hinduhome prayhome

Universal prayer

Dyanam த்யாநம்

ஓம் - பரம்பொருளை நாம் உணர்ந்து தியானம் செய்வோமாக

Brahman (neuter gender) means the concept of ultimate reality or Great Power/Force behind everything. Also referred as GOD. GOD is infinite, and so can have infinite definitions/views and infinite paths to understand/realize/reach GOD.

தேஹோ தேவாலய: ப்ரோக்த: ஜீவோ தேவ: ஸநாதன: |
த்யஜேத் அக்ஞான நிர்மால்யம் ஸோஹம்போவேந பூஜயேத் ||
Body is the temple. Life or spirit or consciousness is divine or GOD (form of GOD?)


ஸ்லோகம் –Poems

ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात्पुर्णमुदच्यते पूर्णश्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॥
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
ஓம்பூர்ணமத: பூர்ணமிதம்பூர்ணாத் பூர்ண முதச்யதே
பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ணமேவா வஸிஷ்யதே
ஓம்ஸாந்தி : ஸாந்தி : ஸாந்தி :
This is Full and that is also is Full. From Fullness comes that Fullness. Taking Fullness from Fullness, Fullness Indeed Remains.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
Like letter a, starting point of alphapet, God is starting point and also basis or ultimate of everything

ஒன்றாகக் காண்பதே காட்சி; புலன்ஐந்தும்|
வென்றான்தன் வீரமே வீரமாம் - என்றானும்
சாவாமல் கற்பதே கல்வி; தனைப்பிறர் |
ஏவாமல் உண்பதே ஊண்' - [ஔவையார்]
One's outlook should be to see oneness or as ultimate reality (instead of divisiveness). one who has controlled one's five senses is the real brave person. Education is learning with out mistakes or with perfection. Live with pride or Food is to be obtained with sincere work and dignity not some thing thrown to a slave.

ஒன்றே குலமும்ஒருவனே தேவனும்|
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்மே பகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து |
நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே. - திருமந்திரம்2104
Only One race/community and one God. Think good, not only for you but also for every one. This is the only way for salvation and to eliminate fear of death. Let your mind be filled with good thoughts only.

ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यम्
भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्
ஓம்பூர்புவஸ்ஸுவ: || ஓம்தத் ஸவிதுர் வரேண்யம்
பர்க்கோ தேவஸ்ய தீமஹீ | தியோ யோ ந: ப்ரசோதயாத் ||
[Let us meditate on the glory of the creator of the Universe or Mutiverse, who is the embodiment of Knowledge to remove Ignorance and enlighten our Intellect.]

கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன் | .
நற்றாள் தொழாரெனின்.
Purpose of education/studies is to understand, accept and pray or surrender to God/ultimate reality

அந்தமில்லானுக் ககலிடந்தான் இல்லை
அந்தமில்லானை அளப்பவர்தாமில்லை
அந்தமில்லானுக்கு அடுத்தசொல் தான் இல்லை
அந்தமில்லானை அறிந்து கொள்பத்தே - திருமந்திரம்
omnipotent One cannot be transcribed in a single place nor can be measured, nor has any names but can only be experienced]

என்பே விறகாய் இறைச்சி அறுத்திட்டுப் பொன்போல்.
கனலில் பொரிய வார்ப்பினும் அன்போடு
உருகி அகம் குழை வார்க்கன்றி
என்போல் மணியினை எய்த ஒண்ணாதே. - திருமந்திரம்
In an apparent condemnation of the practice of self mortification, Thirumoolar states that there is no use of even frying one's own flesh in the fire till it becomes like gold; one cannot attain salvation unless one becomes deeply devoted whole heartedly to the divine.

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் |
அன்பேசிவமாவது யாரும் அறிகிலார்
அன்பேசிவமாவது யாரும் அறிந்தபின் |
அன்பேசிவமாய் அமர்ந்திருந்தாரே - திருமந்திரம்
Only the ignorant will think that love and Sivan are two different things; only few really understand that Sivan is nothing but love; once everyone understands that Sivan is nothing but love, everyone will become saintly.

முகத்திற்கண் கொண்டு பார்க்கின்ற முடர்காள்
அகத்திற்கண் கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய் தன் மணாளனோடு ஆடிய
சுகத்தைச் சொல் எனல் சொல்லுமாறு எங்கனே.
[Thirumular – limitations of idol worship, how can anyone visualize the Lord through the normal eyes? one can only see the Divine through the mind ; You have to experience it yourself as others can not explain this for you. For example, how can a mother explain to the child the pleasure she had with her beloved]

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை,கேட்டறியோம்.
உனைக் கண்டறிவாரை, முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய் (மாணிக்கவாசகர்) .
ஆதியும் அந்தமும் ஆன ஐயாரன் அடித்தலமே (திருநாவுக்கரசர்) .
ஆதியும்ஈறும் ஆய எம்அடிகள் – (சுந்தரர்) .
The Divine has no beginning, middle or end and is also timeless

உருவமும்அருவமும்ஆய பிரான்” - மாணிக்க வாசகர்.
ஒருநாமம்ஒருருவம்ஒன்றுமில்லாற் காயிரந் திருநாமம்பாடி
நாம்தெள்ளேணம்கொட்டாமோ – திருவாசகம்,
God is formless. For One who does not have any name or any form, why not we give thousand different names and hail His greatness]

ஆரொருவார் உள்குவார் உள்ளத்துள்ளே அவ்வுருவாய்
நிற்கின்ற அருளும்தோன்றும்– அப்பர்
God will appear in any form for one who loves God.

வானாகி மண்ணாகி வளி ஆகி ஒளிஆகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே. - திருச்சதகம்

உற்றாரை யான்வேண்டேன் | ஊர்வேண்டேன்
பேர் வேண்டேன் | கற்றாரை யான்வேண்டேன் |
கற்பனவும் இனி அமையும் | குறலத்து அமர்ந்துறையும் |
கூத்தா உன் குரைகழற்கே | கற்வின் மனம்போலக்
கசிந்துருக வேண்டுவனே
[Manikkavachakar's absolute surrender "he does not want family, place, fame or the company of the learned ; thanks to you everything will come to me; all that I want is to cry like a calf yearning for its mother"].

அன்றேஎன்றன் ஆவியும் | உடலும் உடமை எல்லாமும்
குன்றேஅனையாய் என்னை ஆட்கொண்டபோதே கொண்டிலையோ |
இன்றோர் இடையூறு எனக்குண்டோ | எண்தோள் முக்கண் எம்மானே |
நன்றேசெய்வாய் | பிழை செய்வாய் நானோஇதற்கு நாயகமே.
[Navukkarasar - On the very day you have graced me, you have taken away my soul, body and wealth; I am therefore not concerned about any hardship I may encounter; whether good or bad comes to me I am not responsible]

யாம்அம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமுமல்ல
நின்பால் அருளும் அன்பும் அறனும் முன்றும்
உருளிணர்க் கடம்பின் ஒலிதா ராயோ.
கல்லினுள் மணியும்நீ, சொல்லினுள் வாய்மைநீ,
அறத்தினுள் அன்பு நீ, மறத்தினுள் மைந்து நீ,
வேதத்து மறை நீ, பூ தத்து முதலும் நீ,
வெஞ்சுடர் ஒளியும் நீ, திங்களும் அளியும் நீ
அனைத்தும் நீ, அனைத்தின் உட்பொருளும்நீ.
[கடுவன் இளவெயினனார் – on Lord Murugan , he desires not gold or fame but only the grace. The concept of the omnipresence of God is explained]

சரண கமலாலயத்தை அரைநிமிஷ நேரமட்டில்
தவமுறை தியானம் வைக்க அறியாத
சடகசட முடமட்டி பவவினையிலே சனித்த
தமியின் மிடியால் மயக்கம் உறுவேனோ...
[திருப்புகழ் - arunakiruyar, in his own characteristic modesty, prays that he should not rot and die without being able to meditate on the glorious feet of God whole heartedly at least for half a minute]

யாமோதிய கல்வியும் எம்மறிவும் | தாமேபெற வேலவர்
தந்ததினால் | பூ மேல் மயல்போய் அறமெய்ப் புணர்வீர் |
நாமேல் நடவீர் நடவீர் இனியே - [கந்தரனுபூதி 17]
.உம்பர்கள் ஸவாமி நமோ நம | எம்பெருமானே நமோ நம
ஒண்டொடி மோகா நமோ நம | உன்புகழே பாடி நானினி
அன்புடன் ஆசார பூசைசெய்து | உய்ந்திட வீணாள் படாதருள் புரிவாயே
[திருப்புகழ் 66 - arunakiriyar says that he will use all that his knowledge and all that he has learned from the divine grace only to sing the praise of God or Murugan whom he considered as the Absolute Being]

திருமால் ஆணுமல்லன், பெண்ணுமல்லன், அலியுமல்லன் |
அவன் தேவனுமல்லன், அசுரனுமல்லன், மனிதனுமல்லன்,
பசுபஷியுமல்லன், பிறப்பிறப்புடையவனுமல்லன், குணத்திற்கும்
கர்மத்திற்குமப்பால், உளதிற்கும் இலதிற்குமப்பால். - நம்மாழ்வார்

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்.
உளன் அலன் எனில் அலன் அவன் அருவமிவ்வருவுகள்
உளனென இலனென அவைகுணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஓழிவிலன் பரந்தே - நம்மாழ்வார்
[for believers in form, there are deities, non believers formless conceptual entity, supporting both phenomena, ever existing/extending everywhere]

உலகம் யாவையும் தாம்உள வாக்கலும் |
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் |
அவர் தலைவர், அன்னவர்க்கே சரண் நாங்களே.
[Kampan's concept of the Divine as activities]

ஏழிசையாய் இசைப்பயனாய் | இறைகளோடு இசைந்த இன்பம் ||
இன்பத்தோடு இசைந்த வாழ்வு [sundarar]
எழுநரம்பின் இன்இசை கேட்டானை இன்புற்னை |
பண்ணின் இசையாகி நின்ய் போற்றி [Navukkarasar]
[Concept of the Divine as music]

பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற
நிறைகின்ற பரிபூரணானந்தமே [தாயுமானவர்]


Shanthi – மங்களம் Wishes வாழ்த்துகள்

ஓம் ஸாந்தி : ஸாந்தி : ஸாந்தி :
"OM Shanti", (Shanti meaning peace) is chanted thrice at the end of ancient Indian prayers, to make the past, present and future peaceful. [peace be in all three realms: surroundings, body and mind OR self, you and everyone]

எல்லோரும் இன்பூற்றிருக்க நினைப்பதுவே | அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே [தாயுமானவர்]
Did not know anything else except to wish that everyone shall be happy - ThAyumAnavar

பூமி (நமக்கு) அமைதி வழங்கட்டும்!
வானம் அமைதி வழங்கட்டும்
காற்றுமண்டலம் அமைதி வழங்கட்டும்
கடல் அலைகள் அமைதி வழங்கட்டும்
தாவரங்கள் மூலிகைகள் அமைதி வழங்கட்டும்
கடந்தகாலமும் எதிர்காலமும் அமைதி வழங்கட்டும்
எல்லாப் பொருட்களும் அமைதி வழங்கட்டும்.
எல்லா கிரகங்களும் நட்சத்திரங்களும் அமைதி வழங்கட்டும்.
பிரபஞ்சம் முழுதும் அமைதி நிலவட்டும்
எங்கும் அமைதி நிலவட்டும்! நலங்கள் பெருகட்டும்.

ॐ असतो मा सद्गमय ।तमसो मा ज्योतिर्गमय ।
मृत्योर्मा अमृतं गमय ।ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
அஸதோமா சத்யகமய | தமசோமா ஜோதிர்கமய
ம்ருத்யோமா அம்ருதம் கமய
[Lead me from untruth (fiction) to truth (reality). Lead me from darkness ((ignorance) to light (wisdom). Lead me from death to immortality (free from fear of death)

ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः । भद्रं पश्येमाक्षभिर्यजत्राः ।
स्थिरैरङ्गैस्तुष्टुवागँसस्तनूभिः । व्यशेम देवहितं यदायूः ।
ஓம் பத்ரம் கர்ணேபி: ஸ்ருணுயாம தேவா:
பத்ரம் பஸ்யேமாக்ஷபிர் யஜத்ரா
ஸ்திரைரங்கைஸ் துஷ்டுவா ஸஸ்துநூபி:
வ்யஸேம தேவஹிதம் யதாயு:
ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:
Om, May we Hear with our Ears what is Auspicious, O Devas. May we See with our Eyes what is Auspicious, O Yajatraa. May we Live with Contentment with Strong Body and Limbs. May we Praise the God and sing His Glories during our Lifespan Allotted to us by the Devas

ॐ सह नाववतु । सह नौ भुनक्तु ।सह वीर्यं करवावहै ।
तेजस्वि नावधीतमस्तु मा विद्विषावहै । ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
ஓம் || ஸஹநாவது ஸஹநௌபுநக்து | ஸஹவீர்யம் கரவாவஹை |
தேஜஸ்விநாவதீ தமஸ்து வாவித் விஷாவஹை
Om, May God Protect us Both (the Teacher and the Student). May God Nourish us Both. May we Work Together with Energy and Vigour. May our Study be Enlightening and not give rise to Hostility, Let us be protected and get food. Let us do valorous deeds. This knowledge illuminate us and make us at peace.

ॐ सर्वेशां स्वस्तिर्भवतु । सर्वेशां शान्तिर्भवतु ।
ॐ सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः ।
सर्वे भद्राणि पश्यन्तु | मा कश्चिद्दुःखभाग्भवेत् ।
सर्वेशां पुर्णंभवतु । सर्वेशां मङ्गलंभवतु ।
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
ஸர்வேசம் ஸ்வஸ்தீர் பவது! ஸர்வேசம் ஷாந்திர் பவது
ஸர்வேசம் பூர்ணம் பவது! ஸர்வேசம் மங்களம் பவது
ஸர்வே பவந்து ஸுகின ஸர்வே சந்து நீராமயா
ஸர்வே பத்ரானி பச்யந்து மா கஸ்ஷித் துக்ஹபாக்பவேத்
May there be Well-Being in All. May there be Peace in All. May there be Fulfilment in All. May there be Auspiciousness in All. May All become Happy. May All be Free from Illness. May All See what is Auspicious. May no one Suffer.

ॐ वाङ् मे मनसि प्रतिष्ठिता । मनो मे वाचि प्रतिष्ठितम् ।
आविराविर्म एधि । वेदस्य म आणीस्थः ।
श्रुतं मे मा प्रहासीः अनेनाधीतेनाहोरात्रान्सन्दधामि ।
ஓம் வாங்மே மனஸி பிரதிஷ்ட்டிதா |
மனோ மே வாசிபிரதிஷ்ட்டிதம் |
ஆவிராவீர்ம ஏதி | வேதஸ்ய ம ஆணீஸ்த:
ச்ருதம் மே மா ப்ரஹாஸீ: | அனேனாதீதேனாஹோ ராத்ரான் ஸந்ததாமி I
Om, Let My Speech be Established in My Mind. Let My Mind be Established in My Speech. Let the Knowledge of the Self-Manifest Atman Grow in Me. Let My Mind and Speech be the Support to Experience the Knowledge of the Vedas. Let what is Heard by Me (from the Vedas) be Not a mere Appearance, but what is Gained by Studying Day and Night be Retained.

ऋतं वदिष्यामि । सत्यं वदिष्यामि ।
तन्मामवतु । तद्वक्तारमवतु ।
अवतु माम् ।अवतु वक्तारामवतु वक्तारम् ॥
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
ரிதம் வதிஷ்யாமி | சத்யம் வதிஷ்யாமி I
தன்மாமவது I தத்வக்தாரமவது I
அவது மாமவது வக்தாரமவது வக்தாரம் I
I Speak about the Divine Truth. I Speak about the Absolute Truth. May That Protect Me. May That Protect the Preceptor. May that Protect Me. May that Protect the Preceptor and May that Protect the Preceptor.

ॐ द्यौः शान्तिरन्तरिक्षं शान्तिः
पृथिवी शान्तिरापः शान्तिरोषधयः शान्तिः ।
वनस्पतयः शान्तिर्विश्वेदेवाः शान्तिर्ब्रह्म शान्तिः
सर्वं शान्तिः शान्तिरेव शान्तिः सा मा शान्तिरेधि ॥
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
ஓம் த்யௌ ஷாந்திர்: அந்தரிக்ஷம் ஷாந்தி:
ப்ரித்வி ஷாந்திர்: ஆபஹ் ஷாந்திர்: ரோஷதயா ஷாந்தி:
வனஸ்பத்ய ஷாந்திர்: விஸ்வேதேவ ஷாந்திர்: ப்ரஹ்ம ஷாந்தி:
ஸர்வம் ஷாந்திர்: ஷந்திரெவ ஷாந்தி: ஸா மா ஷாந்திர் யேதி ॥
Om, May there be Peace in Heaven, May there be Peace in the Sky. May there be Peace in the Earth, May there be Peace in the Water, May there be Peace in the Plants. May there be Peace in the Trees, May there be Peace in the Gods in the various Worlds, May there be Peace in Brahman. May there be Peace in All, May there be Peace Indeed within Peace, Giving Me the Peace which Grows within Me. Om, Peace, Peace, Peace.

மது வாதா ருதாயதெ | மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் நஸ் ஸந்த்வோஷதீ: ||
மது நக்த முதோஷஸி மதுமத் பார்திவ ரஜு: மது த்யௌரஸ்து ந: பித ||
மதுமாந் நொ வனஸ்பதி: | மதுமாந் அஸ்துஸூர்ய: மாத்வீர் காவோ பவந்து ந: மது மது மது
Let air do me good and rivers and medicinal plants give me sweetness. Let night and day do me good. Let earth give me sweetness and very good quality food. Let the sky , which is like my father not trouble me with no rain or excess rain and grant me pure pleasure. Let trees bless me by giving fruits. Let Sun god give me energy without much hot weather. Let cows give me sweet milk.

ஸ்வஸ்தி ப்ரஜாப்ய: பரிபாலயந்தாம் | நியாய்யேன மார்கேண மஹிம் மஹீசா: ||
கோப்ராஹ்மணேப்ய: சுபமஸ்து நித்யம் | லோகாஸ் ஸமஸ்தா: சுகினோ பவந்து ||

ஓம் ஸாந்தி : ஸாந்தி : ஸாந்தி :

Naivedyam Prayer before eating

अन्नम परब्रःम्म श्र्वरूपम् - अहमन्नम अहम अन्नदोहम
ब्रह्मार्पणं ब्रह्मा हविः ब्रह्माग्नौ ब्रह्मणा हुतम्
ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्मा कर्म समाधिना
அன்னம் பரப்ரம்ம ஸ்வருபம்
அஹம் அன்னம். அஹம் அன்னதொஹம்
ப்ரஹ்மார்பணம் ப்ரஹ்ம ஹவிர் | ப்ரஹ்மக்நௌ ப்ரஹ்மந ஹுதம்
ப்ரஹ்மைவ தெந கந்டவ்யம் | ப்ரஹ்ம கர்ம ஸமாதிநா
[Food is God/Brahman. I am the food! I I am the eater of the food. Bhagavad-Gita: The whole creation being a gross projection of Brahman, so the vitally important food too is Brahman, the process of offering it is Brahman, it is being offered to the fire of Brahman. Prasada (blessed food) is a holy gift from Brahman, the Lord.]

अन्नं वै प्राणः अन्नं न निन्द्यत. तदव्रतम, प्राणो वा अन्नंम, सरीरमअन्नदम. अन्नं बहु कुर्वीतः
அன்னம் வை ப்ராண. அன்னம் ந நிந்த்யத். தத்வ்ரதம்.
ப்ராணொ வா அன்னம். ஸரீரம் அன்னதம். அன்னம் பஹு குர்வீத்:
[All life forces comes from food. Donot speak ill of or abuse Annam (Food): that is the vow. Prana (the God that reside with in us) is food: In prana the body is established. Let food be produced in plenty]

அஹம் வைஸ்வநரொ புட்வ | ப்ரநிநம் தெஹம் அஸ்ரித ப்ரநபந ஸமயுக்டஹ் | பசமை அணம் சதுர்விதம்
[Brahman is the fire of digestion in the stomach of all living entities, and I join with the air of life, incoming and outgoing, to digest the four types of food (solid, liquid, semifluid, and fluid) which they eat".]


Food for thought

விஜ்ஞானம் நாமரூபம் சதயதனம்
Living is about: Consciousness - Mind and Matter - Sense Gates
ஸ்பர்சம் வேதனம் திருச்ணம் உபாதனம்
Contact - Feeling - Craving - Clinging
பவம் ஜாதி ஜாராமரணம் நிறுபயம் சக்ரவர்திம்
Becoming - Birth Aging and Dying - Even great king is helpless, have to accept (or concern of) harsh realities

மந்திர தந்திரம் லௌகிகம்
ஸுன்யப் பிரச்னம் விஜ்ஞானம்
சத்யம் தர்மம் ப்ரஹ்மஸ்வருபம்
ப்ரணிதானம் போதிஸத்த்வம்
[Hymns/rituals/formalities are for worldly things. Only by questioning and searching with open or empty mind, one can understand nature. Openness or egoless state is the way to understand anything. Science is understanding nature and using that knowledge to make our living comfortable. Truth and Natural laws or Universal laws are the forms or views of ultimate reality or great force/power above us. Pranidhanat means surrender, letting go, devotion to almighty, which is the ultimate answer.
Learning is a Life Journey seeking TRUTH. Experience is more important than destination.

எல்லாம் தெய்வம்

உயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
பயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;
வெயில் அளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்,
மேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;
எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம் -[by பாரதி]-

Tamil God definitions:
ஈசன் means அரசன், ஆள்பவன், இறைவன், மூத்தவன், கடவுள், குரு, தலைவன். கடவுள் or இறைவன் or ஆண்டவன் is முழுமைத்தன்மையுடைய, அனைத்தும் மிஞ்சிய, எங்கும் பரவி இருக்கின்ற, அனைத்தையும் கண்காணிக்கின்ற, எதையும் சார்ந்து இராத ஒரு சக்தி(பேராற்றல்). அப்பொருளானது உருவமற்றதாக, அன்பு கொண்டதாக, அறிவுமிக்கதாக, நிலையானதாக அநாதியாக உள்ளது. Known as “பதி” - படைத்துக் காப்பவர். இறப்பு, பிறப்பு, இன்பம், துன்பம் போன்ற உலக வாழ்வில் தொடர்புடைய அனைத்தையும் கடந்து நிற்கும் மறைபொருள்.
அன்பு, புனிதம், கருணை என்பவற்றின் மறு பொருள் கடவுள்
கடவுளுக்குக் கற்பிக்கப்பட்ட உருவங்களைத் தெய்வம்
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்,
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
- தொல்காப்பியம் அகத்திணையியல்

Oom is God
ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி
ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம்
ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம்
ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே
எது, ` ஞானவடிவத்தை உடையதோ, ஆகாயத்தைப் போன்று வடிவம் இல்லாததோ, எல்லாவற்றிற்கும் மேலானதோ, எப்பொழுதும் ஒளிர்ந்து கொண்டு உள்ளதோ, பிறப்பற்றதோ, இரண்டில்லாமல் ஒன்றாகவே உள்ளதோ, அழிவற்றதோ, எத்துடனும் சேர்க்கையற்றதோ, எங்கும் நிறைந்து உள்ளதோ, இரண்டற்றதோ, எப்பொழுதும் சுதந்திரமாக உள்ளதோ, அதுவே ` ஓம். (உபதேச ஸாஹஸ்ரி 10. 1).


Summary

(1) அறிந்தும் அறியாத ஓன்றுக்கு பல பெயரிட்டு உருக்கொடுத்து உள்ளத்தைக் கொடுத்தேனே
(2) இல்லாத அது ஒன்றாய் இரண்டாகி பலவாகி மாயமாய் எங்கும் இருந்ததே
(3) உவமையில்லாத அது அழுக்கால் பிரிந்த என்னை ஆட்கொண்டு அருளியதே
(4) ஐம்பூதமான அது கருவாய் உயிராய் உணர்வாய் உள் ளத்தில் கிடந்ததே
(5)எதிலும் எங்கும் உள்ள-அதை அன்பிலும் அறிவிலும் அறத்திலும் கண்டேனே
(6) ஒன்றாகக் காண்பதே காட்சி என உணர்த்தி பூர்ணமான ஸுன்யத்தில் மறைத்ததே

cosmic mind: நிர்குண ப்ரஹ்மம். நிர்குணமான (குணங்களற்ற), நிரஞ்சனமான (மாசற்ற) எந்த ஆத்மா உள்ளதோ, அதை நாம் ப்ரஹ்மம் பரமாத்மா

விஸ்வ ப்ரஹ்மம் தான் ப்ரஹ்மம் - ஸச்சிதாநந்த ரூபமான 'ஸத்யமாயும் விஜ்ஞானமாயும், ஆந்தமாயும் உள்ளது ப்ரஹ்மம்

ஸமுத்பவம் தஸ்மாத் ஸர்வகதம் ப்ரஹ்ம நித்யம் - அழிக்க முடியாத ப்ரஹ்மம் அனைத்திலும் வியாபித்திருக்கும்

Brahman (neuter gender) means the concept of ultimate reality or Supreme Cosmic Spirit. Brahman is a concept that "cannot be exactly defined. The metaphysical concept: "Brahman — attributeless, formless, eternal Highest Reality". Brahman is: "One without a second", "everything is nothing but It", "everything is from It", "everything is contained in It", and may be "everything will be eventually absorbed into It". Brahman is the ultimate essence, whose nature can be guessed, but not known. Wisdom may just be guessing unknown Brahman. H4>Concluding verse நமக்குள் உள்ள பரம்பொருளை
எங்கும் நிறைந்து இயற்கையாய் இயங்கும்
சர்வ வல்லமையுள்ள அந்த பரம்பொருளை
நாம் வணங்குவோமாக
Let us worship the almighty, the essence within us
which exists everwhere as omnipotent nature


Email Contact...Website maintained by: NARA
Terms and Usage