![]() |
Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.
Tamil Poems by Nara (வாயிலிருந்து வந்தவை) |
அரசமரத்தடி அமர்ந்தவனே அகந்தை அழிப்பவனே அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க் அண்டம் அனைத்தையும் அடங்கியவனே அப்பனே அறிவுக்கு அதிபதியே அஹிம்ஸ அமுதனே அஞ்சு அக்கரத்தின் அரும்பொருள் அறிவித்தே அவ்வையின் அன்பனே அடியேனை அருள்வாயே Inspired by Vinayagar agaval The one who sits under the tree destroying our pride Exists From atom to atom to beyond everything Great one who contains or subdues everything in the universe Ahimsa Amutha, lord of important/useful knowledge Gave the auspiciousness of the five letters - namachivaya Let favourite of Avvaiyar, bless us
(1) அறிந்தும் அறியாத ஓன்றுக்கு பல பெயரிட்டு உருக்கொடுத்து உள்ளத்தைக் கொடுத்தேனே (2) இல்லாத-அது ஒன்றாய் இரண்டாகி பலவாகி மாயமாய் எங்கும் இருந்ததே (3) உவமையில்லாத-அது அழுக்கால் பிரிந்த என்னை ஆட்கொண்டு அருளியதே (4) ஐம்பூதமான-அது கருவாய் உயிராய் உணர்வாய் உள் ளத்தில் கிடந்ததே (5) எதிலும் எங்கும் உள்ள-அதை அன்பிலும் அறிவிலும் அறத்திலும் கண்டேனே (6) ஒன்றாகக் காண்பதே காட்சி என உணர்த்தி பூர்ணமான ஸுன்யத்தில் மறைத்ததே For known-unknown concept, gave many names and forms (mind?) From nothing emerges, + - or 0 1, and becomes infinite possibilities Everything is that only one with out second one That only one appears as natural elements, seed, life form, feeling etc Though it is in everything, one can feel it in love, knowledge, order/dharma That only one disappears in perfect emptiness, conveying: "see everything as only one thing - Individuality is an illusion - Unity in diversity"
இயற்கையே! நீயே நித்திய தர்மம் எல்லாவற்றின் (மதங்களின்) அடிப்படை உன்னை உணர்வதே ஆன்மிகம் உன் அழகே தெய்வங்கள் உன் சட்டங்களே வேதங்கள் உன் அன்பளிப்பே வாழ்க்கை உன்னை அறிவதே விஞ்ஞானம் உன்னையொத்து வாழ்வதே புத்திசாலித்தனம் உன்னை எதிர்ப்பது மடமை Nature is eternal truth/dharma Basis for everything, including all religions Feeling you, is spirituality Nature's beauty is forms of deities/gods. Nature's (Universal) laws are essence of scriptures Your gift is our life/living Science is knowing/understanding you. working with you is smartness (cooperate or accordance) working against you is foolishness இயற்கை என்பது இயல்பாக இருக்கும் தோற்றப்பாடு. இயற்கை என்பது அண்டத்தின் இயற்பியல் nature - the phenomena the basic or inherent character of something (physical world, and also to life in general)
Nature's beauty is an art of God. BEAUTY is What brings you HAPPINESS 5 colors: Red Green Yellow Blue Colourless. Five Natural Gods for five types of lands, tamil classification. செவ்வானம் சேய் அழகு குறுஞ்சிக் குறவர் அழகு செம்மை ஞாயிறு அழகு முருகன் பொருள் அழகு முல்லைநிலம் அழகு மரம் அடர்ந்த காட்டு அழகு பச்சைப் பசேல் அழகு திருமால் தெய்வம் அழகு விளையும் பயிர் அழகு வேளான்மை தொழில் அழகு தங்க அங்கங்கள் அழகு மருதநில வேந்தன் அழகு நீலக்கடல் அழகு அலையுடன் நுரை அழகு துள்ளும் மீன்கள் அழகு கடலின் வண்ணம் அழகு மணல்திடல் அழகு வெற்றிடப் பாலை அழகு கூத்தாடும் கொற்றவை அழகு இயற்கையின் அழகே அழகுOne sees invisible God through nature. Let us feel God, by touching in everything beautiful. When GOD happy face and smiles, in the shining sun, cool moon, twinkling stars and blooming flowers.
இயற்கையே உன் சீற்றங்கள் அடங்கட்டும்! நீ ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்! அதனால், நீயே எல்லாவற்றிற்கும் அன்னை! குற்றங்கள் பொறுத்து காப்பாயே! உன்னைத் தவிர கதி வேறுயெதுவும் இல்லை ! Nature, Quell your anger! You will create, protect, destroy and bless! So, you are the mother of everything! Overlook all mistakes and take care! We have nowhere else to go, other than you!
இயற்கையே! உன்னை ஒரு நாள் துதித்தோம் - மறு நாள் பழித்தோம் பேராசையால் தடுமாறி நடந்தோம் மன்னிப்பாயா (3) விளை நிலங்களை கெடுத்தோம் மற்ற உயிர்களை காக்காமல் அழித்தோம் பூமியை நஞ்சாக்கினோம் எழில் தரும் இயற்கையே! மன்னிப்பாயா (3) கழிவுகளை நீர்நிலைகளில் கரைத்தோம் சுவாசிக்கும் காற்றைக் கெடுத்தோம் அழிவுச் செயல்களை செய்தோம் பொறுமையின் வடிவே மன்னிப்பாயா (3) உன்னை உணர்வதே ஆன்மிகம் உன்னை அறிவதே விஞ்ஞானம் இதை யெல்லாம் மறந்தோம் எங்குமே நிறைவாய் நிற்கும் இயற்கையே! மன்னிப்பாயா (3) எங்கள் தீமைகளை எல்லாம் பொறுத்தாய் நன்மைகள் பல செய்தாய் எவ்வளவுதான் நீயும் பொறுமை காப்பாய் கருணையின் வடிவே மன்னிப்பாயா (3) மரம் வளர்ப்போம் மழை பெறுவோம். ஒற்றுமை காப்போம் வளம் பெறுவோம் உயிரினங்களை காப்போம். நல்வாழ்க்கை பெறுவோம் இயற்கையே! அன்னையே! காப்பாயா (3) inspired by: சமுத்திரவாசனே தேவி பர்வதஸ்தான மண்டலே விஷ்ணுபத்னி நமஸ்துப்யம் பாதஸ்பர்சம் க்ஷமஸ்வமே Mother earth, with the rivers and mountains on you, feeds all of us. Salutations to the wife of protector Vishnu. Let us ask the forgiveness for stepping on her. ஒரு நாள் சிரித்தேன் - மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் - கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா (3) Three magical words: sorry; thank you; and please will resolve conflicts. Mistakes can be made even while trying to do some good. When one does good, it affects others or other things. Wise will accept bad consequences and try to correct/rectify. Humility is accepting that we are not perfect and ready to accept and correct mistakes. Humility admits fault and recognizes the need and desires for forgiveness. Sustainable Development Development is very Important. But should be Sustainable. 1. When you fish in a pond/lake, limit it to less than 20%. Then you can come next day for fishing. 2. Plant when you cut some trees. Leave other trees for fruits and seeds 3. Leave some chickens for future eggs. Purpose is not just love for them, but to ensure our food security. Save trees, to save yourselves. Save earth/nature to save yourselves. Nature knows how to save itself http://www.asia-oss.net/apecrep/careNature.htm http://www.excelsol.com/hindu/essays/natureworship.htm
எல்லாம் இணைந்த அது ஒன்றே அதுவே நம் காணும் இயற்கை அதுவே நம்முள் உள்ள சக்தி அதுவே நம் அன்பு உள்ளம் அதுஒன்றே எங்கும் உள்ளது ஏன் இந்த பரந்த பேதம்? இதை உணர்ந்தால் சமாதானம் இதை உணர்ந்தால் சாந்தம் Everything is linked, connected, That is called Nature It is energy/power/compassion. It is the ONE, why this vast Difference/Disagreement If understood this, there will be peace and calmness every where.
Difficult to find english equivalent. Same word with many meanings. காயமே இது பொய்யடா! (இது) காற்றடைத்த பையடா! கிழிந்த பையடா! கிழிந்த பையே மெய்யடா! பையைத் தையடா! Body is false. Just air filled delicate bag which can be torn But Body was called mei, which also mean Truth Life is repairing/mending the body and taking care of it அட என்னடா இது பொல்லாத வாழ்க்கை ! இதுக்கு போய் அலட்டிக்கலாமா! (x2) What is so great about life or things around Not worth bothering, Do not worry, Move on காயத்தில் காயம் வருமடா! காயத்தை வைத்து கட்டடா ! அட என்னடா இது பொல்லாத வாழ்க்கை! இதுக்கு போய் அலட்டிக்கலாமா! (x2) Getting wounds is common, not to make a fuss Apply medicine and forget it வாழ்க்கைக்கு பொருள் தேடடா! வாழ்க்கையின் பொருள் எதடா! பொருள் அறிந்தவர் யாரடா! சொன்ன பொருள்கள் பொய்யடா! earn wealth for livelihood, with out knowing meaning of living. No one has perfect answer. Many are just random answers/BS அட என்னடா இது பொல்லாத வாழ்க்கை! இதுக்கு போய் அலட்டிக்கலாமா! (x2) காயம் காக்க வேண்டிய கோவில் கடவுள் உள்ளிருக்க கவலையென் ! Body is a temple to be protected. Why worry unnecessarily, when god is inside the temple குறுகிய காலத்தில் ஏன் பரந்த பேதம் வாழ்க்கை அனுவிக்க வேண்டிய அனுபவம் இன்பம் துன்பம் அதன் இரு நிறம் இனியதாக்குவது உன் மனம் life is Short. why vast Difference/Disagreement life is meant to be an enjoyable experience Joy and sorrow are two colors of life Your mind has to make life pleasant and blissful அட என்னடா இது பொல்லாத வாழ்க்கை! இதுக்கு போய் அலட்டிக்கலாமா! (x2) Inspired by சித்தர் பாடல். For rhyming Can be added: இந்த கந்தல் பையைக் காப்பவன் கந்தன் கந்தனுக்கு அரோகரா!
1) உள்ளிலிருந்து ஆட்டுவது சிவம் உணராது ஆடுவது சவம் சவத்தை விட்டது சிவம் கதையை முடித்தது சிவம் Siva residing inside, makes one to dance/move. We (bodies) may dance with out recognizing siva inside. Once siva leaves, no movement, body left is a corpse. Thus siva ends one's story. 2) ஆத்ம விசாரம் ஸைவ சித்தாந்தம் சிவத்தை உணர்ந்ததும் சிவம். உணர்ந்தவர்க்கும் உணராதவர்க்கும் உள்ளிருப்பது ஒரே சிவம் நம்பினவர்க்கும் நம்பாதவர்க்கும் ஒரே சிவம் Saiva scriptures/texts are enquiries about truth or real you. It is a journey. Sivam is a feeling or wisdom that "real self is sivam". Whether one realizes or not, what is inside everyone is sivam. Whether one believes or not, name given to real thing inside (or every where) is sivam *sivam is name given. No issue in calling what one feels like (even name it NO GOD or Nobody?). 3) மாறிக்கொண்டே இருப்பது பிரபஞ்சம் மாற்றிக் கொண்டே இருப்பது சிவம் ஆதியும் அந்தமும் இல்லாத சிவம் அறிந்ததும் அறியாததும் சிவம் Universe/Multiverse is constantly changing/evolving. Everything is in constant flux Siva is the one who keeps everything in flux Shiva has no beginning and no end All knowledge (known and unknown) is sivam. 4) அறுதி உண்மையே சிவம் அடக்கமான அறந்தழுவிய அறிவே சிவம் அன்பே சிவமென ஆணவமின்றி வாழும் அன்பான வாழ்க்கை முறை ஸைவம் Absolutely truth is siva Siva is humble/unassuming form for (ethics confirmed) knowledge Compassionate living without arrogance or ego with Loving lifestyle is saivite philosophy. Saivam refers to Vegetarianism, living with out harming any life 5) அன்பே சிவம்! ஸர்வம் சிவமயம்! Compassion is Siva. Everywhere siva or divinity fills (or felt)
ஒரு கனம் உணர்ந்தோம் மறு கனம் மறந்தோம் செய்யாதன பல செய்தோம் செயல்களின் பலன் அடைந்தோம் பிறவியின் பலன் உணர்ந்தோம் உள்கிடக்கும் மெய்ப்பொருளே மன்னிப்பாயா One moment recognized divinity with in. Forgot next moment Did many things which should not have been done Received results based on all actions. Understanding life purpose. Excuse (us) ultimate truth residing inside கட- உள் (kadavul) means எல்லாவற்றையும் கடந்த - எல்லாவற்றுள்ளும் உள்ள கட- உள் (kadavul) may be from உள்-கிட residing inside Beyond everything - Present in everything Feeling of some power within you kadavul can not be translated as God. kadavul has no gender, no plural. It need not be a thing, can be just a concept like dharma/laws. உள்ளத்தில் இறைவன் இருக்க... ஊர் ஊராய் தேடி அலைகிறவன், எரியும் விளக்கை கையில் வைத்துக் கொண்டே நெருப்பு தேடி அலைகிறவன் ஆகிறான். - ஸ்ரீ பட்டினத்தார். God is with in you. But searching every where likeone who searches for fire with a light in his hand
Many people do great work/service. Few become popular or know. Very few benefit by their work. Unconnected people may become popular or rich by other's work. நிறைய படித்த படிப்பாளிகள் பலபேரு புரிந்து கொண்ட சாமான்யர்கள் சிலபேரு சூடாக விவாதித்த வேதாந்திகள் பலபேரு அன்பாக உரையாடியவர்கள் சிலபேரு நிறைய போதித்த போதகர்கள் பலபேரு நடந்து காட்டிய வழிகாட்டிகள் சிலபேரு (விபரம்) அறியாத மேடைப் பேச்சாளிகள் பலபேரு உண்மை உணர்ந்த ஞானிகள் சிலபேரு தீர்க்க சிந்தித்து எழுதியவர் பலபேரு பிரபலமான வர் வேறு சில பேரு பொதுநலனுக்காக எழுதியவர் பலபேரு கவிதையிலே உணர்த்தியவர் பல பேரு வியாபாரமாக்கியவர் வேறு சில பேரு
அன்பே சிவம் Shiva and compassion are same or interchangeable. எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம்! சர்வமும் சிவமயம்! Every where Shiva! In everything Shiva! All are Shiva! ***---*** Poem made starting with அ: அதுவே அருளும் அன்பு அதுவே அனைத்தின் அடைக்கலம் அதுவே அமிர்தம் ஆனந்தம் அன்பே அத்வைதம் (சிவம்) That one is the gracious love That is the refuge of all That is the bliss of nectar That one is the only one that exists or manifests ***---*** Last word of a line will be the first word for next line. Poem will end with the first word of the poem itself. (1) அன்பே சிவம் என்றுணர்ந்தால் பேரின்பம் (இப்) பேரின்பம் மேல் அடைவதற்கு ஒன்றுமில்லை ஒன்றுமில்லை, சிவனைத்தவிர என்பதே அத்வைதம் அத்வைதம் மெய்ப்பிக்கும் தத்துவமே அன்பு Bliss is understanding that Compassion/Love is GOD Nothing more to be attained than this. "Everything (including we) is nothing but Shiva" is advaitha (monism) Love is practicing advaitha. (2) அன்பென்ற சிவமே எங்கும் இருப்பது இருப்பதை மறைக்கும் அழுக்கே மாயை மாயையை அகற்ற வல்லது பக்தி பக்தி என்பது எல்லாவற்றிடமும் அன்பு Shivam or compassion is everywhere. Impurities or Maya hides reality. Inpurities can be removed by bakthi, which is loving all creations which are divine. (3) யாதும் ஊரே யாவரும் நண்பர் நண்பர் உண்டு பகைவர் இல்லை இல்லையென்று கூறாது உதவுவதே அன்பு அன்பெனும் தத்துவம் இணைக்கும் யாதும் All places are my home and all are friends. I have Only friends, No enemies Love is not refusing when you can help anyone. This will unite all of us. *சிவம் can be replaced with கடவுள் ப்ரஹ்மம் etc Story: Two were quarreling and only saint was the witness. Police/judge asks the saint what happened. Saint does not say anything except சிவ. For him all including actions and objects are shiva இச்சிவம் அச்சிவத்தை சிவ அச்சிவம் இச்சிவத்தை சிவ சிவ .... .... .... சிவ சிவசிவ one beat the other and vice versa.. (number of beatings increased..) ஒன்றே குலமும்ஒருவனே தேவனும்| நன்றே நினைமின் நமனில்லை நாணாமே சென்மே பகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து | நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே. - திருமந்திரம்2104 Only One race/community and one God. Think good, not only for you but also for every one. This is the only way for salvation and to eliminate fear of death. Let your mind be filled with good thoughts only. அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் | அன்பேசிவமாவது யாரும் அறிகிலார் அன்பேசிவமாவது யாரும் அறிந்தபின் | அன்பேசிவமாய் அமர்ந்திருந்தாரே - திருமந்திரம் Only the ignorant will think that love and Sivan are two different things; only few really understand that Sivan is nothing but love; once everyone understands that Sivan is nothing but love, everyone will become saint or shiva.
Starting with சி for sivarathri 2022: சிவந்த சேயோன் சிவம் சித்தாந்தம் சித்தரிக்கும் சிவம் சித்தர்கள் காட்டிய சிவம் சிதம்பர அருவுருவம் சிவம் சித்தத்தை ஆளும் சிவம் சினமில்லா அன்பே சிவம் சித்ததைச் சிவன்பாலே வைத்து (சீரும்) சிறப்புடன் வாழ சிவ சிவ சிவ Rising and setting Red sun from mountain is Seyon or Shiva Philosohy depict Siva ideology Shiva described or explainned by the Siddhars Formless or conceptual brahmam/God is saivam Shiva rules the will or mind Compassion or Love with out anger or hatred is shiva Meditate or think about Shiva for living with excellence Civanta cēyōṉ civam cittāntam cittarikkum civam cittarkaḷ kāṭṭiya civam citampara aruvuruvam civam cittattai āḷum civam ciṉamillā aṉpē civam cittataic civaṉpālē vaittu (cīrum) ciṟappuṭaṉ vāḻa civa civa civa
உடலை அகலாக்கி எண்ணங்களை எண்ணையாக்கி அறிவை திரியாக்கி ஏற்றினேன் உள்ஜோதியை மனஇருள் மறையட்டும் Uṭalai akalākki eṇṇaṅkaḷai eṇṇaiyākki aṟivai tiriyākki ēṟṟiṉēṉ uḷjōtiyai maṉa'iruḷ maṟaiyaṭṭum Body is lamp, thoughts are the oil or ghee, Intellect is wick or thread Lighting up the inner lamp Let Ignorance of my mind disappear
செய்வது என்செயல் நடத்துவது அதன்செயல் வேண்டுவது என்செயல் கொடுப்பது அதன்செயல் விரும்புவது என்செயல் கிடைப்பது அதன்செயல் மகிழ்வது என்செயல் ஒன்றே There is great power/force beyond our understanding. All depends on that, except happiness, which is your responsibility (your state of mind?)
தேவை எள்ளளவு உடமை கடலளவு விரும்பியதில் சில கிடைக்கவில்லை கிடைத்ததில் விருப்பமில்லை தேடியதில் சில கிடைக்கவில்லை தேடாமல் இருக்க முடியவில்லை எளிமை வாழ்வினிலே பேரின்பம் (இருக்குதய்யா) Simplicity is closeness between want and need (or used and have) பாசம் எள்ளளவு ஆசை கடலளவு பிறவிக் கடலிலே பிடுச்சுக்க ஒன்றுமில்லை வாழ்வில் சில சரியில்லை வேறு எதுவும் வழியில்லை நல்லவர் என்று யாரும் பிறக்க வில்லை தீயவர் என்று யாரும் இறக்க வில்லை வாழ்வின் சிக்கல்களை நம்பிக்கை மறைக்கும்மையா இணக்கம் எள்ளளவு சுற்றம் கடலளவு சொல்வதில் சில பிடிக்கவில்லை சொல்லாமல் இருக்க முடியவில்லை கேட்பதில் சில பிடிக்கவில்லை கேட்காமல் இருக்க முடியவில்லை விட்டுக்கொடுப்பதே விவேகம் (ஐயா ) மௌனம் ஒருபோதிமரம் செய்தது எள்ளளவு செய்யாதது கடலளவு அறிந்தது எள்ளளவு அறியாதது கடலளவு அறிந்ததினால் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை அறியாததினால் எதுவும் இயக்கவில்லை தாழ்மையே உயர்வுக்கு வழி மனநிறைவு திருப்தி நிம்மதி எள்ளளவு கலக்கம் கடலளவு தோற்றம் உண்மையில்லை உண்மையும் தெரியவில்லை எனக்கு ஒன்றும் புரியவில்லை யாருக்கும் புரியவில்லை எல்லாம் புரிந்ததை கடவுள் என்பார் இது புரிந்தால் பிரச்னை இல்லை
जय हिन्द, ஜெய்ஹிந் Jai Hind பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு சரித்திர பழம்பெரும் நாடு அரசியல் நெறிவளர்த்த ஆன்மிக நாடு மக்கள் ஒன்றுகூடி வாழ்ந்த (வாழும்) நாடு
கற்றேன் கல்விமானல்ல கவிபாடுவேன் கவிஞனல்ல. கற்பனைத்திறனுண்டு கலைஞனல்ல காளிதாசனுக்கொரு காளியுண்டு கஜானனே காவில் காவ்யம் கரோமி (give me poem) Read something, but not Learned can write something, but not a poet can imagine, Not an artist Like kali for kalidasa, ganesa give me or make me make poem on starting with ka கணேச காவ்யம் ககரத்தில் கரோமி களிப்புற்றும் கற்பகமே கருணைக் கடலே கணங்களை கட்டுப்படுத்தி காப்பாற்றும் கணநாயக கஷ்டங்களைக் களைவோனே காந்தனே கலியுகநாதனே கர்த்ரே கன்னிமூல கணபதயே கஜானனே காலாய கபிலாய கவிஷாய கண்ணிற்படுபவனே காலம் கடந்த கணபதியே கவிபாட காலமெல்லாம் காக்கட்டும் making all joyful, invaluable, ocean of compassion diciplined and protect your soldiers/followers lord of gods, lord of people, has an elephant’s face remove problems/obstacles loved by all, savior of this yuga/age master of destiny, yellowish brown colored, master of poets, easy to spot in many temples/places Inspiration: காவ்யம் கரோமி நஹிசாருதரம் கரோமி can you make poem! can write poem, not good quality or well யத்னாத் கரோமி யதி சாருதரம் கரோமி can try, with effort, can write good poem பூபால மௌளி மணிமண்டித பாத பீட ஹே சாகஸாங்கா (போஜராஜ) கவயாமி வயாமி யாமி..! When Kings bow and prostrate before you, their jewelled crown, makes your foot and foot rest shining bright red. I make poems. I do weaving. Good bye.King Bhoja was in his assembly of learned, poets, writers, philosophers... One illiterate weaver managed to get into the court. King Bhoja on seeing a new face, asked him if he can make poem. Using the same words, weaver made the poem. This is the legend like Vikramadithya's throne. Any one in Bhoja's court will become a poet.
Ganesh represents wisdom, knowledge, freedom from obstacles and good fortune. விநாயகனே! வினை தீர்க்கும் விநாயகனே! எங்கள் விநாயகனே! எங்கள் வினைகளால் விளைந்த விபரீதங்களை விக்கினங்களை விலக்கும் விக்னேஸ்வரனே! சதுர்வேதங்களின் அதிபதியே சதுர்த்தியில் உன்னை சரணடைந்தேனே விருப்பங்களை நிறைவேற்றும் விநாயகனே விநயமாய் வேண்டுவதெல்லாம் உன் அருளே Our Ganesha! remover of bad effects of past deeds Removes chaos/blunders/hurdles/obstacles created due of Our own actions I surrendered to Lord of the four scriptures on caturtti Ganesha who fulfills our desires All that I humbly ask for, is your grace
கங்காதரன் கண்பொறியே கருணைக்கடலே கந்தனே கார்த்திகை கன்னிகளைக் கவர்ந்த காங்கேயனே கற்றவர் கற்காதொங் காரத்தைக் கற்பித்தவனே கடல் கடந்து கடுமரக்கரைக் கட்டியவனே கணேசனுதவி காட்டாயகியுடன் கலந்த கதிர்காமனே கஷ்டங்களைக் களைத்து காத்தறுள்வாய் கடவுளே! Spark from Shiva's (kangkAtharann) third eye, compassionate ocean, kaNthannE kAngkEyannE, you are liked by kArththikai maidens You taught concepts behind Aum, to learned who have missed the basics You crossed the ocean to subjugate demons like surapadma With Ganesha's help, you (kathirkAma) married Valli, beauty of the forest You (GOD) protect us, by solving our problems Note: கற்காதொங் காரத்தை - கற்காத ஓங்காரத்தை (ஓம் எனும் பிரணவமந்திரம்;) Inspiration: க த்வம் பாலே? காஞ்சனமாலா கஸ்ய புத்ரி ? கனகலதாயா கிம் தே ஹஸ்தே? தாலிபத்ரம் கா வா ரேகா? க க்க ஹ ஹ்ஹ Who are you? Kanchanamala (a golden necklace). Whose daughter? Kanakalata’s (a golden vine). What’s in your hand? A palm leaf. What’s written there? Ka Kha Ga Gha.King Bhoja wanted poets to write a poem using Ka Kha Ga and Gha, the first four consonants. Seems one illiterate (nirakshara kutchi - one who does not know even one character) prayed to Kali for knowledge. Walking on the road, he heard coversation between two persons. He was just repeating it and that became a poem, appreciated by the King. Thus he became a poet, Kalidasa (Common name or title). This is Similar to valmiki
கூரிய வேலா புத்திக்கூர்மை கொடு ஆழமான வேலா ஆழ்ந்த அறிவைக் கொடு விரிந்த வேலா பரந்த மனப்பான்மை கொடு வேலவா உன்வேலுக்கு இருபக்கம் கருணை உன்சக்திக்கு மறு பக்கம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 'வெல்' verb meaning win, became noun object 'வேல்' For war, Tamil use etti or lance, which is cylindrical one. Vel is for kings and generals, royalty symbol. Vel represents wisdom (sharp mind, broad knowledge, long deep knowledge) It has 2 sides, indicating two views for anything wisdom is to consider both sides or both view points. syntheis (truth) = thesis+antithesis
வந்தேன் முருகா பழனி மலை நீ அறிவாயோ எந்தன் பக்தி நிலை வந்தேன் முருகா உன்னிடம் செல்வதிற்கில்லை வேறிடம் (வந்தேன்...பக்தி நிலை ) உன் அடி சேர்த்தேன் என் உடலை தீர்த்தாய் எல்லாப் பிணிகளை உன்னிடம் கொடுத்தேன் என் மனதை தீர்ந்தாய் எல்லாக் கவலைகளை (வந்தேன்...பக்தி நிலை ) ராஜா கோலத்தில் காட்சி தந்தாய் மகன் ராஜாவுக்கு நல்வாழ்வு தந்தாய் நீ கொண்டது பல வேடம் நான் கண்டது உன் ஓட்டுனர் வேடம் (வந்தேன்...பக்தி நிலை ) பழனி மலை காண கண் வேண்டும் சன்னதிக்கு வர கால் வேண்டும் உன்திரு நாமம் செவிக்குணவு அங்கு கிடைத்தது நல்ல மன நிறைவு (வந்தேன்...பக்தி நிலை ) மனம் இருப்பது உன்னிடம் உடல் செல்கிறது வேறிடம் வருவேன் மீண்டும் பழனி மலை வேண்டுவது எல்லாம் உன் அருளை (வந்தேன்...பக்தி நிலை ) First line adapted from: வந்தேன் முருகா பத்துமலை in movie யாமிருக்க பயமேன்
வந்தேன் முருகா பழனி மலை நீ அறிவாயோ எந்தன் பக்தி நிலை (மீண்டும் வந்தேன் பழனி மலை நீ அறிவாயோ எந்தன் பக்தி நிலை ) வந்தேன் (உன்னை) காண கடல் தாண்டி உன்னெழில்காண வேண்டும் கண்கள் பலகோடி நீ இல்லாத இடமொன்றுமில்லை சிறப்பாக நீ இருக்குமிடம் பழனி மலை பழனி மலை காண கண் வேண்டும் சன்னதிக்கு வர கால் வேண்டும் (வந்தேன்...பக்தி நிலை ) ஜ்யோதியில் நீ தோன்றினாய் ஜ்யோதியை எனக்கு வழங்கினாய் அழித்தாய் என் இன்னல்களை களைந்தாய் என் அழுக்குகளை (வந்தேன்...பக்தி நிலை ) செல்கிறேன் உன்னை மனதில் வைத்து பாடிடுவேன் உன்னை வழி எங்கும் வருவேன் மீண்டும் பழனி மலை வேண்டுவது எல்லாம் உன் அருளை (வந்தேன்...பக்தி நிலை )
வள்ளி வள்ளி (என) தேடி வந்தான்... அந்த வடிவேலன் தான்... (ஓ..ஓ...) அள்ளி அள்ளி எனக்கு அளித்தான் அந்த ஆண்டவன் தான்... (..ஓ...) தள்ளி தள்ளி அவன் சென்றான் தர்மமது என்ற தண்டபாணி தான்... solli kotuttha swaminathan (Above incomplete one for Thaipoosam. More to be added) Muruga came searching for Valli to take care of her or give her happiness or redeem her. Gave me everything in plenty, Indeed he is GOD or Infinite He seems to move away from everything in Palni, to indicate Detachment is (step) Dharma
அறமுணர்த்த அயோத்தியில் அவதரித்த அண்ணலே அரணில் அவதியுற்ற அந்தணரின் அடைக்கலமே அன்புருவான அழகியை ஆற்றலால் அடைந்த அழகனே அநியாயமாக அரண்யத்துக்கு அனுப்பப்பட்ட அருட்செல்வனே அகிலமெங்கும் அன்பர்களை அரவணைத்த அன்பழகனே அருகதையுள்ள அன்பனை அரசனாக்கிய அறிவழகனே அன்னையின் அழகால் அறிவிழந்து அன்னையை அபகரித்த அரக்க அரசனிடம் அனுமனால் அறிந்தவனே அணை அமைத்து அலைகடலை அடக்கி அக்கரையை அடைந்தவனே அநியாய அரக்கரை அமரில் அஸ்திரத்தால் அழித்தவனே அறமுணர்ந்த அரக்கனை அரியணையில் அமர்த்தியவனே அநியாயம் அஞ்ஞானம் அடிமைத்தனம் அகற்றியவனே ஸ்ரீராமனே அறம்! அவனே அபயம்! அவனாட்சியே அரசாட்சி! Born in Ayodhya to show dharma Refuge for suffering rishis in the forest Won beautiful loving seetha by skills/contest Injustice to send him to forest Made friends with everyone, increasing sibling count Made good and able one as Vanara king With hanuman located seetha and rakshasa king Build dam/bridge and crossed the sea Destroyed wicked rakshasas and made good rakshasa as king Removed injustice, ignorance, slavery etc from Kingdom. SriRam is dharma/righteousness personified. His rule is an ideal administration.
எளியவர்களுக்காக எடுத்த அவதாரம் யாவருக்கும் கருணை செய்ய வந்த அவதாரம். மண்ணிலேயே விண்ணை கொண்டு வந்த அவதாரம் கவிதையிலும் ஓவியத்திலும் சிற்பத்திலும் நிலைத்த அவதாரம் Incarnation taken for simple persons The incarnation who came to show mercy to all The incarnation that brought the heaven to the earth Eternal incarnation in literature/music, painting and sculpture அணிலுக்கும் அனுமனுக்கும் அன்பனான அவதாரம் அனைவருக்கும் அடைக்கலம் அளித்த அவதாரம் அபயமளித்தது அடியவர்க்கு அண்ணனானா அவதாரம் அவனே அறம்! அவனே அபயம்! அவனாட்சியே அரசாட்சி! அனைவருக்கும் ராமநவமி வாழ்த்துக்கள் Loving incarnation of small Squirrel and mighty Hanuman The incarnation (Rama) that gave/gives refuge to all Protection to needy and becoming a brother to them SriRam is dharma/righteousness personified. His rule is an ideal administration. Ramanavami greetings to all From Kamba ramayan: வென்றிசேர் இலங்கையானை வென்ற மால்வீரன் ஓத நின்ற ராமாயணத்தின் நிகழ்ந்திடு கதைகள் தம்மில் ஒன்றினைப் படித்தோர் தாமும் உரைத்திடக்கேட்டோர் தாமும் நன்று இது என்றோர் தாமும் நரகமது எய்திடாரேNo one who reads, narrates or listens to Ramayana programs will go to hell. They will live a long life in this world without any suffering and excels, will not go to hell in the Hereafter. Let us sing, read/understand, listen and recite the Ramayana.
கண்ணா கார்முகில் கண்ணா கவிஞர் கண்டெடுத்த கண்ணம்மா கர்மயோகத்தைக் கற்பித்தவா கவிபாட கற்பனைகொடு கண்ணா கள்ளமில்லா களிப்பூட்டும் கள்வனே கன்னியரைக் கவர்ந்த கற்கண்டே கனவிலும் காக்கும் கருணைக்கடலே கவலைகளும் கலக்கங்களும் கரைந்ததே Identified by poets as dark and charming, motivated to sing. Large number of songs on Krishna are written. Teacher of Karma Yoga (stressing importance of duty) Give me imagination skills to produce poems Image of innocent boy Krishna steal our hearts Mothers/Women attracted by baby Krishna Krishna protects/take care of us even in dream world. So, all our worries and confusions have dissolved/disappeared Similar poem: தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூவெண் மதி சூடி காடு உடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளங் கவர் கள்வன் ஏடு உடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த பீடு உடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே [திருஞானசம்பந்தர் தேவாரம்] One (God) wearing earstud, riding on the holy Bull and having white Moon on his head Smears the ash from the cremation ground and the thief who stole my heart who blessed Brahma (the one on the Lotus) who prayed earlier He is none other than the Lord of Piramapuram.
பொங்கலில் உன் இனிமையைக் கண்டேன் சிடையில் உன் வலி(மை)யைக் கண்டேன் அவலில் உன் அன்பைக் கண்டேன் வெண்ணையில் உன் தூய்மையைக் கண்டேன் சிவப்பில் உன் தியாகத்தை கண்டேன் மஞ்சளில் உன் பீதாம்பரம் கண்டேன் நீல நிறத்தில் மயில் பிலியைக் கண்டேன் எங்குமுள்ள உன்னை இவைகளில் கண்டேன் கண்ணா கார்முகில் கண்ணா! கண்கொள்ளக் காட்சி கண்ணா! Krishna, Saw your sweet nature in Pongal Firmness (strength) in seetai Love in beaten rice Purity in butter Saw your Sacrifice in red silk dress in yellow turmeric your peacock feather decoration in blue color Saw you, who exist every where, in all these items Your form in food/rangoli is an awsome feast for my eyes
More on kannan
கண்ணா கார்முகில் கண்ணா! கவிஞர்கள் கண்டெடுத்த கசக்காத கனியே கவலைகளைக் கரைக்கும் கருணைக் கடலே கவிபாட கற்பனைகொடு கண்ணா எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான் கண்ணன் - என் அன்பன் இங்கிவனை யான்பெறவே என்னதவஞ் செய்தேனோ ... long oneOriginal: எங்கிருந்தோ வந்தான்,இடைச்சாதி யென்று சொன்னான். இங்கிவனை யான்பெறவே என்னதவஞ் செய்து விட்டேன்! Bharathiyar song
Two magic words: விட்டேன் (gave up)- பாடுவேன் (Sing your glory) Song composed for Purandara Dasa's determination: வீட்டை விட்டேன் விட்டலா விருப்பத்தை விட்டேன் விட்டலா விருந்தை விட்டேன் விட்டலா விட்டிலேன் உன்னை விட்டலா Left home, gave up desires and tasty food But I will not give you up Vittala விசாரங்களை விட்டேன் விட்டலா விஷமங்களை விட்டேன் விட்டலா விமர்சனங்களை விட்டேன் விட்டலா விவஸ்தைகள் விட்டது விட்டலா Gave up mischief, gossips, unnecessry comments etc All our problems/issues left us பாடுவேன் உன்னை பாண்டுரங்கா பக்தர்களின் பக்தா பாண்டுரங்கா பாமரர் பந்து பண்டரிநாத பறிகொடுத்தேன் என்னை பண்டரிநாத Will Sing your glory Lord who is Devotees devotee and relative of commoners You have snatched me away, my lord பாசத்தை விட்டேன் விட்டலா பக்தியை விட்டிலேன் விட்டலா பசியை விட்டேன் விட்டலா பிரசாதத்தை விட்டிலேன் விட்டலா பாண்டுரங்கா புராண புருக்ஷா பண்டரிநாத பாண்டுரங்கா ஜெய ஜெய விட்டலா, பாண்டுரங்க விட்டலா பண்டரிநாத விட்டலா
(1) Journey to Sabari forest சபரிமலைக்காடு அது சாஸ்தாவின் வீடு (சபரிமலைக்காடு ) இருமுடி கட்டி நடைபோடு எந்நாளும் அவன் துணை தேடு (சபரிமலைக்காடு ) மலைமேல் இருக்கின்றான் மகர தீபத்தில் தெரிகின்றான் எங்கும் இருக்கின்றான் என் மனதிலும் தெரிகின்றான் (சபரிமலைக்காடு ) கடமையை செய்து விடு மற்றவையை அவனிடம் விட்டுவிடு (சபரிமலைக்காடு ) கையெடுத்து நீ கும்பிடு காலமெல்லாம் நீ நம்பிடு உன் விருப்பப்படி வழிபடு விருப்பங்களை அவனிடம் கொடுத்துவிடு (சபரிமலைக்காடு ) எல்லாக் காலங்களிலும் வணங்கலாம் எல்லா பயன்களையும் அடையலாம் நமக்கு நல்ல நண்பன் ஐயப்பன் நல்லதே செய்வான் நமக்கெல்லாம் (சபரிமலைக்காடு ) சரணமென்று சொல்லு அவன் சன்னதி நாடி செல்லு (சபரிமலைக்காடு ) சாமியே சரணம் ஐயப்பா (x4) *Inspired by Veeramani song சபரிமலைக்காடு (2) ஆறுபடை ஐயப்பா ஆறுபடை வீடு உடைய ஐயப்பா அச்சன்கோயில் வனஅரசனே ஐயப்பா ஆரியன்காவில் அமர்ந்த அரசனே ஐயப்பா குளத்துப்புழை குழந்தையே ஐயப்பா எருமேலி முதல் கோட்டையனே ஐயப்பா பந்தளத்து பால சாஸ்தாவே ஐயப்பா சபரிமலை தர்ம சாஸ்தாவே ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா (x4)
The Kubera kolam magic square is formed by the numbers. Add up to the same number 72. 27 20 25 22 24 26 23 28 21 மார்கழி மாத மாக்கோலம் அதற்கு அடுத்த தைத்திங்கள் தலைமுறை தழைக்கும் தை வெள்ளி மங்களகரமான மாவிளக்கு (வழிபாடு) Kolam for the month of Dec-Jan Next month will be Thai (Jan-Feb) Generation thrive on Thai month Friday Worship Auspicious Lamp Worship கோலங்களில் பல கோணங்கள் கோடுகளில் பல பரிமாணங்கள் புள்ளிககளில் பூக்கும் பூக்கோலம் புத்தம் புதிய பல புதிர்கள் Many angles in the kolams Multiple lines and dimensions From many dots blooms flower kolams Many new puzzles and riddles காலங்களில் பல திருப்பங்கள் கடந்ததை கடந்ததும் களிப்பொன்றே மறைந்தது மனச்சோர்வு மலர்ந்தது மனஅமைதி Many twists in life over time The past is a joy to behold Depression disappeared with Blooming peace of mind அழியாத கோலங்கள் அலைகடல்போல் ஓய்வதில்லை அகக்கடல் பொங்குவதே அதன் அம்சம் Eternal kolams do not rest like waves (Its feature) Makes our inner mind bubble with joy முத்தான கோலங்கள் : ஆரம்ப புள்ளிகள் திட்டங்கள் இணைத்த கோடுகள் செயல்கள் எண்ணங்கள் உருவாக்கிய சிந்தனைகள் பிறந்தது வாழ்க்கை கோலங்கள் வாசல்களை அழகாக்கும் கோலங்கள்! மனநிலையை பிரதிபலிக்கும் கோலங்கள் வண்ணமயமான ஜொலிக்கும் கோலங்கள் முத்தான கண்ணை கவரும் கோலங்கள் உன்னை சிந்திக்கவைக்கும் கோலங்கள் மற்றவர்களை பேச வைக்கும் கோலங்கள் எல்லோர் கண்ணைப் பறிக்கும் கோலங்கள் காலம் செய்த கோலமே நம் வாழ்க்கை
எழுதாத காவியமே வரையாத ஓவியமே படிக்காத பாடமே மறையாத உருவமே மறக்காத உன் நினைவே தெவிட்டாத இன்பமே எங்கிருந்தோ வந்தாயே உன் முகவரியை இழந்தேனே/தொலைத்தேனே
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sweet Happy Tamil New Year to all loving ones! சென்ற (ஷுபக்ருது) ஆண்டுக்கு நன்றி Thanks and Good bye to past Subakiruthu year எதுவும் முடிவு அல்ல, எல்லாமே அடுத்த நல்லதுக்கான தொடக்கம். மகிழ்ச்சியுடன் (ஷோபக்ருது) புத்தாண்டை வரவேற்போம் ஷுபக்ருதம் ஜாதவேதஸம் தர்ப்பயாமி ஷோபக்ருதம் ஸஹோஜஸம் தர்ப்பயாமி There is no end. All are just beginning for next good one. Let us welcome New Sobakirathu Year with cheers! Salutations to new year and Presiding Deity ஷோபக்ருதம் ஸஹோஜஸம் தர்ப்பயாமி Salutations to year and Presiding Deity துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகட்டும் தீமைகள் அகன்று நன்மைகள் பெருகட்டும் புதுமைகள் தொடர கனவுகள் மெய்ப்படட்டும் மாற்றங்கள் மலர மகிழ்ச்சி பொங்கட்டும் ஆரோக்கிய நீண்ட ஆயுள் நிலைக்கட்டும் அன்பு பெருகி ஆனந்தம் தொடரட்டும் சர்வேஷாம் ஷாந்திர் பவது! எங்கும் அமைதி நிலவ வேண்டும்! Let the sufferings disappear and joys multiply Let badthings leave and good things multiply Dreams come true as innovations continue Let Changes bring floral joy/happiness Wishing for a long healthy life May love abound and bliss continue Let there be peace every where! இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு தின்றுவிளையாடி இன்புற்று இருந்துவாழ்வீர்; தீமையெல்லாம் அழிந்துபோம்,திரும்பி வாரா! பாரதி
புலன்களால் புரியாத அறிவினால் அறியாத தெரியாத தெய்வத்தை வார்த்தைகளால் வழிபடுவோம் கரோனா கஷ்ட காலத்தில் கருணைக் கடல் கடவுள் கணபதி காப்பாற்றும் Let us pray to Unknown GOD, beyond senses and intelligence. Believing that all compassionate GOD will save us from difficult period like this (Carona crisis) Now in Ganapathi appears as compassionate Ganapathi.
அம்மாப் பொண்ணுக்குக் கல்யாணம் அவவாவீட்லே சாப்பாடு கொட்டு மேளம் கோவிலிலே புரோஹிதர் எம்பிபோர்லே கல்யாணக் காட்சி ஸுமிலே வாழ்த்துக்கள் வாட்ஸப்லே படங்கள் பெஸ்புக்லே கல்யாணக் கச்சேரி யூடுயூப்லே வெற்றிலை பாக்கு கடையிலே சுண்ணாம்பு சுவத்திலே நடந்தது நன்றாகவே!