரத்தினரும் கடைப்பட்டவரும் கூட உயர்ந்த கதியை அடையட்டும் நம்மிடம் கோபமற்றவர்களாய், அவர்கள் நாம் செய்யும் கர்மாவை உணர்ந்து, நமது பிராணனை இரட்சித்து, நாம் அழைக்கும் போது வந்து நம்மை காத்தருள வேண்டும். அங்கீகரஸர் அதர்வனர் பிருகுக்கள் என்று பெயருள்ள நமது பித்ருக்கள் புதிது புதிதான வகையில் அருள் புரிபவர்கள். சோமயாகம் செய்தவர்கள். பூஜித்தற்குரிய அவர்களுடைய புத்தி எந்த சிறந்த வழியில் சென்றதோ அதையே நாமும் பின்பற்றி மங்களகரமான நல்ல மனது படைத்தவர்களாவோம். அக்னிஷ்வாத்தர்கள் என்பவர்களும் சோமயாகம் செய்தவர்களுமான நமது பித்துருக்கள் தேவயான மார்க்கமாக இங்கு எழுந்தருளட்டும். இங்கு நாம் செய்யும் ஆராதனையில் சந்தோசம் அடையட்டும் நம்மை காப்பாற்றட்டும்

2 ஊர்ஜம் வஹந்தி-ரம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயத மே பித்ரூன் || பித்ருப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: | பிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: | ப்ரபிதாமஹேப்ஹ்ய ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: || யே சேஹ பிதரோ யே ச நேஹ, யாக்ச்ச வித்மயான் உச ந ப்ரவித்ம | அக்னே தான் வேத்த யதி தே ஜாதவேதஸ் தயா ப்ரத்தக்ம் ஸ்வதயா மதந்தி ||
meaning: நீர்களே எல்லாவற்றிலும் உள்ள ஸாரத்தை நீங்கள் உங்களிடம் கொண்டிருக்கிறீர்கள். ஆகையால் அமிர்தமாகவும் நெய்யாகவும் பாலாகவும் மதுவாகவும் பானகமாகவும் பரிணமித்து எங்கள் பித்ருக்களை திருப்தி செய்வீர்களாக. ஸ்வாதா என்றும் என்னும் சொல்லால் திருப்தி அடையும் பித்ருக்களுக்கு ஸ்வாதா எனக் கூறி நமஸ்கரிக்கின்றேன். இவ்வுலகில் எவர்கள் இருக்கின்றாரோ, எவர்கள் இங்கு இல்லையோ, அவர்களை நாங்கள் அறிவோமா எவர்களை அறிய மாட்டோமா, அவர்களையெல்லாம் அக்னி பகவானே நீர் அனைத்தையும் அறியும் ஜாதவேத ஆதலால் அறிவீர். அவர்களுக்குரிய இதை அவர்களிடம் சேர்த்தருள வேண்டும் அவர்கள் சந்தோஷமடையட்டும்.

3 மது வாதா ருதாயதெ | மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் நஸ் ஸந்த்வோஷதீ: || மது நக்த முதோஷஸி மதுமத் பார்திவ ரஜு: மது த்யௌரஸ்து ந: பித || மதுமாந் நொ வனஸ்பதி: | மதுமாந் அஸ்துஸூர்ய: மாத்வீர் காவோ பவந்து ந: ||
meaning: காற்று இனிமையாக வீசட்டும் நதிகள் இனிமையை பெருக்கிக் கொண்டு ஓடட்டும் செடி கொடிகள் இனிமையை அளிப்பவையாக இருக்கட்டும். இரவும் காலையும் இனிமையாய் இருக்கட்டும். பூமியும் புழுதியும் இன்பம் தருவதாய் இருக்கட்டும். வணவிருக்ஷங்கள் இனிமையாய் இருக்கட்டும். சூரியன் இன்பம் தரட்டும். பசுக்கள் மதுரமான பாலை அளிக்கட்டும்.

Tamil meaning for pithru sthuthi

ஸ்ரீ பிரம்மா உவாச (பிரம்ம தேவர் கூறினார்):

ஓம் நம : பித்ரே ஜன்ம தாத்ரே ஸர்வ தேவ மயாய ச
ஸுகதாய பிரஸன்னாய ஸுப்ரீதாய மஹாத்மனே
meaning: ஜன்மத்தை அளிப்பவரும் எல்லா தேவர்களின் வடிவானவரும் ஸுகத்தைக் கொடுப்பவரும் மகிழ்ந்தவரும் நல்ல விருப்புடையவரும் பெரியவருமான பித்ரு தேவருக்கு நமஸ்காரம்.

ஸர்வ யக்ஞ ஸ்வரூபாய ஸ்வர்காய பரமேஷ்டினே
ஸர்வ தீர்த்தாவலோகாய கருணா ஸாகராய ச
meaning: எல்லா யக்ஞங்களின் வடிவானவருக்கும் ஸ்வர்கமானவருக்கும் ப்ரம்ஹாவானவருக்கும் எல்லா தீர்த்தங்களையும் கண்டவருக்கும் கருணைக் கடலானவருக்கும் நமஸ்காரம்.

நம: ஸதா ஆஸு தோஷாய சிவ ரூபாய தே நம:
ஸதா அபராத க்ஷமினே ஸுகாய ஸுகதாய ச
meaning: எப்போதும் விரைவில் மகிழ்பவரும் சிவ வடிவானவருமான உமக்கு நமஸ்காரம். எப்போதும் பிழைகளைப் பொறுப்பவரும் ஸுக வடிவானவரும் ஸுகத்தை அளிப்பவருமான உமக்கு நமஸ்காரம்.

துர்லபம் மானுஷமிதம் யேன லப்தம் மயா வபு:
ஸம்பாவனீயம் தர்மார்த்தே தஸ்மை பித்ரே நமோ நம:
meaning: கிடைத்தற்கரியதும் அறத்தையும் பொருளையும் பெறுதற் பொருட்டமைந்ததுமான இந்த மனித உடலை எவர் மூலமாக அடைந்தேனோ அத்தகைய பித்ரு தேவருக்கு நமஸ்காரம்.

தீர்த்த ஸ்நான தபோ ஹோம ஜபாதி யஸ்ய தர்சனம்
மஹா குரோஸ்ச குரவே தஸ்மை பித்ரே நமோ நம:
meaning: எவருடைய தர்சனம் தீர்த்தம்,ஸ்நானம், தவம், ஹோமம், ஜபம் முதலியவற்றின் புண்ணிய பலனாக அமையுமோ அத்தகைய மஹாகுருவுக்கும் குருவான பித்ரு தேவருக்கு நமஸ்காரம்.

யஸ்ய ப்ரணாம ஸ்தவனாத் கோடிஸ: பித்ரு தர்ப்பணம்
அஸ்வ மேத சதை ஸ்துல்யம் தஸ்மை பித்ரே நமோ நம:
meaning: எவருடைய நமஸ்காரமும் ஸ்தோத்ரமும் கோடி முறை பித்ருக்களின் தர்ப்பணம் செய்ததற்கும் நூறு அச்வ மேதங்களைச் செய்ததற்கும் ஈடாகுமோ அத்தகைய பித்ரு தேவருக்கு நமஸ்காரம்.


Email Contact...Website maintained by: NARA
Terms and Usage