hinduhome Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.

Murugan


ஓம் ஐம் சௌ க்லீம் ஸ்ரீம் சரவணபவ:

ஓம் நமோ பகவதே சுப்ரமண்யாய ஷண்முகாய மகாத்மனே
ஸ்ர்வ சத்ரு ஸ்ம்ஹார காரணாய குஹாய மஹா பல பராக்ரமாய
வீராய சூராய மக்தாய மஹா பலாய பக்தாய பக்த பரிபாலனாயா
தனாய தனேஸ்வராய மம ஸர்வா பீஷ்டம் ப்ரயச்ச ஸ்வாஹா!
ஓம் சுப்ரமண்ய தேவதாய நமஹ!
சிவம் சக்திம் கலாபம் or கௌமாரம் (Kumara is combination of siva sakthi).
சிவம் (static/peace). சக்தி (dynamic/action)
Murugan is the god of many cultures. The stories of Murugan caters for all human needs and emotions. The word muruku means honey, beauty, fragrance, divine music, eternal youth. The history of Murugan as a Tamil hill god, is the history of South India.

Murugan (முருகன்) is also called Kartikeya (son of Krittika), Arumugam, (Sanmuga or one with six faces), Kumara (eternal youth or child or son), Guha (cave-dweller), Skanda (seed), Vela, Saravaṇa, Swaminatha and so on. Chandogya Upanishad refers to Skanda as the "way that leads to wisdom". The Baudhayana Dharmasutra mentions Skanda as 'Mahasena' and 'Subrahmanya.'

உருவாய் அருவாய் உளதாய் இலதாய் | மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் | குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

O! Lord Muruga you are the one with the form, you are also one without a form. You are the one who has it all, and you are the one who does not have it all, you are present in the smallest, in the flower, in the ring of the bell, and in the Light. You are the embryo, you are the life, you are the destiny, and you are the fate. Please come upon us as our Guru and bestow your blessings.

பாரதியார் பாடிய பாடல்:

முருகா!-முருகா!-முருகா!
வருவாய் மயில்மீ தினிலே வடிவே லுடனே வருவாய்!
தருவாய் நலமும் தகவும் புகழும் தவமும் திறமும் தனமும் கனமும் (முருகா)
அடியார் பலரிங் குளரே அவரை விடுவித் தருள்வாய்!
முடியா மறையின் முடிவே! அசுரர் முடிவே கருதும் வடிவே லவனே! (முருகா)
சுருதிப் பொருளே,வருக! துணிவே, கனலே, வருக!
கருதிக் கருதிக் கவலைப் படுவார் கவலைக் கடலைக் கடியும் வடிவேல் (முருகா)
அமரா வதிவாழ் வுறவே அருள்வாய்!சரணம், சரணம்
குமரா, பிணியா வையுமே சிதறக் குமுறும் சுடர்வே லவனே, சரணம்! (முருகா)
அறிவா கியகோ யிலிலே அருளா கியதாய் மடிமேல்
பொறிவே லுடனே வளர்வாய்! அடியார் புதுவாழ் வுறவே புவிமீ தருள்வாய் (முருகா)
குருவே! பரமன் மகனே! குகையில் வளருங் கனலே!
தருவாய் தொழிலும் பயனும் அமரர் சமரா திபனே! சரணம்!சரணம்! (முருகா)

Beauty Nature & Muruga

Beauty of Nature is GOD. Rising and setting Red sun from mountain is Seyon (Muruga or Shiva). Greenary in forest is Mayon (Thirumal). Grey Dark beautiful sea or Ocean is Vannam or Varuna. Beautiful people and agricultural/farm land is Vendhan/Indran. Farming is beauty. Beauty of desert, empty land is Dancing/Mother/Protector Goddess. (Muruga and Shiva, may be light and fire.)

இயற்கை உடல்; அதன் உள்ளுறை உயிர். உயிரை முருகு அல்லது முருகன் என்று கொண்டனர். இயற்கையழகை முருகெனக் கொண்டு ஜோதி சொரூபமாக வழிபாடு நிகழ்த்தி வந்தனர்.
முருகையுடையவன் முருகன். பாண்டி நாட்டில் சிறப்புற்று விளங்கும் மற்றொரு பழம்பதியாகிய திருமாலிருஞ் சோலையில் எழுந்தருளியுள்ள கடவுள் `அழகன்' . (அழகனே ஆலவாயில் அப்பனே அருள் செய்வாயே - அப்பர்)
பலபலநாளும் சொல்லிப் பழித்தசிசு பாலன்தன்னை
அலவலைமை தவிர்த்த அழகன் அலங்காரன்மலை
குலமலை கோலமலை குளிர்மாமலை கொற்றமலை
நிலமலை நீண்டமலை திருமாலிருஞ் சோலையதே - பெரியாழ்வார்

Vel & Muruga

 
'வெல்' verb meaning win, became noun object 'வேல்' 
For war, Tamil use etti or lance, which is cylindrical one.
Vel is for kings and generals, royalty symbol. 
Vel represents wisdom (sharp mind, broad knowledge, long deep knowledge)
It has 2 sides, indicating two views for anything
wisdom is to consider both sides or both view points.
syntheis (truth) = thesis+antithesis

வேல் முனையில் கூர்மையாகவும் நடுவில் அகன்றும், உருவில் நீண்டும், இருக்கிறது. 
வேலின் முகம் = சுடர் இலை ; வேலின் மெய் = நீண்ட நெடு வேலாம்!
சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்;
சினம்மிகு முருகன் தண் பரங் குன்றத்து
அந்துவன் பாடிய சந்து கதெழு நெடுவரை - (அகநானூறு 59 - மருதன் இளநாகனார்)
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்"-ஆண்டாள் 
Andal says mayoon also had vel.
Two tamil gods: Seyoon (red - Muruga or shiva) and mayoon for vishnu/thirumal
வேலும் சங்கும் சங்கத் தமிழ் மரபு! திருமங்கை ஆழ்வார் கையில் வேல் உண்டு!
சிலப்பதிகாரத்தில், வேலுக்கு எனத் தனிக் கோட்டமே இருக்கும்!
முருகன் வேல், is a divine spear associated with war god, Vel Murugan. Goddess Parvati presented the Vel, the embodiment of Sakthi or the power, to her son Murugan, in order to vanquish the evil. Muruga symbolises valour/power and compassion. He has pardoned even the Soorapadman who fought with Him. Tholkappiyam, earliest Tamil literature, refers to existence of Muruga worship with only vel (still original kathirgama has only vel)
Muruga, the God of youth, power, love, beauty, wisdom and ultimate refuge. 'Murugu' which means honey, beauty, fragrance and eternal youth. Vel (triangular lance) symbolizes penetrating spiritual knowledge, wisdom, and the cutting away of ignorance.

Valli & Muruga

Murugan's courtship and his union with Valli Amma at Valli Malai, known for its pools, fresh greenery, caves and unusual rock formations. Valli Amma or Pongi (bubbling over with joy) is the spirit of a twelve-year old girl, just as Murugan always remains a kumara or youth. Vallimalai Satchidananda Swamigal, exponent of Tiruppukazh has made Valli Malai a sacred sakti peetam. On the way to Valli temples, there are Jain caves with many exquisite sculptures.
Valli discovered among the tubers of edible yam (valli), was adopted daughter of hunter chieftain Nampi. When Valli reached the age of twelve, she was sent to the millet field to guard the crop against parrots and other birds. Murugan assumed the form of a hunter and approached Valli. Nampi and his hunters brought some food for Valli (honey, millet flour, valli roots, mangoes, milk of the wild cow) and Murugan assumed the form of a tree. When Nampi and his company disappeared, Muruga expressed his love to her. Valli answered that it was improper for him to love a woman from the low tribe of the hunters. Valli warned Murugan that the hunters are wild and angry men, and they are coming. Murugan transformed into an old Saiva devotee and invoked the help of his brother Vināyaka who appeared behind Valli in the shape of a frightening elephant. The terror-stricken girl rushed into the arms of the Saiva ascetic for protection embracing him.
As the harvesting time approached, the tribesmen called Valli back to the hamlet and the lovemaking was over. Her mother noticed Valli's unhappiness. With the aid of her companion, Valli and her divine lover eloped. Next morning Nambi's wife discovered Valli's disappearance. The furious hunter-chief organized a party of hillmen in pursuit of the fugitives. When they reached them, they discharged their arrows at Murugan, but lost the battle. Murugan then assumed his true divine shape. The hunters worshipped him and begged him to return to the hamlet to be married in accordance with the custom of the tribe. Murugan and Valli returned to Skandagiri where they were welcomed by Devasena.
It is the classical Sangam age tale: the heroine from tribal areas; the appearance of the hero, and clandestine love-making (kalavu); love sickness and final happy ending.
Ghat region was ruled by Nambirajan, the king of the Kuravas or the hill tribes. kurava king discovered ‘Vallinayaki’ in the woods and brought her up as his own. Valli married Murugan and the marriage was celebrated in great splendor by Nambirajan, the king of kuravas. Their courtship is full of very interesting stories which form the basis of many and folk and classical performing arts.
Valli Amma, jungle princess who grew up among Veddas, meaning hunters of Sri Lanka. Kande Yaka, the Great Mountain-Spirit and Hunter-God, was the Vedda people's greatest friend and guardian spirit. Valli's parents gave their consent for the couple to be married and Kande Yaka have never left Kataragama.
Notes: Historically, there was a great personality cum warrior, who married a common hunter tribal girl in northern hilly region of Tamilnadu. He was presented with a rare or special elephant devayanai (dev also means rare). Similarly, there is Kataragama history. In Lanka, banished kalinga prince Mahasena, married tribal hunter girl. Vel (Lance) was hunters God and weapon. Later, Mahasena won many wars and created an empire in Lanka. Pandyas made an alliance and Mahasena married Pandyan princess also. From these tales, poets have developed Valli and Devasena Kalyanam.

Astronomical Note

Aldebaran (Rohini/brahmi or vedic Prajapati, the Creator) designated Alpha Tauri is an orange giant star in the zodiac constellation of Taurus. This forms basis for mother goddess associated with male bull (Taurus). Pleiades (Krittika) are personified as the nurses of Karthikeya, a son of Shiva. Mrigashira (the deer/valli's mother or agrahayani) is linked to beautiful face or Moon god. Agrahayani is married to warrior god Mars. All cultures have folk tales similar to hindus on this.

Puranic version

Subramanya or Karthikeya is the son of Siva and Parvathi. Created out of the six sparks from the central, third eye, of Lord Siva, for the special purpose of destroying the demon Soorapadma. He is supremely intelligent and is the commander of the Deva army. The Vel (spear) is His Divine weapon; it is also regarded as the source of all knowledge and is the dispeller of ignorance. According to legend, Karthikeya explained the esoteric significance of "OM", the Pranava Manthra, to His father, Lord Siva. Lord Subramanya has two consorts, Devasena, the celestial princess and daughter of Indra, and Valli, Nambirajan's (a hunter king) daughter.

Valli Kalyanam

Valli dressed up and decorated with fine jewellery. She is being led to mandapam
கம்மப் பலகலனும் வில்லுமிழ நூபுரமே கலைக ளார்ப்பப்
பொம்மற் குவிமுலை யோபாரம் பொறையரிது போலு மென்ன
அம்மெல் லிடைவருந்த வங்கை வளைதெளிர்ப்ப வான்றோ ரொன்றுஞ்
செம்மற் கடிவினைசெய் தெய்வமணி மண்டபமுன் சேர்ந்துள் புக்காள்.
(meaning) கம்மத் தொழிலா னியன்ற பலவேறு அணிகலன்களும் ஒளிவீசா நிற்ப நூபுர முதலிய காலணிகளும் மேகலையணியும் ஆரவாரிப்பப் பெருத்துக் குவிந்த முலைகள் அம்மவோ! பெருஞ்சுமை என்னால் அதனைச் சுமத்தல் இயலாதென்று அழகிய நுண்ணிடை வருந்தா நிற்ப, அழகிய கையிடத்து வளையல்கள் ஒலிப்பச் சான்றோர் குழுமிய தலைமை சான்ற திருமணவினை செய்தற்குரிய தெய்வத்தன்மையுடைய மணிகளாலியன்ற மண்டப முன்றிலை எய்தி அதனகத்தே சென்றருளினர்.
Shiva and Parvathi were with Muruga, Muruga pays respects to his parents
செம்பொன் மணிப்பீடத் தும்பர்பிரான் சேவடிக்கீழ்ச் சென்று தாழ்ந்து
பைம்பொன் னிழைசுமந்து பாங்கிருந்தாள் பாதம் பணிந்தன் னோர்தம்
வம்பில் கருணைமழைக் குத்தழைத் தரும்பி மலர்ந்த கற்பக்
கொம்பிற் கொளவொசிந்து தம்பெருமான் பால்குறுகி வைகி னாளால்.
(meaning) அத் திருமண மண்டபத்தின்கண் செம்பொன்னாலியன்ற தொரு மணியழுத்திய இருக்கையின் கண் வீற்றிருந்தருளிய தேவ தேவனாகிய சிவபெருமான் சேவடிகளை யடைந்து வீழ்ந்து வணங்கிப் பின்னர் அப் பெருமான் இடப்பாகத்தே பசிய பொன்னணிகல னணிந்து கொண்டு எழுந்தருளியிருந்த உமையன்னையாரின் திருவடிகளை வணங்கி அவ்வம்மையப்பரின் பழைமையான அருள் மழைக்கு அரும்பெடுத்து மலர்ந்த கற்பகத்தின் பூங்கொம்பு போன்று வளைந்து முருகப்பெருமான் பக்கத்தே சென்று இருந்தனர்.
Bride and Bridegroom introduction. Nambi raja introduces their family to Shiva's party
நம்பியென் றியற்பேர் பூண்ட நற்றவ வேட னண்மிப்
பம்பிய பரமா னந்தன் பயந்தவிர் சதாசி வன்றன்
வெம்பழல் விழிக்கட் டந்த வேலவற் கென்பால் வந்த
கொம்பினைக் கொடுத்தே னென்று தன்வழிப் பெயருங் கூறி.
(meaning) நம்பி என்னும் பெயரைத் தனது இயற்பெயராகப் பூண்டுள்ள நல்ல தவத்தையுடைய வேடர் வேந்தன் சிவபெருமான்பாலணுகித் தன் மரபு முன்னோர் பெயர்களைக் கூறி, யாண்டும் பரவிய மேலான இன்பமானவனும் உயிர்களின் அச்சத்தை அகற்றுகின்ற சதாசிவனும் ஆகிய இறைவன் தனது வெவ்விய நெற்றிக் கண்ணாலே ஈன்றருளிய வேற்படையினையுடைய முருகவேளுக்கு என்பால் திருமகளாய் வந்த பூங்கொம்பு போன்ற வள்ளியைக் கொடுத்தேன் என்று கூறி.
Kankan or Kappu for Muruga by Brahma, who was supposed to be the chief priest.
மங்கலத் துழனி பொங்க வாசநீர் மனைவி நீட்டச்
செங்கையேற் றுகுத்து நல்கத் தேவர்க டேவ னேற்றான்
பங்கய னுமாம கேசர் பாதபூ சனைசெய் தேத்தி
அங்குரந் தெளித்து முன்கைக் கங்கண மார்த்தல் செய்தான்.
(meaning) மங்கல விசைகள் முழங்கா நிற்ப மணமூட்டப்பட்ட நீரினைத் தன் மனைவி வார்க்கத் தனது சிவந்த அங்கையிலேற்று வழங்கா நிற்ப அந்நீரினைச் சிவபெருமான் ஏற்றருளினர். அப்பால் பிரமதேவன் முதற்கண் உமாமகேசுர மூர்த்தியின் திருவடி வழிபாடு செய்து வாழ்த்திக் கூலம் வித்தி முருகவேளுக்கும் வள்ளி நாயகியாருக்கும் முன்கையிடத்தே காப்பு நூல் கட்டினன்.
For Srardham/Vedic or Homam preparation:
மூத்தநூல் வழியா நாந்தி முகமெனுஞ் சிராத்த மோம்பிப்
பாத்திய முதல மூன்றும் பாங்குற வமைத்துக் கொண்டு
தீத்தகு குண்டந் தூய்மை செய்தத னகத்தி ரேகை
தூத்தகு வடசார் கீழ்சா ரந்திப்பத் தொடங்கி வார்த்தான்.
(meaning) வேதநூல் கூறிய முறைப்படி முன்னர் நாந்திமுகம் என்னுமாசிராத்தத்தைச் செய்து, பாத்தியம் அர்க்கியம் ஆசமனம் என்னும் மூன்றையும் பண்புற அமைத்துக்கொண்டு வேள்வித் தீயிடுதற்குத் தகுதியுடைய ஓம குண்டத்தைத் தூய்மைசெய்து அக் குண்டத்துள்ளே முறையே தெற்கினும் மேற்கினும் தொடங்கித் தூய தகுதியுடைய வடதிசையினும் கீழ்த்திசையினுஞ் சென்று முடிவுறும்படி கோடுகளைக் குறுக்காகவும் நெடுக்காகவும் கிழித்தனன்.
Agni or fire worship
இழைத்துவிட் டரத்தை நாப்ப ணிருத்திப்பூத் திருநீர் தோய்ந்த
தழைத்தபா சொளியின் மேனித் தயங்கிழைச் சத்தி யோடு
மழைத்தட நாற்கை முக்கண் வயங்குசெவ் வுருவி னானை
உழைத்தவி சளித்து றுத்தி யுவப்புறப் பூசை செய்தான்.
(meaning) பின்னர் அக்குண்டத்தின் நடு மேகலையாகிய விட்ட ரத்தை இயற்றிவைத்து மலரிட்டு அழகிய நீர் தோய்ந்த பச்சைமாமேனியையும், விளங்கும் அணிகலன்களையும் உடைய சுவாகா தேவியுடனே முகில் போன்ற பெரிய நான்கு கைகளையும் மூன்று விழிகளையும் உடைய திகழா நின்ற செம்மேனியையுடைய தீக் கடவுளையும் பக்கத்தே இருக்கையமைத்து அவற்றில் எழுந்தருளப் பண்ணி அவர் மகிழும்படி பூசை செய்தனன்.
Fire worship formalities. Describing attributes of fire god.
அரணியின் ஞெலிந்த வங்கி யரதனக் கலத்தி லாக்கி
இரணவல் லரக்கர் சாய வெடுத்ததில் வறிது போக்கி
வரமுறப் பார்த்து விந்து வயங்கமிழ் தெடுத்து வைத்துப்
பரவுறப் படுத்து முக்காற் பாணியிற் கொட்டிச் சூழ்ந்தான்.
(meaning) தீக்கடைகோலாற் கடைந்த நெருப்பினை மணிக்கலத்தி லேந்தி அந்நெருப்பின்கண் ஒரு சிறிது எடுத்துக் கடமையுடைய வலிய அரக்கர் ஒதுங்கும்படி ஒருபால் வாளா போகட்டுப் பின் அந்நெருப்புத் தூய்மையுறும்படி கண்ணோக்கி அதனின்றும் வீரியமாகிய விளங்கா நின்ற அமிழ்தினைக் கற்பனையாலே எடுத்து வைத்துக்கொண்டு அந்நெருப்பினைப் பரப்பி வைத்து மூன்று முறை கைகளைக் கொட்டிச் சுற்றினான்.
Fire worship formalities. Making fire as per tribal traditions.
மாசறு மங்கி செங்கை மறித்தனன் வளைத்துப் பற்றி
நாசியிற் பூர கத்தா னடத்திவிந் துவினாங் குள்ள
தேசொளி யோடுங் கும்பித் துந்தியிற் செலுத்தி யங்கண்
வீசொளி விராய்வி டுத்து விளங்கவுற் பவமுள் வைத்தான்.
(meaning) தூய்மை செய்தமையாலே குற்றந்தீர்ந்த அந்நெருப்பினைச் சிவந்த கையை மடக்கி வளைத்துப் பற்றிக் கொண்டதாகப் பாவனை செய்து அத்தீயினைத் தனது நாசியிலே பூர்கத்தாலே செலுத்தி அந் நெருப்பின் கண்ணுள்ள விந்துவோடு ஆங்கு இருதயத்துள்ள நெருப்பினோடுங் கூட்டிக் கும்பகஞ் செய்து பின்னர் உந்தியின்கட் செலுத்தி ஆண்டுள்ள ஒளி வீசா நின்ற நெருப்போடு கலப்பதாய்ப் பாவித்து மீண்டும் அதனை வாங்கிக் கலத்திலிட்டு அந்நெருப்பின்கண் கருவினைப் பாவனையாலே உண்டாக்கினன்.
Fire worship formalities.
அருச்சனை நிரப்பித் தெய்வ வான்முலை யமிழ்தம் பாய்த்தித்
திருத்தக வளைத்துக் காவல் செய்துமீட் டருச்சித் தங்கி
கரத்தினி தேந்தி முக்காற் காமரு குண்டஞ் சுற்றி
இருத்துபு முழந்தாள் பூமி யெதிருற வகத்தி னிட்டான்.
(meaning) பின்னர் அருச்சனை செய்து முடித்துக் கடவுட் பசுவின் பாலினையூட்டித் திருத்தகுதியுறும்படி நான்கு திசையினும் வளைத்துக் காப்பிட்டு மீண்டும், அருச்சனை செய்து மணிக்கலத்திருந்த நெருப்பினைக் கையிலே இனிதாக ஏந்தி மும்முறை விரும்புவதற்குக் காரணமான ஓம குண்டத்தைச் சுற்றித் தன்னிரு முழங்காலும் பூமியிலே பொருந்தும்படி வைத்து அந் நெருப்பினைத் தன்னெதிரே தோன்றும்படி கலத்தைக் கவிழ்த்து ஓமகுண்டத்தின்கட் பெய்தனன்.
Birth, naming and other formalities
வடகிழக் கெல்லை சென்னி வைத்தனன் பள்ளி கொண்ட
கடவுளாற் சத்தி குக்கிக் கதிர்த்தவீ ரியமாய்ப் புக்குச்
சுடரெரி கருப்பங் கொள்ளத் தொடங்குபு கருப்பா தானம்
நடுவன முறையி னாற்றி நாமமு நல்க விட்டான்.
(meaning) ஈசானதிக்கின்கண் தலையை வைத்துப் பள்ளிகொண்டுள்ள சிவபெருமானால் சத்தியின் வயிற்றின்கண் ஒளியுடைய வீரியமாகப் புகுந்து அந்நெருப்புக் கருவாகா நிற்பக் கருப்பாதானந் தொடங்கி இடையிலுள்ள புஞ்சவனம், சீமந்தம் முதலிய சடங்குகளையும் நூன்முறைப்படி செய்து இறுதியாகச் (சிவாக்கினி என்னும்) நாம கரணமுஞ் செய்தனன்.
Invoking many Gods and Goddesses
வளர்சிவ வங்கி யீன்ற வரதரை யலர்க டூய்த்தன்
உளமலர்க் கமலத் தாக்கி யருக்கிய வுதகந் தூவித்
தளைசெய்மே கலைநாற் பாலுந் தருப்பைகள் பரப்பிக் கஞ்சன்
துளவின னரன னந்தற் றோற்றினன் கீழ்சா ராதி.
(meaning) பின்னர் இவ்வாற்றால் வளரா நின்ற சிவாக்கினியை ஈன்றருளிய அம்மையப்பரைப் பிரமதேவன் தனது நெஞ்சத் தாமரை மிசை எழுந்தருளப் பண்ணி மலர்கள் தூவி அருக்கிய நீர் தெளித்துப் பின்னர் கட்டுதலமைந்த ஓமகுண்டத்து மேகலையினது கீழ்த்திசை தொடங்கி நாற்றிசையிலும் தருப்பை பரப்பி நிரலே பிரமதேவன் திருமால் உருத்திரன், அநந்தேசுவரன் என்னும் நால்வரையும் எழுந்தருளப் பண்ணி, [வரதர் - அம்மையப்பர். உதகம் - நீர். கஞ்சன் - பிரமன். துளவினன் - திருமால். அனந்தன் - அனந்தேசுவரன்.]
Invoking 8 directional protectors/deities
பரிதியங் குறுத்தி மேலாற் பண்ணவர்க் கிறைமுன் னோரை
விரவுறு தத்தந் திக்கின் மேதக விருத்தி நெய்தூங்
கருவியை யிழுதைத் தூய்மை கண்டழ லிதயப் போதில்
பரமனைப் பயிற்றிப் போற்றி யாகுதி பல்ல செய்தான்.
(meaning) பரிதி என்னும் மூன்றாமேகலையைச் செய்து அதன் மேலாக இந்திரன் முதலிய எட்டுத் திசை காவலர்களையும் அவரவர்க்குரிய திசையின்கண் மேன்மையுண்டாக இருத்திப் பின்னர் நெய்தூவுதற்குரிய சுருக்குச் சுருவங்களாகிய துடுப்புகளையும் நெய்யையும் தூய்மை செய்து அச்சிவாக்கினியின் நெஞ்சத்தாமரையின்கண் பரமசிவனை எழுந்தருள்வித்து வணங்கிப் பலவாகிய ஆகுதிகளையும் செய்தனன்.
Offering garlands, jewellery, honey etc
அங்கியின் மேல்பா லிட்ட வாதனத் திருத்தித் தூசு
கொங்கலர் மனுவி னல்கி யிடையிடை குறித்த வோமப்
பொங்கெரி வளர்ப்ப நம்பி பூவைத னிதயந் தொட்டான்
சங்கர னுமையென் றுன்னித் தகுமது வருக்க மேற்றான்.
(meaning) இவ்வாறாக ஓம்பப்பட்ட அவ்வேள்வித்தீயின் மேற் றிசையிலே இடப்பட்ட இருக்கையின்மீது மணமக்களாகிய முருகப் பெருமானையும் வள்ளிநாயகியாரையும் இருக்கச் செய்து அவர்க்குத் திருமணக்கூறையும் மணங்கமழும் மலர்மாலைகளும் மந்திர மோதிக்கொடுத்துப் பிரமதேவன் இடையிடையே முற்கூறிய பொங்குதலை யுடைய வேள்வித் தீயினை வளர்ப்புழி முருகப்பெருமான் வள்ளிநாயகியாரின் நெஞ்சத்தைத் தன் திருக்கையானே தொட்டருளினன். பின்னர்ச் சிவபெருமானும் உமையம்மையாரும் வழங்குவதாகப் பாவித்து மது வருக்கத்தை ஏற்றருளினன்.
Offering ghee and food to fire
தீஞ்சுவைச் சொன்றி யுய்ப்பத் திருவிழிப் பார்வை நல்கிக்
காஞ்சனக் கலத்தி னீட்டுங் கடவுளா சமனம் வாங்கிப்
பூஞ்சுரைக் காம தேனுக் கன்றொடும் போத நோக்கித்
தாஞ்சிகை யழற்கு வாமந் தன்னிலே ழடியிட் டானால்
(meaning) இனிய சுவையுடைய அவியுணவினை யளிப்ப அதனைத் திருவிழியாலே பார்வையிட்டுப் பின் பொற்கலத்திலே வழங்கிய கடவுட்டன்மையுடைய ஆசமனத்தை வாங்கி யுட்கொண்டு, பின்னர் பொலிவுடைய மடியினையுடைய காமதேனு தன் கன்றோடு போதலை நோக்கிப் பின்னர்த் தாவிஎரிகின்ற கொழுந்தினையுடைய அவ்வேள்வித் தீயிற்கு இடப்பால் ஏழடியிட்டுச் சென்றனன். சொன்றி - சோறு, அவி. காஞ்சனம் - பொன். ஆசமனம் - அங்கையினேற்ற நீர். சுரை - மடி. தாவுஞ்சிகை - தாஞ்சிகை என்புழித் தாவும் என்பது ஈற்றுயிர் கெட்டது. வாமம் - இடப்பக்கம்.
Poriyidal and Ammi
அச்சுதன் முன்ன ரீன்ற வரிவைதன் னிடத்து மூவா
அச்சுதந் தரனார் நெற்றி யங்கியிற் கதித்துப் போந்த
அச்சுதன் வலக்கை பற்றி முறையினே ழடியிட் டண்மி
அச்சுதந் தெளித்த வல்லி யடியெடுத் தம்மி யிட்டான்.
(meaning) மூத்தலில்லாதவனும் சுதந்திரனுமாகிய சிவபெருமானுடைய நெற்றியின் கண்ணுள்ள நெருப்புக்கண்ணிற் றோன்றி வந்த அத்திருமைந்தன் பண்டு திருமாலீன்ற அவ்வள்ளிநாயகியாரின் பக்கத்தே ஏழடியிட்டு அணுகி அவருடைய வலக்கையைப் பற்றிச் சென்று அச்சுதந் தெளித்து அவ்வள்ளிநாயகியாரின் திருவடியைப்பற்றி எடுத்து அம்மியின்மேல் இட்டருளினன். அச்சுதன் - திருமால். மூவாச் சுதந்தரனார் - சிவபெருமான். அச்சுதந்தரனார் என்புழிச் சுட்டு; உலகறி சுட்டு. அச்சுதன் - அந்தத்திருமகன். அச்சுதம் - அறுகும் அரிசியும்.
Poriyidal and mangalsudra
பொரியெரி மனைவி யட்ட வுடனின்று போந்து முன்போல்
எரிமணித் தவிசின் வைகி யிலங்குமங் கலநாண் வாங்கித்
தெரிவைதன் மிடற்றிற் றேவ துந்துமி முழங்க யாத்தான்
பிரமனு முற்ற வங்கி வினையினைப் பிறக்கி யிட்டான்.
(meaning) வேள்வித்தீயின்கண் தன் வாழ்க்கைத் துணையாகிய வள்ளி பொரி சொரிதற்கண் அவளுடன் கூடிநின்று வந்து பண்டுபோல ஒளிமணியிருக்கையின் கண் அமர்ந்து விளங்கா நின்ற மங்கல நாணினை எடுத்து வள்ளியாருடைய திருக்கழுத்திற்றேவதுந்துபி முழங்காநிற்பப் பூட்டியருளினன். அவ்வளவில் பிரமதேவனும் வேள்விச் செயலை விளங்கச் செய்து முடித்தனன். மிடறு - கழுத்து. அங்கிவினை - வேள்வித் தொழில்.
Music and blessing with flowers
ஆர்த்தன பணில மாதி யாடின கணங்க டுள்ளித்
தூர்த்தனர் சுரர்பூ மாரி சுரந்தன துதியின் சும்மை
போர்த்தனன் புளகம் வேடன் பொடித்தன வுவகை யார்க்கும்
தீர்த்தனுங் கருணை கூர்ந்தான் றேவியு மகிழ்ச்சி பூத்தாள்.
(meaning) அப்பொழுது மங்கலச் சங்க முதலிய இசைக் கருவிகள் ஆரவாரித்தன. சிவகணத்தோர் உவகையாலே துள்ளிக் கூத்தாடா நின்றனர். தேவர்கள் மலர்மழையாலே உலகைத் தூர்த்தனர். வாழ்த்தொலி பெருகின. வேடர்வேந்தன் உடல்புளகம் போர்த்தனன். எல்லோருக்கும் மகிழ்ச்சி பொங்கின. சிவபெருமான் திருவருள் கூர்ந்தருளினார்; உமையன்னையாரும் உவகையாற் பொலிவுற்றனர். பணிலம் - சங்கு. சும்மை - முழக்கம். தீர்த்தன் - சிவபெருமான். தேவி - உமை.
Signs of divinity seen
வெடர்கோ னீரி னல்க வேலவ னேற்ற லோடும்
ஆடில விமைக ணீழ லளித்தில துருவ மாலை
வாடில குழலின் வண்டு மருவில நுதலின் வேர்வை
கூடில மாசு தூசு கொண்டில மாத ராட்கே.
(meaning) வேடர்வேந்தன் நீர்வாக்கி வழங்க எம்பெருமான் ஏற்றருளிய பொழுதினின்றும், வள்ளிநாயகியார்க்குக் கண்ணிமைகள் இமைத்தில ; உருவம் நிழலிட்டிலது ; மாலைகள் வாடாதனவாயின. கூந்தலின்கண் வண்டுகள் வீழாவாயின. நெற்றி வியர்த்திலது. ஆடை மாசேறாவாயின. தெய்வங்கட்கு கண்ணிமையாமை முதலியன உள.
Hiding his and her divine form
பொறிமயிற் புனத்தை யோம்பிப் பூவையைக் கவர்வான் போந்த
நெறிவயிற் கரந்து நின்ற நிமலனே போலத் தானும்
கறிவளர் சார னம்மூர்க் கரந்தனள் வளர்ந்தாள் கொல்லோ
முறியியன் மேனி யென்று முழுதுள மகிழ்ந்தார் வேடர்.
(meaning) புள்ளிமயில் வாழ்கின்ற தினைப் புனத்தைக் காவல் செய்திருந்த இவ்வள்ளியைக் கவர்ந்து வேடற்கு வந்த வழியில் தன்னை மறைத்துக் கொண்டு வேடனாய் நின்ற முருகவேளைப் போலவே இத்தளிர் போன்ற மேனியையுடைய இவள் தானும் தனது தெய்வ மேனியை மறைத்துக் கொண்டு மிளகு கொடி வளராநின்ற சாரலையுடைய நம்மூரின்கண் நம்பால் நம்மகளாய் வளர்ந்தனள் போலும் என்று வேடரெல்லாம் விம்மிதமுற்றுப் பெரிதும் மகிழ்ந்தனர். பொறி - புள்ளி, பூவை - வள்ளி ; உவமவாகுபெயர். நிமலன் - முருகன். கறி - மிளகுகொடி. முறி - தளிர்.
Hunter is blessed
எத்துணை யறங்கள் சால வீட்டினன் வேடர் கோமான்
பத்தியிற் பலநாட் டாழ்ந்தென் பாவையை யளிப்ப வேற்ற
உத்தமன் றானே யண்மி யொளியில னாகித் தாழ்ந்து
புத்திரி செங்கை பற்ற வென்றனன் புலவர் கோமான்.
(meaning) தேவேந்திரன் "யான் பற்பல நாள் மெய்யன்போடு வழிபாடு செய்யாநிற்ப என்மகள் தேவசேனையை ஏற்றருளிய அப்பெருமாள் தானே வலிந்து சென்று ஒளியற்ற வேடனாகி அடியில் வீழ்ந்து வணங்கித் தன் மகளினது சிவந்த கையைப் பற்றுதற்கு இவ் வேடர் வேந்தன் எவ்வளவு நல்லறங்களைப் பெரிதும்செய்து அவற்றின் பயனைச் சேர்த்தனனோ அறிகிலேனே என்று மருண்டனன். பத்தி - அன்பு. என்பாவை என்றது தேவசேனையை. உத்தமன் - மேலோன். புத்திரி - ஈண்டு வள்ளி. புலவர் கோமான் - இந்திரன்.
Hunter is blessed
மாதவ னெனும்பே ரல்லான் மாதவ மீங்கொன் றில்லை
மாதவன் புலவர் கோமான் மற்றவன் றன்னிற் சால
மாதவன் புளினர் கோமான் வளர்த்தரு டெய்வக் கற்பின்
மாதவள் பாங்கி னின்றா ளென்றனன் மதுவை யட்டோன்.
(meaning) மதுவென்னும் அசுரனைக் கொன்றவனாகிய திருமால், "எனக்கு மாதவன் என்று பெயர் வறும் பெயர் மாத்திரையாயிருந்த தன்றி அதன் பொருளாகிய பெரிய தவமாண்பு என்பாற் சிறிது மில்லையே! வாய்மையாகவே பெரிய தவப்பயனையுடையோன் இந்திரன்; அவ்விந்திரனுங் காட்டில் மிகவும் பெரிய தவப்பயன் எய்தியவன் வேடர்வேந்தன். அவனினுங் காட்டில் மிகப் பெரிய தவத்தையுடையோள் வள்ளிநாயகியை வளர்த்தருளிய தெய்வக் கற்பினையுடையளாய் அவன் பக்கத்தே நிற்கின்ற மனைவியே ஆவள். மாதவன் - திருமால், பெரிய தவத்தையுடையோன். புலவர் கோமான் - இந்திரன், புளினர் கோமான் - வேட மன்னன். பாங்கி நின்றாள் - மனைவி.
Valli is supposed to be a child of a deer. Adopted mother enjoying the function instead of real mother
இந்திரன் மனைவி முன்ன ரீட்டினள் சீர்த்தி யெல்லாம்
வெந்திறல் வேட னில்லும் விளைத்தன ளின்று சால
எந்தரத் தென்னோ தெய்வ மேதுமின் றாக்கிற் றென்றாள்
செந்திரு மானை யுன்னித் திருவுளேம் யாமு மென்றாள்.
(meaning) எம்முடைய கூற்றில் மட்டும் என்னையோ புகழ் சிறிதும் இல்லையாக்கிற்று என்று தன்னுள்ளே நொந்தவள் வள்ளிநாயகியை யீன்ற மான் தானாதலை நினைத்து யாமும் பெரிதும் தவச் செல்வம் உடையமே என்று மகிழ்ந்தாள். சீர்த்தி - மிகுபுகழ். இல் - மனைவி, என்றாள் : பெயர் மானை என்பதற்கு வள்ளியை என்று கொண்டு வள்ளியை நோக்கி அவள் தன் மகளாதலைக் கருதி யாமும் திருவுளேம் என்றாள் எனினுமாம்.
Hugged by Indrani and her daughter devasena
வல்லிநற் றாயைப் புல்லிக் கொண்டனள் வலாரி யில்லாள்
வெல்லுநாற் கோட்டு வேழம் வியந்தது செவிலித் தாயைப்
புல்லினர் பாங்கி தன்னைப் புலோமசை மகளைச் சூழ்ந்த
பல்லிணர்க் கோதைக் கூந்தற் பாங்கியர் பலரு மன்னோ.
(meaning) இந்திராணி வள்ளியின் நற்றாயை மகிழ்ந்து தழுவி உறவு கொண்டாள். வெல்லுமியல்புடைய நான்கு மருப்பினையுடைய ஐராவதம் என்னும் யானை வள்ளியின் செவிலித்தாயைப் பாராட்டிக் கேண்மை கொண்டது. இந்திராணி மகளாகிய தேவசேனையைச் சூழ்ந்துள்ள பலவாகிய பூங்கொத்துக்களாலியன்ற மலரணிந்த கூந்தலையுடைய தோழியர் பலரும் வள்ளியின் உசாத்துணைத் தோழியைத் தழுவி நட்புக் கொள்ளா நின்றனர். வல்லி - வள்ளி. வலாரி - இந்திரன். நாற்கோட்டு வேழம். ஐராவதம்; இது தேவசேனையின் செவிலித்தாய். பாங்கி - வள்ளியின்றோழி. புலோமசை மகள் - தேவசேனை.
Though from hunting tribes, valli got married to royalty
ஒருக்கிய வுளத்த ராகி யுயர்தவ மாற்றி னோர்கள்
தரைத்தலை யிழிந்த சார்பிற் றவிரினுந் தவத்தி னாற்றிற்
பொருத்துழி யெவர்க்கு மேலாய்ப் பொலிவது வாய்மை யென்னாத்
திருக்கிளர் தெய்வ மாதர் விம்மிதந் திகழ நின்றார்.
(meaning) அழகுமிக்க தேவமகளிர், (வள்ளியின்பேற்றினைக்கருதி) "ஒன்றுபடுத்த நெஞ்சமுடையோராய் உயரிய தவத்தினை இயற்றியவர், நிலத்தின் கண்ணே இழிந்த குலத்திலே தோன்றினும் ஊழானது மேலைத் தவப்பயனோடு கூட்டுங்காலத்தே எல்லோரையுங் காட்டின் மேம்பாடுடையராய்ப் பொலிவுறுதல் உண்மையேயாகும்," என்று தம்முள் விம்மிதமுற்று அம் மனநிலை விளங்க நிற்பராயினர்.
ஒருக்கிய - ஒன்றுபடுத்த. தவத்தினாறு என்றது அதன் பயனை.
Greatness of Valli
அருந்தவப் பயனு ளார்கட் கடுத்தவெவ் வுழியு மாவா
திருந்திய போக வைப்பாய்த் திகழ்வது திண்ணம் போலாம்
மருந்தம ருலகு நேரா வளத்தொடு வள்ளி மன்றற்
கிருந்ததிவ் வோங்க லென்னா மாந்தர்க ளேமுற் றாரே.
(meaning) இனி இந்நிலவுலகத்து மாந்தர் "ஆ! ஆ! அரிய தவப் பயன் கைகூடப் பெற்றவர்களுக்கு அவர் எவ்விடத்தினை அடைந்தாலும் அவ்விடம் திருத்தமுற்ற துறக்கமேயாக விளங்குவது ஒருதலையே. ஈண்டுக் காண்மின்! இத்திருத்தணிகைமலை தவச் செல்வியாகிய வள்ளியின் திருமண விழவிற்கிடனாக அமிழ்தமிருக்கின்ற வானவர் உலகும் தனக்கொப்பாகாதபடி பெரிய வளத்தோடு இருந்ததன்றோ என்று கூறித் தம்முள் விம்மித மெய்தாநின்றனர். ஆ! ஆ! வியப்பு. போகவைப்பு - துறக்கம். இவ்வோங்கல் - இத்திருத்தணிகை மலை. மன்றற்கு வளத்தொடு இருந்தது என்க.
Muruga and Valli paying respects to Siva and Parvathi
தரையுரங் கிழித்த கோடு மார்பிடைத் தயங்க வேணி
விரையுரங் கிழித்த கொன்றை மிலைத்தவித் தகனை வேலைத்
திரையுரங் கிழித்த சேற்க ணன்னையைத் தேவி யோடும்
வரையுரங் கிழித்த வைவேல் வள்ளல்சென் றிறைஞ்சி னானால்.
(meaning) கிரௌஞ்சமலையின் மார்பினைப் பிளந்த கூரிய வேற் படையை ஏந்திய வள்ளலாகிய முருகப்பெருமான் வள்ளி நாயகியோடும் சென்று நிலத்தின் மார்பினையகழ்ந்த பன்றியினது கொம்புகள் தனது திருமார்பில் விளங்காநிற்பச் சடையின் மிசைத் தனது மணத்தானே பிறருடைய நெஞ்சினைக் கவர்ந்து கொண்ட கொன்றை மாலையினைச் சூடியருளிய வாலறிவனாகிய சிவபெருமானையும் கடலலையினைக் கிழித்த சேல்மீன் போன்ற கண்ணையுடைய உமையம்மையும் வணங்கினன். கோடு - திருமாலாகிய பன்றியின் கொம்பு. வேணி - சடை. வரை - கிரௌஞ்ச மலை.
Siva and Parvathi blesses and hugs couple
பொழிந்தனர் கருணை வெள்ளம் பொலிகவென் றெடுத்துத் தைவந்
திழிந்தனர் தவிசி னின்று மிலங்குதங் கோயில் புக்கார்
அழிந்தன மலங்கண் மூன்று மகமெலாந் தேக்கி யோகை
வழிந்தன வெவர்க்கு மென்றான் மன்றலார் வகுக்க வல்லார்.
(meaning) வணங்கியதும் அப்பனும் அம்மையும் இருக்கையினின்று இறங்கிப் பொலிக! பொலிக! பொலிக! என்று வாழ்த்தி மணமக்களைக் கையானெடுத்து தழுவிக் கொண்டனர். பின்னர் விளங்கா நின்ற தம்முடைய திருக்கோயிலை எய்தினர். அப்பொழுது உலகில் உள்ள எல்லோருக்கும் ஆணவமுதலிய மூன்று மலங்களும் தஞ்சத்தி கெட்டொழிந்தன. உள்ளமெல்லாம் மகிழ்ச்சி நிரம்பி வழிந்தன. இங்ஙனமாயின் இத்திருமண விழாச் சிறப்பினை யாரே வகுத்தோத வல்லுநராவர். அகம் - உள்ளம். ஓகை - உவகை. மன்றல் - திருமணம்.
Other guests/deities paying respects to Muruga
வேறு மாய னாதியர் வார்கழற் றாழ்ந்தினி
மேய யாவரும் வீதியிற் காணிய
போயு லாவரல் புந்திகொ ளாயென
ஆய னானவர்க் கவ்வர மீந்தனன்.
(meaning) அச் செவ்வியில் திருமால் முதலிய தேவர்கள் முருகப் பெருமானுடைய நெடிய கழலணிந்த சேவடிகளை வணங்கிப் "பெருமான்! இனி ஈண்டுக்குழுமிய அனைவரும் கண்டுய்தற் பொருட்டுத் திருவீதியிற் போய்த் திருவுலாச் செய்தருளத் திருவுளம் பற்றவேண்டும் என்று" இரப்பத் தாயை யொத்தவனாகிய முருகப் பெருமானும், அத் திருமால் முதலியோர்க்கு அவ்வரத்தை வழங்கியருளினன். மாயன் - திருமால். ஆயனான் - தாயை யொத்தவன். ஆய் - தாய். காணிய - காண்டற்கு. புந்தி - திருவுளம்.
Decorated elephant prepared for marriage ceremony
பன்னி றப்பக டுண்டுகொ லோவென்
எந்நி றக்கல னுங்கதிர்த் தேர்தரும்
துன்ன ருந்திறற் றூங்குகை வாரணம்
முன்ன ருய்த்தனர் முன்னவ னேறினான்.
(meaning) வரம்பெற்ற தேவர்கள் கண்டோர் பல நிறமுடைய களிற்றியானையும் உண்டோ என்று மருளும்படி பன்னிறமணிகளை யுடைய அணிகலன்களும் பன்னிறந்தோற்றி அழகு தருகின்ற, கிட்டுதற்கரிய பேராற்றலுடைய தூங்காநின்ற துதிக்கையையுடைய களிறொன்றனை எம்பெருமான் திருமுன்னர்ச் செலுத்தினர். பெருமானும் அதன் பிடரிமிசை ஏறியருளினன். பகடு - யானை. பன்னிற மணிகளும் அக்களிற்றின் மேனியில் பன்னிறங்களையும் உண்டாக்கின என்பது கருத்து. எனவே, நன்கு ஒப்பனை செய்யப்பட்ட யானை என்றாராயிற்று.
Blessing or wishing well for the world
பரந்நு மாதர்பல் லாண்டுப யின்றுளம்
சுரந்த வோகைய ராய்ப்புறஞ் சூழ்தர
வரந்த ழைத்தசி விகையின் வையகத்
தரந்தை தீர்க்கும ணங்கிவர்ந் தாளரோ.
(meaning) உலகத்தின் துன்பத்தைத் தீர்த்தருளும் தெய்வப் பெண்ணாகிய வள்ளி நாயகியார், அமரமகளிர் பலரும் பரவிப் பல்லாண்டு கூறி வாழ்த்தி நெஞ்ச நிறைந்த மகிழ்ச்சியுடையராய்ப் புறஞ் சூழ்ந்து வாராநிற்ப மேம்பாடுமிக்கதொரு சிவிகையின்கண் ஏறினர். வரம் - மேம்பாடு. அரந்தை - துன்பம்.
Muruga portrayed as Lord of Knowledge or world teacher
ஒற்றை யங்கலை யூர்புன னீண்முடி
பற்றி வேய்ந்தப ரன்குரு வாதலான்
முற்றும் வான்மதி யேமுடி வைத்தெனக்
கற்ற சோமன்க விகைக வித்தனன்.
(meaning) இம் முருகப்பெருமான், ஊராநின்ற கங்கையணிந்த தனது நெடிய சடையின்கண் ஓரோவொரு கலைமட்டுமுடைய இளம்பிறையைப் பிடித்துச் சூடிக்கொண்ட பரமசிவனார்க்கும் ஞானாசிரியன் என்னும் மாண்பு தோன்றப் பதினாறு கலைகளும் முற்ற நிரம்பிய வெள்ளிய முழுத் திங்களையே முடியின்கண் சூட்டினாற்போன்று கலை கற்ற திங்கட்டேவன் கொற்ற வெண்குடை நிழற்றாநின்றான். ஒற்றையங்கலை - அன்மொழி. இளம்பிறை என்க. பரன் - பரமசிவன். சோமன் - திங்கள்.
Muruga as ultimate creator or source (ultimate reality?)
எம்மை யீன்றவ னேயிவ னென்பபோற்
செம்மல் பாலண வித்திரு மார்பனும்
மும்மை வையக முந்தரு மூர்த்தியும்
கைம்ம லர்க்கட் கவரிது ளக்கினார்.
(meaning) எம்மையீன்ற தந்தை யிவனே யாவன் என்று காட்டுவார் போன்று திருமாலும், மூன்றுலகங்களையும் படைத்தருளும் பிரமதேவனும் எம்பெருமானுடைய இருமருங்கு நின்று தமது கையாகிய மலரின்கட் கொண்ட சாமரையினை அசைத்தனர். செம்மல் - முருகன். திருமார்பன் - திருமால்.
Celebrating with flagposts and kites
வளியெ ழூஉங்கரு வித்திரண் மானுற
வளியி னாட்டயர் வார்கொடி யெண்ணில
வளித னக்கிறை யோடுகை வௌவினார்
வளியின் வைப்பமர் வாழ்க்கையர் யாவரும்.
(meaning) காற்றுத் தேவன் உலகினில் வாழும் பேறு பெற்றோர் அனைவரும் அவ்வுலகிற் கிறைவனாகிய காற்றுத்தேவனோடு, காற்றிலே சுழலா நின்ற காற்றாடிக் கூட்டங்கள் போன்று காற்றிலே ஆடா நின்ற எண்ணற்ற நெடிய கொடிகளைக் கைப்பற்றி உயர்த்தனர். வளியெழூஉங்கருவி என்றது காற்றாடியை. வௌவினார் -பற்றினார்.
Lighting lamps, incense and camphor
ஆன நெய்பளி தத்தின விரொளி
கான றும்புகை யுங்கன லோடவன்
மாந கர்க்கணு ளார்கள்வ யக்கினார்
மான நாகர்ம ணிவிளக் கேந்தினார்.
(meaning) ஆனின் நெய்யாலாகிய திருவிளக்குகளையும் கருப்பூர விளக்குகளையும் நறுமணப் புகையினையும் நெருப்புக் கடவுளும் அவன் பெரிய நகரத்து வாழுந்தேவரும் ஏந்தினர். பெரிய நாகலோகத்தினர் மணி விளக்குகளை ஏந்தா நின்றனர். ஆன - அ : ஆறனுருபு. ஒளி - விளக்கு. கனல் - நெருப்புக் கடவுள். விரைது ழாவிய மென்பனி நீர்புனல்
Playing/Games with water and so on
அரைய னண்ணன்மெய் தூவவ மைந்தனன்
வரையி ழுக்கச்சி விறியின் வாங்கினார்
புரையி லாவவன் பொன்னகர் வாழ்நரே.
(meaning) வருணன் நறுமண மூட்டிய மெல்லிய பனி நீரை எம் பெருமான் திருமேனியிற்றூவும் செயலிலீடுபட்டனர். குற்றமற்ற அவ்வருணனுடைய நகரின்கண் வாழுந் தேவர்கள் அத் திருத்தணிகைமலை இழுக்கலுறும்படி நீர் வீசுந் துருத்தியால் மணநீரைத் தூவா நின்றனர். விரை - மணம். புனல் அரையன் - வருணன்.
Using umbrellas, fans etc for the function
மாலை யாத்தக விகைவ ருக்கமும்
ஆல வட்டமு மார்ந்தசாந் தாற்றியும்
கோல வெள்ளையுங் கொண்டனர் பானுவும்
சாலு ஞாயிற்று லகவர் தாமுமே.
(meaning) ஞாயிற்றுத் தேவனும் அவன் உலகில் வாழும் தேவர்களும், மலர்மாலை தூக்கிய குடை வகைகளையும், ஆல வட்டத்தையும் பொருந்திய சாந்தாற்றியையும் அழகிய மேற்கட்டியினையும் கைக் கொண்டனர். சாந்தாற்றி - சிற்றால வட்டம் என்னும் விசிறி. வெள்ளை - மேற்கட்டி. பானு - ஞாயிறு.
Songs with musical instruments
சோதி நாரதத் தூமுனி பாலராய்
ஆதி யாழ்முதல் யாவும மைத்துளர்
கோதி லாதகு ணந்தகும் யாழினோர்
மாத ராரொடும் வண்புகழ் பாடினார்.
(meaning) குற்றமற்ற குணத்தகுதியுடைய கந்தருவர் தம் மகளிரொடும் ஞானவொளி படைத்த நாரதன் என்னுந் தூய முனிவரின் கூற்றிலடங்கிப் பேரியாழ் முதலிய இசைக்கருவிகளை எல்லாம் பண்ணுறுத்திக் கொண்டு எம்பெருமானுடைய வளவிய திருப்புகழைப் பாடா நின்றனர். சோதி - புகழுமாம். ஆதியாழ் - பேரியாழ். யாழினோர் - கந்தருவர்.
Music with bangles and merrily dancing
குளிர்ப்பக் கண்டகொ ழுங்கணு நெஞ்சமும்
மிளிர்ப்பக் காமரு மின்னினு டங்குபு
தெளிர்ப்பக் கைவள்ளி தெய்வத மாதரார்
தளிர்ப்பத் தீஞ்சுவை யாடலிற் றங்கினார்.
(meaning) வானவர் மகளிர், கண்டோருடைய கொழுவிய கண்களும் நெஞ்சமும் மகிழ்ச்சியாற் றிகழும்படி விரும்புதற்குக் காரணமான மின்னல் போன்று நுடங்கவும் தங் கைவளையல் ஒலிப்பவும் இனிய சுவை மிகாநிற்பவும் கூத்தாடற்றொழிலி லீடுபட்டனர். மிளிர்த்தல் - திகழ்தல். நுடங்குபு - நுடங்கி ; நுடங்க என்க. தெளிர்த்தல் - ஒளித்தல். வள்ளி - வளையல்.
Music with drums and flute
மாண்ட சோதிம ணிமுடி வானவர்
காண்ட கக்கதித் தாடுநர் பாற்றழுஉம்
பாண்டி லுங்குழ லுங்குரற் பாடலும்
தீண்டு கைம்முழ வுந்திசை தேக்கின.
(meaning) காட்சியின்பமுண்டாகத் தோன்றி ஆடுவோராகிய மாட்சிமையுடைய ஒளியுடைய மணிகளாலியன்ற முடிக்கலனையுடைய தேவர் தம்பாற் றழுவியுள்ள பாண்டிலும் வேய்ங்குழலும் மிடற்றுப் பாடலும் கையாற் றீண்டி முழக்கப்படும் மத்தளமும் தம் மிசையாலே எண்திசைகளையும் நிரப்பின. கதித்து - தோன்றி. பாண்டில் - கஞ்சதாளம். குரற் பாடல் - மிடற்றுப் பாடல். கைதீண்டுமுழவென்க.
Music with conch and royal drums
பானு கம்பன்ப ணிலமு ரன்றன
மான வாணன்கு டமுழா மல்கிய
தான பீலிவ யிர்பணை யாதிய
ஈன மில்கண நாதரி யம்பினார்.
(meaning) பானு கம்பனுடைய சங்கங்கள் முழங்கின; வாணா சுரனுடைய குடமுழா முழக்கம் பெருகிற்று. இயற்றப்பட்ட சிறு சின்னங்களும் கொம்புகளும் பறைகளும் இன்னோரன்ன பிறவுமாகிய கருவிகளைக் குற்றமற்ற சிவகணத் தலைவர்கள் முழக்கா நின்றனர்.
Describing and announcing the Lord's glory
வடகி ழக்குத்தி சைப்புற வாழ்க்கையங்
கடவு ளேற்றிமிற் கண்ணுதற் புண்ணியன்
தொடலை மார்பந் துணைக்கையிற் பின்னுபு
முடிவி லாதவி ருதுமு ழக்கினான்.
(meaning) வடகிழக்குத் திசையின்கண் வாழா நின்ற வாழ்க்கையையும் இமிலையுடைய தெய்வ விடையினையும் நெற்றிக் கண்ணையும் உடைய அறவோனாகிய ஈசானன் மாலையணிந்த தன் மார்பின்கண் இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு எம்பெருமானுடைய அழிவற்ற விருதுகளைக் கூறி வந்தனன். ஈசானன் என்னும் திசைக்காவலன் விருது கூறினான் என்க. விருது - வெற்றிப்புகழ்.
Offering betal leaves and so on
சோம திக்கினன் றுன்னிவ லப்புறம்
காமர் பாகடை கைத்தல நீட்டினான்
வாம பாகம ரீஇப்பொற்ப டியகம்
நாம வேற்றரு மன்னணு குற்றனன்.
(meaning) வடதிசைக் காவலனாகிய குபேரன் எம்பெருமானுடைய வலப்பக்கத்தே நின்று பாக்கும் வெற்றிலையும் திருக்கையிலீந்தனன். இடப்பாகத்தே அச்சந்தரும் வேலினையுடைய கூற்றுவன் பொன்னாலியன்ற படிக்கத்தைக் கைக்கொண்டு வாராநின்றனன். சோமதிக்கு - வடதிசை. பாகு - பாக்கு. அடை - வெற்றிலை. படியகம் - படிக்கம் - எச்சி லுமிழ்கலம். தருமன் - கூற்றுவன்.
Leading the marriage procession
மாகர் போற்றிய மண்டமர் ஞாட்பிடைத்
தோகை மாமயி லாகிய தோன்றறான்
ஏக நாயக னேவலி னங்குசப்
பாக னாகிப்ப கடுந டத்தினான்.
(meaning) சிவபெருமானுடைய அருட்பணியை மேற்கொண்டு தேவர்களாற் புகழப்பட்ட போர்த்தொழின்மிக்க களத்தின்கண் தோகையை யுடைய பெரிய மயிலாகி எம்பெருமானைச் சுமந்த தேவேந்திரனே தோட்டியையுடைய வலவனாகி யானையை நடத்தாநின்றனன்.

Kumarasambhava

Kumarasambhava basically talks about the birth of Kumara, the son of Shiva and Parvati. This epic by kalidasa (5th century AD) Shringara Rasa (love, romance, and eroticism), more than Vira rasa (heroism). Tarakasur, a rakshasha (or demon) was blessed that he could be killed by none other than Lord Shiva's son. Shiva had won over Kama-deva (the god of love). Parvati (princess of the Himalayas) performed great tapasya (or spiritual penance) to win the love of Lord Shiva. The work describes the courting and the wedding of the ascetic Shiva, who is meditating in the mountains, by Parvati. Consequently, Shiva and Parvati's son Murugan was born to restore the glory of Indra, the king of Gods.

Tamil bhakti

Murugan was a god of the hills (kurunji deivam) and hunting, who fought evil in the hills. Murugan was praised by Arunakirinatha in the fifteenth century and Kacciyapaciva in the seventeenth. In the seventeenth century came the Tamil version of the Skanda Purana with all his Tamil background. From the nineteenth century there has been a Tamil renaissance prompted by the discovery of Tamil culture. Murugan has become enormously popular because he attracts all levels of people and because he represents Tamil antiquity and identity and unites so much of the symbolism of Tamil religion.

War of two Clans

Tharaka, Surapadma and Sinha-Mukha were ruling Lanka or Southern islands. Surapadma had a dispute with mainland devas. Surapadma defeated devas and takes important leaders including prince into custody. Kathira or Muruga (Later renamed “Mahasena” because of bringing a great army), comes to Lanka. Mahasena from main land set his armies at Katharagama, rescues the abducted prince by killing Surapadma. This might have been the source for Kantha puranam war story.

Symbols and worship

Murugan is associated with the number six, having six faces, six parents, and six pilgrimage centres. Each of the faces symbolizes one of the six qualities of the god: felicity, fullness, immortal youth, endless energy, protection from evil, and spiritual splendour.
Murugan is commonly shown with a red face, except on stone statues, and is associated with gold. Red and yellow flowers denote the god and his dress is a mixture of gold and red. These colours symbolize the sun and the sacrificial fire. He is sometimes shown as a red lotus, for in some myths he is born of a lotus, symbolizing his primordial power.
The peacock is the most important animal in Murugan symbolism. The colour and fertility of the bird equated with the vibrant hills and its beauty was like that of women and fresh vegetation. When the peacock holds a serpent in claws or beak, this symbolizes its control of malevolent cosmic forces. The cock and elephant are also important animals with Murugan. Of minor importance are the ram, goat, horse, and serpent.
Murugan's weapon is the lance, commonly the leaf-shaped Tamil vel, or sakti. The priest of Murugan is the velan, a bearer of the lance.
Murugan is worshipped with water, coconut milk, sandal paste, red millet, honey, rice, blood, and red, yellow, or white flowers.

Palani

Palani was popular with ajvikas/sramana/chittars and other ascetic groups. Many were healers for common tribals. They developed idol for their deity Aruga from medicinal materials. There were many such idols around that region. Later Palani was adopted by Muruga worshippers with story of fruit of knowledge and wisdom. Thus royal Muruga became an ascetic (komanandi) deity

Muruga - names and meaning

Murukan was praised by Arunakirinatha in the fifteenth century and Kacciyapaciva in the seventeenth. In the seventeenth century came the Tamil version of the Skanda Purana with all his Tamil background.
  1. Kanta, Kantha, Kanti - "the beloved","the lovely One.
  2. Karttika, Karthika, Kartik meaning 'one who gives courage and happiness'.
  3. Muruga the embodiment of brilliant light, courage, fearlessness and pure shakti. Muruga also the embodiment of the purest and highest knowledge and power."
  4. Saravana or Saranabhava Saravanabhava (the one born in the reeds).
  5. Shanmukha means the Lord with six-faces.
  6. Jnanapanditha - a universal teacher of the highest knowledge.
  7. Skanda means whose very presence gives a sweet fragrance that is everlasting. Also means "one who is joined" or the cause of the union. Skanda also refers "the One who ejected" as he was emitted from the third eye of Shiva. Skanda is also identified with Sanatkumara, the eternal youth. (Chandogya Upanishad)

Email Contact... Website maintained by: NARA