hinduhome prayhome

Family Guru: Paramacharya

Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
ஜெய ஜெய சங்கர காமாக்ஷி சங்கர
ஜெய ஜெய சங்கர காமகோடி சங்கர
ஜெய ஜெய சங்கர ஜகத்குரு சங்கர

1 ) ஓம் ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர ஸரஸ்வதியே போற்றி
2 ) ஒம் ஸ்ரீ காஞ்சி காமாக்ஷி சங்கரரே போற்றி
3 ) ஓம் ஸ்ரீ காஞ்சி சத்குருவே போற்றி
4 ) ஓம் ஸ்ரீ காஞ்சி ஞான பீடமே போற்றி
5 ) ஓம் ஸ்ரீ காஞ்சி சாந்தரூபமே போற்றி
6 ) ஓம் ஸ்ரீ காஞ்சி ஜீவ ஜோதியே போற்றி
7 ) ஓம் காஞ்சி நகர பிரபுவே போற்றி
8 ) ஓம் காஞ்சி மாமுனிவரே போற்றி
9 ) ஓம் பகவத்பாத அருட்சேவகரே போற்றி
10) ஓம் ஜெகம் போற்றும் ஜெகத் குருவே போற்றி
11) ஓம் திவ்ய ரூபமே போற்றி
12) ஓம் கருணா மூர்த்தியே போற்றி
13) ஓம் தர்ம தேவரே போற்றி
14) ஓம் அத்வைத முனிவரே போற்றி
15) ஓம் தவப்புதல்வரே போற்றி
16) ஓம் அறிவின் சுடரே போற்றி
17) ஓம் பண்டித மேதையே போற்றி
18) ஓம் வேத சாஸ்திரங்களை அறிந்தவரே போற்றி
19) ஓம் பிரம்ம ஞானியே போற்றி
20) ஓம் அஞ்ஞானத்தை அழிப்பவரே போற்றி
21) ஒம் மெஞ்ஞானத்தை அளிப்பவரே போற்றி
22) ஓம் ஞான தீபமே போற்றி
23) ஓம் தூய்மை நிதியே போற்றி
24) ஓம் சத்ய ஜோதியே போற்றி
25) ஓம் தெய்வாம்சப் பிறவியே போற்றி
26) ஓம் நல் அபயம் அளிப்பவரே போற்றி
27) ஓம் ஸ்ரீ புண்ணிய புருஷரே போற்றி
28) ஓம் சர்வக்ஞரே போற்றி
29) ஓம் சர்வவியாபியே போற்றி
30) ஓம் மங்களம் தரும் சங்கராச்சார்யரே போற்றி

1 ) ஓம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிச்வராய நம:
2 ) ஓம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்யா நம:
3 ) ஓம் ஸன்யாஸாச்ரம சிகராய நம:
4 ) ஓம் ஸ்வாமிநாத குருவே நம:
5 ) ஓம் கருணாஸாகராய நம:
6 ) ஓம் தர்ம பரிபாலகாய நம:
7 ) ஓம் ஸ்ரீ சிவசக்தி ஸ்வரூபாய நம:
8 ) ஓம் பக்த ஜன ப்ரியாய நம:
9 ) ஓம் காஞ்சி க்ஷேத்ர வாஸாய நம:
10) ஓம் ஸ்வதர்ம பரிபோஷ காய நம:
11) ஓம் லோக ரக்ஷித ஸங்கல்பாய நம:
12) ஓம் தர்ம ரக்ஷக ஸந்துஷ்டாய நம:
13) ஓம் ஸர்வோபநிஷத் ஸாரஞ்ஞாய நம:
14) ஓம் ஸர்வ சாஸ்த்ர கம்யாய நம:
15) ஓம் ஸர்வக்ஞாய நம:
16) ஓம் அபய ஹஸ்தாய நம:
17) ஓம் ருக் யஜுஸ் ஸாமாதர்வண சதுர்வேத ஸம்ரக்ஷகாய நம:
18) ஓம் கான ரஸஞ்ஞாய நம:
19) ஓம் அஷ்டஸித்திப்ரதாயகாய நம:
20) ஓம் பாதயாத்ரா ப்ரியாய நம:
21) ஓம் நானாவிதமத பண்டிதாய நம:
22) ஓம் அத்வைதான்ந்த பரிதாய நம:
23) ஓம் சங்க ராசார்யாய நம:
24) ஓம் தண்ட கமண்டலு ஹஸ்தாய நம:
25) ஓம் அவித்யா நாசகாய நம:
26) ஓம் சரணாகத வத்ஸலாய நம:
27) ஓம் ஸ்ரீசக்ரார்ச்சன தத்பராய நம:
28) ஓம் அனுராதா நக்ஷத்ர ஜாதாய நம:
29) ஓம் ஸ்ரீத்ரிபுரசுந்தரி ஸ்மேத ஸ்ரீ சந்திர மௌலீஸ்வர பூஜாப்ரியாய நம:
30) ஓம் காமாக்ஷி காமகோடி சங்கர ஜகத்குருவே நம:

ஓம் ஸ்ரீ காஞ்சி காமகோடி மஹா பெரியவா சரணம்!
ஸ்ரீ ஆச்சாரியார் திருவடிகளே சரணம்…..

ஜகத்குரு அஷ்டோத்தர சத நாமாவளி

1. ஓம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிச்வராய நம:
2. ஓம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி குருப்யோ நம:
3. ஓம் ஸன்யாஸாச்ரம சிகராய நம:
4. காஷாய தண்ட தாரிணே நம:
5. ஓம் ஸர்வபீடாபஹாரிணே நம:
6. ஓம் ஸ்வாமிநாத குரவே நம:
7. ஓம் கருணாஸாகராய நம:
8. ஓம் ஜகதாகர்ஷண சக்திமதே நம:
9. ஓம் ஸர்வ சராசர ஹ்ருதயஸ்தாய நம:
10. ஓம் பக்த பரிபாலக ச்ரேஷ்டாய நம:
11. ஓம் தர்ம பரிபாலகாய நம:
12. ஓம் ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வத்யாசார்யாய நம:
13. ஓம் ஸ்ரீ விஜயேந்த்ர ஸரஸ்வதி பூஜிதாய நம:
14. ஓம் ஸ்ரீ சிவசக்தி ஸ்வரூபகாய நம:
15. ஓம் பக்த ஜன ப்ரியாய நம:
16. ஓம் ப்ரம்ம விஷ்ணு சிவைக்ய ஸ்வரூபாய நம:
17. ஓம் காஞ்சி க்ஷேத்ர வாஸாய நம:
18. ஓம் கைலாஸ சிகர வாஸாய நம:
19. ஓம் ஸ்வதர்ம பரிபோஷ காய நம:
20. ஓம் சாதுர் வர்ண்ய நம:
21. ஓம் லோக ரக்ஷித ஸங்கல்பாய நம:
22. ஓம் ப்ரஹ்ம நிஷ்டாபராய நம:
23. ஓம் ஸர்வ பாப ஹராய நம:
24. ஓம் தர்ம ரக்ஷக ஸந்துஷ்டாய நம:
25. ஓம் பக்தார்ப்பித தன ஸ்வீகர்த்ரே நம:
26. ஓம் ஸர்வோபநிஷத் ஸாரஞ்ஞாய நம:
27. ஓம் ஸர்வ சாஸ்த்ர கம்யாய நம:
28. ஓம் ஸர்வ லோக பிதாமஹாய நம:
29. ஓம் பக்தாபீஷ்ட ப்ரதாயகாய நம:
30. ஓம் ப்ரம்மண்ய போஷகாய நம:
31. ஓம் நானாவித புஷ்பார்ச்சித பதாய நம:
32. ஓம் ருத்ராக்ஷ கிரிட தாரிணே நம:
33. ஓம் பஸ்மோத் தூளித விக்ரஹாய நம:
34. ஓம் ஸர்வக்ஞாய நம:
35. ஓம் ஸர்வ சராசர வ்யாபகாய நம:
36. ஓம் அநேக சிஷ்ய பரிபாலகாய நம:
37. ஓம் மனஸ்சாஞ்சல்ய நிவர்த்தகாய நம:
38. ஓம் அபய ஹஸ்தாய நம:
39. ஓம் பயாபஹாய நம:
40. ஓம் யக்ஞ புருஷாய நம:
41. ஓம் யக்ஞாநுஷ்டான ருசிப்ரதாய நம:
42. ஓம் யக்ஞ ஸம்பனாய நம:
43. ஓம் யக்ஞ ஸஹாயகாய நம:
44. ஓம் யக்ஞ பலதாய நம:
45. ஓம் யக்ஞ ப்ரியாய நம:
46. ஓம் உபமான ரஹிதாய நம:
47. ஓம் ஸ்படிக துள்ஸீருத்ராக்ஷஹார தாரிணே நம:
48. ஓம் சாதுர்வர்ண்ய ஸமத்ருஷ்டயே நம:
49. ஓம் ருக் யஜுஸ் ஸாமாதர்வண சதுர்வேத ஸம்ரக்ஷகாய நம:
50. ஓம் தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபாய நம:
51. ஓம் ஜாக்ர ஸ்வப்ன ஸுஷுப்த் யவஸ்தாதீதாய நம:
52. ஓம் கோடி ஸுர்யதுல்ய தேஜோமயசரீராய நம:
53. ஓம் ஸாதுஸங்க ஸம்ரக்ஷகாய நம:
54. ஓம் அச்வ கஜ கோ பூஜா நிர்வர்த்தகாய நம:
55. ஓம் குருபாதுக பூஜா துரந்தராய நம:
56. ஓம் கனகாபிக்ஷிக்தாய நம:
57. ஓம் ஸ்வர்ண பில்வதள பூஜிதாய நம:
58. ஓம் ஸர்வஜீவ மோக்ஷதாய நம:
59. ஓம் மூகவாக்தான நிபுணாய நம:
60. ஓம் நேத்ர தீக்ஷாதானாய நம:
61. ஓம் த்வாதசலிங்க ஸ்தாபகாய நம:
62. ஓம் கான ரஸஞ்ஞாய நம:
63. ஓம் ப்ரஹ்ம ஞானோபதேசகாய நம:
64. ஓம் ஸகலகலா ஸித்திதாய நம:
65. ஓம் சாதுவர்ண்ய பூஜிதாய நம:
66. ஓம் அநேகபாஷா ஸ்ம்பாஷண கோவிதாய நம:
67. ஓம் அஷ்டஸித்திப்ரதாயகாய நம:
68. ஓம் ஸ்ரீ சாரதாமட ஸுஸ்திதாய நம:
69. ஓம் நித்தியான்னதான ஸுப்ரீதாய நம:
70. ஓம் ப்ரார்த்தனாமாத்ர ஸுலபாய
71. ஓம் பாதயாத்ரா ப்ரியாய நம:
72. ஓம் நானாவிதமத பண்டிதாய நம:
73. ஓம் சுருதி ஸ்ம்ருதி புராணஞ்ஞாய நம:
74. ஓம் தேவ யக்ஷ கின்னர கிம்புருஷ பூஜ்யாய நம:
75. ஓம் ச்ரவணான்ந்தகர கீர்த்தயே நம:
76. ஓம் தர்சனான்ந்தாய நம:
77. ஓம் அத்வைதான்ந்த பரிதாய நம:
78. ஓம் அவ்யாஜ கருணாமூர்த்தயே நம:
79. ஓம் சைவ்வைஷ்ணவாதி மான்யாய நம:
80. ஓம் சங்க ராசார்யாய நம:
81. ஓம் தண்ட கமண்டலு ஹஸ்தாய நம:
82. ஓம் வீணாம்ருதங்காதி ஸகலவாத்யநாத ஸ்வரூபாய நம:
83. ஓம் ராமகதா ரஸிகாய நம:
84. ஓம் வேத வேதாங்க ஆகமாதி ஸகலகலா ஸதஸ்ப்ரவர்த்தகாய நம:
85. ஓம் ஹ்ருதய குஹாசயாய நம:
86. ஓம் சதருத்ரீய வர்ணித ஸ்வரூபாய நம:
87. ஓம் கேதாரேச்வர நாதாய நம:
88. ஓம் அவித்யா நாசகாய நம:
89. ஓம் நிஷ்காம கர்மோபதேசகாய நம:
90. ஓம் லகுபக்திமார்க்கோபதேசகாய நம:
91. ஓம் லிங்கஸ்வரூபாய நம:
92. ஓம் ஸாலக்ராம ஸூக்ஷ்மஸ்வரூபாய நம:
93. ஓம் காலட்யாம் சங்கரகீர்த்திஸ்தம்ப நிர்மாண கர்த்ரே நம:
94. ஓம் ஜிதேந்த்ரியாய நம:
95. ஓம் சரணாகத வத்ஸலாய நம:
96. ஓம் ஸ்ரீ சைலசிகரவாஸாய நம:
97. ஓம் டம்ருகநாத விநோதாய நம:
98. ஓம் வ்ருஷபாருடாய நம:
99. ஓம் துர்மதநாசகாய நம:
100. ஓம் ஆபிசாரிகதோஷ ஹர்த்ரே நம:
101. ஓம் மிதாஹாராய நம:
102. ஓம் ம்ருத்யுவிமோசன சக்தாய நம:
103. ஓம் ஸ்ரீசக்ரார்ச்சன தத்பராய நம:
104. ஓம் தாஸாநுக்ஹ க்ருதே நம:
105. ஓம் அனுராதா நக்ஷத்ர ஜாதாய நம:
106. ஓம் ஸர்வலோக க்யா தசீலாய நம:
107. ஓம் வேங்கடேச்வர சரணபத்மஷட்பதாய நம:
108. ஓம் ஸ்ரீத்ரிபுரசுந்தரி ஸ்மேத ஸ்ரீ சந்திர மௌலீஸ்வர பூஜாப்ரியாய நம:

மஹா பெரியவா 108 போற்றிகள்

1.ஓம் ஸ்ரீ காஞ்சி சத்குரு சந்த்ர சேகரேந்த்ர ஸரஸ்வதியே போற்றி
2. ஓம் ஸ்ரீ காஞ்சி காமதேனுவே போற்றி
3. ஓம் ஸ்ரீ காஞ்சி கற்பகவிருட்சமே போற்றி
4. ஓம் ஸ்ரீ காஞ்சி சத்குருவே போற்றி
5. ஓம் ஸ்ரீ காஞ்சி சாந்தரூபமே போற்றி
6. ஓம் ஸ்ரீ காஞ்சி ஞான பீடமே போற்றி
7. ஓம் ஸ்ரீ காஞ்சி கருணைக் கடலே போற்றி
8. ஓம் ஸ்ரீ காஞ்சி ஜீவ ஜோதியே போற்றி
9. ஓம் ஸ்ரீ காஞ்சி பிருந்தாவன ஜோதியே போற்றி
10. ஓம் துளசி வடிவமே போற்றி
11. ஓம் தேவ தூதரே போற்றி
12. ஓம் காஞ்சி நகரஸ்தரே போற்றி
13. ஓம் பக்தப் பிரயரே போற்றி
14. ஓம் திவ்ய ரூபமே போற்றி
15. ஓம் தர்ம தேவரே போற்றி
16. ஓம் அலங்காரப் பிரியரே போற்றி
17. ஓம் அன்பின் உருவமே போற்றி
18. ஓம் காவியத் தலைவரே போற்றி
19. ஓம் அருட் பெரும் தெய்வமே போற்றி
20. ஓம் தேவ கோஷ பிரியரே போற்றி
21. ஓம் அத்வைத முனிவரே போற்றி
22. ஓம் கலைவாணிச் செல்வரே போற்றி
23. ஓம் காஞ்சி நகர பிரபுவே போற்றி
24. ஓம் காஞ்சி முனிவரே போற்றி
25. ஓம் மகா தேவந்திரரின் சிஷ்யரே போற்றி
26. ஓம் அத்வைத பீடமே போற்றி
27. ஓம் தீனதயாளரே போற்றி
28. ஓம் கருணா மூர்த்தியே போற்றி
29. ஓம் ஜெகத் குருவே போற்றி
30. ஓம் கலியுகக் கடவுளே போற்றி
31. ஓம் நல்லோரைக் காப்பவரே போற்றி
32. ஓம் தீயவை அழிப்பவரே போற்றி
33. ஓம் ஸ்ரீ அனுமந்தப் பிரியரே போற்றி
34. ஓம் தவப்புதல்வரே போற்றி
35. ஓம் ஜெகத் குருவே போற்றி
36. ஓம் ஹரிபக்தரே போற்றி
37. ஓம் தோஷங்களைத் தீர்ப்பவரே போற்றி
38. ஓம் பிரத்யட்ச தெய்வமே போற்றி
39. ஓம் அருட்பெரும் தெய்வமே போற்றி
40. ஓம் அறிவின் சுடரே போற்றி
41. ஓம் பண்டித மேதையே போற்றி
42. ஓம் தீய சக்தியை அழிப்பவரே போற்றி
43. ஓம் வெங்கட பிரத்யட்ச தெய்வமே போற்றி
44. ஓம் வேதங்களை அறிந்தவரே போற்றி
45. ஓம் ஸ்ரீ பிராமணப் பிரியரே போற்றி
46. ஓம் அஞ்ஞானத்தை அழிப்பவரே போற்றி
47. ஒம் மெஞ்ஞானத்தை அளிப்பவரே போற்றி
48. ஓம் வியாதிகளைத் தீர்ப்பவரே போற்றி
49. ஓம் அமானுஷ சக்தியே போற்றி
50. ஓம் மோட்சத்தை அருள்பவரே போற்றி
51. ஓம் ஆனந்த நிலைய்மே போற்றி
52. ஓம் கஷாயத்தை அணிந்தவரே போற்றி
53. ஓம் தூய்மை நிதியே போற்றி
54. ஓம் வரங்களை அளிப்பவரே போற்றி
55. ஓம் கண்ணனின் தாசரே போற்றி
56. ஓம் சத்ய ஜோதியே போற்றி
57. ஓம் ஸ்ரீ ஜகத்குருவே போற்றி
58. ஓம் பாவங்களை அழிப்பவரே போற்றி
59. ஓம் மனிதகுல மாணிக்கமே போற்றி
60. ஓம் தெய்வாம்சப் பிறவியே போற்றி
61. ஓம் திருப்பாற்கடல் சந்திரரே போற்றி
62. ஓம் மகிமை தெய்வமே போற்றி
63. ஓம் ஞான தீபமே போற்றி
64. ஓம் அகந்தையை அழிப்பவரே போற்றி
65. ஓம் மெஞ்ஞானத்தை வென்றவரே போற்றி
66. ஓம் அத்வைத இயற்றியவரே போற்றி
67. ஓம் சர்வவியாபி தெய்வமே போற்றி
68. ஓம் முக்காலத்தை உணர்ந்தவரே போற்றி
69. ஓம் ஸ்ரீ காஞ்சிபுரத்தின் மாமுனிவரே போற்றி
70. ஓம் கஷ்டங்களைத் தீர்ப்பவரே போற்றி
71. ஓம் சுகங்களை அளிப்பவரே போற்றி
72. ஓம் கங்காதரா பகவானரே போற்றி
73. ஓம் சர்வக்ஞா! சர்வவியாபி போற்றி
74. ஓம் பரமாத்மாவே போற்றி
75. ஓம் குருதேவரே போற்றி
76. ஓம் நன்மைகளைத் தருபவரே போற்றி
77. ஓம் தயாநிதியே போற்றி
78. ஓம் அருட்தவசீலரே போற்றி
79. ஓம் ஞான மூர்த்தியே போற்றி
80. ஓம் சத்ய பராக்ரமரே போற்றி
81. ஓம் ஸ்ரீ புண்ணிய புருஷரே போற்றி
82. ஓம் அமுத கலசமே போற்றி
83. ஓம் அழகின் உருவமே போற்றி
84. ஓம் சந்தானத்தை அளிப்பவரே போற்றி
85. ஓம் சாஸ்திரங்கள் அறிந்தவரே போற்றி
86. ஓம் துளஸி மாலை அணிந்தவரே போற்றி
87. ஓம் ஜெபமாலை கொண்டவரே போற்றி
88. ஓம் மங்களம் தருபவரே போற்றி
89. ஓம் மன்மதனை ஜெயித்தவரே போற்றி
90. ஓம் காவல் தெய்வமே போற்றி
91. ஓம் நல் ஆயுளைத் தருபவரே போற்றி
92. ஓம் நல் ஐச்வர்யங்களை அளிப்பவரே போற்றி
93. ஓம் நல் அபயம் அளிப்பவரே போற்றி
94. ஓம் ஸ்ரீ உலகைக் காப்பவரே போற்றி
95. ஓம் அபயம் அளி நின் காந்தக் கண்களே போற்றி
96. ஒம் காமாக்க்ஷி சங்கரரே போற்றி
97. ஓம் ஓம்கார ரூபமே போற்றி
98. ஓம் பிரம்ம ஞானியே போற்றி
99. ஒம் கங்கை நதியின் தூயவரே போற்றி
100. ஓம் இணையில்லா இறைவரே போற்றி
101. ஓம் பகவத்பாத அருட்சேவகரே போற்றி
102. ஓம் அனாத ரட்சகரே போற்றி
103. ஓம் சங்கீதப் பிரியரே போற்றி
104. ஓம் சுந்தர வதனரே போற்றி
105. ஓம் உம்மாச்சி தாத்தாவே போற்றி
106. ஓம் நரஹரி பிரியரே போற்றி
107. ஓம் சிவகுருனாதரே போற்றி
108. ஓம் காஞ்சி காமாக்ஷி சேவகரே போற்றி போற்றி.

Poem: விழி கிடைக்குமா

விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா
குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா

அலை மீது அலையாக துயர் வந்து சேரும் போது
அஞ்சாதே எனும் குரலை செவி கேட்குமா (விழி )

நங்கூரம் போல் குருநாதன் கடை விழி இருக்க இந்த
சம்சார புயல் கண்டு மனம் அஞ்சுமா
நிஜமான அன்பு வைத்து எனதெல்லாம் அடியில் வைத்து
உன் விழியோர படகில் எனக்கிடம் கிடைக்குமா ( விழி)

கோடி ஜன்மம் நான் எடுப்பேன் குரு உந்தன் அருள் இருந்தால்
உ ணக்கேன்றே உனக்காக எனை ஆக்குவேன்
நினைக்காத துன்பம் பல எனை வந்து சேரும் போது
நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமா (விழி)

Poem: பெரியவாளை பார்த்துக்கிட்டே இருக்கத் தோணுது

தென்னாடுடைய பெரியவா போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
சர்வக்ஞா சர்வ வ்யாபி பெரியவா சரணம்
மாயப்பிறப்பறுக்கும் மஹாபெரியவா அடி போற்றி x2
பெரியவாளை பார்த்துக்கிட்டே இருக்கத் தோணுது x2
பெரியவாளை பிரிந்து வர மனமும் மறுக்குது
பெரியவாளை பார்த்துக்கிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
விஸ்வரூப தரிசனம் காண
பக்தர் விடியகாலை காத்திடும் போது
வாழ்த்தொலிகள் ஒலித்திடும் போது
மேனா விளக்கினிலே துயில் எழும் போது
பெரியவாளை பார்த்துக்கிட்டடே இருக்கத்தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
பஞ்சாங்கம் படித்திடும் போது
செவியில் பாங்காக கேட்டிடும் போது
பணிவோர்கள் யார் எனும் போது
யாதும் புரியார் போல் நடித்திடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத்தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
மங்கள நீராடிடும் போது
மெதுவாய் மூழ்கியே எழுந்திடும் போது
மேலாடை போர்த்திடும் போது
திருநீறு மேனியெல்லாம் பூசிடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
அனுஷ்டானம் துவக்கிடும் போது
அழகாய் ஆசமனம் புரிந்திடும் போது
அதிகாலை ஒரு மணி நேர ஜபத்தில்
ஆழ்ந்தழகாய் அமர்ந்திடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
ஓர் மணி தான் நிறைவுறும் போது
மணியும் ஓசையுடன் ஒலித்திடும் போது
ஓர் இரு கண் திறந்திடும் போது
விந்தை யீதனையாம் வியந்திடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
ஜபம் முடிந்து நோக்கிடும் போது
கண்ணால் ஜயம் உனக்கு என்றிடும் போது
ஜகம் எல்லாம் மறந்திடும் போது
அந்த க்ஷண நேர பூரிப்பின் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
கை தட்டி அழைத்திடும் போது
பாலு ஸ்ரீகண்டன் உடன் வரும் போது
வேதபுரி விரைந்திடும் போது
மௌலி குமரேசன் குழைந்திடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
தண்டமதை ஏந்திடும் போது
அழகாய் தளிர்நடை தான் போட்டிடும் போது
தொண்டர் படை உடன் வரும் போது
நாமும் திருவீதி வலம் வரும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
தரிசனம் தான் தர வரும் போது
ஒவ்வோர் இடமாக நகர்ந்திடும் போது
தனியாக நடந்திடும் போது
முன்னால் படி என்று ஒளி வரும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
மேனாவில் அமர்ந்திடும் போது
பின்னர் மரத்தடியில் இருந்திடும் போது
மேடை மேல் ஏறிடும் போது
வந்தோர் மனம் எல்லாம் களித்திடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
மலராகக் குவிந்திடும் போது
பக்தர் கரம் சேர குவித்திடும் போது
மனமார ஏற்றிடும் போது
மலரை சிரம் சேர போட்டிடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
பூவினந்தான் சேர்ந்திடும் போது
கொன்றை சரமாகத் தான் வரும் போது
தாமரையும் உடன் வரும் போது
சிரம் மேல் சூட்டியுடன் சிரித்திடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
மல்லிகைப் பூ மலர் வரும் போது
அல்லி மூவகையும் மலர்ந்திடும் போது
மெய்யன்பர் கொணர்ந்திடும் போது
ஏற்று மணம் எங்கும் பரப்பிடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
பழமாக குவித்திடும் போது
அன்பர் தொழுதேற்ற தினம் வரும்போது
பழுதில்லா மனம் எனும்போது
பார்த்து அழகாக கரம் தொழும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
வந்தோரை விளக்கிடும்போது
அவரின் தந்தை யார் என்றிடும் போது
சொந்தம் கூற் எனும் போது
அன்னார் முந்தை எல்லாம் தான் சொல்லும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
மானசீக பூஜையின் போது
கரத்தால் வந்தனைகள் புரிந்திடும் போது
உபசாரம் பல செய்யும் போது
மலர்கள் திருக்கரத்தால் கொட்டிடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

சங்கரா
பத்திரிக்கை படித்திடும் போது
மூக்குக் கண்ணாடி அணிந்திடும் போது
நான்கைந்து மாற்றிடும் போது
கூடைக்குள் எடுத்து வைத்திடும்போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
லென்ஸ் எடுத்து படித்திடும் போது
கையால் டார்ச் அடித்து படித்திடும் போது
புத்தகங்கள் படித்திடும் போது
கீழேவைக்காமல் முடித்திடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
பிரசாதம் பல வரும் போது
திருநீற் குங்குமங்கள் இட்டிடும் போது
தேங்காயை தொட்டிடும் போது
கொண்டு வந்தோர்க்கே திருப்பிடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
தீர்த்தங்கள் வந்திடும் போது
ஹோமம் செய்வோர்கள் கொணர்ந்திடும் போது
ரட்சைகள் உடன் வரும் போது
நெற்றித்திலகம் என தரித்திடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
தஞ்சமென வந்திடும் போது
ஏழை திருமணங்கள் என வரும் போது
அஞ்சேல் என அருளிடும் போது
வாரி தங்கம் என வழங்கிடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
அருள் எனக்கு என்றிடும் போது
கோவில் குடமுழுக்கு என வரும்போது
அருள் மழையாய் பொழிந்திடும்போது
பூர்ணபலம் கொடுத்து மகிழ்ந்திடும்போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
புறங்கையை தட்டிடும் போது
அழகாய் ஒய்யார நடையிடும் போது
வேகமுடன் நடந்திடும் போது
சீடர் ஓடியுடன் வழி செய்யும்போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
பாலகுரு படித்திடும் போது
அங்கே பாஷ்ய பாடம் நடந்திடும் போது
பெருங்குருவாய் அமர்ந்திடும் போது
பரிவாய் தீஷண்யம் வீற்றிடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
சர்ச்சைகள் நடந்திடும்போது
தானும் சந்தேகம் கேட்டிடும் போது
விற்பன்னர் விளக்கிடும் போது
தெளிவாய் விளக்கங்கள் தான் தரும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
வலக்கரத்தால் அருளிடும் போது
இதமாய் இடக்கரத்தால் அருளிடும் போது
இரு கரத்தால் அருளிடும் போது
மேலே உயர்க்கரத்தால் அருளிடும்போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
விழியிரண்டால் நோக்கிடும் போது
கனிவாய் மொழி சொல்லும் போல் நோக்கிடும் போது
கருவிழியால் நோக்கிடும் போது
கருணை மொழித் தாய்போல் நோக்கிடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
அருள்நோக்காய் நோக்கிடும் போது
மனதில் இருள்நீக்க நோக்கிடும் போது
களி நோக்காய் நோக்கிடும் போது
ஞான ஒளிநோக்காய் நோகிடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
மெதுவாக நடந்திடும் போது
கமல பதமலரை கண்டிடும் போது
பதமாக நடையிடும் போது
மனதும் இதமாக சுகம் பெரும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
அபிஷேகம் நிறைவுறும் போது
பூஜை ஹாரத்தி நடந்திடும் போது
அவசரமாய் விரைந்திடும் போது
சந்திர மௌலீஸ்வர் வலம் வரும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
குருவணக்கம் செய்ய சொல்லும் போது
ஆதி குருபீடம் பணி செய்யும் போது
என் முறை தான் வணங்கிடும் போது
தோடகாஷ்டகம் தான் முடித்திடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
காய்கறிகள் குவித்திடும் போது
பிக்ஷாவந்தனத்தார் கொணர்ந்திடும் போது
ஒவ்வொன்றாய் ஆய்ந்திடும் போது
அவற்றை தனித்தனியாய் வை எனும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
அரிசி எங்கே என்றிடும் போது
பருப்பு வகைகள் என்றிடும் போது
வெல்லம் எங்கே என்றிடும் போது
தரமாய் வகைபிரித்து நகைத்திடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
வாழைக்காய் வைத்திடும் போது
அவரை வெண்டைக்காய் உடன் வரும் போது
மென்விரலால் அள்ளிடும் போது
வந்தோர் எண்ணமெல்லாம் குளிர்ந்த்திடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
பழவகைகள் பார்த்திடும் போது
கீரை பசுக்களுக்கு என வரும் போது
வேறு வகை கொண்டிடும் போது
தானே பசுக்களுக்கு ஊட்டிடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
வேழம் தான் முன்வரும் போது
கையால் வாழைக்கனி கொடுத்திடும் போது
உண்டாயா என்றிடும் போது
யானை கொண்டாட்டம் கொண்டிடும் போது
பெரியவாளை பார்த்துக்கிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
மனை போட்டு அமர்ந்திடும் போது
முறையாய் மாத்யானியம் புரிந்திடும் போது
மென்கரத்தால் ஜபித்திடும் போது
இமைகள் மூடித் தவம் தான் செய்யும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
காட்சிக்கள் பல தரும் போது
வந்தோர் யாவர்க்கும் விடை தரும்போது
பிஷைக்கு இலை கொளும்போது
தானும் பிஷைக்கு திரும்பிடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
பசி சேர்த்து வந்திடும் போது
கயிற்றுக் கட்டில் மேல் அமர்ந்திடும்போது
கற்கண்டை மென்றிடும் போது
ஏலம் லவங்கம் தான் சுவைத்திடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
காத்திருப்போர் நிறைந்திடும்போது
தானும் காத்திருந்தே அகன்றிடும் போது
குறை சொல்வோர் கேட்டிடும் போது
மேலும் கருணை கொண்டு அருளிடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
மதியத்தில் காத்திடும் போது
அயலும் நேரத்தும் அருளிடும் போது
மனமார சிரித்திடும் போது
வந்தோர் மகிழ்வோடு விடை பெறும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
மாலைத்தான் வந்திடும் போது
மீண்டும் மெய்யன்பர் சேர்ந்திடும் போது
மெதுவாக வெளிவரும் போது
மாலை மதியம் போல் களி தரும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
திருநீறு அணிந்திடும் போது
மாலை அனுஷ்டானம் புரிந்திடும் போது
முக்காலம் முடிந்திடும் போது
இதையே எக்காலம் புரிந்திடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
பிரதோஷ பூஜையின் போது
சிரஸில் ருத்ராட்சம் தரித்திடும் போது
மார்பெங்கும் அணிந்திடும் போது
மாலை மலை போல மிளிர்ந்திடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
இரவென்னும் வேளையின் போது
பக்தர் நிறைகின்ற நேரத்தின் போது
இரக்கம் தான் மேலிடும் போது
இதையாய் எழுந்திட்டே அருள் செய்யும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
ஓய்வுக்கு அமர்ந்திடும் போது
கயிற்றுக் கட்டில் மேல் ஓய்ந்திடும் போது
ஓரிருபேர் வந்திடும் போது
அவரின் குசலம் தான் கேட்டிடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
விஸ்ராந்தி பொழுதெனும் போது
தொண்டர் விநயத்தோடு இயம்பிடும் போது
குழந்தை போல் கேட்டிடும் போது
அவரின் வேண்டலுக்கு இணங்கிடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர சங்கர ஜய ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கரா
மேனாவுள் அமர்ந்திடும்போது
மீண்டும் ஓர் முறை தான் நோக்கிடும் போது
ஓர் கதவைமூடிடும் போது
திறந்த ஓர் கதவால் பார்த்திடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர

ஹர சங்கரா
யாரும் தான் இல்லை எனும் போது
மேனா கதவைத்தான் முடிடும் போது
துயில் கொண்டார் இவர் எனும் போது
நாமும் தாலாட்டு இசைத்திடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
(1) ஓம் அஹிம்சசொரூபாய வித்மஹே தத்துவ புருஷாய தீமஹி தந்நோ ஸர்வக்ஞாய ப்ரசோதயாத்
(2) ஓம் காஞ்சி காமகோடி பீடாதிச்வராய வித்மஹே அத்வைததத்வாய தீமஹி தந்நோ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ப்ரசோதயாத்
(3) ஓம் தர்மமார்காய வித்மஹே சுவாமிநாதாயா தீமஹி தந்நோ ஞானகுரு ப்ரசோதயாத்
*We are graced or blessed by great personalities or super beings by contemplating/meditating on them. Let us be graced or blessed by: 1. Master of many subjects, known as form of ahimsa or compassion and great philosophic personality; 2 Chandrasekharendra Saraswati swamiji, (ex) head of kamakodi mutt and a great advaita philosopher; and 3. Teacher of wisdom, born as Swaminatha sharma, following and showing the path of dharma
[nara - hindu123.net - Jun 2022]

ஓம் ஸ்ரீ ஜகத்குரு பரமசார்யாய பஞ்சபதி

(1) காஞ்சீக்ஷேத்ர நிவாஸாய லோக ரக்ஷித ஸங்கல்பாய
காமகோடி சங்கரார்சார்யாய நமோஸ்து தே:
(2) பக்த ஜனா: ப்ரியாய ஸமஸ்த ஜீவ ப்ரியாய
அனுராத ஸுஜாதாய ஸ்வாமிநாதாய நமோஸ்து தே:
(3) வேதவாக்ய ப்ரசாராய அவித்யா நாசகாய
சரணாகத வத்ஸலாய சந்த்ர சேகரேந்த்ராய நமோஸ்து தே:
(4) ஸ்வதர்ம பாலனாய ஸர்வ தர்ம போஷகாய
ஸந்யாஸாச்ரம சிகராய ஸர்வக்ஞாய நமோஸ்து தே:
(5) ஸர்வலோக சஞ்சல நாசகாய பாதயாத்ர ப்ரியாய
கமலபாதாய ஜகத்குரு பரமசார்யாய நமோஸ்து தே:
Salutations (namaskarams) to kamokodi Sankaracharya residing in Kanchi, praying/wishing for protection and well being of every one in the world.
Salutations to Swaminatha born on anuradha nakshatra, loved by his devotees, who in turn loves all living beings.
Salutations to compassionate Chandrasekharendra acharya, who preaches essence of vedic scriptures, removing ignorance and available to all coming to him for wisdom.
Salutations to living example an ideal sanyasi, who is well read and expert in many subjects, follows his own traditions and also nurturing all dharmic traditions
Salutations to Paramacharya, who loves to walk vsiting holy places in India with lotus feet and removes mental doubts/confusions/stresses of devotees living all around the world.
[nara - hindu123.net - Jun 2022]
Paramacharya is a very pleasant serene simple compassionate great personality. He has an impressive memory and a walking encyclopaedia or library with deep understanding of Hindu/Indian culture and traditions. Quite impressed with his knowledge in metaphysics and mathematics (logics). Attractive personality and can give you peace. Active supporter of Shanmadha and Unity of Saivites and Vaishnavites.

Paramacharya was highly respected by world leaders and great personalities. On the day of Sankara Jayanthi in the year 1915, Swamigal took over the administration of the mutt on the completion of his 21st year. He attained samadhi on January 8, 1994 and was succeeded by H.H.Sri Jayendra Saraswati.

I was lucky to have met him few times during young age, when he visits Trichy and Thiruvanai koil. It is divine experience to walk with him, around Trichy.

deivathin kural (தெய்வத்தின் குரல்)

Ra. Ganapathi, compiled speeches of Paramacharya in Deivathin Kural. Deivathin Kural has been translated into English as Deivathin Kural Voice of God.

ஹிந்து மதம் சார்ந்த வேதங்கள், உபநிஷதங்கள், சிற்பம், நாட்டியம், ஆயுர்வேதம், தமிழ் மொழி, ஸம்ஸ்க்ருத மொழி, அத்வைதம், விசிஷ்டாத்வைதம் மற்றும் த்வைதம் போன்ற தத்துவங்கள் பற்றிய தகவல்கள் வினாயகர், சக்தி, சிவன், விஷ்ணு, ஐயப்பன், அனுமன் போன்ற தெய்வங்கள் பற்றிய தகவல்கள் ஆதிசங்கரர் கால ஆராய்ச்சி பற்றிய தகவல்கள், பிறப்பிலிருந்து இறப்பு வரை ஹிந்துக்களது வாழ்வில் செய்யப்பெறும் ஸம்ஸ்காரங்கள், பிடி அரிசித்திட்டம், கோவிலில் உழவாரப்பணி, குளம் போன்ற நீர் நிலைகளை வெட்டுதல், அவற்றை பாதுகாத்தல் அவற்றில் ஆடுமாடுகளும் நீர் அருந்த வழி செய்தல், அனாதை ப்ரேதங்களுக்கு ஸம்ஸ்காரம் செய்தல், போன்றும் மற்றும் எண்ணிறந்த தகவல்கள் அடங்கிய ஒரு கருத்துக்களஞ்சியமாகத்தான் தெய்வத்தின் குரல்

Early life of Paramacharya

Sri.Swaminatha (after the family deity, Lord Swaminatha of Swamimalai) was born on 20 May 1894, under Anuradha star according to the Hindu calendar, into a Kannadiga Smartha family in Viluppuram. His father Subramaniya Sastrigal, was a District Education Officer. Swaminathan began his early education at the Arcot American Mission High School at Tindivanam. He won a prize for his proficiency in the recitation of the "Holy Bible".

In the first week of February 1907, the Kanchi Kamakoti mutt had informed Subramanya Sastrigal that Swaminathan's first cousin was to be installed as the 67th Peetathipathi. The presiding Acharya was then suffering from smallpox and had administered upadesa to his disciple Lakshminathan before he died. As Lakshminathan also died with in a week, Swaminathan was immediately installed as the 68th head of the Kanchi Kamakoti Peetam on February 13, 1907. He was given Sanyasa Asramam at the early age of 13 and was named Chandrasekharendra Saraswati.

As per the usual training given to the seers, Paramacharya was well trained with the Vedas, puranas, various hindu texts and ancient Indian literature. He has studied for some time under the pandits in Mahendramangalam, two km from Thottiyam near Musiri.

Near Musiri, across cauvery river, Mahadanapuram had been the headquarters of the Nelamavu mutt. Samadhis of great saints such as Kamalananda Bharati, Narayananda Bharati and Ramananda Saraswati are located here.

Religious Organizations

Religious organizations are political groupings, using some science, metaphysics, history, rituals/traditions, etc with some spiritual flavour. They are political/community centers with set of objetives, beliefs, rules, regulations etc. What they believe, can not be proven or rejected. Just opinion/feeling/understanding of few leaders of the religious organization. Take whatever you can get from these organizations, which you like or find it useful. Science, Spirituality, GOD, Language etc.. are Universal concepts. Does not belong to any groups. Founders and leaders play a key role in its popularity. Members are just followers, least concerned about principles, objecives, history behind these organizations. Members just want social identity and some benefits from organizations.

From deivathin kural (தெய்வத்தின் குரல்):
எந்த தேசத்திலும் எந்த ஒரு மதமும் எப்படி அழிந்தது என்று பார்த்தால், அந்த மதத்தை வளர்க்கிற ஸ்தாபனங்களிலும், அதன் முக்கியஸ்தர்களிடமும் ஒழுங்கீனம் உண்டானபோதே இந்த அழிவு ஏற்பட்டிருக்கிறது.
புத்தர் வந்தார். அவரது சரித்திரத்தைக் கேட்கக் கேட்க பால் வடிகிற அவரது விக்கிரகங்களைப் பார்க்க பார்க்க நமக்கே சாந்தமும், கருணையும், ஆனந்தமும், அவரிடம் ஒரு மரியாதையும் உண்டாகின்றன. அந்த காலத்துத் ஜனங்களுக்கும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். பிற்காலத்தில் பௌத்த விஹாரங்களில் எத்தனை ஒழுக்கக் கேடு ஏற்பட்டது என்பதை மகேந்திர பல்லவன் எழுதிய ‘மத்தவிலாஸப் பிரஹஸனம்’ என்கிற ஹாஸ்ய நாடகத்திலிருந்து தெரிந்து கொள்கிறோம். இதே காலத்தில்தான் புத்த மதம் மங்கிப் போகத் தொடங்கியது. அதாவது சமயப் பிரதிநிதிகள் தன்மையைப் பொறுத்தே சமய வளர்ச்சியும் நலிவும் ஏற்படுகின்றன.
புத்தருக்குப் பிறகு ஆதிசங்கரர் பரம உத்தமமான மனிதராக வந்தார் என்றால் ஜனங்கள் அவரிடம் திரும்புகிறார்கள். அப்புறம் ராமாநுஜர், மத்வர் என்று இப்படித் தங்கள் சொந்த வாழ்க்கையில் உயர்ந்தவர்களாக விளங்கியவர்கள் வந்தபோது, அந்தத் தனி மனிதரிடம் ஜனங்களுக்கு உண்டான பிடிப்புக் காரணமாக, அவரது சித்தாந்தம் பரவியது.

பொது ஜனங்கள் தத்துவத்துக்காகவே ஒரு மதத்தை ஏற்கிறார்கள் என்றால், அவர்களிடம் ‘உங்கள் மத சித்தாந்தங்களைச் சொல்லுங்கள்’ என்று கேட்கும்போது அவர்களுக்குச் சொல்லத் தெரியவேண்டும். மற்ற சித்தாந்தங்களை விட இவை சிரேஷ்டமானவை என்பதற்கு அவர்களுக்குக் காரணம் சொல்லத் தெரிய வேண்டும். ஆனால், வாஸ்தவத்தில் எந்த மதத்திலும் இருக்கிற ஏராளமான பொது ஜனங்களுக்கு அந்தந்த மதத்தைப் பற்றிய கொள்கைகள் இப்படி விவாதிக்கிற அளவுக்கு நுணுக்கமாகத் தெரியாது.

எனவே, எந்த மதமும் அதில் உள்ள தத்துவத்தினால் மட்டும் வளருவதில்லை என்பதுதான் என் அபிப்ராயம். சாமான்ய ஜனங்களுக்குத் தத்துவத்தைப் பற்றிக் கவலை இல்லை. நல்ல குணம், நல்ல பழக்கம் உள்ளவராக, கருணையும் சாந்தமும் உள்ளவராக ஒரு மகான் வந்தால் அவரைப் பார்த்த மாத்திரத்தில் ஜனங்களுக்கு நம்பிக்கை உண்டாகிறது. அவர் எந்த தத்துவத்தைச் சொன்னாலும் அது நல்லதாகத்தான் இருக்கும் என்ற திடமான நம்பிக்கையுடன் அவரது மதத்தில் ஜனங்கள் சேருகிறார்கள். மாறாக, ஒரு மதக்கோட்பாடுகள் எத்தனைத்தான் பரம தத்துவங்களை விளக்கினாலும், அந்த மதப் பிரதிநிதியாக இருக்கிறவர்களிடத்தில் ஒழுங்கு தப்பிவிட்டால் உடனே அந்த மதம் அழியத் தொடங்கி விடுகிறது.

பலவிதமான சமூக சேவைகளை, ஒத்தாசைகளை செய்துவிட்டு, உடனே ஞானஸ்நானம் பண்ணி வைக்கிறேன் என்று ஒரு மதம் இழுத்தால், பாமர ஜனங்கள் அதில் வசியப் பட்டுத்தான் போவார்கள். முக்கியமாகத் சேரி மக்களைத்தான் பாதிரிமார்கள் மதம் மாற்ற முற்பட்டார்கள். மதமாற்றம் செய்கிறவர்களை நாம் கரிக்க வேண்டியதில்லை. துவேஷிக்க வேண்டியதில்லை.
Source: மத போதகரின் யோக்கியதாம்சங்கள் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

Infinite and Zero

Infinite and Zero are two boundaries. All numbers are contained with in that. (removing positive and negative signs before numbers)

மாறிக் கொண்டேயிருக்கிற, இல்லாத வஸ்துவான மாயைதான் பூஜ்யம். எல்லாமே சூனியம், பூஜ்யம், மாயை என்கிறது பௌத்தம்.
பிரம்மம் பூரணமானது; பிரம்மம் என்ற பூரண வஸ்துவில் உலகம் என்ற பூரணம் உதயமாயிற்று; இந்த உலகம் என்ற பூரணத்தைப் பிரம்மம் பூரணத்திலிருந்து எடுத்துவிட்ட போதிலும் பிரம்மம் பூரணமாகவே இருக்கிறது. பூரணம் என்றால் எல்லாம் என்று அர்த்தம்.
அனந்தம்தான் (Infinity) பிரம்மம்.
பிரம்மம் வேறேதோ பொருள்களைக் கொண்டு உலகை சிருஷ்டிக்க (Create) வில்லை.
பிரம்மம் உலகமாக மாறிவிடவும் (Transform) இல்லை.
பிரம்மம் உலகமாகத் தோன்றுகிறது (Appearance).
பிரம்மம் என்பது சத்தியம் என்று சொல்வது அத்வைதம்;
பிரபஞ்சத்தை சத்தியமாகச் சொல்கிறது த்வைதம்.
பிரம்மம் × மாயை = பிரபஞ்சம்
Infinity (God) × shunya (illusion or Appearance) = shunya (creations or universe)
அத்வைதம் × பௌத்தம் = துவைதம்
[from தெய்வத்தின் குரல்]

Zero is a start number and Infinity is end number, while both defy measurement.
Zero (nothing) and Infinity are the limits of human thinking.
Infinity is well explored in articles such as the Ultimate, the Absolute, God, and amny mathematical paradoxes.
Anything divided by Zero (nothing) will be Infinity
GOD is the only reality and everything is illusion. (what you see is not what is real).
By removing illusion, one can see the truth. Only reality, appears as many different things.
Reality is an unknown, unmoving, perfect, unchanging, undivided...
"The apparent plurality of substances is due to different states or appearances of a single substance"
(* what is understood from Paramacharya talks)

Unifying two major deities

சங்கர நாமாவோடேயே நாராயண நாமாவைச் சேர்த்துத் தான் ‘சங்கரநாராயணன்’ என்றே பெயரும் இருக்கிறது. சிவபெருமானை நடுநாயகமாகவும் அம்பிகை, திருமால், விநாயகர், ஸூர்யன் ஆகிய நால்வரைப் பரிவாரமாகவும் கொண்டதே சிவபஞ்சாயதனம். Saivam and Vaishnavam are two eyes of Current Hinuism. Lord Shankaranarayana is a combined deity form of Shiva (Shankara) on the right with Nandi, and Vishnu (Narayana) on the left with Garuda. Shankaranarayana is also called Harihara - Hari (Vishnu) and Hara (Shiva). Harihara is also sometimes used as a philosophical term to denote the unity of Vishnu and Shiva as different aspects of the same Supreme God.
விஷ்ணோச்ச ஹ்ருதயம் சிவ: சிவஸ்ய ஹ்ருதயம் விஷ்ணு:– [ஸ்கந்தோபநிஷத்]
ஷிவாய விஷ்ணு ரூபாய விஷ்ணவே ஷிவா ரூபினி
Shiva resides in Vishnu's heart and vice versa. Shiva and Vishnu are the same, other forms of each other..

பெருமாள் ரங்கநாதராக தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தட்சிணாமூர்த்தி அமைதி or ஸமாதி ஸ்திதி, பெருமாளும் நித்திரை செய்வது போல் அமைதியாய் யோக நித்திரை or அறிதுயில். So, தெற்கு பார்த்த ராஜாக்கள் - நடராஜா and ரங்கராஜா: ரங்கம் - அரங்கம்' - என்றால் நாட்டிய நாடகங்கள் நடக்கும் மேடை, நாடக சாலை 'ஸபை'
Static Principle is shiva; Dynamic Principle is Vishnu. We are the dance of Spirit and Nature. In truth everything in life is about that dance and life is always dancing with the polarities.
http://www.kamakoti.org/tamil/7dk270.htm

Spirituality has no caste

Saints hail from all castes. Nayanmars and alwars are examples.
பிராம்மணர்கள் ஞானம், பக்தி இவற்றை ஏகபோக்கியம் (monopolise) பண்ணிக் கொண்டு மற்றவர்களை கீழே அமுக்கி வைத்திருந்தால் ஒரு அப்பர் ஒரு நம்மாழ்வார் மட்டுமில்லை, இன்னும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் முக்கால்வாசிப் பேரும், ஆழ்வார்களில் பலரும் தோன்றியிருக்க முடியுமா? பறக்குலத்திலிருந்து, குயவரிலிருந்து இப்படியே சகல ஜாதியிலிருந்தும் நாயன்மார்கள் தோன்றியிருக்கிறார்கள். தாயுமானவர், பட்டினத்தார் மாதிரி ஞானிகளை எங்கே பார்க்க முடியும்? ஸமீபத்திலேயே ராமலிங்க ஸ்வாமிகள் இருந்திருக்கிறார்கள்.

தொன்றுதொட்டு வேத நெறியின் வீடாக இருந்திருப்பது தமிழகமே. உலகத்திலேயே ஈடு இணையில்லாத பக்திச் செல்வத்தையும் நீதி நூல்களையும் தந்த ஆழ்வார்களும், நாயன்மார்களும், பட்டினத்தார், தாயுமானவர், திருவள்ளுவர், சங்கப்புலவர் போன்றவர்களும் எங்கு பார்த்தாலும் திராவிட நாட்டின் வேதத்தின் பெருமையைப்பற்றித் தங்கள் நூல்களில் பேசுகிறார்கள். சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்துவப் புலவரான ஸ்ரீவேதநாயகம் பிள்ளைகூடத் தமிழ்நாட்டில் தேவாலயங்களோடு ‘பிரம்மாலயங்கள்’ (வேத பாடசாலைகள்) நிறைந்திருப்பதையே பெருமையோடு கூறியிருக்கிறார். ‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’- பாரதியார் .

On Sanyasa: From deivathin kural:

Inside the Nandrudayan Vinayaga temple in Devadhanam, Tiruchirappalli, idol for Pattinathar can be found. During Paramacharya's visit, he acknowledged Pattinathar is an example for sanyasi.
உஜ்ஜயினி ராஜாவா இருந்த பர்த்ருஹரி, தமிழ்ல பத்திரகிரி! அவர் ஆண்டியாகி, திருவிடைமருதூர் கோவில் மேலகோபுர வாஸல்ல ஒக்காந்துண்டு, பிக்ஷை வாங்கிக்கறதுக்காக ஒரே ஒரு திருவோடு மட்டும் வெச்சிண்டிருந்தார். அவர் தன்னோட குருவான பட்டினத்தாருக்கும் சேத்து பிக்ஷை வாங்கிண்டு வருவாராம். ஒர்த்தர் குபேராம்ஸம்! இன்னோர்த்தர் உஜ்ஜயினி மஹாராஜா! அப்பேர்ப்பட்ட வைராக்யத்தோட ஆண்டிகளாயிட்டா!
ஒரு நாள் ஒரு ஏழை வந்து பட்டினத்தார்கிட்டயே போயி… அன்னம் யாசகம் பண்ணினானாம். “நானே ஒண்ணுமில்லாதவன். என்ன… வந்து கேக்கறியே! போ! மேலகோபுர வாஸல்ல ஒரு குடும்பி இருக்கான்….! அவனப் போய் கேளு! நா.. இப்டி சொன்னதாவே சொல்லிக் கேளு” ன்னு சொல்லி பர்த்ருஹரிகிட்ட அனுப்பினாராம். “ஓடு நமக்குண்டு”ன்னு பாடினவரே… அப்றமா ஓடு வெச்சிண்டு இருக்கறவனும் ஸம்ஸாரிதான்..ன்னு புரிஞ்சுண்டார்….
அதே மாதிரி….ஸதாஶிவ ப்ரஹ்மேந்த்ராளும், “கையையே மடிச்சு தலைக்கு வெச்சுண்டு, ஆகாஶமே போர்வை, கட்டாந்தரையே மெத்தை, விரக்திங்றவளே பத்னி….ன்னு ஸயனிச்சுண்டு இருக்கற துறவியானவன்“. சேரிப் பொம்மனாட்டிகள்ள ஒர்த்தி, ப்ரஹ்மேந்த்ராளை பரியாஸமாப் பாத்து… “ஸன்னாஸியாமே ஸன்னாஸி!………தலைக்கோஸரம் [தலக்கு உயரம்) கேக்கற நல்ல ஸன்னாஸிடி….யம்மா!“ன்னு…கூட வந்தவாகிட்ட கேலி பண்ணினாளாம். ப்ரஹ்மேந்த்ராளுக்கு “சுரீல்“ன்னுதாம்! ஆகக்கூடி தனக்கும், மத்த அவயவங்களை விட தலைய… ஒஸத்தி வெச்சுண்டாத்தான் ஸௌக்யம்..ங்கற நெனப்பு போகல ! இல்லியா? அது போகாதவரைக்கும் நாம என்ன ஸன்யாஸி? அந்த பொம்மனாட்டிகள் சித்த நாழி கழிச்சு திரும்பி போறச்சே, அங்க வந்தாளாம்…! அப்போ, மொதல்ல பரிஹாஸம் பண்ணினவளே மறுபடியும் அதே மாதிரி சிரிச்சாளாம்..! “ஸாமியாருன்னா……அவுங்களுக்காவே எப்பிடி இருக்கணும்னு தெரிய வேணாம்? ஊர்ல போறவங்க, வர்றவங்க பேச்சை எல்லாம் கேட்டு பண்ணறவங்க, இன்னா ஸாமியாருங்க!“….ன்னாளாம்!

Why Mutt is very important

Mutt is an orgnization for preserving Vedas (sanskrit based?) and Vedic traditions. It is an university or library. It is not a social service organization. There are many other organizations to do that type of social activities. No need to get into business and politics.

நான் பாட்டில் எங்கேயாவது கிராமத்தில் ஏகாந்தமாக இருந்து கொண்டு, பூஜையைப் பண்ணிக் கொண்டு, தியானம் செய்துகொண்டு நிம்மதியாக இருக்கலாம். மடம் நடப்பதற்கு இப்போது நீங்கள் பட்டணத்தில் தருகிற மாதிரி இவ்வளவு பணம் வேண்டுமென்பதேயில்லை. மடங்களுக்குப் பணபலம், ஆள்பலம் எல்லாமே ரொம்பக் குறைச்சலாக இருக்க வேண்டும் என்றுதான் என் அபிப்ராயம். பரிவாரம், சிப்பந்திப் பட்டாளங்கள் நிறைய வேண்டியதில்லை. மடத்தில் அதிபதியாக இருக்கப்பட்டவரின் யோக்கியதைதான் அதற்குப் பணம், பலம் எல்லாம்.

ஆதலால், நீங்கள் நிறையப் பணம் தருகிறீர்கள் என்பதற்காக நான் ஏகாந்தத்தைவிட்டு இங்கே டவுன்களுக்கு வரவில்லை. என்னிடத்தில் உங்களுக்கு நிரம்ப அன்பு, பக்தி இருக்கிறது. நீங்கள் கூப்பிட்டு நான் சம்மதித்து வந்திருப்பதில் உங்களுக்கு ரொம்பவும் சந்தோஷமாயிருக்கிறது. ஆனாலும், நான் வரவேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டது, அந்த ஆசை நிறைவேறியதில் சந்தோஷப்படுவது இரண்டும் உங்கள் காரியம். பட்டணங்களுக்கு நான் வந்திருப்பதில் என் காரியம் ஒன்று இருக்கிறது. அது என்ன?

என்னவென்றால், பிராம்மணர்கள் வேதத்தை விடக்கூடாது என்று சொல்லி, தொடர்ந்து வேதரக்ஷணத்துக்கு ஏதாவது ஏற்பாடு செய்யுமாறு பண்ணவேண்டும் என்றுதான் வந்திருக்கிறேன். நம்முடைய மதத்தின் சகல சித்தாந்தங்களுக்கும், வாழ்க்கை முறைக்கும் மூலமாக, வேராக இருக்கிற வேதம் இந்தத் தலைமுறையோடு நசித்துவிடாமல் இருப்பதற்கான ஏற்பாடுகளை நீங்கள் செய்ய வேண்டும் என்று அழுத்தங்கொடுத்துச் சொல்லத்தான் வந்தேன்.

மற்றவர்களை அதட்டிக் கொண்டு, ‘தனக்கு உயர்த்தி கொண்டாடுவதற்காக ஏற்பட்டதல்ல பிரம்மண்யம்’. சமூகத்தின் மசால்ஜி (peon) வேத விளக்கைப் பிடித்துக் கொண்டு வழிகாட்டுவதற்காகத்தான் அது இருக்கிறது. ‘விளக்கை அணைத்து லோகம் முழுவதையும், நம்மோடு மட்டுமில்லாமல் எதிர்காலம் முழுவதற்கும் இருட்டாகி விடாதீர்கள்’ என்று பிராம்மண சமூகத்தைக் கேட்டுக் கொள்வதற்காகத் தான் நான் நகரங்களுக்கு வந்து கொண்டிருக்கிறேன்.

வேதம் இல்லாவிட்டால் மடம் எதற்கு மடாதிபதி எதற்கு? ஆகவே இப்போது என் கனகாபிஷேகத்துக்கும், பீடாரோகணத்துக்கும் காட்டுகிற உற்சாகத்தை வேத ரக்ஷணத்தில் காட்டி, அதற்காகக் கமிட்டி, திட்டம் எல்லாம் வசூல் செய்யுங்கள் என்கிறேன். வேத ரக்ஷணத்தை அடுத்த சந்ததிக்கு ஜீவிய கர்மமாக, ஆயுட்காலப் பணியாக வைக்க முடியாவிட்டால் கூடப்போகிறது. எட்டு வயசிலிருந்து ஆரம்பித்து அப்புறம் பத்து வருஷங்களுக்கு தினம் ஒரு மணி இளம்பிள்ளைகளுக்கு வேத மந்திரங்களிலும் பிரயோகங்களிலும் வகுப்பு நடத்தப் பேட்டைக்கு பேட்டை கூட்டுறவு அடிப்படையில் ஏற்பாடு பண்ணுங்கள் என்கிறேன். இதுதான் எனக்கு வாஸ்தவமான கனகாபிஷேகம், உத்ஸவம் எல்லாம்.

Annadhana sivan

Sivan conducted many festivities on behalf of Kanchi mutt. It was during the year 1933 that the renovation work of the mutt was completed, under the supervision of Sivan. Until the evening of the previous day there were no signs at the place of dining of any activity of food preparation. The articles would start arriving only in the night. But he could organize it very well. Annadana Sivan dedicated his life to feeding lakhs of people and left all his assets for this cause.

Able manager, he could get things done by others, by love. He possess super natural (extra ordinary) skills to arrange high class feast for large number of devotees in a short time. A most notable thing was annadAna Sivan never tasted a morsel of the food served. He would just take some curd rice.

இராமசுவாமி, தமது வாழ்க்கையை காஞ்சி மடத்துடன் பிணைத்துக் கொண்டவர். பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அறுசுவை உணவு படைப்பதைத் தம் வாழ்க்கையின் `மிஷன்’ என்று ஆக்கிக் கொண்டார். பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி உணவருந்தும் இடம் என்றாலும், சமைக்கும் இடம், சாப்பிடும் இடம் எல்லாம் படுசுத்தமாக இருக்குமாம்! தம் சொத்து, சுகம் அனைத்தையும் இதற்காகவே அர்ப்பணித்து விட்டார். சிவன். நடத்திய அன்ன தானங்களினாலேயே இவருக்கு `அன்னதான சிவன்‘ என்னும் புகழ்ப் பெயர் உண்டாயிற்று!

Quality not Quantity is important

Once Paramacharya sent an eminent scholar to a temple (not very popular) to give discourse for few days. Very few people attended. When scholar returned, Paramacharya could observe his unhappiness. He told him, even great personalities, do not get large audience. For Lord Krishna, there was only one student to listen to Geetha. Even Lord Dakshinamaurthy had few students.

Uttharayan Death

General opinion, death during Thai month to Adi month is superior. Time does not matter. How enlightened one is, when he/she dies matter.
உத்தராயண மரணம் என்பதற்குத் தை மாஸத்திலிருந்து ஆடி ஆரம்பிக்கிற வரை உள்ள ஆறு மாஸத்திலிருந்து ஆடி ஆரம்பிக்கிற வரை உள்ள ஆறு மாஸத்தில் செத்துப் போவது என்று ஆசார்யாள் அர்த்தம் பண்ணவேயில்லை. பின்னே எப்படிப் பண்ணியிருக்கிறாரென்றால்: அந்த யோகி, (ஞானி தவிர நிஷ்காம கர்மி, பக்தன் முதலான எந்த உபாஸகனுமே) ஹ்ருதயத்திலிருந்து சிரஸுக்குப் போகிற நாடி வழியாக ப்ராண வியோகமாகி தேவயானம் என்ற தெய்விக மார்க்கத்தின் வழியாக ப்ரஹ்ம லோகத்திற்குப் போகிறான்.
http://www.kamakoti.org/tamil/dk6-120.htm

Simple Food

அவனவன் ஸ்வயம்பாகம் பண்ணிக்க கத்துக் குடுத்துட்டா அதுதான் நெஜமான சீர்திருத்தம். ஒரு சாமான், ரெண்டு சாமான்னு வெச்சிண்டு, ஸாத்வீகமா பெரியவா சொல்றா மாதிரி, மதுரமா, ஸ்நிக்தமா லேசான ஆகாரத்தை நாமே தயார் பண்ணி சாப்பிடணுங்கறதை "ஜன்ம வ்ரதமா" எடுத்துக்கணும். "

Simple Wedding

*as per Paramacharya, if you do not follow this, you can not use his name.
ஸ்ரீ காமகோடி ப்ரதீபம் மலர் -22 இதழ் -5,6 ரௌத்ர வருஷம் ஆனி ஆடி (ஜுன்-ஜுலை - 1981)
ஸ்ரீ காமாக்ஷி சந்நதியில் கல்யாணம் (விவாஹ திட்டம்)
கல்யாணத்திற்கு லிஸ்டு (ஒரு தம்பதிக்கு ஆகும் உத்தேச செலவினம்)
(1) திருமாங்கல்யம் 4 கிராம் அளவில்; (2) நிச்சயதார்த்த வேஷ்டி, அங்கவஸ்திரம்; (3) நிச்சயதார்த்தப்புடவை; (4) முஹூர்த்தப் புடவை, முஹூர்த்த வேஷ்டி, அங்கவஸ்திரம்; (5) குத்துவிளக்கு 1 (6) செம்பு 2; (7) பஞ்சபாத்ர உத்தரணி ஒரு செட்; (8) தாம்பாளம் 1; (9) குத்தடுக்கு 1; (10) காசியாத்ரை சாமான்கள்; (11) வைதீகச் செலவு, சாப்பாட்டு செலவு எல்லாம் சேர்ந்து ரூ.2000/- அளவில் ஒரு தம்பதிக்கு என்ற முறையில் இந்தத்திட்டம் சமர்பிக்கப்பட்டது (1970s cost of living). ஜானவாசம் இல்லாமல் நிச்சயதார்த்தம்; வரதக்ஷிணை கிடையாது, நிச்சயதார்த்த, முஹூர்த்தப் புடவைகள், நூல் புடவைகளாக இருக்கும்.

Some Saints of Kamakoti peetam

  • Sri Parama Sivendhra Saraswathi Swamigal
  • Sri Paramasivendra Saraswati was the Guru of the great Sadasiva Brahmendra (Composer of Carnatic music and Advaita philosopher, 1755 samadhi at Nerur)
  • Sri Bhagavannama Bodhendra Saraswati (Adhisthana at Govindapuram) who stressed Bhakthi.
  • Sri Chandrasekharendra Saraswati V brought the golden image of Kamakshi (Bangaru Kamakshi) to Tanjore.
  • Sri Chandrasekharendra Saraswati VI: Venkatasubramanya Dikshita from the talented family of the Govinda Dikshita, the minister of Tanjore, who is still lovingly remembered as "Ayyan".
  • Sri Sudarsana Mahadevendra Saraswati
  • Sri Chandrasekharendra Saraswati VII from Udayambakkam, who attained mukti at Kalavai in the year 1907.
  • Sri Mahadevendra Saraswati occupied the Peetha for seven days only and attained mukti at Kalavai
  • Sri Chandrasekharendra Saraswati Swamigal - Paramacharya
  • Sri Jayendra Saraswati Swamigal (18 Jul 1935 – 28 Feb 2018) - Sri Subramanyam Mahadeva from Irulneekki, Thanjavur District was initiated into Sanyasa in 1954.
  • Sri Sankara Vijayendra Saraswati Swamigal (18 Mar 1969 - ) - Sri Sankaranarayanan, from Periyapalayam, near Arani, initiated into Sanyasa in 1983

Some personal opinions and observations

Personally, I could not agree with Artificial poverty, similar to Gandhi (India has to be rich to keep Gandhi poor). Idealist and Pacifist Gandhi, could not educate or train his followers. Successors used his name (Gandhi brand), to create a corrupt and violent political India. Supressed Successors will become addicted to wealth and comforts, once denied to them. These great men are unfortunately forced to cover up irregularities, to save organization.
Over time, traditions absorb bad practices and loose relevance. Traditionl views on status of female widows, child marriage, overseas travel, etc... were not accepted by many. Blindly following traditions will lead to life in a prison. All things including rituals/practices/beliefs have to evolve and match with living. One can not control a car with a whip in hand like horse cart. If life continued with out change, we will be stone age culture or hunter gatherers. Change is fact of life. Impermanence is harsh reality. [by nara]

Visit to Tiruvannamalai

Both Ramana Maharishi and Paramacharya, were great saints in their own way. On his visit to Tiruvannamalai, the Acharya turned his eyes towards the entrance of the Asrama, stopped for a few seconds looking round and continued to walk. While all the other asramites went out and waited at the gate for His Holiness, Nagamma alone was left with the Maharishi. Nagamma did not go out, and when asked by Maharishi, she told "Swami does not see Brahmin widows who have not shaved their heads".

The Maharishi just nodded his head and looked at her with compassion. Maharishi's acceptance of both the Acharya's adherence to the institutional customs, and Nagamma's wisdom. Paramacharya stood foremost in strictly observing all the distinction laid out by the Dharma sastras and orthodox traditions, whereas Maharishi stood foremost in practicing equality and detachment.

Kamakoti peetam

Much of information on Sri Bhagavatpada has been lost. After five centuries, Vidyaranya, also known as Madhavacharya (a great scholar, kingmaker, patron saint and high priest), recreated Adi Shankara and Shankara cult to unify Hindus who were fighting against themselves. It is believed that Bhagavatpada founded institutions as a spiritual asset for the devotees. Besides these institutions, many institutions have sprung up from the original roots, serving Hindus. Jyotir Peetha, Govardhan Peetha, Dwaraka Peetha, Sringeri Peetha and Kamakoti Peetha are the populaur mutts. There are others like, Kudali; Avani; Virupaksha; Pushpagiri; Rameswara; Sankeswara Karaveera(Pune, Sankeswar, Satara and Kolhapur); Ramachandrapura; Hariharapura; Bandigadi; Yadaneeru; Kothandarama; Swarnavalli; Nelamavu; Yedatore and Balakuduru.

Some historians are of view, that the Kumbhakonam mutt, a branch of the Sringeri mutt established in 1821 AD by the Tanjore King, Pratap Singh Tuljaji. Later, Kumbhakonam mutt became independent and established itself as the Kamakoti peetam. This is a highly contraversial topic.

Temples or monastries/madam (applicable to all religions) is a cummunity organization along religious lines. Many of them are becoming commercial enterprises. They have very small spiritual content. Instead, can these places provide an opportunity for visitors, to introspect and develop their own spirituality.


Email Contact...Website maintained by: NARA
Terms and Usage