hinduhome Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.

Vaishnavam


VISHNU Probably means "all-pervasive" in Sanskrit. Vishnu is the protector and preserver of the universe, usually depicted as four-armed and blue-skinned. For Vaishnavas, He is the only Ultimate Reality or God. Additionally, another important name for Vishnu is Narayana. Sri Ranganatha, Ranganathar, or Ranga (a resting form of Lord Vishnu). His consort is Goddess Lakshmi, also known as Ranganayaki, Thayar (mother in Tamil). Ranganatha or the reclining posture of the God. He is known in Tamil as Perumal, may be husband or Lord.

Naalayira divya prabandham


நடந்தகால்கள் நொந்தவோ! நடுங்கஞால மேனமாய்!
இடந்தமெய் குலுங்கவோ! இலங்குமால் வரைச்சுரம்
கடந்தகால் பரந்தகாவி ரிக்கரைக் குடந்தையுள்*
கிடந்தவா றெழுந்திருந்து பேசு, வாழி கேசனே ! (திருச்சந்த விருத்தம் - 61)
Is it because your feet are hurt ? Is it because your body aches ? Through feat of lifting Lady Earth , through feat of traversing the Earth ! You lie amid the Kaviri that fans out in Kudandai plains? Pray rise O Lord and speak a word, O Kesava, my Wonder Boar !
ஓஓ! உலகினது இயல்வே! ஈன்றோள் இருக்க மணை நீராட்டி,
படைத்திடந்து உண்டுமிழ்ந்தளந்து தேர்ந்து உலகளிக்கும்
முதற்பெரும் கடவுள் நிற்ப, புடைப் பல தான் அறி தெய்வம் பேணுதல்,
தனாது புல்லறிவு ஆண்மை பொருந்தக் காட்டி [thiruvAsiriyam]
The nature of this samsAram (material world) is very pathetic. When ones own mother is present, ignoring her, the less intelligent people will be decorating and worshipping a wooden-plank. The same way, when srIman nArAyaNan who first created the universe, rescued it from the ocean, protected the universe by keeping it in his stomach safe.
தீர்த்தன் உலகளந்த சேவடிமேல் பூந்தாமம் சேர்த்தி அவையே சிவன்
முடிமேல் தான் கண்டு பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான்
பெருமை பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே? [thiruvAimozhi - 2.8.6]
When arjunan wanted to blessed by shiva with some weapons in the battle field, he asks krishNan what to do. krishNan simply asks him to worship his most pure and auspicious lotus feet (that measured the universe) with some flowers and in the night shivan appears in arjunan's dream and shows him carrying those same flowers in his head and blessed him the weapons. Thus it
யதேத பரமம் ப்ரஹ்ம லோகே வேதேஷு பட்யதே
ஸ தேவ: புண்டரிகாக்ஷஸ் ஸ்வயம் நாராயண: பர:
srIman nArAyaNan (puNdarikAkshan - the lotus eyed) represents the supreme god who is seen in the vEdham and in the entire universe.
பர: பராணாம் புருஷோ யஸ்ய துஷ்டோ ஜநார்த்தந:
ஸ ப்ராப்நோத்யக்ஷயம் ஸ்தாநமேதத் ஸத்யம் மயோதிதம்
If our actions/deeds are pleasing to janArdhanan who is greatest amongst everyone and who is known as purusha, we have achieved the eternal spiritual goal or planet. We can confidently declare this.
நாஸ்தி நாராயண ஸமோ ந பூதோ ந பவிஷ்யதி
ஏதேந ஸத்ய வாக்யேந ஸர்வார்த்தாந் ஸாதயாம்யஹம்
There never was some one equal to NArAyaNan, there never is and there never will be. One can accomplish everything understanding these most truthful words.
ஹரிகீர்த்திம் விநைவாந்யத் ப்ராஹ்மணேந நரோத்தம;
பாஷாகாநம் ந காதவ்யம் தஸ்மாத் பாபம் த்வயா க்ருதம்
Oh best of men! Poems/songs in all or other languages are for glorifying lord. One will acquire sins for punishing the ones who were glorifying Lord in other languages.
archAvathAra upAdhANa vaishNava uthpaththi chiNthaNam
mAthruyONi parIkshayAs thulyamAhur maNIshinNa:
அர்சாவதார உபாதாந வைஷ்ணவ உத்பத்தி சிந்தநம்
மாத்ருயோநி பரீக்ஷயாஸ் துல்யமாஹுர் மநீஷிண:
The learned people state that "analysing archAvathAra emperumAn based on the raw material (metal, wood, stone, etc) is like doubting the chastity of ones own mother (which is very cruel). Lord descends into the temples and homes of his most dear devotees and takes any form that is desired by his devotees.
சாக்கியம் கற்றோம் | சமணம் கற்றோம் | அச்சங்கரனார்
ஆக்கிய ஆகமநூல் ஆராய்ந்தோம்
பாக்கியத்தால் செங்கட்கரியனைச் சேர்த்தியோம் தீதிலோம்
எங்கட்கரிய தொன்றில்
[திருமழிசைபிரான் - Intellectual bakthi brought out by above poem]. After reading, mastering, or analyzing all philosphies like sakyam, samanam, advaitham and so on, one understands that it leads no where. Luckily I have got Varada (Vishnu) to surrender to, now I am at peace, no more issues or problems. Infinite (Vishnu) can not be undertood, but can only be experienced.
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்.
உளன் அலன் எனில் அலன் அவன் அருவமிவ்வருவுகள்
உளனென இலனென அவைகுணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஓழிவிலன் பரந்தே
[By நம்மாழ்வார். For believers God manifests in many forms (deities). For non believers, God is a formless conceptual entity, supporting both phenomena, ever existing/extending everywhere]
The twelve Alwars (VaishNavaite devotees) lived during the period 5th-9th centuries AD. The Alvars represented all the caste-groups of the society (including two kings and one woman). Divya prabhandham is a collective body of four thousand passionate hymns written/sung by them. Ramanuja was instrumental in prabhandham or dravida vedam. Nathamuni in the 10th century, retrieved and compiled this bhakti treasure which is the pride of Tamil classical literature.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடிநூறாயிரம்
மல்லாண்டதிண் தோள்மணிவண்ணா உன் செவ்வடி செவ்விதிருக்காப்பு.
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார்சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர்புக்குமுழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே.
Periyalwar blesses Renganatha or Vishnu many and many a thousand years. To the bond between us, many and many a thousand years. To the divine lady resting on your manly chest and always staying with you, many and many a thousand years. To the fiery discus adorning your right shoulder, many and many a thousand years. To the conch Panchajanya that strikes terror in the battlefield, many and many a thousand years.
வையம் தகளியா வார்கடலே நெய்யாக,
வெய்ய கதிரோன் விளக்காக, செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,
இடராழி நீங்குகவே என்று.
[2082: பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி ]
The Earth is my lamp, the ocean is the oil or ghee, and the radiant sun is the flame, I offer this garland of songs at the feet of the radiant discus-bearing Lord, that we may cross the misery-ocean.
அன்பே தளியா ஆர்வமே நெய்யாக,
இன்புருகு சிந்தை யிடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்.
[2182: பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி]
Love is my lamp, eagerness is the oil or ghee, my devotional mind or heart is the wick. Melting myself, here I light a lamp and offer this garland of Tamil poems.
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று.
[2282 பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி]:
Now I have seen the lotus-dame on the frame of my ocean-hued Lord. Lord wields a fiery discus and a dextral conch in his hands. Lord has the radiance of the golden sun. “ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம்“ திருபொன்மேனிகண்டேன், Because of association with Laxmi or divine mother, Lord is radiant.
அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப் | பன்னு திருப்பாவைப் பல்பதியம்
இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை | பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு
சூடிக் கொடுத்தாள் சுடர்க் கொடியே தொல்பாவை | பாடி அருளவல்ல பல்வளையாய்
நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி ஒன்ற இம்மாற்றம் நாங்கடவா வண்ணமே நல்கு.
Tribute to Kodhai or ANDAL, from pudhuvai where swans wander (SrivilliputhUr), sang sweet musical poems. in the form of a lovely poetic garland called ThiruppAvai in praise of Lord. Let us extol her who wore the flower garlands before they were offered to the Lord. (the place where Kodhai was born is the same place where Lord Govinda lives)
வாரண மாயிரம் சூழவலம் செய்து | நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் | தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்
"Oh my dear friend! I had this wonderful dream; i saw naranan (sri ranganathan), surrounded by thousands of elephants, going around sri villiputtur. My father, periyazhvar, and the citizens of the village are waiting to extend a grand welcome to him with purna kumbhams. The whole village is decorated with toranams (streamers) to mark the festive occasion."by ANDAL
பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா. அமர ரேறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்,
இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோக மாளும்,
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகரு ளானே.
[ ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருமாலை ]
“O Lord of Srirangam, Arangama-nagar, with the hue of a huge green mountain! Lord of coral lips, lotus-red eyes, Achyuta! Lord of Eternals, O Cowherd-Lord”. Even if I was made Indra to rule Indra’s kingdom, I shall not want it. I would prefer to be at Srirangam enjoying your presence and singing your glory.
ஊரிலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவரில்லை
பாரில் நின்பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி,
காரொளி வண்ணனே! ஓ கண்ணனே! கதறுகின்றேன்
ஆருளர் களை கண் அம்மா அரங்கமா நகருளானே!
By தொண்டரடிப்பொடி ஆழ்வார் - O Great Lord, I have no town to call mine, no land to claim, no relatives or friends in this wide world. O Dark Radiant One, I am securing your feet, My Krishna, I scream and call. Who is there to protect me? Except you, O Lord of Srirangam, Arangama-nagar!
வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும்பையில் பிறந்து,
கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு அவர்த்தரும் கலவியேகருதி,
ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால் உணர்வெனும் பெரும் பதம் திரிந்து,
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா வென்னும் நாமம்.
[948 திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி]
I am weak, exhibit the effects of fatigue or exhaustion, suffering, despaired in my heart, born in the pain of a dark womb. I mingled, mingling with lurid young dames, enjoying in all pleasures. Luckily I ran to Lord by grace of Good-Lord, probed into nature of my mind. I sought, and seeking, found out for myself, abode of Ultimate refuge, Narayana a good name.
நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்,
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டுமுன் ஆண்ட மாளும்,
மதியினை மாலை வாழ்த்தி வணங்கியென் மனத்து வந்த,
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகி லேனே
[2032: திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருக்குறுந்தாண்டகம்]
I have found my treasure, my coral pillar, the Lord who is sole refuge of those who seek Lord through worship. The one who destroyed Kamsa, the Lord who rules the universe from yore, the adorable one. I worship the divinity that enters my heart with love, I shall never leave Lord from now.
பொய்ண்ணின்ற ஞானமும் பொல்லா வொழுக்கும் அழுக்குடம்பும்,
இந்நின்ற நீர்மை இனியா முறாமை, உயிரளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப்பிறந் தாயிமை யோர்தலைவா.
மெய்நின்று கேட்டருளாய், அடியேன் செய்யும் விண்ணப்பமே. 1
[2478 நம்மாழ்வார் திருவிருத்தம்]
O Lord! For the sake of us all souls, you took birth in several wombs! Help us so that we may never again attain the lowly state of faulty knowledge, wicked actions and filth-ridden body. This is our humble petition.
தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் | சூழும்
திரண்டருவி பாயும் | திருமலைமேல் | எந்தைக்கு
இரண்டு உருவுமொன்றாய் இசைந்து.
[2344 பேயாழ்வார் on unity of shiva vishnu. In the venkatam hills, the Lord seems to have both mat hari and crown. He wields both the axe and the discus, wears, both a snake around his neck and the sacred thread. Two images blended into one, -what a wonder!]
குடதிசை முடியைவைத்துக் | குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் | தென்திசை இலங்கைநோக்கி
கடல்நிறக் கடவுள் எந்தை | அரவணைத் துயிலுமா கண்டு
உடல் எனக்கு உருகுமாலோ| என்செய்கேன் உலகத்தீரே
[890 தொண்டரடிப்பொடி ஆழ்வார் ] The Lord of ocean hue, my master, reclines on a serpent in Arangam, with his crown resting in the East, his feet stretched to the West, his back to the North, his eyes looking South towards Lanka. O People of the world! What can I do? Alas, my body melts to see him.
அமலனாதி பிரானடியார்க் கென்னை யாட்படுத்த
விமலன், விண்ணவர் கோன்விரை யார்பொழில் வேங்கடவன்,
நிமலன் நின்மலன் நீதி வானவன், நீள்மதி ளரங்கத் தம்மான், திருக்
கமல பாதம்வந் தென்கண்ணினுள்ளன வொக்கின்றதே.
[927 திருப்பாணாழ்வார் அருளிச் செய்த அமலனாதிபிரான்]
The perfect-first-Lord is the radiant king of the celestials and resident of Venkatam surrounded by fragrant groves. His golden rule is just and blemish less. He made me a slave of his devotees. He is the Lord of Arangam surrounded by lofty walls. O, his auspicious lotus feet have come to stay in my eyes!
கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெரு மாயன், என்னப்பனில்,
நண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால்,
அண்ணிக்கும் அமுதூறுமென் நாவுக்கே.
[937: மதுரகவியாழ்வார் அருளிச்செய்த கண்ணி நுண்சிறுத்தாம்பு]
Here on a leash of rope (the wonder-child) my Lord was held, when manifested as Krishna. But any one's mouth is nectar-welled when Lord or Kurugur Nambi’s name is spelled.
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயராயின எல்லாம்
நிலந்தரஞ் செய்யும் நீள்விசும்பு அருளும் அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் –
By திருமங்கை ஆழ்வார் - Lord Narayana, your good name, gives a good life, of wealth and family, and removes all miseries and sufferings facing devotees, then grants the rule of the Sky and Earth with benign grace. It gives one strength, and all that there is, with love that exceeds a mother’s. Now, I know the Mantra.
அடியார்கள் வாழ! அரங்க நகர் வாழ! ஆழ்வார் தமிழ் நூல் வாழ!
கடல் சுழ்ந்த மண் ணுலகம் வாழ! உலகத்தார் வாழ!!!
ஓம் ஸாந்தி : ஸாந்தி : ஸாந்தி :
[peace be in all three realms: surroundings, body and mind OR self, you and everyone]

Email Contact... Website maintained by: NARA