Non commercial web site of personal collections, available to every one. Use it if you find them useful. Encouraged to copy and distribute if needed.
Thirumurai is one of the comprehensive works on Saivism, considered as the Vedas. These holy hymns have been sung by Saivite Saints and poets, seeking the Truth (around 7th to 9th century AD). The songs reflect and teach the ways of present life, after-life and the path to reach the Almighty. First 9 thirumuRaikal sung by a total of 12 poets. These 12 thirumuRais are arranged in four catagories. The first 9 on praise. 10th on guidelines. 11th is assorted. 12th is history.
1 - 3 | திருக்கடைக்காப்பு, தேவாரம் by திருஞான சம்பந்தர் |
4 - 6 | தேவாரம் by திருநாவுக்கரசர் |
7 | திருப்பாட்டு தேவாரம் by சுந்தரர் |
8 | திருவாசகம் & திருச்சிற்றம்பலக் கோவையார் by மாணிக்க வாசகர் |
9 | திருவிசைப்பா, திருப்பல்லாண்டு by திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர் |
10 | திருமந்திரம் by திருமூலர் |
11 | பிரபந்தம் by திருவாலவாயுடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமான் அடிகள், அதிராவடிகள், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி |
12 | திருத்தொண்டர் புராணம் by சேக்கிழார் |
Tirumarai 1 to 3: திருக்கடைக்காப்பு Tirugnana Sambandar
[To TOP]
-
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசி யென்னுள்ளங் கவர் கள்வன்
ஏடுடையமலரான் முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரமேவிய பெம்மானிவனன்றே.
He is the one who wears the stud in his ear. He sports the crescent moon on his head. He smears the ash from the burning ghat all over his body. He enthralled me. Lord Brahma who is seated on a lotus prayed to him once to help in the creation of the world. Our lord granted his prayers. He has taken dwelling in this great shrine brahmapuram.
-
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே. -- 1.10.1
-
மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ்
உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ. -- 1.23.1
-
பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி
ஏத்தா தாரில்லை யெண்ணுங்கால்
ஓத்தூர் மேய வொளிமழு வாள்அங்கைக்
கூத்தீ ரும்ம குணங்களே. -- 1.54.1
-
வேதமோதி வெண்ணூல்பூண்டு வெள்ளையெருதேறிப்
பூதஞ்சூழப் பொலியவருவார் புலியினுரிதோலார்
நாதாஎனவும் நக்காஎனவும் நம்பாஎனநின்று
பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் பழனநகராரே. --1.67.1
-
நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே. --1.98.1
-
கைம்மகவேந்திக் கடுவனொடூடிக் கழைபாய்வான்
செம்முகமந்தி கருவரையேறுஞ் சிராப்பள்ளி
வெம்முகவேழத் தீருரிபோர்த்த விகிர்தாநீ
பைம்முகநாகம் மதியுடன்வைத்தல் பழியன்றே. --1.98.2
-
மந்தம்முழவம் மழலைததும்ப வரைநீழல்
செந்தண்புனமுஞ் சுனையுஞ்சூழ்ந்த சிராப்பள்ளிச்
சந்தம்மலர்கள் சடைமேலுடையார் விடையூரும்
எந்தம்மடிகள் அடியார்க்கல்லல் இல்லையே. --1.98.3
-
துறைமல்குசாரற் சுனைமல்குநீலத் திடைவைகிச்
சிறைமல்குவண்டுந் தும்பியும்பாடுஞ் சிராப்பள்ளிக்
கறைமல்குகண்டன் கனலெரியாடுங் கடவுள்ளெம்
பிறைமல்குசென்னி யுடையவனெங்கள் பெருமானே. --1.98.4
-
அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். --1.116.1
-
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே. --1.123.5
-
புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
அறிவழிந்திட் டைம்மேலுந்தி
அலமந்த போதாக அஞ்சேலென்
றருள்செய்வான் அமருங்கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட
முழவதிர மழையென்றஞ்சிச்
சிலமந்தி யலமந்து மரமேறி
முகில்பார்க்குந் திருவையாறே. --1.130.1
-
நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை
கூறுசேர்வதொர் கோலமாய்ப்
பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை
ஆறுசேர்சடை அண்ணலே. --1.135.1
-
மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்
நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்
பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்
அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர்
வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை
இரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே
தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை
எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே. --1.136.1
-
சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும்
மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
இதுநன் கிறைவைத் தருள்செய்க எனக்குன்
கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே. 2.37.1
-
மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண் பின் உருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய். 2.47.1
2.66 திருஆலவாய் - திருநீற்றுப்பதிகம்
-
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே. 2.66.1
-
வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே.
-
முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.
-
காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.
-
பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே.
-
அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே.
-
எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே.
-
இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே.
-
மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே.
-
குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூட
கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே.
-
ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே. 2.66.11
-
இடரினுந் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே. 3.4.1
3. 22 திருப்பஞ்சாக்கரப்பதிகம்
-
துஞ்சலுந் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சக நைந்து நினைமின் நாடொறும்
வஞ்சகம் அற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.
-
மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்
கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.
-
ஊனிலு யிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்
ஞானவி ளக்கினை யேற்றி நன்புலத்
தேனைவ ழிதிறந் தேத்து வார்க்கிடர்
ஆனகெ டுப்பன அஞ்செ ழுத்துமே.
-
நல்லவர் தீயரெ னாது நச்சினர்
செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ
கொல்லந மன்தமர் கொண்டு போமிடத்
தல்லல்கெ டுப்பன அஞ்செ ழுத்துமே.
-
கொங்கலர் மன்மதன் வாளி யைந்தகத்
தங்குள பூதமும் அஞ்ச வைம்பொழில்
தங்கர வின்படம் அஞ்சுந் தம்முடை
அங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே.
-
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்
அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே.
-
வீடு பிறப்பை யறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன பின்னை நாடொறும்
மாடு கொடுப்பன மன்னு மாநடம்
ஆடி யுகப்பன அஞ்செ ழுத்துமே.
-
வண்டம ரோதி மடந்தை பேணின
பண்டையி ராவணன் பாடி யுய்ந்தன
தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்
கண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே.
-
கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச்
சீர்வணச் சேவடி செவ்வி நாடொறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்
கார்வண மாவன அஞ்செ ழுத்துமே.
-
புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச்
சித்தத் தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறணி வார்வி னைப்பகைக்
கத்திர மாவன அஞ்செ ழுத்துமே.
-
நற்றமிழ் ஞானசம் பந்தன் நான்மறை
கற்றவன் காழியர் மன்னன் உன்னிய
அற்றமில் மாலையீ ரைந்தும் அஞ்செழுத்
துற்றன வல்லவர் உம்ப ராவரே.
-
மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலைக்
கண்ணின்நல் லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணின்நல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே. 3.24.1
-
மானின்நேர்விழி மாதராய்வழு திக்குமாபெருந் தேவிகேள்
பானல்வாயொரு பாலனீங்கிவன் என்றுநீபரி வெய்திடேல்
ஆனைமாமலை ஆதியாய இடங்களிற்பல அல்லல்சேர்
ஈனர்கட்கெளி யேனலேன்திரு ஆலவாயரன் நிற்கவே 3.39.1
3. 49 நமச்சிவாயத் திருப்பதிகம்
-
காதலாகிக்கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம்
நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே. 3.49.1
If one utters your name with deep love and sing your praise with tears rolling down, you will show the right path; the name namachivAya, is the real essence of all the four vedhas".
-
நம்பு வாரவர் நாவி னவிற்றினால்
வம்பு நாண்மலர் வார்மது வொப்பது
செம்பொ னார்தில கம்முல குக்கெலாம்
நம்பன் நாமம் நமச்சி வாயவே.
-
நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந்
தக்கு மாலைகொ டங்கையில் எண்ணுவார்
தக்க வானவ ராத்தகு விப்பது
நக்கன் நாமம் நமச்சி வாயவே.
-
இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
நயம்வந் தோதவல் லார்தமை நண்ணினால்
நியமந் தான்நினை வார்க்கினி யான்நெற்றி
நயனன் நாமம் நமச்சி வாயவே.
-
கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள்
இல்லா ரேனும் இயம்புவ ராயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவ ரென்பரால்
நல்லார் நாமம் நமச்சி வாயவே.
-
மந்த ரம்மன பாவங்கள் மேவிய
பந்த னையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சி வாயவே.
-
நரக மேழ்புக நாடின ராயினும்
உரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர்
விரவி யேபுகு வித்திடு மென்பரால்
வரதன் நாமம் நமச்சி வாயவே.
-
இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல்
தலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை
நலங்கொள் நாமம் நமச்சி வாயவே.
-
போதன் போதன கண்ணனும் அண்ணல்தன்
பாதந் தான்முடி நேடிய பண்பராய்
யாதுங் காண்பரி தாகி அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சி வாயவே.
-
கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள்
வெஞ்சொல் மிண்டர் விரவில ரென்பரால்
விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய்
நஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே.
-
நந்தி நாமம் நமச்சிவா யவெனுஞ்
சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல்
சிந்தை யால்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம்
பந்த பாசம் அறுக்கவல் லார்களே.
-
குற்றம்நீ குணங்கள்நீ கூடல்ஆல வாயிலாய்
சுற்றம்நீ பிரானும்நீ தொடர்ந்திலங்கு சோதிநீ
கற்றநூற் கருத்தும்நீ அருத்தமின்பம் என்றிவை
முற்றும்நீ புகழ்ந்துமுன் னுரைப்பதென்மு கம்மனே. 3.52.3
-
கண்பொலி நெற்றியினான் திகழ்கையிலோர் வெண்மழுவான்
பெண்புணர் கூறுடையான் மிகுபீடுடை மால்விடையான்
விண்பொலி மாமதிசேர் தருசெஞ்சடை வேதியனூர்
தண்பொழில் சூழ்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.
-
திடமலி மதிலணி சிறுகுடி மேவிய படமலி அரவுடை யீரே
படமலி அரவுடை யீருமைப் பணிபவர் அடைவதும் அமருல கதுவே. 3.97.1
-
உற்றுமை சேர்வது மெய்யினையே உணர்வது நின்னருள் மெய்யினையே
கற்றவர் காய்வது காமனையே கனல்விழி காய்வது காமனையே
அற்றம் மறைப்பதும் உன்பணியே அமரர்கள் செய்வதும் உன்பணியே
பெற்று முகந்தது கந்தனையே பிரம புரத்தை யுகந்தனையே. 3.113.1
-
மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழ லுருவன் பூதநா யகனால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவா யாவதும் இதுவே. 3.120.1
-
நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பும் நிமலர்நீ றணிதிரு மேனி
வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர்
கரைகெழு சந்துங் காரகிற் பிளவும் அளப்பருங் கனமணி வரன்றிக்
குரைகடல் ஓதம் நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே. 3.123.1
-
கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில
சொல்லூர்ப் பெருமணஞ் சூடல ரேதொண்டர்
நல்லூர்ப் பெருமண மேயநம் பானே. 3.125.1
கோளறு பதிகம் - திருஞானசம்பந்தர்
[To TOP]
Jainism was on the rise in the pandya kingdom and the king had become a jain too. There was a lot of discrimination against saivites. They learned about the greatness of thirugnana sambandar and felt that he can show the right path to the pandya king. Hence, they sent a message to thirugnana sambandar explaining the situation and requested him to visit madurai.
Thirunavukkarasar himself had been persecuted by the jains in the past. He felt that, sambandar being a very young boy, the jains may cause him bodily harm. Further, he concluded that astrologically, that was not an auspicious period for sambandar to undertake this venture. Hence, he tried to dissuade sambandar from going to madurai. Sambandar assured thirunavukkarasar that no harm will come to an ardent siva devotee like him. He then sang this set of songs. This is known as kolaru padhigam. (kol = planet. Aru = remove bad effects. Padhigam = set of 10 songs)
-
வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறுநல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
Siva shares His body with pArvathi (who has bamboo like arms); He has a stained throat due to the poison he ate; He plays a very good veena; He wears a blemish-less moon and the Ganga river on his head; He entered my heart and dwells there. Therefore, all the nine planets (sun, moon, .... rAhu and kEthu) are good without any blemish. They are very good to the devotees indeed.
-
என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
Bones, boar's tusk, and tortoise shell adorn Siva's chest. He wears a garland of datura flowers (with golden pollen) and the Ganga river on his head. He rides on a bull with Parvathi. He entered my heart and dwells there. As per astrologers, some nakshtras (days) are not good for travel and other ventures. But, all the days (nakshatras),that are considered inauspicious are good without any blemish. They are very good to the devotees indeed.
-
உருவளர் பவளமேனி யொளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கண் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசைதெய்வ மான பலவும்
அருநெதி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
Siva has a beautiful coral like red body that is smeared with bright holy ash. He wears fragrant kondRai flowers and the moon on His head. He rides on a white bull with Parvathi. He entered my heart and dwells there. Therefore, all deities such as Lakshmi (goddess of wealth), Durga (goddess of victory), mother earth, and guardians of the various quarters are good like rare wealth. They are very good to the devotees indeed.
-
மதிநுதன் மங்கையோடு வடபா லிருந்து மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும்
அதிகுணம் நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
Our Lord Siva accompanied by pArvathi (who has a beautiful forehead like crescent moon) sits under a banyan tree and teaches the vedas. He wears Ganga river and garland of kondRai flowers on His head. He entered my heart and dwells there.
Therefore, even angry Time/Kalan, fire, Yama and his messengers, and various deadly diseases become very good. They are very good to the devotees indeed.
-
நஞ்சணி கண்டன்எந்தை மடவாள்த னோடும் விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும்
அஞ்சிடு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
Our Father Siva has a (dark) throat adorned by the poison. He rides on a bull accompanied by pArvathi. He wears vanni leaves (Indian Mesquite) and kondRai flowers (Indian Laburnum) on his head. He entered my heart and dwells there. Therefore, dreadfully angry asuras, roaring thunder, lightning, and all the elements will be afraid (of us) and be very good. They are very good to the devotees indeed.
-
வாள்வரிய தளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடு உடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
Siva wears bright striped tiger skin and a loin cloth. He wears fresh flowers, vanni leaves (Indian Mesquite), kondRai flowers (Indian Laburnum), and Ganga river on his head. He is accompanied by Parvathi. He entered my heart and dwells there. Therefore, powerful deadly tigers, elephants, boars, cobras, bears, and lions are very good. They are very good to the devotees indeed.
-
செப்பிள முலைநன்மங்கை யொருபாக மாக விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
Siva has Parvathi (who has beautiful breast) as one half of His body. He is the source of all good things. He wears on His head the beautiful young crescent moon and the Ganga river that approached Him. He entered my heart and dwells there. Therefore, all kinds of fevers, chills, and diseases that are caused by imbalance of bodily fluids, etc. will not cause any trouble. They are very good. They are very good to the devotees indeed.
-
வேள்பட விழிசெய்தன்று விடைமே லிருந்து மடவாள் தனோடு உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
Long ago, Siva opened His third eye and burnt manmathan (god of love) down. He wears bright crescent moon, vanni leaves (Indian Mesquite), and kondRai flowers (Indian Laburnum). He is seated on a bull with Parvathi. He entered my heart and dwells there. Therefore, we will have no troubles from Ravana, (the king of Lanka surrouned by the seven seas), and other afflictions. The deep sea will be very good. They are very good to the devotees indeed.
-
பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலு மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
Siva, the Supreme Being, assumes many forms. He is the ardhanArIsvara, with Parvathi as one half of His body. He rides on a bull. He wears Ganga river and erukku flower (crown flower - Calotropis gigantea) on His head. He entered my heart and dwells there. Therefore, Brahma (who is seated on the lotus flower), Vishnu, Vedas, Devas, the future, the seas, the Meru mountain, etc. will be very good. They are very good to the devotees indeed.
-
கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியுநாக முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரொ டமணைவாதில் அழிவிக்கும்அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
Siva (vikirthan- one who acts differently) took the form of a hunter and went with Parvathi (who wears bunches of flowers on her curly hair) to bestow his grace on Arjuna. He wears datura flower, crescent moon, and cobra on His head. He entered my heart and dwells there. Therefore, Lord's holy ash will defeat the Buddhists and the Jains in the debates. Its greatness is certain. All will be very good. They are very good to the devotees indeed.
-
தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளுநாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.
PiramApuram derives its name from Brahma (who worshipped there). It has many groves full of bees (/fragrance). Sugarcane and excellent rice varieties grow in plenty. Its abundant wealth is seen everywhere. The sage ~njAna samba~ndhan (who knows both divine and non-divine knowledge) hails from that town. He has sung this garland of words to dispel the ill effects caused by planets, stars, and other such things so that the devotees do not suffer. Those devotees who chant this padhigam (set of songs) will rule the heavens. It is Our command!
Tirumarai 4 to 6: Devaram by Tirunavukku arasar
[To TOP]
Marul neekiyaar, the original name of Thirunavukkarasar, in the early periods of his life got illusioned by the Jain principles and became a Jain follower with the name Devaseynar. He had heavy pain in stomach. Finally he returned to his sister, who gave him the Holy Ash and asked him to pray the Lord of Thiruvadhikai. He sang this hymn and the God gave him relief from his pain and since he impressed the Lord with his hymns the Lord gave him the name "Thirunaavukkarasu" meaning the king of the tongue.
-
கூற்றாயின வாறுவி லக்ககிலீர்
கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே. 4.1.1
The great one (Sivan who has a bull) who dwells in Adhigai Veerattaanam on the northern bank of river Ketilam! Kindly cure my disease which is giving me pain like the god of death. I do not know if I did many cruel acts to get this disease. I bow to your feet only, always night and day without leaving them. being invisible, inside my belly to disable me by binding together with the intestines. I, who am your slave, could not bear the pain you must admit me as your slave by removing the disease.
-
நெஞ்சம்முமக் கேயிட மாகவைத்தேன்
நினையாதொரு போதும் இருந்தறியேன்
வஞ்சம்மிது வொப்பது கண்டறியேன்
வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சாகி வந்தென்னை நலிவதனை
நணுகாமல் துரந்து கரந்துமிடீர்
அஞ்சேலுமென் னீர்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே. 4.1.2
-
பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர்
படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்
துணிந்தேயுமக் காட்செய்து வாழலுற்றாற்
சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர்
பெற்றமேற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண்
டணிந்தீரடி கேள்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மனே. 4.1.3
You are capable of ruining the sins of those who salute! You roam around accepting alms in the fallen white skull! With courage when I get into Your fold and live, the Sulai disease is burning! Please remove it! You are able to besmear in the ash of those bonded! You are happy with the bull vehicle! You have adorned with surrounding white skulls! Oh Reverend! Mother-like at the Thiruvadhikai Virattanam adjacent of Kedilam river!
-
சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ்
சுடர்த் திங்கட் சூளாமணியும்
வண்ண உரிவை யுடையும்
வளரும் பவள நிறமும்
அண்ணல் அரண்முர ணேறும்
அகலம் வளாய அரவும்
திண்ணன் கெடிலப் புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை
அஞ்ச வருவது மில்லை. 4.2.1
-
மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன். 4.3.1
4. 9 திருஅங்கமாலை
-
தலையே நீவணங்காய் - தலை மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத் தலையே நீவணங்காய். 4.9.1
-
கண்காள் காண்மின்களோ - கடல் நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக் கண்காள் காண்மின்களோ. 4.9.2
-
செவிகாள் கேண்மின்களோ - சிவன் எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ் செவிகள் கேண்மின்களோ. 4.9.3
-
மூக்கே நீமுரலாய் - முது காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீமுரலாய். 4.9.4
-
வாயே வாழ்த்துகண்டாய் - மத யானை யுரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்றன்னை வாயே வாழ்த்துகண்டாய். 4.9.5
-
நெஞ்சே நீநினையாய் - நிமிர் புன்சடை நின்மலனை
மஞ்சா டும்மலை மங்கை மணாளனை நெஞ்சே நீநினையாய். 4.9.6
-
கைகாள் கூப்பித்தொழீர் - கடி மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக் கைகள் கூப்பித்தொழீர். 4.9.7
-
ஆக்கை யாற்பயனென் - அரன் கோயில் வலம்வந்து
பூக்கை யாலட்டிப் போற்றி யென்னாதவிவ் வாக்கை யாற்பயனென். 4.9.8
-
கால்க ளாற்பயனென் - கறைக் கண்ட னுறைகோயில்
கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக் கால்க ளாற்பயனென். 4.9.9
-
உற்றா ராருளரோ - உயிர் கொண்டு போம்பொழுது
குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக் குற்றார் ஆருளரோ. 4.9.10
-
இறுமாந் திருப்பன்கொலோ - ஈசன் பல்கணத் தெண்ணப்பட்டுச்
சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங் கிறுமாந் திருப்பன்கொலோ. 4.9.11
-
தேடிக் கண்டுகொண்டேன் - திருமாலொடு நான்முகனுந்
தேடித் தேடொணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டுகொண்டேன். 4.9.12
4. 11 நமச்சிவாயப்பதிகம்
-
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே. 4.11.1
-
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினனுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே. 4.11.2
-
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே. 4.11.3
-
இடுக்கண்பட் டிருக்கினும் இரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே. 4.11.4
-
வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம் அருமறை யாறங்கந்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே. 4.11.5
-
சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறு நல்கு வான்நலன்
குலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே. 4.11.6
-
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே. 4.11.7
-
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே. 4.11.8
-
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே. 4.11.9
-
மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே. 4.11.10
-
மனமெனுந் தோணி பற்றி
மதியெனுங் கோலை யூன்றிச்
சினமெனுஞ் சரக்கை யேற்றிச்
செறிகட லோடும் போது
மதனெனும் பாறை தாக்கி
மறியும்போ தறிய வொண்ணா
துனையுனும் உணர்வை நல்காய்
ஒற்றியூ ருடய கோவே. 4.46.2
-
கனகமா வயிர முந்து மாமணிக் கயிலை கண்டும்
உனகனா யரக்க னோடி யெடுத்தலு முமையா ளஞ்ச
அனகனாய் நின்ற ஈச னூன்றலு மலறி வீழ்ந்தான்
மனகனா யூன்றி னானேல் மறித்துநோக் கில்லை யன்றே. 4.47.1
-
குனித்த புருவமுங் கொவ்வைச்செவ்வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே 4.81.4
-
கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் உனதருளாற்
திருவாய் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூரரனே 4.95.6
-
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே
வழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்தே
தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச்
செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை மேல்வைத்த தீவண்ணனே 4.95.8
-
கருவுற்ற நாள்முத லாகவுன் பாதமே காண்பதற்கு
உருகிற்றென் னுள்ளமும் நானுங் கிடந்தலந் தெய்த்தொழிந்தேன்
திருவொற்றி யூரா திருவால வாயா திருவாரூரா
ஒருபற் றிலாமையுங் கண்டிரங் காய்கச்சி யேகம்பனே 4.100.6
-
பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும்
என்னாவி காப்பதற் கிச்சையுண் டேலிருங் கூற்றகல
மின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி மேவுகொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே 4.110.1
-
அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோவிப் பிறவியே. 5.1.1
-
பண்ணி னேர்மொழி யாளுமை பங்கரோ
மண்ணி னார்வலஞ் செய்ம்மறைக் காடரோ
கண்ணி னாலுமைக் காணக் கதவினைத்
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே. 5.10.1
-
நல்லர் நல்லதோர் நாகங்கொண் டாட்டுவர்
வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள்
பல்லில் ஓடுகை யேந்திப் பலிதிரி
செல்வர் போல்திரு நாகேச் சரவரே. 5.52.1
-
மட்டு வார்குழ லாளொடு மால்விடை
இட்ட மாவுகந் தேறும் இறைவனார்
கட்டு நீத்தவர்க் கின்னரு ளேசெயுஞ்
சிட்டர் போலுஞ் சிராப்பள்ளிச் செல்வரே. 5.85.1
-
கால பாசம் பிடித்தெழு தூதுவர்
பால கர்விருத் தர்பழை யாரெனார்
ஆல நீழ லமர்ந்தவாட் போக்கியார்
சீல மார்ந்தவர் செம்மையுள் நிற்பரே. 5.86.1
-
அணியனவுஞ் சேயனவு மல்லாவடி
அடியார்கட் காரமுத மாயவடி
பணிபவர்க்குப் பாங்காக வல்லவடி
பற்றற்றார் பற்றும் பவளவடி
மணியடி பொன்னடி மாண்பாமடி
மருந்தாய்ப் பிணிதீர்க்க வல்லவடி
தணிபாடு தண்கெடில நாடன்னடி
தகைசார் வீரட்டத் தலைவனடி 6.6.9
-
வடிவேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும்
வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றுங்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங்
காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
எழில்திகழுந் திருமுடியு மிலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே 6.18.1
-
நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குக்
புலர்வதன்முன் னலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதி யென்றும்
ஆரூரா வென்றென்றே அலறா நில்லே 6.31.3
-
ஓசை ஒலியெலா மானாய் நீயே
உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலா மானாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிது மினியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலா மானாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ 6.38.1
-
பொறையுடைய பூமிநீ ரானாய் போற்றி
பூதப் படையாள் புனிதா போற்றி
நிறையுடைய நெஞ்சின் இடையாய் போற்றி
நீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
மறையுடைய வேதம் விரித்தாய் போற்றி
வானோர் வணங்கப் படுவாய் போற்றி
கறையுடைய கண்ட முடையாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி. 6.56.1
-
பாட வடியார் பரவக் கண்டேன்
பத்தர் கணங்கண்டேன் மொய்த்த பூதம்
ஆடல் முழவம் அதிரக் கண்டேன்
அங்கை அனல்கண்டேன் கங்கை யாளைக்
கோட லரவார் சடையிற் கண்டேன்
கொக்கி னிதழ்கண்டேன் கொன்றை கண்டேன்
வாடல் தலையொன்று கையிற் கண்டேன்
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. 6.77.1
-
நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோ ம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே. 6.98.1
We are not constrained by the rule of any king. We wont fear for death. We wont suffer in the Hell. We do not know illness. We wont bow to anybody else. Everyday is blissful and no sufferings. The Lord Shankara, who is not responsible to anybody else, is wearing the ring of sea shell in one ear. To that rich man we became the unrelievable slaves and have taken shelter in his beautiful reddish feet full of flowers.
-
எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ
எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லாற்
கண்ணிலேன் மற்றோர் களைக ணில்லேன்
கழலடியே கைதொழுது காணி னல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. 6.99.1
Tirumarai 7: சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
-
பித்தாபிறை சூடீபெருமானே அரு ளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத் துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அத்தா உனக்காளாயினி அல்லேன் எனலாமே.7.1.01
-
தலைக்குத் தலைமாலை அணிந்த தென்னே
சடைமேற்கங் கைவெள்ளந் தரித்த தென்னே
அலைக்கும் புலித்தோல்கொண் டசைத்த தென்னே
அதன்மேற் கதநாகக் கச்சார்த்த தென்னே
மலைக்குந் நிகரொப் பனவன் றிரைகள்
வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்
டலைக்குங் கடலங் கரைமேல் மகோதை
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே. 7.4.01
-
நீள நினைந்தடி யேனுமை
நித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மட வாளவள்
வாடி வருந்தாமே
கோளிலி எம்பெரு மான்குண்டை
யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
ஆளிலை எம்பெரு மானவை
அட்டித் தரப்பணியே. 7.20.1
-
தம்மையேபுகழ்ந் திச்சைபேசினுஞ்
சார்வினுந்தொண்டர் தருகிலாப்
பொய்ம்மையாளரைப் பாடாதேயெந்தை
புகலூர்பாடுமின் புலவீர்காள்
இம்மையேதருஞ் சோறுங்கூறையும்
ஏத்தலாமிடர் கெடலுமாம்
அம்மையேசிவ லோகமாள்வதற்
கியாதுமையுற வில்லையே. 7.34.1
-
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 7.39.1
-
காட்டூர்க் கடலே கடம்பூர் மலையே கானப் பேரூராய்
கோட்டூர்க் கொழுந்தே அழுந்தூ ரரசே கொழுநற் கொல்லேறே
பாட்டூர் பலரும் பரவப் படுவாய் பனங்காட் டூரானே
மாட்டூர் அறவா மறவா துன்னைப் பாடப் பணியாயே. 7.47.1
-
மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப்
பாத மேமனம் பாவித்தேன்
பெற்ற லும்பிறந் தேனி னிப்பிற
வாத தன்மைவந் தெய்தினேன்
கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்ற வாவுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே. 7.48.1
-
489 இட்ட னும்மடி யேத்து வார்இகழ்ந்
திட்ட நாள்மறந் திட்டநாள்
கெட்ட நாளிவை என்ற லாற்கரு
தேன்கி ளர்புனற் காவிரி
வட்ட வாசிகை கொண்ட டிதொழு
தேத்து பாண்டிக் கொடுமுடி
நட்ட வாவுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே. 7.48.2
490 ஓவு நாளுணர் வழியும் நாளுயிர்
போகும் நாளுயர் பாடைமேல்
காவு நாளிவை என்ற லாற்கரு
தேன்கி ளர்புனற் காவிரிப்
பாவு தண்புனல் வந்தி ழிபரஞ்
சோதி பாண்டிக் கொடுமுடி
நாவ லாஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே. 7.48.3
491 எல்லை யில்புகழ் எம்பி ரானெந்தை
தம்பி ரானென்பொன் மாமணி
கல்லை யுந்தி வளம்பொ ழிந்திழி
காவி ரியதன் வாய்க்கரை
நல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
வல்ல வாவுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே. 7.48.4
492 அஞ்சி னார்க்கரண் ஆதி யென்றடி
யேனும் நான்மிக அஞ்சினேன்
அஞ்ச லென்றடித் தொண்ட னேற்கருள்
நல்கி னாய்க்கழி கின்றதென்
பஞ்சின் மெல்லடிப் பாவை மார்குடைந்
தாடு பாண்டிக் கொடுமுடி
நஞ்ச ணிகண்ட நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே. 7.48.5
493 ஏடு வானிளந் திங்கள் சூடினை
என்பின் கொல்புலித் தோலின்மேல்
ஆடு பாம்பத ரைக்க சைத்த
அழக னேயந்தண் காவிரிப்
பாடு தண்புனல் வந்தி ழிபரஞ்
சோதி பாண்டிக் கொடுமுடி
சேட னேயுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே. 7.48.6
494 விரும்பி நின்மலர்ப் பாத மேநினைந்
தேன்வி னைகளும் விண்டனன்
நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெ ழில்பெற
நின்ற காவிரிக் கோட்டிடைக்
குரும்பை மென்முலைக் கோதை மார்குடைந்
தாடு பாண்டிக் கொடுமுடி
விரும்ப னேயுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே. 7.48.7
495 செம்பொ னேர்சடை யாய்தி ரிபுரந்
தீயெ ழச்சிலை கோலினாய்
வம்பு லாங்குழ லாளைப் பாகம
மர்ந்து காவிரிக் கோட்டிடைக்
கொம்பின் மேற்குயில் கூவ மாமயி
லாடு பாண்டிக் கொடுமுடி
நம்ப னேயுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே. 7.48.8
496 சார ணன்தந்தை எம்பி ரானெந்தை
தம்பிரா னென்பொன்மா மணியென்று
பேரெ ணாயிர கோடி தேவர்
பிதற்றி நின்று பிரிகிலார்
நார ணன்பிர மன்றொ ழுங்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடிக்
கார ணாவுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே. 7.48.9
497 கோணி யபிறை சூடியைக் கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
பேணி யபெரு மானைப் பிஞ்ஞகப்
பித்த னைப்பிறப் பில்லியைப்
பாணு லாவரி வண்ட றைகொன்றைத்
தார னைப்படப் பாம்பரை
நாண னைத்தொண்டன் ஊரன் சொல்லிவை
சொல்லு வார்க்கில்லை துன்பமே. 7.48.10
-
-
அந்த ணாளன்உன் அடைக்கலம் புகுத
அவனைக் காப்பது காரண மாக
வந்த காலன்றன் ஆருயி ரதனை
வவ்வி னாய்க்குன்றன் வன்மைகண் டடியேன்
எந்தை நீயெனை நமன்றமர் நலியின்
இவன்மற் றென்னடி யானென விலக்குஞ்
சிந்தை யால்வந்துன் றிருவடி அடைந்தேன்
செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே. 7.55.1
-
நத்தார்புடை ஞானம்பசு ஏறிந்நனை கவிழ்வாய்
மத்தம்மத யானைஉரி போர்த்தமழு வாளன்
பத்தாகிய தொண்டர்தொழு பாலாவியின் கரைமேற்
செத்தாரெலும் பணிவான்றிருக் கேதீச்சரத் தானே. 7.80.1
-
239 பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 7.24.1
-
ஆலந் தானுகந் தமுதுசெய் தானை
ஆதி யைஅம ரர்தொழு தேத்துஞ்
சீலந் தான்பெரி தும்முடை யானைச்
சிந்திப் பாரவர் சிந்தையு ளானை
ஏல வார்குழ லாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 7.61.1
-
கரையுங் கடலும் மலையுங் காலையும் மாலையும் எல்லாம்
உரையில் விரவி வருவான் ஒருவன் உருத்திர லோகன்
வரையின் மடமகள் கேள்வன் வானவர் தானவர்க் கெல்லாம்
அரையனி ருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர். 7.73.1
-
761 மறைகள் ஆயின நான்கும் மற்றுள பொருள்களு மெல்லாந்
துறையுந் தோத்திரத் திறையுந் தொன்மையும் நன்மையு மாய
அறையும் பூம்புனல் ஆனைக் காவுடை ஆதியை நாளும்
இறைவன் என்றடி சேர்வார் எம்மையும் ஆளுடை யாரே. 7.75.1
-
மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி
ஆளா யிருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர் வாழ்ந்து போதீரே. 7.95.1
-
தானெனை முன்படைத் தானத றிந்துதன் பொன்னடிக்கே
நானென பாடலந் தோநாயி னேனைப் பொருட்படுத்து
வானெனை வந்தெதிர் கொள்ளமத் தயானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய் தான்நொடித் தான்மலை உத்தமனே. 7.100.1
8th Tirumurai: மாணிக்க வாசகர் அருளிய திருவாசகம்
[To TOP]
வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை,
நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சற்றினிலே
தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,என்
ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!"
- வடலூர் ராமலிங்க அடிகளார்
Sivapuranam - சிவ புராணம்
சிவபுராணத்துக்கு முழுமையாக விளக்கம் சொன்னவர் இன்றுவரை பிறக்கவே இல்லை என்பது ஆன்றோர் கருத்து.
Scholars are of the opinion that the one who can give a proper/complete explanation of Shiva Purana verses was never born till date.
Saint Manikavasagar is the author of Thiruvasagam and Thirukkovaiyar; the 8th Thirumurai. Thiruvasagam is the compilation of devotional verses. The first is called the Sivapuranam. Sivapuranam has 95 lines , recited at temples, homes, and special occasions. Sivapuranam is about the meaning of life and death. Shivapuranam ia also recited for departed soul to rest in peace. Namachivaya and Shivapuranam are chanted for a peaceful mind and life. This 95 line poem has been divided into 18 paragraphs and meaning is given for each paragraph.
சிவபுராணம் என்பது ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி. 95 அடிகளைக் கொண்டு இன்னிசைக் கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ளது. சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விவரித்துப் போற்றுகிறது. உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் எடுத்துக்கூறுகின்றது.
சைவசித்தாந்தக் கொள்கைகளின்படி, உயிர்கள் செய்யும் நன்மை, தீமை ஆகிய இரு வினைகளும், அவை மீண்டும் மீண்டும் பிறப்பதற்குக் காரணமாக அமைவதுடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கும் தடையாக அமைகின்றன. முந்தை வினைகள் அனைத்தும் ஓய இறைவன் அருள் தேவை என்பதை எடுத்துக் கூறுகிறது சிவபுராணம்.
(1) பாடல் Verses:
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க -5
பொருள் Explanation:
திருவாசகத்தின் முதல் ஒலியான நமச்சிவாய என்ற திருவைந்தெழுத்து வாழ்க. இறைவனின் திருவடி வாழ்க. கண்ணிமைக்கும் நேரம் கூட என் நெஞ்சம் விட்டு பிரியாதவனுடைய திருவடி வாழ்க. திருவாவடுதுறை ஆண்டருளும் குருவாகிய மாணிக்கத்தின் திருவடி வாழ்க. தானே ஆகமமாகி நின்று நமக்கு அருகில் வருபவனுடைய திருவடி வாழ்க. ஒருவனாகியும் பலவுருக்கொண்டும் இருக்கும் இறைவனின் திருவடி வாழ்க.
திருவாசகத்தில் சிறப்பிடம் பெறுவது ஆகமம். வேதங்கள் இறைவனுடைய இயல்பு கூறுகின்ற போது, ஆகமங்கள் அப்பெருமானை எவ்வகைஅடையலாம் என்பது பற்றி நமக்குக் காட்டுகின்றன. இறைவன் ஒருவனே. அவ்விறைவன் பசுக்களாகிய நாம் உய்வுறும்பொருட்டு பலபல வேடங்கள் தாங்கி நம்மை ஆட்கொள்கிறான்.
Long live lord's name 'namaSivAya'! Long live lord's feet! Long live the lord's feet that do not leave my heart even for a moment! Long live the feet of the guru (master) who enslaved me Long live the feet of the sweet lord who is the Agamas. Long live the only one with many forms! Long live the lord!
(2) பாடல் Verses:
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க -10
பொருள் Explanation:
என்னுடைய மன ஓட்டத்தின் வேகத்தைப் போக்கி (மனம் நிலையில்லாமல் அலைபாய்தல் அதனால் வரும் கேட்டின் வேகத்தையும்) என்னை ஆண்டுகொண்ட மன்னனின் திருவடி வெல்லட்டும். பிறப்பினை நீக்குபவனாகிய தலைக்கோலமுடைய (பீலி அணிந்த) பெருமான் அணி சேர் கழல்கள் வெல்லட்டும். தன்னை விடுத்து நிற்பவர்களுக்கு வெகு தூரத்தில் உள்ள (அரிய பொருளாக உள்ள) பெருமானின் பூப்போன்ற மென்மையான கழல்கள் வெல்லட்டும். கைகளைக் கூப்பி வழிபடுவார் உள்ளத்தில் மகிழ்ந்து இருக்கும் மன்னனுடைய கழல்கள் வெல்லட்டும். தலை தாழ்ந்து வணங்குவார்களை மிக உயர்ந்த நிலைக்கு ஓங்கச் செய்யும் பெருங்குணம் வாய்ந்தவனுடைய கழல்கள் வெல்லட்டும்.
Victory to the Lord/king who stilled my fleeting mind! (removed mental disturbances) Victory to the anklet-worn feet of the lord wearing head ornaments who cut off my cycles of birth! Victory to the beautiful feet of the one who is far away (unreachable) for those who do not have devotion! Victory to the feet of the Lord who rejoices in the minds of those who worship with folded hands! Victory to the feet of the Lord who uplifts those who worship with bowed heads!
(3 ) பாடல் Verses:
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி -16
பொருள் Explanation:
எல்லாவற்றையும் உடைமையாகக் கொண்டவனின் திருவடி போற்றி. எம் தந்தை என நின்று அருளுபவனின் திருவடி போற்றி. ஒளி வடிவானவனின் திருவடி போற்றி. சிவன் எனப்பெறும் செம்பொருளின் சிவந்த திருவடி போற்றி. அன்பினில் நிற்பவனான தூயவனின் திருவடி போற்றி. மாயப் பிறப்பினை நீக்கும் உயர்ந்தோனின் திருவடி போற்றி. அமைப்பு சிறந்து விளங்கும் திருப்பெருந்துறையில் இருக்கும் நம் தேவனின் திருவடி போற்றி. அடங்காத இன்பம் அருளும் கருணையின் மலை போன்றவன் போற்றி.
Hail the feet of god! Hail the feet of our father! Hail the feet of the radiant one! Hail the red (lotus like) feet of Siva, the auspicious one! Hail the feet of the blemishless one who is established in love! Hail the feet of the Lord who cuts off the ever-changing births! Hail the feet of our lord in beautiful thirupperundhuRai! Hail the mountain (called Siva) that bestows the eternal bliss!
(4 ) பாடல் Verses:
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் -20
பொருள் Explanation:
சிவபெருமான் என்னுடைய சிந்தையில் பெருங்கருணையால் வந்திருக்கின்ற காரணத்தால், அவனுடைய திருவருளே துணையாகக்கொண்டு, அவனுடைய திருவடியை வணக்கம் செய்து, உள்ளம் மகிழும் வண்ணம், சிவபுராணமாகிய இதனை, முன் செய்த வினைகள் எல்லாம் தீரச் சொல்லுகின்றேன். இறைவன்தானேவந்து ஆட்கொள்கிறான். கட்டுண்டு தவிக்கும் பசுக்களாகிய நம் எல்லா உயிர்களின் பொருட்டு அரியவனாகிய இறைவன் எளிமையாக வந்திருப்பது சைவ சித்தாந்தம். இறைவனைத் தொழுவதற்கும் அப்பெருமானுடைய அருளையே துணையாகக் கொண்டாலேயே அது முடியும்.
Siva is fully established in my mind. Therefore, with his grace, I bow to his holy feet. The god with an eye in the forehead came as my teacher and looked at me with his eyes of grace. Having received his grace, I worship his beautiful feet that are beyond imagination and set out to narrate the ancient Siva qualities (thathvas) to my heart's content, destroying my old karma in the process.
(5) பாடல் Verses:
கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன் -25
பொருள் Explanation:
நெற்றியிலே ஒரு கண்ணுடைய பெருமான் தன்னுடைய கருணைக்கண் காட்டியதால் இங்கு வர முடிந்தது. சிந்தனைக்கு எட்டாத பேரழகு மிக்க கழல்பூண்ட திருவடிகளை தொழுது நின்று,வானம், பூமி மற்றும் இவை தவிர மீதி உள்ளன யாவையுமாய், ஒளிமிக்கதாயும், அளவிடும் எல்லைகள் எல்லாம் கடந்து உள்ள பெருமானே! – உன் பெரிய பெரிய தன்மைகளை, மோசமான வினைகளில் கிடக்கும் நான், புகழ்ந்து போற்றும் வகை தெரியாது இருக்கிறேன்.
You fill the heavens, the earth, and even beyond. O the radiant one You are beyond thought and you are limitless. I, the one with a past of many evil deeds, do not know how to praise you.
(6 ) பாடல் Verses:
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் -31
பொருள் Explanation:
புல்லாகவும், சிறு செடிகளாகவும், புழுவாகவும், மரமாகவும்,பலவகை மிருகங்களாகவும் (விருகம் – மிருகம்), பறவைகளாகவும், பாம்பாகவும், கல்லில் வாழும் உயிராகவும், மனிதராகவும், உடல்நீங்கிய பேய்களாகவும், பலதரப்பட்ட கணக்கூட்டங்களாகவும், வலிமை மிகுந்த அசுரர்களாகவும், முனிவராகவும், தேவராகவும் இந்த அசையும் மற்றும் அசையாதவற்றால் ஆன (அண்டம்) முழுதும் சென்று எல்லாப் பிறப்பும் பிறந்து களைத்துவிட்டேன், எம்பெருமானே!
I have repeatedly taken countless births as various non-moving things such as rocks, grass, small plants, tress, etc. and various moving things such as worms, various animals, birds, snakes, humans, ghosts, gaNas, terrible demons (rakshasas), sages, devas, etc. O lord, I am tired of all this endless cycle. (Atma or soul undergoes different experiences or roles. It realizes freedom from these roles and surrender to almighty is the final objective)
(7) பாடல் Verses:
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே -35
பொருள் Explanation:
உன்னுடைய தங்கத் திருவடிகளைக் கண்டு இன்று உண்மையாகவே வீடு பேறடைந்தேன். நான் உய்யும் பொருட்டு எனது உள்ளத்துள் ஓம் எனும் ஒலியாய் எழுந்த உண்மைப் பொருளே! காளையை ஓட்டி வருபவனே! வேதங்கள் “ஐயா!” எனப் பெரிதும் வியந்து கூறி ஆழமாகவும் பலபல தன்மைகளைப் பெருகி ஆராய்ந்தும் காண முயலுகின்ற மிகச்சிறிய பொருளுமாக இருப்பவனே!
வேதங்கள் பலவாறெல்லாம் ஆழ்ந்து ஆராய்ந்தும், பலபல கோணங்களில் கூறியும் அவர் தம் பெருமையைக் கூறச் சொற்கள் இல்லாமையை உணர்த்துகின்றன. அத்தகு பெரிய அவரோ மிகச்சிறியவற்றிலும் நிறைந்துள்ளார். என்ன விந்தை இது ?!
O the truth! I have achieved liberation (mukthi) by reaching your golden feet. O the truth, who resides in my mind as the praNavam ('Om') helping me achieve the good state. O the one without blemish! O the one riding on a bull! O the tall, deep, wide, tiny one (residing in everything), who is addressed by the vedas as the lord!
(8) பாடல் Verses:
வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே -40
பொருள் Explanation:
வெப்பமாகச் சுடுகின்றவரும், குளுமையாக இருக்கின்றவரும் நீரே. என் உரிமையாளனாக உள்ள மாசற்றவனே! பொய்மைகள் எல்லாம் அகலும் வண்ணம் வந்து அருள்செய்து, உண்மை அறிவாக ஒளிவிடும் மெய்ச்சுடரே! எந்த அறிவும் இல்லாத எனக்கும் இன்பமாம் பெருமானே! அறிவின்மையைப் போக்கும் நல்லறிவே!
உள்ளத்தில் மெய்ச்சுடரான இறைவன் வர பொய்யிருளுக்கு இடம் இல்லை .
O the hot one! O the cold one! O the one without blemish - you are the life in all! You came (as my guru) and blessed me by removing all the falsehood, O the bright flame of true knowledge! O the lord of eternal bliss, I have no knowledge! O the good knowledge who removes my ignorance!
(9 ) பாடல் Verses:
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே -45
பொருள் Explanation:
தோற்றம், குறித்த வயது, முடிவு இல்லாதவனே! நீ உலகங்களையெல்லாம் தோற்றுவிக்கின்றாய், தொடர்ந்து (அழியாது) இருக்கச் செய்கின்றாய், (இறுதியில்) அழிக்கின்றாய், அருள் தந்து உய்யக் கொள்கின்றாய்! உயிர்களை மாயைக்குள் போக்குவாய்! நீ என்னை உன்னுடைய அடியார் கூட்டத்தில் புகவைப்பாய். மணத்தினும் (வாசனை) நுண்மையான (சூக்ஷ்சுமமான) பொருளே! வெகு தொலைவாகியும், மிக அருகில் இருப்பவனே! சொல்லிற்கும் சிந்தனைக்கும் எட்டாது நிற்கும் மறை நாயகனே!
O the one who has no creation (i.e. beginning), limit (of duration of existence), or end! You create, maintain, and destroy this entire universe. You bestow your grace. (By your grace) You remove (my births) and make me enter your service. You are like the fragrance of the flower. You are far away (for those who have no bhakthi). You are very near (to your devotees). O the inner meaning of the vedas, you are the one who remains when changes leave the mind - i.e. when the mind is stilled in meditation it is merged in God.
(10 ) பாடல் Verses:
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த -49
மறைந்திருந்தாய், எம்பெருமான்
பொருள் Explanation:
அப்போது கறந்த பாலோடு கரும்பின் சாறும் நெய்யும் கலந்தால் எவ்வாறு இனிக்குமோ அவ்வாறு சிறந்து, அடியவர்கள் மனத்தில் தேன் ஊற்றெடுத்தாற் போல நின்று, இப்பிறவியை முற்றுப் பெறச்செய்யும் எங்களுடைய பெருமானே! ஐந்நிறமும் நீயே ஆனாய்! வானவர்கள் போற்றி நிற்க அவர்களுக்கு அரியவனாக மறைந்திருந்தாய், எம்பெருமானே! வினை நிறைந்த பிறப்பினால் அவதிப்படும் ஆன்மாக்களில், மிகவும் எளிதாகவும் தேனினும் இனிய ஊற்றாக அவர்கள் உள்ளத்தில் தோன்றி அவர்களுடைய பாச மலம் அறுக்கிறார் சிவபெருமான்.
O lord, you are the in the minds of the devotees giving them sweet bliss - like the delicious mixture of fresh milk, sugar, and ghee, and cut off their cycles of birth. Our lord, you have five colors (i.e. the five elements - earth, water, fire, wind, and space). You remained hidden when devas were worshipping you.
(11) பாடல் Verses:
வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய -55
பொருள் Explanation:
கொடிய வினையில் சிக்குண்டிருக்கும் என்னைமறைத்து மூடிய மாயையாகிய இருளினை செய்யத்தகுந்தது, செய்யத் தகாதது என்னும் விதிகளால் கட்டி, மேலே ஒரு தோலும் சுற்றி, கெட்டுப் போவதாகவும், அழுக்கினை உடையதாகவும் உள்ள திசுக்கள் நிறைந்து, மலத்தினை வெளியேற்றும் ஒன்பது துளைகள் உள்ள வீடான இவ்வுடலை வைத்துக்கொண்டு மயங்கிநிற்க, ஐந்து புலன்களும் ஏமாற்ற, வாழும் (அவதிப்படும்) ஆன்மாக்கள்
I am hidden by the darkness of mAya (ignorance) caused by my strong karma. I am bound tightly by the rope of good and evil. I am enveloped on the outside by skin that covers all the filth and worms inside my body. I am stuck in this hut of nine entrances that keeps leaking waste. These five senses are conspiring against me.
(12) பாடல் Verses:
விலங்கும் மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே -61
பொருள் Explanation:
ஒருமைப்படாமல் சிதறுகின்ற சிந்தனைகளை உடைய மனத்தால், மாசிலாதவனே, உன்னிடம்
கலந்து நிற்கின்ற அன்பு நிறைந்து, அந்நிறைவால் கசிந்தும், உள்ளம் உருகி நிற்கின்ற நல்ல தன்மை இல்லாத சிறுமையுடையவனாகிய எனக்கும் அருள்செய்து, இந்த உலகில் உணரத்தக்க வண்ணம் கருணையால் வந்து, உன்னுடைய நீண்டு அழகிய கழலணிந்த திருவடிகள் காட்டி, நாயினும் கேவலமான நிலையில் கிடந்த அடியேனுக்குப் பெற்ற தாயினும் அதிகமான அன்பு உடையவனான தத்துவப் பொருளே!
O the one without blemish! Yet, you came on this earth and blessed me by revealing your holy feet. O the embodiment of all knowledge, you showed a greater love than a mother would on this lowly person who is inferior even to a dog! I am a dog-like lowly person with an animal-like mind that had no deep love for you.
(13) பாடல் Verses:
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே -70
பொருள் Explanation:
குற்றமற்ற தூய ஒளி மலர்கின்ற மலர் போன்று இனிய சுடரே! ஒளியுருவினனே! தேன் நிறைந்த அமுதமே! சிவபுரத்தை உடையவனே! பாசமாகிய கட்டினை அறுத்துத் திருவருள் புரியும் அறிவிற் சிறந்தோனே! இனிய அறக்கருணை புரிந்து, அதனால் என்னுடைய நெஞ்சில் வஞ்சனை ஒழிய, என் உள்ளம் நீங்காது நின்று பெருங்கருணை பெருக்கெடுக்கும் பெருவெள்ளமே! தெவிட்டாத அமுதமே! அளவுகள் கடந்து நிற்கின்ற பெருமானே! ஆர்வம் / முயற்சி இல்லாதவர் உள்ளத்தில் வெளிப்பாடின்றி மறைந்திருக்கும் ஒளியானே! (என் உள்ளத்தை) நீரென உருகச்செய்து, என்னுடைய இன்னுயிராக நிற்பவனே! இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்டவனே! உள் நிற்பவனே!
இறைவன் உயிர்கள் பால் அவரவர் தன்மைக்கு ஏற்ப அறக்கருணை, மறக்கருணைகாட்டி நல் வழிப்படுத்துகிறார். இறைவன் எல்லாருடைய உள்ளத்திலும் உள்ளார். எங்கும் நிறைந்தும் அதே நேரத்தில் எல்லாம் கடந்தும் இருப்பதால் அவரைக் கடவுள் என்கிறோம். ஆயினும் ஆர்வமும் முயற்சியும் உடையவர்கள் சிவபெருமான் திருவருளினால் அவரை உணர்கின்றார்கள். இறைவனுக்குப் பிறவற்றால் எவ்வித இன்பமோ துன்பமோ இல்லை. செம்பொருளாக உள்ள அது தன்னுடைய வற்றாத இன்பத்தில் தானே என்றும் மகிழ்ந்து இருக்கும்.
O the flower-like (gentle) flame of blemishless light! O the radiant one! O the sweet immortal nectar! O the one in sivalOka! O the great one who saves me by removing the bondage of attachments! O the great river of mercy who never leaves my heart and destroys all my evils with loving grace! O the forever sweet immortal nectar! O the lord of infinite greatness! O the light who remains hidden in the minds of those who do not seek you! O the one who melted my heart and merged inseparably into my life! O the one who does not have pain and pleasure! O the one who is residing in everything!
(14) பாடல் Verses:
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கு அரிய நுண் உணர்வே -76
பொருள் Explanation:
அன்பினால் தன்னைத் தொழும் அடியார்களுக்கு அன்பே உருவாயவனே!
எல்லாமும் தானே ஆகி, எதுவும் தானாக இல்லாது இருக்கின்றவனே!
சுடருருக்கொண்டவனே! அடர்ந்த இருளாகவும் இருப்பவனே!
பிறப்பு என்பதே இல்லாத பெருமை உடையவனே! முதலாக இருப்பவனே! இறுதியாகவும் இடைப்பட்ட நிலையாகவும்ஆகி இத்தத்துவங்கள் எல்லாம் கடந்தவனே!
(காந்தம் போல) என்னை ஈர்த்து என்னை ஆளாக –அடியவனாகக் கொண்டு அருளிய என் தந்தைக்கும் தலைவனே!
உன்னைத் தமது கூர்மையான மெய்யறிவின் துணையாகக் உணர்கின்ற பெரியோர்களுடைய சிந்தையின்பார்வை வியத்தற்கு உரிய பார்வை! அவர்களுடைய ஆராயும் திறன் வியத்தற்கு உரிய ஆய்வுணர்வே!
சிவபெருமான் எல்லாப் பொருள்களுடனும் கலந்து தோன்றினும் இவை எதுவும் அவரல்ல. அவர் கலந்து இருப்பது போலவே எல்லாம் கடந்தும் உள்ளார். சிவபெருமானுக்கு அவதாரம் இல்லை. அவர் பிறப்பது இல்லை.
இறைவன் அன்பர்களுக்கு எளியவனாகக் காட்சி அளித்த போதிலும், அவருடைய பேரியல்பு யாராலும் முழுதும் ஆய்வது பற்றி எண்ணியும் பார்க்க இயலாதது.
You are the devotee of your devotees! You are everything yet you are not those things! O the radiant one! O the darkness! O the uncreated great one! You are the beginning, middle, and the end of everything yet you do not have them! O the great one, our father, who pulled me and enslaved me as his devotee! You are realized by those with deep understanding of the true knowledge! You are difficult to be seen with eyes (too large?). You are too subtle to be researched.
(15 ) பாடல் Verses:
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் -80
பொருள் Explanation:
நீங்குவதும், புதிதாக வருவதும், கலப்பதும் இல்லாத புண்ணிய மூர்த்தியே! என்னைக் காக்கின்ற காவல் தெய்வமே! காண்பதற்கு அரியதாக ஒளி மிகுந்து இருப்பவனே! தொடர்ச்சியாகவும் முறையாகவும் வருகின்ற இன்ப வெள்ளமே! தந்தையே! மிகுதியாக நின்ற ஒளி வீசும் சுடரான தோற்றத்தினனாய், சொல்லப்படாத பூடகமான நுண் உணர்வாக இருந்து எல்லாப் பொருளிலும் இருந்த போதிலும், பொருளின் தன்மையால் குறைபடாமல் தான் என்றும் தூயவனான புண்ணிய மூர்த்தியாகவே உள்ளார். இறைவன் சொற்களால் சொல்லி முடியாதவர். நுண் உணர்வால் அறியப் படுபவர்.
You do not go anywhere, do not mix with anything else, do not come from anywhere. (i.e. God is everywhere and in everything). You are source of all good. You are our protector. You are the great light difficult to see. O the blissful flood in the river (of good path)! O father! You are the great light. You are the subtle experience that cannot be described in words. In this ever-changing world, you come as various things and are finally understood as the consciousness. You are the distilled (pure) consciousness. You are the spring of delicious nectar of immortality in my mind. You are my master (i.e. I am your slave).
(16) பாடல் Verses:
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று -85
பொருள் Explanation:
இவ்வுலகில் பல்வேறு விதங்களில் கூறப்பட்டு, மெய்யறிவாக ஆகும் (ஆய்வின் இறுதியில் சாறாகத் தேறும்) தேற்றமே! அந்தத் தேற்றத்தின் பயனான தெளிவே! என்னுடைய சிந்தனையினுள் உண்பதற்க்கு மிகவும் அரியதும் விரும்பத்தக்கதும் ஆன அமுத ஊற்றே! என்னை உடைமையாக ஆள்பவனே! பலவேறு விகாரங்களை உடைய ஊனால் (சதையால்) ஆன இவ்வுடம்பின் உள்ளே கட்டுண்டு கிடக்கஇயலவில்லை, எம் தலைவா! அரனே! ஓ! என்று பலவாறு
Our lord, I cannot bear anymore to remain in this ever-changing (impermanent) body. You can get rid of the physical body, filled with the 5 devious senses, of those devotees, who keep worshipping you by saying "O siva, save me".
(17) பாடல் Verses:
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே -90
பொருள் Explanation:
போற்றுதல்கள் செய்து, புகழ் கூறித் தம்முடைய பொய்கள் ஒழிய உண்மையே ஆன அடியவர்கள்மீண்டும் இவ்வுலகுக்கு வந்து வினை நிறைந்த பிறவியில் சிக்காமல், மாயையால் ஆன இவ்வுடலின் கட்டுமானத்தை அழிக்க வல்லானே! வேறு எதுவுமற்றதாகிய இருளில் கூத்து ஆடுகின்ற நாதனே! தில்லை என்னும் சிதம்பரத்தில் ஆடுபவனே! தென்பாண்டி நாட்டைச் சேர்ந்தவனே!
இருள் என்பது (ஒளி) இன்மையைக் குறிக்கும். உலகங்கள் எல்லாம் ஒடுங்கியபின்னர் இறைவனைத் தவிர வேறு எதுவும் இல்லாத அந்நிலை ஏதுமற்ற இருள் போன்றது. அவ்விருளில் ஒளியாக இறைவன் ஆடுகின்றார்.
You destroy all their falsehoods and they become established in the truth. They do not come again to take on another birth full of karma. O lord, you dance in the middle of the night (i.e. at the end of each cycle of creation). O the dancer in the chidambaram! O the one in the southern pandya region!
(18) பாடல் Verses:
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. -95
திருச்சிற்றம்பலம்.
பொருள் Explanation:
துன்பம் (அல்லல்) நிறைந்த பிறவியை நீக்குவானே! ஓ! என்றுசொல்லிற்கு அரிய பெருமானைக் அழைத்து, (இறைவன்) திருவடியை பணிந்து அதன் கீழிருந்து சொல்லிய இப்பாடலின் பொருளினை உணர்ந்து சொல்லுபவர்கள் சிவபுரத்தில் இருக்கும், பலராலும் புகழப்படும், தொழப்படும் சிவபெருமானின் திருவடி நிழலுக்குச் செல்வார்கள், .
O the one who cuts off this birth of suffering! I seek refuge in you. Saying all these, praising the one who cannot be described, I sing this song under his holy feet. Those who recite this song understanding its full meaning will reach sivalOka (i.e. siva's abode). There they will remain for ever at the feet of siva, praised and worshipped by many other devotees (who are already there).
- பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 8.37.9
You took more pity on me, (though i have committed many errors), than a mother who remembers her child’s hunger, (even before it starts crying) and feeds milk to it. You melted my body with your love, enhanced my wisdom, soaked me with the honey of eternal bliss, and followed everywhere with me. O my treasure! O lord Siva! I am continuously and firmly holding on to you. Where can you go now? (You have no way of leaving me now!
-
உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனியமையும்
குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தாஉன் குரைகழற்கே
கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே. 8.39.3
[Manikkavachakar's absolute surrender "he does not want family, place, fame or the company of the learned ; thanks to you everything will come to me; all that I want is to cry like a calf yearning for its dam"].
-
திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை
உருநாமம் அறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்
ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற் காயிரந்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ.8.11.1
9th Tirumarai: திருவிசைப்பா, திருப்பல்லாண்டு
- ஒளிவளர் விளக்கே உவப்பிலா ஒன்றே ! உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே !
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே ! சித்தத்துள் தித்திக்கும் தேனே !
அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே ! அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத் தொண்டனேன் விளம்புமா விளம்பே.
It is difficult to know or understand him through all possible reasoning methods available in different parts of the world. He is the saviour by his compassion, having moon and ganga on his head. Let us praise and pray to infinite light/jyothi, who dances at Chidambaram
சேந்தனார் அருளிய கோயில் - மன்னுக திருப்பல்லாண்டு
- மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகல
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து புவனி யெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன் அடியோ முக்கருள் புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே. 1
- ஆரார் வந்தார்? அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள்
நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே. 12
10th Thirumarai: திருமூலர் திருமந்திரம்
-
ஒன்றே குலமும்ஒருவனே தேவனும்|
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்மே பகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து |
நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே. - திருமந்திரம்2104
Only One race/community and one God. Think good, not only for you but also for every one. This is the only way for salvation and to eliminate fear of death. Let your mind be filled with good thoughts only.
-
அந்தமில்லானுக் ககலிடந்தான் இல்லை
அந்தமில்லானை அளப்பவர்தாமில்லை
அந்தமில்லானுக்கு அடுத்தசொல் தான் இல்லை
அந்தமில்லானை அறிந்து கொள்பத்தே
omnipotent One cannot be transcribed in a single place nor can be measured, nor has any names but can only be experienced]
-
என்பே விறகாய் இறைச்சி அறுத்திட்டுப் பொன்போல்.
கனலில் பொரிய வார்ப்பினும் அன்போடு .
உருகி அகம் குழை வார்க்கன்றி.
என்போல் மணியினை எய்த ஒண்ணாதே.
In an apparent condemnation of the practice of self mortification, he states that there is no use of even frying one's own flesh in the fire till it becomes like gold; one cannot attain salvation unless one becomes deeply devoted whole heartedly to the divine. .
-
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் |
அன்பேசிவமாவது யாரும் அறிகிலார்
அன்பேசிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பேசிவமாய் அமர்ந்திருந்தாரே
Only the ignorant will think that love and Sivan are two different things; only few really understand that Sivan is nothing but love; once everyone understands that Sivan is nothing but love, everyone will become saintly
-
முகத்திற்கண் கொண்டு பார்க்கின்ற முடர்காள்
அகத்திற்கண் கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய் தன் மணாளனோடு ஆடிய
சுகத்தைச் சொல் எனல் சொல்லுமாறு எங்கனே.
[Thirumular – limitations of idol worship, how can anyone visualize the Lord through the normal eyes? one can only see the Divine through the mind ; You have to experience it yourself as others can not explain this for you. For example, how can a mother explain to the child the pleasure she had with her beloved]
-
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே [திருமந்திரம் 2627]
-
ஓங்காரத் துள்ளே யுதித்த ஐம்பூதங்கள்
ஓங்காரத்த் துள்ளே யுதித்த சராசரம்
ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றனை
ஓங்கார சீவ பரசிவ ரூபமே [திருமந்திரம் 2628]
-
தூங்கிக்கண்டார் சிவ லோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண்டார் சிவ யோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண்டார் சிவ போகமும் தம்முள்ளே
தூங்கிக்கண்டார் நிலை சொல்வதெவ்வாறே [திருமந்திரம் 129]
- என்னை நன்றாக இறைவன் படைத்தனன் | தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே - திருமூலர்
11th Tirumarai: பிரபந்தம் Prabandam
-
மதிமலி புரிசை மாடக் கூடற்
பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற
கன்னம் பயில்பொழில் ஆல வாயில்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்
குரிமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்குஞ் சேரலன் காண்க
பண்பா லியாழ்பயில் பாண பத்திரன்
தன்போல் என்பால் அன்பன் தன்பால்
காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே.
-
செத்த பிணத்தைத் தெளியா தொருபேய் சென்று விரல்சுட்டிக்
கத்தி உறுமிக் கனல்விட் டெறிந்து கடக்கப் பாய்ந்துபோய்ப்
பத்தல் வயிற்றைப் பதைக்க மோதிப் பலபேய் இரிந்தோடப்
பித்த வேடங் கொண்டு நட்டம் பெருமான் ஆடுமே.
-
நன்று மாதர நாவினுக் கரைசடி
நளினம் வைத்துயின் அல்லால்
ஒன்று மாவது கண்டிலம் உபாயமற்
றுள்ளன வேண்டோமால்
என்றும் ஆதியும் அந்தமும் இல்லதோர்
இகபரத் திடைப்பட்டுப்
பொன்று வார்புகுஞ் சூழலிற் புகேம்புகிற்
பொறியிலைம் புலனோடே. 11.1419
12th Tirumarai: சேக்கிழார் திருத்தொண்டர் புராணம்
- கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி
அற்புதக் கோலம் நீடி அரு மறைச் சிறத்தின் மேலாம்
சிற்பர வியோமம் ஆகும் திருச் சிற்றம்பலத்துள் நின்று
பொற்புடன் நடம் செய்கின்ற பூங் கழல் போற்றி போற்றி 12.2.1
- உலகெலாம் உணர்ந்து ஓதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகிற் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம் 12.1.1
திரு அருட்பா
திருவருட்பா என்பது வள்ளலார் ஆசிரிய விருத்த நடையில் பாடிய 5818 பாடல்களின் தொகுப்பாகும்.
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும மாட்டார்க்கும் வரம்அளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே.
[திரு அருட்பா 4128 - Begs Lord Sivan who dances equally well before one and all to accept his offerings of music; requests Him to bless the literate and illiterate with happiness; bless those who can see and who don't see with real vision; bless the mighty and the meek; bless those who care as well those who don't with wisdom; bless both the good and the bad equally]
...Website maintained by: NARA
Terms and Usage