Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.
Beauty |
அழகே உருவானவள் இந்த அம்பிகை. இவளே அரசிகளுக்கு எல்லாம் அரசி. அன்பின் திருவுரு. நளினத்தின் உறைவிடமான லலிதா. மூவுலகங்களுக்கும் தலைவியான திரிபுரா. தசமகாவித்யா தேவிகளுள் மூவுலகங்களிலும் இவளே பேரழகி என்று பொருள்படும் திரிபுரசுந்தரி எனப் போற்றப்படுகிறாள்.
பரஞ்ஜோதி முனிவர் தன் திருவிளையாடற் புராணத்தில் ஈசனை கற்பூர சுந்தரன், பூங்கடம்பவன சுந்தரன், மகுட சுந்தரன், சோமசுந்தரன் என பல்வேறாக போற்றியுள்ளார். சுந்தரனின் மனைவி சுந்தரிதானே?
அம்பிகையின் அழகைப் பற்றி விவரிக்கும் நாமங்கள்: உத்யத்பானு ஸஹஸ்ராபா; காமாக்ஷி; காமதாயினி; சாருரூபா, மஹாலாவண்ய சேவதி, கோமளாகாரா, காந்திமதி, சோபனா, திவ்யவிக்ரஹா, கோமளாங்கீ. சோபனா என்றால் சௌந்தர்யமே வடிவெடுத்தவள் என்று பொருள். மங்களங்களோடு கூடிய அழகு இது. மங்களமான அழகிற்கு மனதை உயர் நிலைக்கு எடுத்துச் செல்லும் சக்தி உண்டு. சர்வ வர்ணோபஸோபிதா என்றால் எல்லாவிதமான நிறங்களையும் எடுத்து மிளிர்பவள் என்று பொருள். உலகில் எங்கெங்கு என்னென்ன நிறங்களைக் காண்கிறோமோ அதெல்லாம் அம்பிகையிடமிருந்து வந்ததுதான். அதை திருமூலர்,
திரிபுரை சுந்தரி அந்தரி சிந்தூரப்
பரிபுரை நாராயணீயாம் பல வண்ணத்தி
இருள்புரை ஈசி மனோன்மணி என்ன
உருபலவாய் நிற்குமா மாது தானே! [திருமந்திரம்]
Like colorless sun light to many colored rainbow, she is formless, beyond forms. But manifests as perfect beauty (nature).
இடையில் ஒட்டியாணம் அணிந்துள்ளாள். இரு செவிகளிலும் எழிலோங்கிப் பொலியும் தாடங்கங்களின் ஒளி கன்னத்தில் வீசுகிறது. நிறைமதி முகத்தினள். மன்மதனின் வில் போன்ற புருவங்கள் கொண்டவள். சம்பக மலர் போல் நாசி. கருணை மழை பொழியும் கண்கள். தேவி தன் நெற்றியில் கஸ்தூரி திலகம் அணிந்துள்ளாள். முத்துகளும் வைரங்களும் பதிக்கப்பெற்ற கீரிடம் . அம்பிகைக்கு சர்வாபரணபூஷிதா என்று ஒரு திருநாமம் உண்டு.
Rati's is also a goddess of beauty and depict her as a maiden who has the power to enchant the god of love.
Krishna is the epitome of handsomeness and known for his Charismatic apperance. The word Krishna means dark and all attractive. He had eyes like lotus so he was also known as Kamalanayana , the kesar tilak on his dark complexion was vibrant, his subtle lips , his thick black hair which was curly and was like the waves of the ocean for which he was known as Keshava.
Lord Kartikeya (or Muruga or Subramanya) is the most handsome male God. He is often described as exuding boyish charm and yet with a serious face, quite unlike his happy-go-lucky chubby brother Ganesha.
BEAUTY is What brings you HAPPINESS
Beauty of Nature is GOD. Rising and setting Red sun from mountain is Seyon (Muruga or Shiva). Greenary in forest is Mayon (Thirumal). Beautiful people and agricultural/farm land is Vendhan/Indran. Farming is beauty. Yellow represents gold or grain. Grey Dark beautiful sea or Ocean is Vannam or Varuna. Beauty of desert, empty land is Dancing/Mother/Protector Goddess.செவ்வானம் சேய் அழகு குறுஞ்சிக் குறவர் அழகு செம்மை ஞாயிறு அழகு முருகன் பொருள் அழகு முல்லைநிலம் அழகு மரம் அடர்ந்த காட்டு அழகு பச்சைப் பசேல் அழகு திருமால் தெய்வம் அழகு விளையும் பயிர் அழகு வேளான்மை தொழில் அழகு தங்க அங்கங்கள் அழகு மருதநில வேந்தன் அழகு நீலக்கடல் அழகு அலையுடன் நுரை அழகு துள்ளும் மீன்கள் அழகு கடலின் வண்ணம் அழகு மணல்திடல் அழகு வெற்றிடப் பாலை அழகு கூத்தாடும் கொற்றவை அழகு இயற்கையின் அழகே அழகு